செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

கும்பமேளா - புராணக்கதை

பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக் கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண் ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல் கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டு களுக்குச் சமம்) வானுலகில் போர் செய் தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டி பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால் கும்பமேளா ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது.


பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடை பெறும் கும்பமேளா முழு (பூர்ண) கும்ப மேளா எனப்படும். மற்ற இடங்களில் நடை பெறும் கும்பமேளாவை விட இது சிறப்புப் பெற்றது. பன்னிரண்டாவது முழு (பூர்ண) கும்பமேளா அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா எனப்படும். மகா கும்ப மேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும்.

சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திரு மாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற பானையிலிருந்து (கும்பம்)இந்த நான்கு இடங்களில் விழுந்ததாகவும், இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடினால், தங்களின் பாவங்கள் போகும் என்று நம்பியே கும்பமேளாவுக்கு ஏராள மானவர்கள் செல்கிறார்களாம்.

ஆக, கும்பமேளாவுக்கு செல்பவர்கள் தாங்களே பாவங்கள் செய்துள்ளனர் என்பதை ஒப்புக்கொள்கின்றனர். இன்றைய குற்றவியல் நடைமுறைச்சட்டங்கள், இந்திய தண்டனைச்சட்டங்கள் அவர்களுக்குரிய பாவ காரியங்களுக்கேற்ப தண்டனை அளித்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பார்களா?

பாவங்கள் (கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை,திருட்டு இன்ன பிற குற்றச்செயல்கள்) செய்தவர்களே தங்களின் குற்றத்துக்கான தண்டனையிலிருந்து தப்புவதற்காக திரிவேணி சங்கமத்தில் புனித நீராடச் செல்கிறார்கள் என்கிற நிலையில், காவல்துறையும், அரசும் செய்ய வேண் டியதெல்லாம் அலகாபாத் (பியாக்ராஜ்) நகரின் நுழைவாயிலில் காத்திருந்து, அவர் களை முன் எச்சரிக்கையாகப்பிடித்து, சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய தண்ட னையை அளிக்க வேண்டியதுதானே?

- விடுதலை ஞாயிறு மலர், 12.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக