“எல்லாம் தெய்வச் செயல், கடவுளே எல்லாம் பார்த்திருப்பாருன்னு விட்டிருந்தா நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன்.

அந்தச் சூழ் நிலையில் உத்தியோகத்தைவிட்டு, தைரியமாக சென்னைக்கு வந்து, ஒரு வாசலில்ல காத்திருந்தது என் முயற்சி”

(‘ராணி' 20.7.2008)

கேள்வி: 1) “அரசியல் - ஆன்மிகம் ஒப்பிடுங்க?”

ரஜினிகாந்த்: “ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. ஏன்னா, அது பாம்பும், கீரீயும் மாதிரி எ.திர்த் திசையில் உள்ளவை”

- 1995 டிசம்பர் மாதம் தன் பிறந்த நாளான 12 மற்றும் 13 ஆகிய இரு நாள்களில் அரசு தொலைக் காட்சிக்கு (தூர்தர்ஷன்) ரஜினிகாந்த் அளித்த பதில்.

கேள்வி: இலவசங்களைக் கொடுத்து ஓட்டு வாங்கிடலாம் என்ற அரிய தத்துவத்தை முதலில் கண்டு பிடித்த ஜீனியஸ் காங்கிரஸா, திமுகவா?

சோவின் பதில்: இவர்கள் யாருமில்லை, விபூதி, குங்குமத்தோடு நிற்காமல் புளியோதரை, வெண் பொங்கல்ன்னு இலவசமாக கொடுத்தால் பக்தர்கள் வருவாங்கன்னு கண்டு பிடிச்சது கோவில்கள் தான்.

(‘துக்ளக்': 20.6.2012)

கேள்வி: சென்னைத் தீவுத்திடலில் திருப்பதி ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து?

சோவின் பதில்: “இவ்வளவு கட்டணம் செலுத்தினால் வெங்கடேஸ்வரப் பெருமாளை உங்கள் வீட்டிற்கும் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம்“ என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்று தான் குறை.

(‘துக்ளக்': 23.4.2006, பக்கம் 17)

கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?

சோவின் பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்கு பொய்யை அருள் வாக்காக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையாகவே நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

(துக்ளக்: 26.10.2016, பக்கம் 23)