ஞாயிறு, 24 ஜனவரி, 2021

சிவ_பார்வதி_விவாஹம்

#சிவ_பார்வதி_விவாஹம்
அல்லது 
#பார்வதி_பரிணயம்

சிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த விவாஹ வைபவத்தை ஶ்ரீ வாமந புராணம் விளக்குகிறது.அதில் ஒரு பகுதியை கீழே தருகிறேன்;

நந்தியினது ஆணையின்படி மகாவிஷ்ணு முதலிய சகல தேவர்களும் மகாதேவன் வசிக்கும் மந்த்ர மலைக்கு வந்து சேர்ந்தனர்.அதிதி ஸுரபி,ஸுரமை என்பவர்கள் பரமாத்மாவிற்கு விவாகத்திற் கேற்ற அலங்காரங்களைச் செய்தனர்.விருஷபாருடராகச் செல்லும் சுந்தரேசனுக்கு இருபுறத்திலும் விஷ்ணுவும் பிரம்மாவும் செல்ல, ஐராவதத்தின் மீதிருந்து இந்திரன் பின்னின்று வெண்குடை பிடிக்க, கங்கையும் யமுனையும் சாமரம் வீச,கந்தர்வகணம் பாட, கின்னரர் வாத்திய சேவை செய்ய,
அப்ஸரஸுகள் ஆட பகவான் ஆகாச வீதியில்  புறப்பட்டார்.16 கோடி ருத்ரரும்,12 கோடி ஆதித்யரும், 8 கோடி வசுக்களும்,67 கோடி கணங்களும்,24 சிவ கணங்களும் பகவானுடன் கூட கிளம்பிற்று.
ஹிமவான்(பார்வதியின் தந்தை),
சகல தேவர்களையும் மகாதேவனோடு நன்கு வரவேற்று பூஜித்து ரத்னவேதியில்(சிம்மாசனம்)பார்வதியை அமர்த்தி,வந்த வரனை அர்ச்சித்து,புலகன் பேத்தியும் என் கன்யையும் பித்ருக்களின் தௌஹித்ரியும்(மகள் வயிற்று பேத்தி) மேனையின் பெண்ணுமான பார்வதியைத் தமக்கு கன்யாதானம் செய்கிறேன்,அவளை ஏற்று அருள் புரிய வேண்டும் என்றார்.மகாதேவர் தனக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை என்று கூறி தேவியை ஏற்றுக்கொண்டார்.பிரும்மா அருகிலிருந்து சகல வைதிக காரியங்களையும் செய்து வைத்தார்.பார்வதிக்குத் தோழியும்  பரமசிவனுன் பக்தையுமான மாலினி என்பவள் பரமாத்மாவினது பாதாரவிந்தங்களைப் பிடித்துக் கொண்டு தன் தோழிக்கு பூர்ண சம்பத்தை அளிக்க வேண்டும் என பிரார்த்தித்தாள்.பகவான் உமாதேவியைச் சங்க சக்ர கதா பாணியான மகாவிஷ்ணுவாகச் செய்து போதுமா? என்றார்.அதைக் கண்டு எல்லோரும் ஆனந்த்தித்தனர்.பார்வதி தேவியின் அழகைக் கண்டு சதுர்முகனுக்கு(பிரும்மாவிற்கு) மோகம் உண்டாக இந்த்ரியம் ஸ்கலநமாகி முன்பாக மணலில் விழுந்தது.அதை அவர் ஒருவரும் அறியாமல் மணலில் மறைக்க ஆரம்பித்தார். இதை ஞானக்கண்ணால் அறிந்த கைலாசநாதன்,அதிலிருந்து 88000 வாலகில்ய ரிஷிகள் ஜனிக்கப் போகின்றனர், அதைத் தடுக்காதே என்று பிரும்மனைப் பார்த்துக் கூறினார்.அங்ஙனமே மகரிஷிகள் உண்டாகி கௌரீ கல்யாண வைபவத்தைக் கண்டு சந்தோஷசித்தனர்.பரமாத்மாவினது விவாஹ வைபவத்தைக் கண்டு சகல பிராணிகளும் சந்தோஷம் அடைய உமாபதி விருஷபத்தின் மீதேறி கைலாசம் சென்றார்.

சிவனைப் பற்றிய புராண கதைகளில் விஷ்ணு பிரும்மா இருவரையும் மதிப்பிற் குறைவாகவும், விஷ்ணு பற்றிய புராணங்களில் சிவனை,பிரும்மனை அவமதித்தும்,பிரும்மனைப் பற்றிய புராணங்களில்,சிவன் விஷ்ணுவை நிந்தித்தும் கதைகள் ஏராளமாய் புணையப் பட்டுள்ளன. 

வழக்கம் போல ஆட்சேபணை தெரிவிப்பவர்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான்.வைதிக புராணங்கள் அனைத்திலும் இப்படியான ஆபாசமான கதைகளே உள்ளன.இவை அனைத்தும் வைதிகர்களால் மொழிபெயர்கப்பட்ட நூல்கள்.வேறு யாருடைய சொந்தச் சரக்கு அல்ல.மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட கதைகளும் அல்ல.ஆதலால்,
என்மீது கோபம் கொள்ளாமல் பொறுமையுடன் ஒரு சில வைதிக புராணங்களையாவது படியுங்கள்.உண்மையை நீங்களே உணர்வீர்கள்.

நிழற்படம்: மூன்றாண்டுகளாக வட இந்திய டிவிக்களில் தொடர்ந்து வெளிவந்த “Devon Ke Dev... Mahadev”  சீரியலின் காட்சி!

- தினகரன் செல்லையா ஆறாம் அறிவு, முகநூல் பக்கம், 24.1.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக