ஞாயிறு, 21 மார்ச், 2021

தெய்வீக சீதையை தெய்வீக ராமன் அனுமானிடம் 34 பாடல்களில் அசிங்கம் அசிங்மாக அடையாளம் சொல்கிறான்.

தெய்வீக சீதையை தெய்வீக ராமன் அனுமானிடம் 34 பாடல்களில் அசிங்கம் அசிங்மாக அடையாளம் சொல்கிறான்.

வாராழி கலசக் கொங்கை
வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசார் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில்தங்கும், பாந்தழும்
பணி வென் றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு
நான் உரைப்ப தென்ன ?

அல்குல் = பெண்குறி

அருமையான தமிழ் ஆனால் அசிங்கத்தின் உச்சம்.ராமபிரான் சொல்கிறான் அனுமானிடம்.” என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றவை. அவளுடைய அல்குல் தடங் கடற் போன்றது.” என்கின்றான். இதிலே பெரிய அறிஞர்கள் அல்குல் என்றால் ‘தொப்புள்’ என்று சொன்னார்கள். அதற்கும் கம்பன் பாம்பு படம் போன்றது, தேரின் தட்டு போன்றது என்று பிட்டுப் பிட்டுச் சொல்லி விட்டார் , அல்குல் எத்தனை யிடங்களில் வருகிறது , எங்கெங்கே வருகிறது என்று பார்த்தால் அசிங்கமோ அசிங்கம்.

மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்.

இராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான். குரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதனையைச் சாதித்திட இசைகின்றான்.

கடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.

ஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது. சொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன்? கடவுள் இராமனா? தீயவன் இராவணனா?

ஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது. இது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம். இதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கிரமாகவே மீட்டிருக்கலாம்.

இந்த 12 ஆண்டுகளாக இராவணன் சீதையை என்னென்ன செய்தான் என்பதை யாரறிவார்கள்.
ஒரு தீயவன் தீயனவற்றைத் தான் செய்திருப்பான்.
-சுப்பிரமணியன் அண்ணாதுரை முகநூல் பதிவு, 22.3.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக