கேள்விகளுக்குப் பதில் உண்டா?
யார் இந்து விரோதி?
1) எல்லோரும் இந்துக்கள் என்றால் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வணங் கும் கடவுள்களான அய்யனாரையும் காத்தவராயனையும் கருப்பசாமியையும் மதுரை வீரனையும் பார்ப்பனர்கள் வணங்குவதில்லையே ஏன்?
2) பெரும்பான்மை மக்களது மேற்கண்ட கடவுள்களுக்கு பூசாரிகளாகப் பார்ப்பனர்கள் வந்து கிடாய்வெட்டிப் பூஜை போடுவதில்லையே ஏன்?
3) கருப்பசாமி கோயில் பூசாரியையும் காளிகோயில் பூசாரியையும் பார்ப்பனர்கள் பூஜை செய்யும் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் விடுவதில்லையே ஏன்?
4) கருப்பசாமி கோயில் பூசாரியையும் காளிகோயில் பூசாரியையும் பார்ப்பனர்கள் பூஜை செய்யும் கோயில் அர்ச்சகராக நியமிக்க அனுமதிப்பதில்லையே ஏன்?
5) கருப்பசாமி கோயில் பூசாரியையும் காளிகோயில் பூசாரியையும் பார்ப்பனர்கள் பூஜைபோடும் கோயிலுக்கும் பார்ப்பனர்களைக் கருப்பசாமி கோயிலுக்கும் காத்தவராயன் கோயிலுக்கும் இடம் மாறுதல் செய்ய ஒப்புக்கொள்வ தில்லையே ஏன்?
6) பார்ப்பன புரோகிதர்களும் பார்ப்பனரல்லாத பூசாரிகளும் சமம் என்று ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்?
7) பார்ப்பனர்கள் வீடுகளில் இருக்கும் பூஜை அறையில் முருகன் படமோ கருப்பசாமி படமோ காத்தவராயன் படமோ இருப்பதில்லையே ஏன்?
8) பார்ப்பனர்கள் முருகன் கோயிலில் அர்ச்சகராக இருந்தாலும் எந்தப் பார்ப்பனரும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு முருகன் என்றும் வள்ளி என்றும் பெயர் வைப்பதில்லையே ஏன்?
9) எல்லாக் கடவுளும் இந்துக்கடவுள்கள் என்றால் இந்துக்கடவுள்களான கருப்பசாமி, காத்தவராயன், அய்யனார், காளியாத்தா, மாரியாத்தா என்று பார்ப்பனர்கள் பெயர் வைத்துக்கொள்வதில்லையே ஏன்?
10) பார்ப்பனரல்லாத இந்துக்கள் பழனி, திருப்பதி, சீரங்கம், மீனாட்சி கோயிலுக்கெல்லாம் சென்று உண்டியலில் காசுபோடுவதுபோல் பார்ப்பனர்கள் யாரும் இந்துக் கடவுள்களான கருப்பசாமி, காத்தவராயன், அய்யனார், காளியாத்தா, மாரியாத்தா கோயில்களின் உண்டியல்களில் காசு போடுவதில்லையே ஏன்?
11) பெரும்பான்மை இந்துக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை செல்வதுபோல் எந்தப் பார்ப்பனரும் பார்ப்பனப் பெண் டிரும் பாதயாத்திரை செல்வதில்லையே ஏன்?
12) பெரும்பான்மை இந்துக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பழனிக்கு பாதயாத்திரை சென்று அலகு குத்தி காவடி எடுத்து ஆடுவதுபோல் பார்ப்பனர் யாரும் ஆடிவருவதில்லையே ஏன்?
13) பார்ப்பனரல்லாத பூசாரிகள் மீது சாமி வந்து ஆடுவதுபோல் பார்ப்பன அர்ச்சகர்கள் மீது சாமி வந்து ஆடாதது ஏன்?
14) பார்ப்பனரல்லாத பெண்கள்மீது காளியாத்தா மாரியாத்தா வந்து ஆடுவதுபோல் பார்ப்பனப் பெண்கள் மீது மாரியாத்தா வந்து ஆடுவதில்லையே ஏன்?
15) பார்ப்பனர்களும் தமிழர்கள் என்றால் தமிழர்கள் கொண்டாடும் தைத்திருநாளாம் பொங்கல் விழாவைக் கொண்டாடுவதில்லையே ஏன்?
16) பார்ப்பனர்களும் தமிழர்களும் இந்துக்கள் என்றால் பார்ப்பனர் மட்டும் பூணூல் அணிவது ஏன்?
17) பார்ப்பனரல்லாத இந்துக்கள் வேட்டி அணியும்போது பார்ப்பனர் மட்டும் பஞ்சக்கச்சம் அணிவது ஏன்?
18) பார்ப்பனரல்லாத இந்துப் பெண்கள் புடவை அணியும்போது பார்ப்பனப் பெண்கள் மட்டும் மடிசார் கட்டுவது ஏன்?
19) எல்லோரும் இந்துக்கள் என்றால் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இந்துக்கள் வீடுகளில் உணவோ தண்ணீரோ பார்ப்பனர்கள் அருந்துவதில்லையே ஏன்?
20) எல்லோரும் இந்துக்கள் என்றால் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இந்துக்களை இன்னமும் பார்ப்பனர்கள் தங்கள் வீடுகளுக்குள் அனுமதிப்பதில்லையே ஏன்?
21) இந்துக்களான தமிழர்கள் பேசும் பேச்சுக்களுக்கு மாறாக அவா – இவா – வந்துண்டு – போயிண்டு – அபிஷ்டு என்று அக்கிரகார பாஷை பேசுவது ஏன்?
22) பார்ப்பனர்களும் தமிழர்கள் என்றால் பகவத் கீதையையோ? பாகவதத்தையோ? பாரதத்தையோ? இராமாயணத்தையோ? தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல் திருக்குறளையோ, சிலப்பதிகாரத்தையோ, தமிழ் இலக்கியங்களையோ சொல்லித் தருவதில்லையே ஏன்?
23) பார்ப்பனர்களும் தமிழர்கள் என்றால் தங்கள் பிள்ளைகளுக்கு சமஸ்கிருதம் சொல்லித் தருவதுபோல் தமிழை சொல்லித் தருவதில்லையே ஏன்?
24) தமிழர்களை இந்துக்கள் என்று சொல்லி அவர்கள் இல்லத்து திருமணங்களை நடத்தி வைக்கும் பார்ப்பன புரோகிதர்கள் – அந்த திருமண வீடுகளில் சாப்பிடாமல் தட்சணையையும் அரிசி பருப்பையும் காய்கறிகளையும் மட்டும் வாங்கிச் செல்வது ஏன்?
25) பார்ப்பனரல்லாத இந்துக்கள் சங்கராச்சாரி போன்ற வர்களது காலில் விழுந்து வணங்குவதுபோல் பார்ப்பனர்கள் யாரும் கிருபானந்தவாரியார், குன்றக்குடி அடிகளார், ஆதி னங்கள், குருமகாசந்நிதானங்களின் கால்களில் விழுந்து வணங்குவதில்லையே ஏன்?
இப்பொழுது சொல்லுங்கள் உண்மையான இந்து விரோதி யார்?
– இணையத்திலிருந்து
உங்களுக்குத் தெரியுமா?
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரிகளாக மட்டும் ஆர்.எஸ்.எஸ். வளர்க்கப்படவில்லை.ஒரு முழுமையான பார்ப்பன இயக்கமாகவே வளர்ந்தது.அதன் சர் சங் சாலக்குகள் (தலைவர்கள்) அனைவரும் பார்ப்பனர்களே!
(ராஜேந்திர சிங் என்ற ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டவர் 1994-2000 வரை “ராஜி பையா” என்றழைக்கப்பட்ட இவர் சர் சங் சாலக்காக இருந்தார்.)அதிலும் பெரும்பாலோர் (இன்றுள்ள மோகன் பாகவத் உட்பட) “சித் பவன்” பார்ப்பனர்களே! மராட்டியத்தை ஆண்ட பேஷ்வாக் களின் வழிவந்ததாகக் கூறிக்கொள்ளும் இக்கூட்டம், ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்தால் இந்த நாட்டையே பார்ப்பனராட்சியாக்கி அனைத்து மக்களை யும் அடக்கி ஆள சூழ்ச்சி செய்தது.
மனுதர்மப்படி ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் ஆட்சியாக விளங்கி பார்ப்பனர் மேலாண்மையை நிலைநாட்டத் துடித்தது.அதனால் பகவத் கீதையில் கிருஷ்ண பராமாத்மா குறிப்பிட்ட “சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம்” (நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன்)என்ற வர்ண அமைப்பை காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். மறைமுகமாக முயன்றது.பார்ப்பனர்கள் சிறுபான்மையி னர் என்ப தால் இந்த வர்ண பேதத்தை முன்னிலைப் படுத்தினால் வெற்றி பெற முடியாது என்பதால் “இந்துக் கள்” என்ற வேடம் தரித்து இந்த “பசுத்தோல் புலிகள்” நாட்டை நாசமாக்கி வருகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக