செவ்வாய், 29 மே, 2018

*இந்து கடவுள்கள்: சுப்பிரமணியனது பிறப்பு*

- சித்திரபுத்திரன் -

02.09.1928 - குடிஅரசிலிருந்து....

விஸ்வாமித்திரன் சுப்ரமணியனது பிறப்பைப் பற்றி ராமனுக்குக் கூறியது:-

1. சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங் கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடைய வில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படு மானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும் என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அதன்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார். பூமி அதை தாங்கமாட்டாமல் பூமி முழுவதும் கொதிகொண்டு எழ தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து பிரம தேவன் கட்டளைப்படி அதை கங்கையில் கொண்டு சேர்த்து, அவ்வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தைப் பெற வேண்டு மென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ்வீரியத்தைப்பெற, அவ்வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட, கங்கை அதை தாங்கமாட்டாமல் மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி  ஏ கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தைத் தாங்க முடியாவிட்டால் பனிமலை அருகில் விட்டுவிடு என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ்வீரியத்தை பனிமலையின் அருகில் விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற அதை இந்திரன் பார்த்து அக் குழந்தைக்குப் பால் கொடுத்து வளர்க்க கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்கு பால் கொடுத்து வளர்த்து வரலானார்கள். பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக்குழந்தை உற்பத்தி யானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா தேவிகள் ஆறுபேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும், மேல்கண்ட ஆறுபேரின் முலையிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில் பால்குடித்ததால் ஷண்முகன் என்று பெயர்கள் ஏற்பட்டன.

இவ்வரலாறு வால்மீகி ராமாயணத்தில் சிவன் பார்வதியை புணர்ந்தது என்று தலைப்பெயர் கொண்ட 36-வது சருக்கத்திலும் குமாரசாமி உற்பத்தி என்கின்ற 37வது சருக்கத்திலும் காணப்படுகின்றது.

இரண்டாவது வரலாறு தேவர்கள் சிவனிடம் சென்று அசுரர்களை அழிப்ப தற்கு தகுந்த சக்தி கொண்ட ஒரு குழந்தையை பெற்றுத்தர வேண்டுமென்று வேண்ட, சிவன் அருள்கூர்ந்து தனது அய்ந்து முகங்களுடன் மற்றும் ஒரு முகத்தையும் சேர்த்துக் கொண்டு தோன்ற அவ்வாறு முகங்களில் உள்ள நெற்றிக்கண் ஆறிலிருந்து ஆறுதீப்பொரிகள் வெளியாக, அப்பொறிகளைக் கண்டு தேவர்களும் மனிதர்களும் நடுங்கி பரமனை வேண்ட, பரமன் அப் பொறிகளை கங்கையில் விடும்படி சொல்ல அவர்கள் அப்படியே செய்ய, கங்கை அது தாங்க மாட்டாமல் அவைகளைக் கொண்டு சரவணத்தில் செலுத்த, அங்கு ஆறு குழந்தைகள் தோன்ற, அந்த ஆறு குழந்தைகளையும் கிருத்திகைப் பெண்கள் அறுவர்களும் பால் கொடுத்து வளர்த்து வந்தார்கள். பிறகு சிவன் பெண்ஜாதி பார்வதி தேவி இந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்துக் கட்டி அணைத்து முத்தமிட்டு பாலூட்டுகையில் அவ்வாறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக ஆகிவிட்டது. இதற்கு ஆறுமுகமுடையதால் ஆறுமுகன் என்றும் கங்கையாறு ஏந்திச் சென்றதால் காங்கேயன் என்றும் சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இது கந்தபுராணத்திலும் முருகன் கதையிலும் உள்ளது.

குறிப்பு : சுப்பிரமணியன் பிறப்புக்கு மேல் கண்டபடி இரண்டு கதைகள் காணப்பட்டாலும் கந்த புராணத்தின் கதைப்படி பார்த்தாலுமே வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமருக்குச் சொன்னதாகச் சொல்லப்படும் மேல்கண்ட கதைதான் உறுதியாகின்றது. ஏனெனில் கந்தபுராணத்திலும் பார்வதியானவள் தன்மூலியமாய் பிள்ளை பெறுவதை தடுத்ததற்காக தேவர்கள் மீது கோபித்து தேவர்களை பிள்ளையில்லாமல் போகக் கடவது என்று சபிக்கின்றாள் என்று காணப்படுகின்றது. சிவனது நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறி வெளியாகி அதிலிருந்து பிள்ளை உண்டாகியிருக்கும் பட்சத்தில் பார்வதிக்கு தேவர்களிடத்தில் கோபம் உண்டாகக் காரணம் ஏற்பட நியாயம் இல்லை. இந்தக் கோபம் உண்டாவதற்குக் காரணம், வால்மீகி ராமாயணத்தில் சொல்வது போல், அதாவது 100 தேவ வருஷம் சிவன் பார்வதியைப் புணர்ந்து கடைசியாக வீரியம் வெளிப்பட்டு கருதரிக்கும் சமயத்தில் தேவர்கள் குறுக்கிட்டு சிவனை தனது வீரியத்தை பார்வதி கர்பத்துக்குள் விடாமல் நிறுத்திக் கொள்ளும்படி வேண்டினதால் சிவன் அதை எடுத்துக் கொண்டதற்கு பார்வதி கோபித்து வீரியம் ஸ்கலிதமாக்கும் சமயத்தில் கொடுமை செய்ததற்காக அவர்களைச் சபித்து, அதாவது தன்னைப் போலவே தேவர்களுடைய பெண்சாதிகள் எல்லோரும் பிள்ளையில்லாமல் மலடிகளாக வேண்டுமென்று சபித்ததாகக் காணப்படுவது நியாயமாக இருக்கின்றது.

அன்றியும் பார்வதி தனது கர்ப்பத்தில் விழ வேண்டிய வீரியத்தை பூமி பெற்றுக் கொண்டதால் பூமியையும் பார்வதி தனது சக்களத்திபோல் பாவித்து அவளையும் பூமியையும் பலபேர் ஆளவேண்டுமென்று சபித்ததாகவும் அதனாலேயே பூமிக்கு அடிக்கடி அரசர்கள் மாறுகிறார்கள் என்றும் வால்மீகியில் காணப்படுகின்றதும் பொருத்தமாயிருக்கின்றது.

கந்தப்புராணமோ மேல் கண்ட சிவன் 100 வருஷம் புணர்ந்த விஷயம் ஒன்றைத் தவிர மற்றவைகளையெல்லாம் ஒப்புக்கொள்ளுகின்றது.

ஆகவே சுப்பிரமணியன் என்றும் சண்முகன் என்றும் கார்த்திகேயன் என்றும் ஸ்கந்தன் என்றும் சொல்லப்படும் சாமியானது மேல்கண்ட மாதிரி ஒரு பிறப்பு வளர்ப்புக்கு உள்பட்டது என்பது வைணவப் புராணங்களிலும் சைவப் புராணங் களிலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. மற்றபடி இந்த சுப்பிரமணியனுடைய கடவுள் தன்மை யையும் செய்கைகளையும் வேறு தலைப்பின் கீழ் விவரிக்கலாம்.
- விடுதலை நாளேடு
 

வெள்ளி, 4 மே, 2018

நெல்லையப்பர் கோவில் குடமுழுக்கு: மேலே ஏறிய பெண்கள் கீழே இறக்கப்பட்ட கொடுமை!



நெல்லை, ஏப்.29 நெல்லையப்பர் கோவில் குடமுழுக்கு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே 27.4.2018 அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நடைபெற்றது. எந்தத் தேதியில் நடத்துவது என்ற சர்ச்சையிலேயே பல நாள்கள் நகர்ந்தன.

விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த இரண்டு அமைச்சர்களில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரின் சொந்த ஊரில் தேரோட்டம் காண சென்றதால் காலதாமதம் ஏற்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தி யானந்த் மற்றும் தென்காசி தொகுதி நாடாளு

மன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் மேலே ஏறினார்கள்.

அப்போது இந்து அமைப்பைச் சேர்ந்த  கூச்சலிட பின்னர் அவ்விரு பெண்களும் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்து அமைப்புகள் விஜிலா விவகாரத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளனராம். கிறிஸ்தவர் எப்படி இந்துக்கள் ஆகம விதியை மீறலாம் என போராட முடிவு செய்துள்ளனராம்.

ஒருவர்தான் கிறித்துவர் என்றால், வசந்தி முரு கேசனும் கிறித்தவர்தானா? ஆண்கள் பலர் அந்த இடத்தில் இருந்தபோது, பெண்கள் மட்டும் இருக்கக் கூடாது என்பது என்ன நீதி?

பெண்கள் என்றால் கடவுளுக்கு ஆகாதா? கடவுள் படைப்பில் பெண்கள் வரமாட்டார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அர்த்தமுள்ள இந்து மதத்தில் பெண்களுக்கான இடம் இதுதான்.

இவ்வளவுக்கும் தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்கு தலைவரும், செயலாளரும் பெண்கள்தான்! இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?

- விடுதலை நாளேடு, 29.4.18

மூடப்பழக்க வழக்கங்களும் சடங்குகளும்


02.12.1928- குடிஅரசிலிருந்து...



சீர்த்திருத்தக்காரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் மூடப்பழக்க வழக்கங்களையும் குருட்டு நம்பிக்கைகளையும் ஒழிப்பது என்பது எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் இந்த விஷயமே இப்போது எங்கும் பேச்சாயிருக்கின்றது. இந்த மூடப்பழக்க வழக்கங்களால் பிழைக்கின்ற கூட்டம் தவிர மற்றவர்கள் எல்லோரும் இதன் அறியாமையை நன்றாய் உணர்ந்திருக் கின்றார்கள். ஆனாலும் அவர்களுடைய தைரியமற்ற தன்மையினால் அதை மாற்றிக்கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள்.

கடவுள், மதம், பக்தி, வேதம் முதலியதுகள் மாத்திரம் அல்லாமல் உற்சவம், சுபம், அசுபம் என்பது சம்பந்தமான சடங்குகள், நோன்பு, விரதம், வேண்டுதல் தீர்த்தம், மூர்த்தி ஸ்தலம்: காணிக்கை ஆகியவைகள் போன்ற அநேக விஷயங்களில் நாம் நடந்துகொள்ளும் நடவடிக்கைகள் முழுவதும் மூடப்பழக்க வழக்கங்கள் குருட்டு நம்பிக்கைகள் ஆகியவைகளின் பாற்பட்டதேயாகும்.

இந்த மூடப்பழக்க வழக்க குருட்டு நம்பிக்கையும் செய்கையும் நம்முடைய அறிவு ஆராய்ச்சி, பணம், நேரம், முயற்சி, முற்போக்கு முதலியவைகளை யெல்லாம் அடியோடு கெடுத்து விடுகின்றது. நல்ல காரியங்களுக்குப் பணமும், அறிவும் இல்லாமல் செய்துவிடுகிறது. உலகத்திலுள்ள நாடுகள் எல்லாவற்றையும் விட, இயற்கையிலேயே எல்லா வளமும் சவுகரியமும் பொருந்தியதான நமது நாடு மட்டும் உலகத்தில் உள்ள மற்றெல்லா நாடுகளையும்விட மிகவும் மோசமான நிலைமையில் என்றுமே விடுதலை அடையமுடியாத அடிமைத்தன் மையிலும் அறியாமையிலும் ஆழ்ந்து கிடப்பதற்குக் காரணமே இந்த மூடப்பழக்க வழக்கங்களுக்கு நமது மக்கள் கண்மூடித்தனமாக அடிமையாயிருப்பதுதான்.

நமது நாட்டைவிட மிகவும் பின்னணியிலிருந்து மற்ற நாடுகள் இன்றைய தினம் எல்லா நாடுகளையும்விட முன்னணியில் இருப்பதற்குக் காரணம் அந்நாட்டார்கள் மூடப்பழக்க வழக்கங்களையும் குருட்டு நம்பிக்கை களையும் அறவே ஒழித்து அவர்களது பகுத்தறிவுக்கு மதிப்பும் கொடுத்து ஆராய்ச்சிச் துறையில் அவர்களது அறிவையும் பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் முயற்சியையும் செலவு செய்வதன் பலனே ஒழிய வேறில்லை.

நாம் மூடப்பழக்க வழக்கம் என்று சந்தேகமற நன்றாயறிந்த ஒரு சிறு விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமானாலும் நடுங்குகின்றோம்; தைரியமாய் ஏதாவது செய்வதாயிருந்தால் அதை சாமியும், மதமும் ஸ்மிருதியும் புராணமும் வந்து தடைக்கல்லாய் நிறுத்தி விடுகின்றது. இவைகளையெல்லாம்கூட ஒருவிதத்தில் சமாளித்து விடலாம். ஆனாலும் பெரியவர்கள் நடந்த வழி என்கின்ற பொறுப்பற்றதும் அர்த்தமற்றதுமான தடை பெரிய தடையாய் விடுகின்றது. எனவே இவ்விஷயத்தில் சிறிதும் தாட்சண்ணியமில்லாததும் தயங்காததுமான அழிவு வேலையே மிகவும் தேவையானது என்று மறுபடியும் மறுபடியும் சொல்லுவேன்.

இந்த மூடநம்பிக்கை குருட்டுப் பக்தி என்கின்ற துறையில் நமது மக்கள் பணம் வருஷம் ஒன்றுக்குப் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகின்றது. நமது தென்னாட்டில் மட்டும் வருஷத்தில் ஒரு லட்சம், இரண்டு லட்சம், அய்ந்து லட்சம், பத்து லட்சம், இருபது லட்சம் வரும்படியுள்ள கோயில்கள் பல இருக்கின்றன. வரு ஷத்தில் பத்து லட்சம், இருபது லட்சம், அய்ம்பது லட்சம் செலவு செய்து கூட்டங்கூடும் யாத்திரை ஸ்தலங்கள் நமது தேசத்தில் அநேகமிருக்கின்றன; இவைகள் யாவும் ஒருசில கூட்டத்தாரின் சுயநலத்திற்காக வஞ்சகக் கருத்துக் கொண்டு உண்டாக்கப்பட்ட மோசடியே அல்லாமல் வேறல்ல. இதற்காக எழுதி வைத்த புராணங்களும், ஆகமங்களும், சமயாச்சாரியார்கள் என்பவர்களின் சரித்திரங்களும், ஸ்தல மான்மியங்கள் தீர்த்த விசேஷங்கள் என்பதுகளும், புண்ணிய தினங்கள், திதி, திவசம் என்பதுகளும் சுயநலம் கொண்ட அயோக்கியர்களாலேயே பாமர மக்களை ஏமாற்றச் செய்த சூழ்ச்சியேயாகும்.

உதாரணமாக இரயில்வேக்காரர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் களுக்கு நமது தெய்வங்கள் என்பவைகளினிடத்திலாவது, புண்ணியஸ்தலம், தீர்த்தம், சிரார்த்தம், புண்ணியதின ஸ்நானம், தேர்த்திருவிழா, உற்சவம், தீபம், மேளம் என்பவைகளிடத்திலாவது கடுகளவு நம்பிக்கையாகிலும் இருக்கின்றது என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அல்லது அவர்கள் உண்மையிலேயே நம்மைப்போன்ற அவ்வளவு முட்டாள்களா? ஒருக்கால மும் இல்லை என்றும் அல்லவென்றும் வெகு தைரியமாய்ச் சொல்லுவேன். ஆனால், அவர்கள் செய்யும் அயோக்கியத் தனத்தைப் பாருங்கள்.

(துலா ஸ்நானத்திற்குப் போகவில்லையா? வைகுண்ட ஏகாதசிக்குப் போகவில்லையா? ஆடி அமாவாசைக்குத் தனுஷ்கோடிக்குப் போக வில்லையா? பிரயாசைக்குச் சிரார்த்தம் கொடுக்கப் போகவில்லையா? கார்த்திகை தீபத்திற்குத் திருவண்ணாமலைக்குப் போகவில்லையா? கும்பமேளாவுக்கு அரித்துவாரத்திற்குப் போகவில்லையா? மாமாங்கத்திற்குக் கும்பகோணம் போகவில்லையா? ஆருத்திராவுக்குச் சிதம்பரம் போகவில்லையா?) என்று விளம்பரம் செய்கின்றார்கள். கூலி கொடுத்துப் பத்திரிகை களில் போடச் செய்கிறார்கள். படம் எழுதி சுவர்களில் ஒட்டுகிறார்கள். நல்ல நல்ல பெண்களின் உருவத்தைப் படத்தில் எழுதி மக்களுக்குக் கவர்ச்சி உண்டாகும்படிச் செய்கின்றார்கள். இவைகளெல்லாம் எதற்காக? நாம் மோட்சமடைவதற்காகவா? நமக்குப் புண்ணியம் சம் பாதித்துக் கொடுப்பதற் காகவா? ஒருக்காலமும் இல்லை என்பதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

* இந்த நாட்டில்தான் மானம் அவமானம் பற்றிக் கவலைப்படாத மக்கள் இருக்கிறார்கள். ஏதோ வயிறு வளர்த்தால் போதும் என்று வாழ் கிறார்கள். உலகத்தில் கீழான மக்கள் இருந்திருப் பார்கள். காட்டுமிராண்டிகளாகவேகூட வளர்ந்திருக் கலாம். ஆனால், தன் இனத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைக்கின்ற துரோகிகள் உலகத்தில் எங்குமில்லாத மாதிரி இங்குதானே இருக்கிறார்கள்.

*வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள், ஆசாபாசங்கள் இவைகளுக்குத் தகுந்தாற்போல் மொழி வேண்டும். கட்டை வண்டியில் இருந்து ஆகாய விமானத்திற்குப் போய் விட்டோம். அதற்கு ஏற்ற மொழி வேண்டாமா? தமிழ்மொழி உயர்வுதான், எந்த அளவில்? தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில். ஆனால், அதுதான் முடிந்த மொழி என்பதாக முடிவு செய்ய முடியுமா?

- விடுதலை நாளேடு, 4.5.18

செவ்வாய், 1 மே, 2018

ஆபாசமே இந்துமதம்

ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள் - இதன் மூலம் இந்துமக்களுக்கு இந்துமதம் என்ன சொல்ல வருது....?

1. குந்தி – ( திருமணத்திற்கு முன் கள்ளஉறவு)
குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் கள்ளஉறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. திருமனத்திற்கு பின்பு ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை மகாபாரதம் படித்தவர்களுக்கு நல்லாவே தெரியும்.

2. பத்மை - (தகப்பன் மகள் உறவு)
சிவன் பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை இடது கையால் முந்தானையை பிடித்து சுற்றிவருகையில் அவளுடைய தொடை பிரமனின் கண்ணில்பட்டது. அதை பார்த்தவுடன் பிரம்மா மோகத்தால் இந்திரியம் (விந்து) ஸ்கலிதமாயிற்று. அந்த இந்திரியத்தை குலத்திலுள்ள தாமரை பூவில் விட அதில் பத்மை என்ற புத்திரி பிறந்தாள்.
பத்மை அழகில் மயங்கி மோகம்கொண்டு அவள் சம்மதிக்க மறுக்கவே சமாதான வேத மந்திர வாக்கியத்தை சொல்லுகிறான்.

" மாதாமுபைத்ய கசாரமுபைய, புத்ரார்த்தீக சகாமார்த்தி நாபாத்திரலோகா நாஸ்தீத ஸ்ரவம்பரவோ விந்து ஹாம் தஸ்மாத் புத்தார்த்தம் மாதரம், ஸூரஞ்சதி,ரோஹதி"

இதன் விளக்கம் :-
புத்திராத்த நிமித்தம் தாய், தமக்கை, மகன், பிள்ளை யாருடனும் கூடலாம்.
" தாயிடமும் மகளிடமும் படுத்து படுத்து பிள்ள பெத்துக்கிலாம் இதுதாங்க இந்துமத யோக்கியதை"

3.  (தாய், மகன் உறவு) - திருவிளையாடல் புராணம்..
அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகுடையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான்.
அவளும், நாணம், வெட்கம் எல்லாவற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை (தகப்பனை) கொன்றான். இந்த பாவத்தை கழிக்க சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி108 முறை கோவிலை வலம் வரவேண்டும் என்று திருவிளையாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம். கூறுகிறது.

4.  லட்சுமி - (சகோதரனிடம் காமம்)
சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள்.
இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?" என்று கோபத்துடன் சீறினான்.

அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.
ஆதாரம் - தேவிபாகவாத புராணம் (6,17,53)

5.  (சொந்தங்களுடன் உடலுறவு) மனுசாஸ்திரம்..
ஆண் பிள்ளை இல்லாமல், ஒரு குலம் நசிந்து போனால், அப்போது அந்தப் பெண், தன்கணவர்,மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக்கொண்டு, தன் மைத்துனர் அல்லது தன்கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட
பங்காளி களுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையைபெற்றுக் கொள்ள வேண்டும்.
(மனு அத்தியாயம் 9; சாஸ்திரம் 59)

6. (அண்ணியுடன் உறவு) பிரகஸ்பதி முனிவர்.
இந்து மதத்தில் தேவர்களிக்கெல்லாம் குருவான பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, அண்ணன் இல்லாத வேளையில் முறைகேடாக உறவு கொண்டுடான். அதில் பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர்.
இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன். இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவனவரே, வேதவிற்பன்னர் துரோணர். எப்படி இருக்கு இந்துமத ரிஷிகள், முனிவர்களின் யோகியதைகள்.
(ஆதாரம் - மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131, ஸ்கந்த 9 அத் 20 )

7.  சிவன், விஷ்னு -(ஓரினச்சேர்க்கை)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் உடலுறவு கொண்டு ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

8. விஷ்ணு, நாரதர் - ( ஓரினச்சேர்க்கை)
மகா விஷ்ணுவும் நாரதரும் கலவி (homosex) செய்ததில்அவர் இரண்டு பேருக்கும் அறுபத்திரெண்டு குழந்தைகள் பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அதுதான் 62 தமிழ் வருடங்கள்.

9. சூரியபகவான்,அருணன் - (ஓரினச்சேர்க்கை)
சூரியனின் ரத சாரதியின் பெயர்அருணன். இவன் இந்திரலோக வினோதங்களைக் காண்பதற்கு என்றுபெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் இதனால் வாலி என்பவன் பிறந்தானாம்.

இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு,
நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் அதனால் சுக்ரீவன் பிறந்தானாம்.

10. ராமன் பிறப்பு - Animal sex (மிருக்கங்களுடன் புணர்ச்சி)..
தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.
அந்த யாகத்தில் குதிரையுடன் மூன்று பட்ட மகிஷிகளும் ஓர் இரவை கழித்துள்ளார். வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக வால்மீகி ராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

11.  விஷ்னு - (மாற்றான் மனைவியுடன் உறவு). சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்தாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்

12.  பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு அல்லது ஐந்து பேருடன் உறவு)..
திரௌபதி என்பது உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக கலவி சுகம் கொடுத்திருக்கிறாள். ஆதாரம் - மகாபாரதம்.

13.  ருமை - (தம்பியின் மனைவியுடன் உறவு)
சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக ராமயணம் கூறுகிறது.

14.  விவச்சாரிகளிடம் உறவு - மனுசாஸ்திரம்
சுலோகம்-
வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

விளக்கம் :-
வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண்ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவமெல்லம் போய்விடும்.
கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

15.  இது எந்தமாதிரி உறவுனே தெரியல.. படித்துவிட்டு நீங்களே ஒரு பேரு வைங்க நண்பர்களே..

கலைவாணி, சரஸ்வதி என்ற பெண் கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர்.

இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரமாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள். ஆதாரம் - தேவிபாகவாத புராணம் 47,49,53.

இப்படி ஆபாச வக்கிரங்களை கொப்பளிக்கும் இந்துமதத்தின் யோக்கியதைகளை திட்டாம வேற என்ன சொல்ல..?

மதம் என்பது மனிதனை ஒருபோதும் அறிவாக சிந்திக்க விடாது. மதம் மனிதனை மூடனாக்கும், முட்டாளக்கும், குருடர்களாக்கும் இந்த பாதிப்பில்தான் மனிதன் அறிவிழந்து மதவெறியோடு வன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருகிறார்கள்.

மதத்தின் வக்கிரங்களையும், மடத்தனத்தையும்  ஆதாரத்தோடுதான் பதிவிடுகிறேன். இது உண்மை என்று தெரிந்தும், அறிவாக சிந்திக்காமல் ஆபாசமான வார்த்தைகளால் என்னை திட்டி உங்கள் ஆபாச மதத்தை காப்பாற்றிக்கொள்ள பார்க்கிறீர்கள்.

சிந்திப்பதனாலேயே மனிதன் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுகிறான்.
கொஞ்சமாவது மனிதனாக சிந்திக்க பழகுங்கள் நண்பர்களே...
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு, 26.4.18