செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

சுவாஹா பன்னுவதுன்னா என்ன??

-புலேந்திரன் தமிழ்மொழி(முகநூல்,6.2.17)
அப்படியே முழுசா முழுங்குறதை தான் சுவாஹா பன்றதுன்னு சொல்லுவாங்க அதுக்கு ஏன் சுவாஹா பன்றதுன்னு சொல்றாங்க…. அதுக்கு அத்தமுள்ள இந்து மதம் தரும் விளக்கம் இதோ !!!!
சுவாஹாதேவி அக்னி தேவனின் பத்தினி மனைவியாவார்
தட்ஷன் என்னும் மன்னனை ஞாபகம் இருக்கிறதா?... பார்வதி... தாட்சாயினியாக அவதரித்தபோது அவருக்கு தந்தையாக இருந்தவர் 

இந்த தட்ஷனுக்கும், பிரகதி என்னும் குமரிக்கும் பிறந்தவள் சுவாஹாதேவி.

இவளது இளமையும் அழகும் எடுப்பும் நடையும் நளினமும்  எம மகராஜனை மயக்கவே சுவாஹாதேவி மீது காதல் கொண்டான் எமன்.(கள்ளக்காதல்தான்)  அதற்காக திட்டம் போட்டான். சுவாஹாதேவியை தன் சக்தியால் எலுமிச்சை பழமாக்கினான். அந்தப் பழத்தை விழுங்கி தன் வயிற்றுக்குள்ளேயே வைத்துக் கொண்டான். அதுதான் சுவாஹா!!!  தேவைப்படும் போது வெளியே எடுத்து அவளை அனுபவிப்பான். பிறகு விழுங்கி விடுவான்.

இப்படித்தான் ஒருமுறை சுவாஹாதேவியை வெளியே எடுத்து நந்தவனத்தில் உலவவிட்டு கொஞ்சிக் குலவினான் எமன். இருவரும் காமக் களியாட்டங்களில் கரைபுரண்டதால்  எமனுக்கு ஏற்பட்ட பயங்கர களைப்பால் அப்படியே நந்தவனத்திலேயே தூங்கிவிட்டான்.

சுவாஹாதேவியோ தன் செழித்த அழகோடு நந்தவனத்தில் தனித்து விடப்பட்டாள். காம இச்சை அடங்காமல்இருந்தவள் அப்போது அந்த வழியே நடந்து வந்த அக்னிதேவனை  பார்த்துவிட்டாள்.

ஏய் அக்னி இங்கே வா... என்னிடம் சுகத்தைக் குடி. எனக்குள் எரியும் மோக நெருப்பை நீதான் தணிக்க முடியும் என அழைத்து எமன் விழிப்பதற்குள் அவனை ஆசையோடு அணைத்து தழுவி ஆலிங்கனம் செய்து கொண்டு ... அந்த நந்தவன மெத்தையிலே மன்மத நர்த்தனமாடினர். கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உயிர் நடுங்க உவகையாய் புணர்ந்து பூரித்தான் அக்னி

சுவாஹா - அக்னி - சுகானுபவம் நடந்து முடிந்ததும் அக்னியின் விளையாட்டுகளில் மயங்கிய சுவாஹாதேவி அந்த எலுமிச்சை வித்தையை கையிலெடுத்தாள்

இந்த அக்னி நமக்கு பூரண சுகம் தருகிறான். நாம் இவனை எலுமிச்சைப் பழமாக்கி விழுங்கிவிட்டால் வேண்டும்போது வெளியே எடுத்து தீண்டிக் கொள்ளலாம். ஆசைக் கோட்டை தாண்டிக் கொள்ளலாம். என திட்டம் போட்ட சுவாஹா அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி விழுங்கிவிட்டாள்.

இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆசுவாசமாக விழித்தான் எமதர்மன். சுவாஹாதேவி எதுவுமே நடக்காதது போல தன் கச்சைகளை சரிசெய்து கொண்டு கச்சிதமாக உட்கார்ந்திருந்தாள்.

எமன் விழித்ததும் இளமை ததும்ப நின்ற சுவாஹாதேவியை வழக்கம் போல்  எலுமிச்சை பழமாக்கி விழுங்கிவிட்டான்.

சுவஹாதேவியோ அக்னியை எலுமிச்சை பழமாக்கி ஏற்கனவே விழுங்கி விட்டாள். அப்படிபட்டவளை எமன் ஒரு பழமாக்கி விழுங்கி விட்டான். பகலில்  எமனின் வயிறு அக்னிக்கும் சுவாஹாவுக்கும் பள்ளியறையானது. 

இதனால் என்ன ஆனது? அக்னி தேவன் சுவாஹாதேவிக்குள் சென்று விட்டதால் உலகில் அசாதாரண நிலை ஏற்பட்டது.
தாய்மார்கள் சமைக்க முடியவில்லை. ஏனென்றால் அடுப்புக்கு அக்னியில்லை. அடுப்புக்கு அக்னியில்லை என்றால் உலகம் எப்படி இயங்கும்?

விஷ்ணுவுக்கு விவரம் தெரிந்தது.

எமன் அசந்த வேளையில்...சுவாஹா அக்னியோடு ஆனந்தக் கூத்தாடியதையும்... பிறகு எலுமிச்சம் பழமாக்கி தன் வயிற்றுக்குள் வைத்துக் கொண்டதையும் அறிந்து கொண்டார் விஷ்ணு.

இப்போது சுவாஹாதேவி எலுமிச்சை பழமாக எமன் வயிற்றில் இருப்பதையும் அறிந்தார் விஷ்ணு. அனைவரையும் விருந்துக்கு அழைத்த விஷ்ணு விருந்து மண்டபத்தில்  எமனை அழைத்து... உனக்குள் எலுமிச்சை பழம் போல இருக்கும் சுவாஹாதேவியை வெளியே விடு என்றார்.

அப்படியே செய்தான்.

வெளியே வந்த சுவாஹாதேவியிடம் ‘உன் வயிற்றுக்குள் இருக்கும் அக்னிதேவனை வெளியே விடு’ என்றார் விஷ்ணு. தர்மசங்கடமடைந்த சுவாஹா வேறு வழியில்லாமல் அக்னியை வெளியே விட்டாள் நிறைவாக விஷ்ணு இவர்களுக்கு பஞ்சாயத்து செய்ததில் சீனியராக இருந்தாலும் எமனைவிட ஜூனியரான அக்னியின் செயல்பாடுகள் பிடித்திருந்ததால் சுவாஹாதேவி ஆசைப்பட்டது போல்... அக்னிதேவனை அவளுக்கே மணமுடித்து வைத்தனர்.  யாகத்தில் சொல்லப்படும் சுவாஹா என்பது இந்த பத்தினியின் பெயர்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக