வியாழன், 23 நவம்பர், 2017

அகலிகையிடம் இந்திரனின் காம லீலை

Image result for அகலிகை சாபம்
#இந்திரன்
இந்த கதை இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. அரம்பையர் கோன் அல்லது தேவலோக வேசிகளின் அரசன் இந்திரனின் காம லீலைகள் அல்லது அயோக்கியத்தனங்கள் பலவற்றில் ஒன்றை இன்று பார்ப்போம்.
கௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.
தேவலோகம் சென்ற நாரதன் இந்திரனிடம் கௌதம முனிவரின் மனைவி அகலிகையை பற்றி வருணித்தான். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.
முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான். கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான்.
அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார். அச்சமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், "இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்" என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.
அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.
இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள்.
இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான். கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்து வணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.
ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.
எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் "உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்" என்றும் "வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு" என்றும் சபித்தார்.
அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர்.
சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் "இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்’’ என்று கூறினார்.
இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்து பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன. எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது.
கடவுளாக போற்றப்படுபவர்களின் கேடுகெட்ட கதைகளும் ஆபாசங்களும் நிறைந்தவைதான் இந்த புராணங்களும் இதிகாசங்களும். இவற்றைதான் சிலர் அர்த்தமுள்ள இந்துமதம் என்று கூறித்திரிகின்றனர்.
#Share_This
-ஆறாம் அறிவு முகநூல் பக்கம்.23.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக