புதன், 22 ஆகஸ்ட், 2018

கோவிலுக்குப் போனால் பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்குமா?

அருமையானதொரு பதிவு:

*கோவிலுக்குப் போனால் பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும் என்று கூறும் ஆன்மீக  விஞ்ஞான மேதைகளே..*

அரை மணி நேரம் கோவிலுக்கு போய் வருபவர்களுக்கே பாஸிடிவ் வைப்ரேஷன் கிடைக்குமென்றால் கோவிலிலேயே வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டு, மந்திர சக்தி உருவேற்றப்பட்ட மூலவர் திருமேனியையை முப்பொழுதும்  தொட்டுப் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் வாழும் மகான்களாக, பாசிடிவ் மின் முனைகளாக, நல்ல எண்ணங்களின் ஊற்றாக அல்லவா இருக்க வேண்டும்?

ஆனால் அவர்கள்  அப்படித்தான் இருக்கிறார்களா?

காஞ்சிபுரம் கோவிலில் காம லீலைகள் புரிந்த தேவநாதனுக்கு ஏன் கர்ப்பகிரகத்திற்குள் காமம் கொப்பளித்தது?

சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோவில் கருவறையில் பத்ரி நாராயணன் என்ற பட்டாச்சாரியார் லீலை பல புரிந்து சிக்கியிருக்கிறார்.

பழனி முருகன் சிலை தங்கத்திலேயே சிலர் ஆட்டய போட்டிருக்கிறார்கள். முருகனுக்கு முன்னால் ஒருவனுக்குத் திருட்டு புத்தி வந்தது எப்படி?

காஞ்சிபுரம் முருகன் கோவில் கச்சியப்ப சிவாச்சாரியார் சிலையைத் திருடியிருக்கிறார் ஒரு அர்ச்சகர். அந்த கோவிலில் உண்மையிலேயே பாசிடிவ் வைப்ரேஷன் இருக்குமானால் அவன் அந்த திருட்டு  வேலையை செய்திருப்பானா?

வடபழனி முருகன் கோவில் அர்ச்சகர் தன் மனைவியைக் கொலை செய்த செய்தி ஊடகங்களில் வந்தது. தனக்கு தினம் தினம்  பூஜை செய்பவனுக்கே நல்ல புத்தியைக் கொடுக்காத முருகன் என்றோ ஒருநாள் வந்து வழிபடும் சாமானியனுக்கு என்ன பாசிடிவ் வைப்ரேஷனைக் கொடுத்து விடப் போகிறார்?

காஷ்மீரில் எட்டு வயது சிறுமியை கோவிலுக்குள் வைத்து பலநாட்கள் சீரழித்து கொன்று வீசியிருக்கிறார்கள். கோவில் நிர்வாகிதான் இந்தக் கொடூரச் செயலுக்குத் திட்டம் வகுத்தது!

அந்தக் குழந்தையின் கதறல் அந்தக் கோவில் சாமிக்கு கேட்கவில்லையா? கேட்டும் அமைதியாக அந்தக் கொடூரத்தை ரசித்துப் பார்த்ததா?

பாசிடிவ் வைப்ரேஷன் விஞ்ஞான மேதைகளே.. தர்மத்தைக் காக்க கடவுள் அவதரிப்பார் என்ற கதையை நம்பும் பக்த சிகாமணிகளே.. அந்தக்குழந்தையின் மரணவலிக்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்? விதியா? அடத்தூ..

உங்களுக்கும் எனக்கும் இப்போதுதான் அந்த சம்பவம் தெரிய வந்தது. ஆனால் கடவுளுக்கு...?

எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த கடவுள் ஏன் வெறி பிடித்த பொறுக்கிகளுக்கு அக்குழந்தையை சீரழிக்க தன் கோவிலில் இடம் தந்து வேடிக்கை பார்த்தார்?

திருவருட்செல்வர் திரைப்படத்தில் சிவாஜிகணேசன் கேட்பார் கடவுள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று! அதற்கு குட்டி பத்மினி, என்னை அரசியாக்கி உங்களை குடிமகனாக்கி இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று கூறுவார்! இந்த பதிலைக் கேட்டு  பக்திப் பழங்களுக்குப் புல்லரிக்கும்! ஆஹா ஓஹோ என்று ஆர்ப்பரிப்பார்கள்!

*இப்போது நான் கேட்கிறேன்.. அந்த மனித மிருகங்கள் குழந்தையை கோவிலுக்குள் வைத்து குதறிய போது  கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்?*

கடவுள் நம்பிக்கையாளர் யாருக்காவது இக்கேள்விக்கு  பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்!

வளர்ப்புப் பிராணியான நாய் அங்கு இருந்திருந்தால் கூட அக்குழந்தையைக் காப்பாற்ற ஏதாவது செய்திருக்கும்  அல்லவா?

சிந்தியுங்கள் நண்பர்களே.. நாத்திகர்களை பிசாசுகளாகக் கருதாதீர்கள். இது போன்ற நிகழ்வுகளைக் கண்டு வெறுத்துப் போய் தான் நாங்கள் நாத்திகர்களானோம்.

வெறும் கல்லும், கோபுரமும், மந்திர முணுமுணுப்புகளும் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் என்று   மக்கள் உணரும் நாளே இவ்வுலகின் புரட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும் முதல்நாளும்  திருநாளுமாகும்!

~முகநூல் சே.செந்தில்.
22.8.18

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

விடை உண்டா விஜயபாரதமே!

- மின்சாரம் -

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆள் நடமாட்டம் இல்லாத சின்னஞ்சிறு சிறிய கோயில்களில் உண்டியல் திருட்டு நடைபெற்று வந்தன - இப்பொழுது பழைமையான பெரிய கோயில்களில் சாமி நகைகளே காணாமல் போகின்றன. பல கோயில்களில் சாமி திருமேனிகளே திருட்டுப் போய் விட்டன. கோயில்களுக்கு நமது முன்னோர்கள் எழுதி வைத்த ஏராளமான நிலங்கள், சொத்துக்கள் கொள்ளை போகின்றன. அரசும் காவல்துறையும் கோயில் சொத்துகளைப் பாதுகாக்கத் தவறி கோட்டை விட்டுள்ளனர்.

(‘விஜயபாரதம்’ ஆர்.எஸ்.எஸ்.

வார இதழ்) 27.7.2018, பக்கம் 3)

விஜயபாரதத்துக்கு ஒன்று தெரியுமா? கோயிலைக் கொள்ளையடிப்பவர்களும் பக்தர்களே என்று சொல்லியிருப்பவர் இந்துமதத்தின் தலைவரான சாட்சாத் சங்கராச் சாரிதான். காஞ்சி காமக்கோடிப் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிதான் என்ன சொல்லு கிறார்?

அவர் வாயாலேயே கேட்டால் விஜயபாரத கும்பலுக்கு ருசியாக இருக்குமே!

குமுதம் கேள்வி: பெரிய மற்றும் சிறு கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றது. இதற்கு என்ன காரணம்? மக்களுக்கு கடவுள்களின் மீதுள்ள பக்தி போய் விட்டதா?

ஜெயேந்திரர் பதில்: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகப்பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழிதேடுகிறார்கள். நாத்திகத் திற்கும், இப்படி எடுத்து போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாக விட்டது. பணமுடை அதிகரித்துள்ளது.

(பேட்டி: பால்யூ)

(‘குமுதம்’ - 12.9.1996)

என்ன ‘விஜய பாரத’ வீராதி வீரர்களே! வாயடைத்து நிற்கிறீர்களே என்ன சங்கதி? 150கோடி ரூபாய் மதிப்புள்ள ராஜ ராஜ சோழன், அவரின் மனைவி உலகமகாதேவி சிலைகளை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்திற்கு கடத்தியது யார்? - இப்பொழுது கையகப்படுத்தப்பட்டு தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது அல்லவா!

அந்த சிலையைக் கடத்தியவர்கள் யார்? விலைக்கு விற்றவர்கள் யார்? வாங்கிய வர்கள் யார்? அவையும் விஜயபாரதத்தின் விலா எலும்பைக் குத்துவதாகவே இருக்கிறது.

கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர் தஞ்சையில் உள்ள சலுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாக சென்னைக்குக் கடத்தப்பட்டது. பின்னர் கவுதம் சாராபாய் என்பவருக்கு கோடிக் கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளும் விற்கப்பட்டன. இதை சிலை தடுப்புப் பிரிவு அய்.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். (விகடன் இணையம் -30.5.2018) (‘டெக்கான் கிரானிக்கள்’ - 2.6.2018)

ராவ்பகதூர் சீனிவாச கோபாலாச் சாரியாராம். இந்தப் பூணூல் திருமேனிக்கு விளக்கம் வேறு தேவையா? ‘விஜய  பாரதங்கள்’ தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப்போகின்றன?

கேள்வி: முயற்சியும் கடும் உழைப்பும் இருந்தால் தெய்வத்தின் அருள் இல்லாமல் போனாலும் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்பது சரியா?

பதில்: முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நடைபெறும் என நம்புகிறதோ!

மார்க்சும், ஏங்கல்சும், விஞ்ஞானிகளும், தந்தைபெரியாரும், அண்ணல் அம்பேத் கரும் பெரிய தலைவர்களாகி இன்று வரை மதிக்கப்படுவதெல்லாம் கடவுள் அருளால் அவர்கள் பெற்ற முயற்சிதானா? அப்படி என்றால் அவர்கள் கடவுள், மதம் உள்ளிட்ட வற்றிற்கு சவுக்கடி கொடுத்து தோரணமாய்த் தொங்க விட்டார்களே - அதுவும் இறைவன் அருளால் தானா?

‘தெய்வத்தான் ஆகா தெனினும்  முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்’

என்பது குறள் (619)

கேள்வி: அடிக்கடி கனவில் பாம்பு வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா?

பதில்: ‘நாகதோஷம் உள்ளது என்று பொருள். பாம்பு கடிப்பதாக கனவு கண்டால் செல்வம் சேரும். அருகில் உள்ள கோயி லுக்குச் சென்று நாகர் சிலைக்கோ, புற்றுக்கோ பால் ஊற்ற வேண்டும்’ என்று விஜயபாரதத் தின் ஆஸ்தான ஜோதிடர் தெரிவித்தார்.

அப்படியா! பாம்பு கடித்ததாக கனவு கண்டாலே செல்வம் சேருமா? கனவில் காணும் போதே செல்வம் சேரும் என்றால் நிஜமாகக் கடித்தால் பெரும் செல்வம் குவியுமோ!

பாம்புப் புற்றுக்கு பால் ஊற்ற வேண்டுமாம்!

இந்த ‘விஜயபாரதங்களுக்கு’ பொது அறிவோ, விஞ்ஞான அறிவோ அறவே யில்லை என்பதற்கு இந்தப் பதில் ஒன்றே போதுமே!

புற்றில் பால் ஊற்றினால் பாம்பு பால் குடிக்குமா? பிளவுண்ட நாக்கையுடைய பாம்பால் பால் குடிக்க முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாததுகள் எல்லாம் பேனா பிடிக்கின்றன.

கேள்வி: ‘கீதை’, ‘திருவாசகம்’, ‘திருக்குறள்’ சிறப் பென்ன?

பதில்: இறைவன் மனிதனுக்கு அருளியது கீதை. மனிதன் இறைவனிடம் வேண்டியது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.

“நான்கு வருணங்கள் என்னால் உண் டாக்கப்பட்டவை; அவரவர்களுக் குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாள னாகிய என்னால் கூட முடியாது”

(கீதை அத்தியாயம்-4, சுலோகம் 13)

“பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்”

(கீதை, அத்தியாம் 9, சுலோகம் 32)

விஜயபாரதக்குஞ்சுகளே! இந்தக் கீதையை சூத்திரர் களும், பெண்களும், வைஸ்யர்களும் எரிக்க வேண்டுமா? ஏற்க வேண்டுமா? விவேகம் இருந்தால் பதில் சொல் பார்க்கலாம். அது ஒருபுறம் இருக் கட்டும். இந்து மதத்தை அமெரிக்கா வரை ஏற்றுமதி செய்த உங்கள் விவேகானந்தர் கீதைப்பற்றி  என்ன கூறுகிறார்?

கீதையைப் படிப்பதை விட கால்பந்து விளையாடுவது

நல்லது என்று சொன்னவரும் விவேகானந்தரே!

“கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக-  அதாவது வேத வியாசர் எழுதி யதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?

மூன்றாவதாக கீதையில் கூறப்படுவது போல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்காவதாக அர்ஜூனனும் ஏனைய வர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள் தானா? என்பன. கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளி யிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன், ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர, இவர்கள் இருந்தனர் என்றோ, குரு சேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

(விவேகானந்தர் - ‘கீதையைப்பற்றிக் கருத் துகள்’ என்ற நூலில் (ஆதாரம்: ஏ.எஸ்.கே. எழுதிய ‘பகுத்தறிவுச் சிகரம் பெரியார்’ என்ற நூலில் - பக்கம் 117)

கீதை முட்டாள்களின் உளறல் என்றாரே- அண்ணல் அம்பேத்கர்!

பரவாயில்லையே - குறளையாவது மனிதனுக்கு மனிதன் சொன்னது என்று ஒப்புக் கொண்டதே. திருக்குறளை மனுதர்மத்தின் பிழிவு என்று சொன்ன திலிருந்து புத்தி மாறியிருப்பது வரவேற்கத்தக்கதே..

- விடுதலை ஞாயிறு மலர் 4. 8. 18

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மகாபாரதத்தில் சத்தியவதி கதை

#சத்தியவதி

இந்த கதை மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் ஆதிவம்சாவதரணப் பர்வத்தில் கூறப்படுகிறது. மகாபாரதத்தை நம்புபவர்கள் இதையும் நம்பித்தான் ஆகவேண்டும்.

ஒரு நாள் மன்னன் உபரிசரன் தனது தேரில் வானத்தில் பறந்து சென்றுகொண்டிருக்கும்போது,

அவனது தலைநகரத்தின் அருகிலே சுக்திமதி என்ற ஆறு ஓடியது. அந்த ஆறானது, காமத்தால் பித்துப்பிடித்ததும், உயிரையுடையதுமான கோலாஹல மலையால் தாக்கி அணைக்கப்பட்டிருந்தது.

மலையின் தவறான முயற்சியைக் கண்ட உபரிசரன், தனது காலால் அந்த கோலாஹல மலையை ஓங்கி உதைத்தான். மன்னன் உதைத்ததனால் கோலாஹல மலையின் அணைப்பிலிருந்து ஆறு வெளியே வந்தது. ஆனாலும் அந்த மலை, அந்த நதியிடம் இரட்டையரான ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தது.

கோலாஹலத்தின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்த உபரிசரனுக்கு நன்றிக்கடனாக, தன் பிள்ளைகளை அந்த ஆறு அவனுக்கே கொடுத்தது.

உபரிசரன் அந்த ஆற்றின் மகனைத் தனது படைகளுக்குத் தலைவனாக நியமித்தான். மகள் கிரிகையை உபரிசரன் மணந்துகொண்டான்.

மனைவி கிரிகை, தனது தீட்டுக்காலம் முடிந்து, குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, உடலுறவுக்கான தனது நிலையை உபரிசரனிடம் தெரிவித்தாள். ஆனால், அதே நாளில் பித்ருக்கள், உபரிசரனிடம் வந்து, தங்கள் சிரார்த்தத்திற்காக ஒரு மானைக் கொன்று கொடுக்கச் சொன்னார்கள்.

மன்னனும் பித்ருக்களின் கட்டளையை மதிக்காமல் இருக்கக்கூடாது என்று எண்ணி, லட்சுமிபோன்ற அழகுடைய கிரிகையை நினைத்துக் கொண்டே தனியாக வேட்டைக்குக் கிளம்பிப் போனான்.

வேட்டைக்கு சென்ற மன்னனுக்கு கிரிகையின் நினைப்பால் காமம் தலைக்கேறி இன்புற்றபோது அவன் வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட வீரியம் வீணாகக் கூடாது என்று நினைத்து, உடனே அதனை இலையில் ஏந்தினான். அதை மூடி கட்டினான்.

துரிதமாகச் செல்லக்கூடிய ஒரு பருந்து, தனக்கு மிக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை மன்னன் கண்டான். பருந்திடம் சென்று, இனிமையானவனே, இந்த எனது விந்தை எனது மனைவி கிரிகைக்காக எடுத்துச் சென்று, அவளிடம் இதைக் கொடுப்பாயாக. அவளது பருவம் வந்துவிட்டது என்றான்.

பருந்து, மன்னனிடம் அதைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் வேகமாகப் பறந்தது. அப்படிப் பறந்து செல்கையில், மற்றொரு பருந்தால் இது பார்க்கப்பட்டது. முதலில் சென்ற பருந்து இறைச்சியையெடுத்துச் செல்கிறது என்று நினைத்து, இரண்டாம் பருந்து அதை நோக்கிப் பறந்தது. இரு பருந்துகளும் வானத்தில் தங்கள் அலகால் சண்டையிட்டுக் கொண்டன. அப்படி அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த விந்து யமுனையின் நீரில் விழுந்தது.

அத்ரிகை என்ற பெயர் கொண்ட அப்சரஸ் ஒருத்தி ஒரு #பிராமணனின் சாபத்தால் மீனாகப் பிறந்து அந்த நீரில் வசித்து வந்தாள். உபரிசரனின் விந்து பருந்தின் பிடியில் இருந்து நீரில் விழுந்ததும், அந்த மீன் அதை விழுங்கிவிட்டது.

சில காலங்களுக்குப் பிறகு, அந்த மீன், மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த மீன் விந்தை விழுங்கிப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன. அந்த மீனின் வயிற்றிலிருந்து, ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக மனித வடிவில் குழந்தைகள் வெளியே வந்தன. இதை மீனவர்கள் உபரிசரனிடம் கூறினார்கள்.

ஆண் குழந்தை உபரிசரனால் எடுத்துக் கொள்ளப்பட்டான். பெண் குழந்தையை எடுக்க மறுத்துவிட்டான். அந்த குழந்தையை மீனவர்களே வளர்த்தார்கள். அந்த குழந்தைதான் சத்தியவதி.

இந்த சத்தியவதிதான் நதியை படகில் கடக்கும்போது பராச முனிவனால்
"எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்" என்றுகூறி
ஏமாற்றப்பட்டு அதன்பலனாக வேதவியாசனை பெற்றெடுத்த தாய். இதையும் அந்த மகாபாரதமே கூறுகிறது.

இந்த மகாபாரதம்தான் கிருஸ்ணன் என்ற பாத்திரத்தையும் கூறுகிறது. மேலே உள்ள கதையை உண்மை என்று ஏற்றுக்கொண்டவர்கள், கிருஸ்ணனை கடவுள் என்று ஏற்றுக்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

- வேணுகோபால சங்கர் - ஆறாம் அறிவு முகநூல் பதிவு (25.2.18)

சபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்!

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு வழிபடும் உரிமை இல்லை என்ற முறை அரசியல் சட்ட விரோதம் என்பதையும், ஆண்_பெண் சமத்துவ முறைக்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு வழக்கின் தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள் விசாரணையில் கேள்வி கேட்டுள்ளனர்; அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானது என்றும் கூறியுள்ளனர்!

அதனால், மூத்த வழக்குரைஞர் மதிப்பிற்குரிய திரு.கே.பராசரன் அவர்களை வைத்து, பழமைவாதிகள் இந்த சம்பிரதாயத்தை காப்பாற்றிட, இவர்களை (10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் _ மாதவிடாய் _ ‘தீட்டு’ என்ற காரணம் கூறி அனுமதிக்கக் கூடாது என்று ஒரு புது விளக்கம் தந்து, எப்படியாவது இந்த சம்பிரதாயத்தை உடைக்கக் கூடாது; பழைய தடையே நீடிக்க வேண்டும் என்று வாதாடியுள்ளனர்.

மூத்த வழக்குரைஞர், “இதில்(Gender Bias) ஆண்_பெண் பேத வெறுப்பு _ பெண்களை வெறுக்கும் மனப்போக்குடன் கூறவில்லை என்றும், பழைய சம்பிரதாயத்தில் இது ஒரு மரபாக காக்கப்படுதல் வேண்டும்’’ என்று வாதாடியுள்ளார்!

மற்றொரு கோயில் ஆதரவு தரப்பு வழக்குரைஞர், “அய்யப்பன் ஒரு திருமணமாகாத கடவுள்; அதற்காகத்தான் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை’’ என்றும் வாதாடியிருக்கிறார்!

திருமணமாகாத கடவுள்களை எல்லாப் பெண்களும் ஹிந்து மதத்தில் தரிசித்து வணங்குவதில்லையா?

பிள்ளையார் _ விநாயக் கடவுள் (Bachelor)) திருமணமாகாதவர்தானே எல்லா வயதுப் பெண்களும் அங்கு அனுமதிக்கப்படுகின்றனரே, அது சரியானால், இவ்வாதம் எடுபடக்கூடிய வாதமா? அசல் கேலிக்கூத்து அல்லவா?

பழைய சம்பிரதாயங்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன என்றால், கோயில் கருவறைக்குள் மின்சார விளக்கு ஏற்றலாமா? ஏர்_கண்டிஷன் வசதி உட்பட திருப்பதி உட்பட பல கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறதே!

இதே கேரளத்தில் பகவதியம்மன் கோயிலில் ‘தீட்டு’ _ மாதவிடாய்ப் பொருளை வைத்தே திருவிழா (செங்களட்சேரி என்று நினைவு) நடைபெறுகிறதே அது சரியா?

இப்படி பலப்பல கேள்விகள் எழும். நமது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் மதச் சுதந்திரம் என்பது 25ஆவது பிரிவில“Subject to public order,
morality, and health and to the other provisions of this part” ” என்று 25ஆவது பிரிவுலும், 26ஆவது பிரிவில்,“Subject ot whole order, morality and health” என்று இருப்பதால், கட்டுப்பாடற்ற முழு மதச் சுதந்தரம் அல்ல; இதன்படி பெண்களைக் கூட ஒரு குறிப்பிட்ட வயதினர் என்று பிரிப்பது ஏற்கக் கூடியதல்ல.

வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு எதிர்பார்க்கும் நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்பு, அரசியல் சட்டத்தின்படி உரிய தீர்ப்பை வழங்கி, மக்கள் தொகையின் சரி பகுதியான பெண்களுக்குரிய வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் என்று நம்புகிறோம்!

- கி.வீரமணி,

ஆசிரியர், ‘உண்மை’

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அய்யப்பன் பிரம்மச்சாரியா?

கேரளாவில் அய்யப்பன் கோயிலுக்குள் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லையென்றால், அய்யப்பன் பிரம்மச்சாரி எனவே, பெண்கள் செல்லக் கூடாது என்கின்றனர்.அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதே தப்பு, மோசடி. அய்யப்பனுக்கு ஒன்றல்ல இரண்டு மனைவிகள் - பூரணி, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள்!

அதிலும் புஷ்கலை சவ்ராஷ்டிரா பெண். ஒரு நெசவாளியின் மகள்! ஆச்சரியமாக இருக்கிறதா? அய்யப்பன் புஷ்கலையைத் திருமண-முடித்த புராணம் இதோ:சவ்ராஷ்ட்ரா பட்டு நெசவாளி திருவாங்கூர் மகாராசாவிற்கு பட்டுத் துணிகள் விற்க தன் மகள் புஷ்கலையை அழைத்துக் கொண்டு சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் அரியங்காவு (கிக்ஷீவீணீஸீளீணீஸ்u) என்ற இடத்திற்கு வரும்போது இரவு வந்துவிட்டது. எனவே, இரவு அங்குள்ள அய்யப்பன் கோயிலில் தங்கினர்.

மறுநாள் காலை தன் மகளை அழைத்துக் கொண்டு திருவாங்கூர் செல்ல பட்டு வியாபாரி தயாரான போது, “அப்பா நீங்கள் திருவாங்கூர் சென்று திரும்பி வரும் வரை நான் இந்தக் கோயிலிலே இருக்கிறேன். என்றாள்.

கோயில் குருக்கள் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு, திருவாங்கூர் நோக்கி காடுவழியே சென்றார். செல்லும் வழியில், யானை வந்து விரட்டியது.அஞ்சி நடுங்கிய வியாபாரி அய்யப்பனை வேண்டினார். அப்போது ஒரு வாலிப வேட்டைக்காரன் வந்து யானையை விரட்டி, வியாபாரியைக் காப்பாற்றினான்.

மகிழ்ச்சியடைந்த பட்டு வியாபாரி, ஒரு நல்ல பட்டுத்துணியை வேடனுக்குக் கொடுத்தார். பட்டை அணிந்த வேடன், “நான் உங்கள் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!’’ என்று சட்டென்று சொல்ல, வியாபாரிக்கு வியப்பு மேலிட்டது. தனக்கு பெண் இருப்பது எப்படி இந்த வேடனுக்குத் தெரியும்? என்று திகைத்தார்.அப்போது அந்த வேடன் நாளை உங்களை அரியங்காவு கோயிலில் சந்திக்கிறேன் என்றான்.

பட்டு வியாபாரி மன்னனுக்குத் துணியைக் கொடுத்துவிட்டு, அரியங்காவு கோயிலுக்கு வந்து, மகளைத் தேடினார். மகளைக் காணவில்லை. அய்யப்பன் குருக்களின் கனவில் தோன்றி நான் புஷ்கலையை அவள் பக்திக்காக ஏற்றுக் கொண்டேன் என்று கூறியதை, குருக்கள் வியாபாரியிடம் சொன்னார்.

வியாபாரி கோயில் கதவைத் திறந்து அய்யப்பனைப் பார்த்தார். முதல்நாள் வேடனுக்குக் கொடுத்த பட்டுத்துணி அய்யப்பன் அணிந்திருந்தார்.’’ என்கிறது அந்தப் புராணம். புஷ்கலையை அய்யப்பன் திருமணம் செய்துகொண்டதை கடந்த 200 ஆண்டுகளாக மார்கழி மாதம் கொண்டாடுகிறார்கள்.

இந்த அய்யப்பனுக்கு பூரணி என்ற மனைவியும் உண்டு. அது மட்டுமல்ல, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அக்ரகாரம் தெருவில், ஆதிபுரீஸ்வரர் கோயிலில் அய்யப்பன் இரு மனைவிகளுடன் உள்ளார். எனவே, அய்யப்பன் பிரம்மச்சாரி என்று சொல்லி பெண்களைத் தடுப்பது பித்தலாட்டம், சட்டவிரோதம், மனித உரிமை மீறல் ஆகும்.

- உண்மை இதழ், 1-15.8.18

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018