அருமையானதொரு பதிவு:
*கோவிலுக்குப் போனால் பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும் என்று கூறும் ஆன்மீக விஞ்ஞான மேதைகளே..*
அரை மணி நேரம் கோவிலுக்கு போய் வருபவர்களுக்கே பாஸிடிவ் வைப்ரேஷன் கிடைக்குமென்றால் கோவிலிலேயே வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டு, மந்திர சக்தி உருவேற்றப்பட்ட மூலவர் திருமேனியையை முப்பொழுதும் தொட்டுப் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் வாழும் மகான்களாக, பாசிடிவ் மின் முனைகளாக, நல்ல எண்ணங்களின் ஊற்றாக அல்லவா இருக்க வேண்டும்?
ஆனால் அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்களா?
காஞ்சிபுரம் கோவிலில் காம லீலைகள் புரிந்த தேவநாதனுக்கு ஏன் கர்ப்பகிரகத்திற்குள் காமம் கொப்பளித்தது?
சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோவில் கருவறையில் பத்ரி நாராயணன் என்ற பட்டாச்சாரியார் லீலை பல புரிந்து சிக்கியிருக்கிறார்.
பழனி முருகன் சிலை தங்கத்திலேயே சிலர் ஆட்டய போட்டிருக்கிறார்கள். முருகனுக்கு முன்னால் ஒருவனுக்குத் திருட்டு புத்தி வந்தது எப்படி?
காஞ்சிபுரம் முருகன் கோவில் கச்சியப்ப சிவாச்சாரியார் சிலையைத் திருடியிருக்கிறார் ஒரு அர்ச்சகர். அந்த கோவிலில் உண்மையிலேயே பாசிடிவ் வைப்ரேஷன் இருக்குமானால் அவன் அந்த திருட்டு வேலையை செய்திருப்பானா?
வடபழனி முருகன் கோவில் அர்ச்சகர் தன் மனைவியைக் கொலை செய்த செய்தி ஊடகங்களில் வந்தது. தனக்கு தினம் தினம் பூஜை செய்பவனுக்கே நல்ல புத்தியைக் கொடுக்காத முருகன் என்றோ ஒருநாள் வந்து வழிபடும் சாமானியனுக்கு என்ன பாசிடிவ் வைப்ரேஷனைக் கொடுத்து விடப் போகிறார்?
காஷ்மீரில் எட்டு வயது சிறுமியை கோவிலுக்குள் வைத்து பலநாட்கள் சீரழித்து கொன்று வீசியிருக்கிறார்கள். கோவில் நிர்வாகிதான் இந்தக் கொடூரச் செயலுக்குத் திட்டம் வகுத்தது!
அந்தக் குழந்தையின் கதறல் அந்தக் கோவில் சாமிக்கு கேட்கவில்லையா? கேட்டும் அமைதியாக அந்தக் கொடூரத்தை ரசித்துப் பார்த்ததா?
பாசிடிவ் வைப்ரேஷன் விஞ்ஞான மேதைகளே.. தர்மத்தைக் காக்க கடவுள் அவதரிப்பார் என்ற கதையை நம்பும் பக்த சிகாமணிகளே.. அந்தக்குழந்தையின் மரணவலிக்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்? விதியா? அடத்தூ..
உங்களுக்கும் எனக்கும் இப்போதுதான் அந்த சம்பவம் தெரிய வந்தது. ஆனால் கடவுளுக்கு...?
எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த கடவுள் ஏன் வெறி பிடித்த பொறுக்கிகளுக்கு அக்குழந்தையை சீரழிக்க தன் கோவிலில் இடம் தந்து வேடிக்கை பார்த்தார்?
திருவருட்செல்வர் திரைப்படத்தில் சிவாஜிகணேசன் கேட்பார் கடவுள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று! அதற்கு குட்டி பத்மினி, என்னை அரசியாக்கி உங்களை குடிமகனாக்கி இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று கூறுவார்! இந்த பதிலைக் கேட்டு பக்திப் பழங்களுக்குப் புல்லரிக்கும்! ஆஹா ஓஹோ என்று ஆர்ப்பரிப்பார்கள்!
*இப்போது நான் கேட்கிறேன்.. அந்த மனித மிருகங்கள் குழந்தையை கோவிலுக்குள் வைத்து குதறிய போது கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்?*
கடவுள் நம்பிக்கையாளர் யாருக்காவது இக்கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்!
வளர்ப்புப் பிராணியான நாய் அங்கு இருந்திருந்தால் கூட அக்குழந்தையைக் காப்பாற்ற ஏதாவது செய்திருக்கும் அல்லவா?
சிந்தியுங்கள் நண்பர்களே.. நாத்திகர்களை பிசாசுகளாகக் கருதாதீர்கள். இது போன்ற நிகழ்வுகளைக் கண்டு வெறுத்துப் போய் தான் நாங்கள் நாத்திகர்களானோம்.
வெறும் கல்லும், கோபுரமும், மந்திர முணுமுணுப்புகளும் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் என்று மக்கள் உணரும் நாளே இவ்வுலகின் புரட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும் முதல்நாளும் திருநாளுமாகும்!
~முகநூல் சே.செந்தில்.
22.8.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக