🔴 *மதநம்பிக்கை ஸ்s சட்டம் ஆங்கிலேயர் காலத்து வழக்கில் சிக்கிய திருப்பதி கோயில்*
(“கோயில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங் களின் மூலம் கொள்ளை அடிக்கப் பட்டு விடுகின்றன” - ‘குடி அரசு’ தலையங்கம் 13.9.1931)
நீதிமன்றங்கள் சந்திக்கக்கூடிய சவால் களில் முக்கியத்துவம் பெறக்கூடியதாக மதநம்பிக்கைக்கும், பழக்கத்திற்கும் எதிராக வரக்கூடிய அரசியல் சட்ட விதிமுறைகள் அமைந்திருப்பதை எடுத்துக் கூறப்பட்டு வருவதைக் காண்கிறோம்.
நிலுவை வழக்குகள்
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப் படாது என்று கூறும் வழக்கும், இசுலாம் மதத் தில், கணவன், மனைவியைத்தான் விரும்பும் வகையில் ‘தலாக்’ கூறுவதன் மூலம் மண விலக்கு பெறுவது பற்றிய வழக்கும், ஓரினச் சேர்க்கைப் பற்றிய வழக்கில் கூட 'நீதிமன்றம் இந்துமத சட்டத்தின்படி வழக்கை அணுக வேண்டும் என்ற வாதமும் இதற்கு எடுத்துக் காட்டுகளாக உள்ளன.
இத்தகைய மதச்சார்புடைய வழக்குகளுக் குத் தடையாக, தொல்லையாக இருப்பது இந்திய அரசியல் சட்டமே. எந்த மதச்சடங்கு முறைகளும், மதவிழாக்களும் அரசியல் சட்ட தாக்கத்தால், பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக செயல்பட்டு வருகின்றன. மத நம்பிக்கைக்கும் சட்ட விதிகளுக்குமிடையே நிகழும் மோதல்கள் அண்மைக்கால நிகழ்வன்று. இதற்கான காரணம் அரசியல் சட்டமே என்று அதன் மீது பழிசுமத்துவது சரியாகாது. மாறாக மனித இனபரிணாம வளர்ச்சியில் இது தவிர்க்க முடியாத ஒன்று.
பல நூற்றாண்டுகளாக மதநம்பிக்கையும் அதன் வழிவந்த கோட்பாடுகளுமே சட்டங் களாக சமூகத்தை ஆட்கொண்டிருந்தது. ஆனால் அரசியல் சட்ட வழிமுறைப்படி நடைபெறும் மக்களாட்சி முறையில், புதிய சட்ட அமைப்புக்கும், பழைய அமைப்பு முறைக்கும் மோதல் ஏற்படுவது இயற் கையே. இதன் வெளிப்பாடே இன்று நீதி மன்றங்களில் நடைபெறும் வழக்குகள். ஆனால் அரசியல் சட்டமுறை நடை முறைக்கு வருமுன்பே, சட்டத்தின் வலி மையே, மதநம்பிக்கையை விட உயர் நிலையைப் பெற்றது என்று வலியுறுத்தி வந்தவர்களுமுண்டு. இதற்கு எடுத்துக் காட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த திருப்பதி மகந்த் வழக்கைக் கூறலாம்.
பாலாஜியின் சொத்து
அந்த வழக்கில் விபரம் கீழே கூறப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம்வரை கிழக்கிந்திய கம்பெனி, வெங்கடேஸ்வரா அல்லது சீனிவாசன் என்னும் கடவுளின் சொத்துக்களை மேற் பார்வை செய்தும் நிர்வகித்தும் வந்தது. 1817இல் இயற்றப்பட்ட சென்னை கட்டுப் பாடு சட்டம் செயலுக்கு வந்த பிறகு, கோயி லானது வருவாய்த்துறை குழுமத்தின் மேற் பார்வையில் வந்தது. இந்த மேற்பார்வை மாவட்ட ஆட்சியர் மூலம் நடைபெற்றது.
இதற்கிடையில் 1840 அளவில் இங்கிலாந் தில், இந்துக்கள், முசுலீம்களின் மத நிறு வனங்களை கிருத்துவ கிழக்கிந்திய கம் பெனி நிர்வகிப்பதை எதிர்த்து ஓர் இயக்கம் தோன்றியது. அதன் விளைவாக திருப்பதி கோயில் சீரமைப்பு, நிர்வாகம், கோயில் ஆதினத்தின் மகந்த் என்பவரிடம் ஒப் படைக்கப்பட்டது. மகந்த்தின் தலைமை அலுவலகம் திருப்பதியில் இருந்தது. திருப் பதி மகந்த் என்றே இவர் அழைக்கப் பட்டார்.
கொடிமரத்துக்கு வசூல்
திருப்பதி கோயிலுக்கு கொடிமரம் அமைக்கப்பட்டபோது பக்தர்கள், தங்க காசுகள் வாங்க நிறைய பணம் கொடுத்தார் கள். இந்த தங்கக்காசுகள் ஒரு கலசத்தில் வைக்கப்பட்டு, கொடிமரத்தின் அடியில் வைக்கப்படுவது வழக்கம். அதன்படி கல சம் புதைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயில் மகந்த்துக்கு எதிராக, நம்பிக்கை மோசடி, பணம் கையாடல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்கக் காசுகளுக்குப் பதிலாக செப்புக்காசுகள் புதைக்கப்பட்ட தாகக் குற்றம் கூறப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க கொடி மரத்தை அடியிலிருந்து தோண்டி எடுக்க வேண்டும். இதற்கு மத நம்பிக்கை தடை யாக இருந்தது. சம்பிரதாயப்படி நடப்பட்ட கொடிமரத்தைத் தோண்டி எடுப்பது புனிதத் தன்மைக்கு எதிரானது என்பது மகந்த்தின் வாதமாக இருந்தது. அப்படி தோண்டி எடுப்பது வழிபடும் பக்தர்களின் உணர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.
தலைமை பூசாரியின் மனு
வியப்பை ஏற்படுத்தும் வகையில் கோயில் தலைமைப் பூசாரி பக்தர்களின் உணர்வுக்கு எதிராக கலசத்தைத் தோண்டி எடுக்க மனு கொடுத்து முயற்சி மேற் கொண்டார். மேஜிஸ்ட்ரேட் மனுவை ஏற்று கலசத்தை எடுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது வரலாற் றில் பரபரப்பூட்டும் வழக்காக அமைந்தது.
சட்ட அறிவு மேதைகள் மோதல்
இரண்டு சட்ட அறிவு மேதைகளான சுப் பிரமணிய அய்யர், ஏரல்டி கார்டன் ஆகி யோரிடையே, சட்டப்போர் நிகழ்ந்தது. சுப்பிரமணிய அய்யர் (பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானவர்) கோயில் தலைமைப் பூசாரிக்காக வாதிட்டார். எதிர் கொள்ள முடியாத சட்ட நிபுணர் நார்டன் மகந்த்துக்காக வாதாடினார். இந்த வழக்குத் தலைமை நீதிபதி ஆர்தர்கோரின்ஸ் மற்றும் நீதிபதி முத்துசாமி அய்யர் ஆகிய அமர்வு நீதிபதிகள் முன்வந்தது.
இந்த வழக்கை அருகில் இருந்து கவ னித்து வந்த மற்றுமொரு சட்ட நிபுணரும் அட்வகேட் - ஜெனரலுமாகிய எஸ்.சிவ சாமி அய்யர், தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய குறிப்பில், "நார்டன், கொடிமரத்தின் மதப் புனிதத் தன்மையைத் தன் வாதத்திற்குத் துணையாகக் குறிப்பிட்டார்.
நீதிமன்றம், புனிதத் தன்மையைக் கெடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தார். அப்படி செய்தால், ஆன்மிக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என் றார். கொடிமரத்தைத் தோண்டுவதற்கான கழுத்துக்கு எதிரான பல வாதங்களை வைத்தார். மூன்று மணிநேரம் வாதிட்டார். அடுத்து சுப்பிரமணிய அய்யர் வாதிட்டார். அவர் ஒரு மணி நேரத்துக்குக் குறைவாக வாதத்தை வைத்தாலும் அது ஒரு மின்சாரப் பார்சலாக இருந்தது. நார்ட்டனுடைய வாதங்களை அரை மணிக்கு குறைந்த வாதத்தின் மூலம் நசுக்கிப் போட்டார். தன்னுடைய சொற்பொழிவு ஆற்றலினால், பிரமிக்கத் தக்க உரையை "வானமே இடிந்து விழுந்தாலும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும்" (திவீணீt யிustவீtவீணீ க்ஷீuணீt நீணீமீறீuனீ) என்ற சிறப்பான சொற்களுடன் வாதத்தை முடித்தார். அவர் ஆற்றிய உரைகளுள் இதுவே நான் கேட்ட சிறந்த உரையாகும். அவரைப் போன்றே கச்சிதமாகவும், சுருக்க மாகவும் வீரிய உரையாகவும் இருந்தது.
தங்ககாசுகள் - கோவிந்தா! கோவிந்தா!
நீதிபதி முத்துசாமி அய்யர், மாஜிட்ரேட் வழங்கியத் தீர்ப்பை உறுதிபடுத்தி தீர்வு வழங்கினார். உண்மை வெளிப்பட்டது. கலசத்தில் தங்கக்காசுகள் இல்லை. செப்புக்காசுகளே இருந்தன.
எனவே, நம் அரசியல் சட்டம் வரும் முன்னதாகவே, மதநம்பிக்கைக்கும் சட்டத் திற்குமான மோதல் வழக்குகள் நிறைந்தி ருந்த வரலாறு உண்டு என்பது தெளிவாகிறது.
(சென்னை மூத்த வழக்குரைஞர் என்.எல்.இராஜா அவர்களின் கட்டுரையின் கருத்துப்பிழிவு மொழியாக்கம், மு.வி.சோம சுந்தரம்)
நன்றி: ‘தி இந்து', 13.8.2018
http://www.viduthalai.in/component/content/article/71-headline/168076--s-------.html