வியாழன், 11 அக்டோபர், 2018

ரோக  நோயுற்றவர்களே நவராத்திரி பூஜைகளை செய்ய வேண்டியவர்கள்

நவராத்திரி பண்டிகை பூஜைகளை யார் செய்ய வேண்டும் என்றால், மரணத்துக்கு இட்டுச் செல்லும் ரோக  நோயுற்றவர்களே நவராத்திரி பூஜைகளை செய்ய வேண்டியவர்கள் என்று அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது.


அபிதானசிந்தாமணி என்ன கூறுகிறது?

நவராத்திரி விரதம் - 1. ருதுக்களில் வசந்தருது, சரத்ருது என்னும் இரண்டு ருதுக்களும் மனிதருக்கு ரோகத்தை விளைத்து நோய் செய்வதால் யமனுடைய இரண்டு கோரப்பற்களுக்குச் சமானமாகக் கூறப்பட்டிருக் கின்றன. ஆகையால், அவற்றால் உண்டாகும் துன்பத்தி னின்றும் நீங்க வேண்டிய மனுஷர் இந்த நவராத்திரி விரதத்தை செய்தல் வேண்டும்.

பூஜைக்கு வேண்டியவைகளை அமாவாசை தினத்தி லேயே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை போஜனத்துடன் உபவாசியாய் இருந்து மறுநாள் பிரதமை முதல் பூஜைக்கு ஆரம்பித்தல் வேண்டும். நான்கு முழ நீளமும் ஒரு முழ உயரமுள்ள வேதிகை யமைந்த அலங்கரித்த மண்டபத்தில் அமைத்துத் தான் வேதம் உணர்ந்த வேதியர் ஒன்பதின்மர் அல்லது அய்வர், மூவர், ஒருவருடன் மண்டபத்திற்குச் சென்று ஆசனத்தில் சங்கு, சக்ர, கதா பத்மத்துடன் கூடிச் சதுர்ப் புஜத்துடன் ஆயினும், பதினெண்கரத்துடன் கூடிய வளாகவே தேவியின் திருவுருவத்தைத் தாபித்து அலங்கரித்துக் கும்பபூஜையின் நிமித்தம் கலசம் தாபித்து அதில் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களை நிரப்பி மாவிலை முதலிய அய்ந்துவகைத் தளிர்களை மேலே வைத்துப் பூஜித்தல் வேண்டும்.

பின் சங்கற்பஞ் செய்துகொண்டு வாசனைத் திரவி யங்களாலும்; பலவகை மண மலர்களாலும் தேவியைத் தூபதீபங்களால் மந்திரபூர்வமாய் விதிப்படி பூசித்து நவாவரண பூஜையுஞ் செய்து அர்க்கியங் கொடுத்துப் பலவகை நிவேதனங்கள் செய்தல் வேண்டும். பின் ஹோமார்த்தமாய் யோனிகுண்டம் அமைத்துத் தண்டிலம் இட்டு ஓமத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். பூஜிப்போன் சயன சகாதிகளை விட்டுத் தரையில் படுத்து உறங்க வேண்டும். பிரதமையில் அஸ்த நக்ஷத்திரங் கூடில் விசேஷமென்றும் அத்தினத்தில் தேவியைப் பூஜிக்கின் சகலாக்ஷ்டங்களையுந் தருவள் எனக் கூறுவர். கும்ப பூசைமுதல் ஓமாந்தம் வரையிற் செய்யத் தரு வனவற்றைச் செய்து பின் கன்னிகைகளைப் பூஜித்தல் வேண்டும்.

கன்னிகைகள் யாவரெனின் இரண்டு வயது முதல் பத்து வயது அளவுள்ளவர்களாம். இக்கன்னியர்க ளுக்கு முறையே குமாரி, திரிமூர்த்தி, ரோகணி, காளிகா, சண்டிகா, சாம்பரா, துர்க்கா, சுபத்திரா என்று ஒவ்வொரு பெயராகும். இவர்களை வேத மந்திரங்களால் பூஜித்தல் வேண்டும். மேற்சொன்ன கன்னிகையரைத் தினம் ஒவ் வொருவராகவேனும், அல்லது முதனாள் தொடங்கி ஒவ்வொன்று அதிகமாகவேனும், பூஜை நடத்தல் வேண்டும். ஒருவன் நவராத்திரி முழுதும் பூசிக்க அசந்தனாவ னேல்  அஷ்டமியில் அவசியம் பூஜித்தல் வேண்டும். என்னென்னின் பூர்வம் தக்ஷயாகத்தை அழித்த பத்திரகாளி தோன்றிய தினமாகையால் என்க. அசக்தரானோர் சப்தமி, அஷ்டமி, நவமி இம்மூன்று தினத்திலும் பூசிப் பரேல் ஒன்பது தினத்திலும் பூசித்த பலனை அடைவர். இவ்விரதத்தை மேற்கொண்டவரெல்லாச் செல்வங் களையும் அடைந்து உயர்பதம் அடைவர். இதனை அநுட்டித்தோர் சுசீலன் சுகேது முதலியோர்.

2. விரதங்களில் ஒன்று. இது புரட்டாசி மாதம் பூர்வ பக்ஷப் பிரதமை, முதல் திரிதிகை வரையில் உருத்திரி யையும், சதுர்த்தி முதல் ஷஷ்டி வரையில் இலக்குமியை யும், சப்தமி முதல் நவமி வரையில் சரஸ்வதியையும், பூசித்துத் தசமியில் முடிப்பது. இதனை சுகேது என்னும் அரசன், அரசாட்சி யிழந்து வருந்தியதால் அவன் மனை வியாகிய துவேதியை ஆங்கீரச முனிவர் இவ்விரதம் அநுட்டிக்கக் கற்பித்தனர். அவ்வகை அவள் அநுட்டிக்க அவ்வநுட்டானத்திற்குப் பின் அவள் வயிற்றில் பிறந்த குமரனாகிய சூரியபிரதாபன் இழந்த நாட்டைப் பகை வரிடமிருந்து மீட்டனன் என்பர்.

இவ்வாறு அபிதானசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 11.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக