செவ்வாய், 31 ஜனவரி, 2017

கிறிஸ்து மதமும் பணச் செலவும்



அமெரிக்க சர்வ கலா சாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திர போஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையைப் பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட் டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடுகளில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது ரூ.12 கோடி ரூபாய்களாகும்.

ரிபப்ளிக் நாடான சைனாவில் புராடஸ்டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்கு மேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மெஷினரிகள் தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினிகளோ, சில ஆண்டுகளுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள், இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறை வாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:- ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசுநாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ரிசர்வ் ஆக்க வேண்டும்.

இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத்தின் பேரால் செலவு செய்யும் கிறிஸ்து மதமாகட்டும், அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933, குடிஅரசு

-விடுதலை,19.9.14

வெள்ளி, 27 ஜனவரி, 2017

அய்யப்பனைக் காப்பாற்றிய சிறுநீர்!

கடந்த 17.1.1978-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சியிலிருந்து வெளியிடும் செய்தித்தாளை படிக்க நேர்ந்தது. அதில் எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ் என்ற பகுதியில் ஒரு செய்தியை படித்து வியப்பும் அதேபோல் சிரிப்பும் உண்டாயிற்று.

அய்யப்பப் பக்தர்கள் தான் இதற்குப் பதில் கூற வேண்டும். அதில் கண்டுள்ள செய்தியின் தமிழ் மொழியாக்கம் இதோ!

‘Urln Quers Fire’

(எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ்), கோட்டயம், ஜனவரி -16, சிறுநீர் மீண்டும் செய்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்றும் எதிர்பாராத இடங்களில் கூட ஆச்சரியப்படத்தக்க செயல்களைப் புரிந்துள்ளது. சிறுநீரின் உபயோகம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கும்பளம் தோடி என்ற சபரிமலை வனப்பிரிவைச் சேர்ந்த பகுதி சாம்பலாகி இருக்கும். சபரிமலையின் எல்லா பகுதிகளும் காவல் புரிந்து வந்த காவல்துறையினர் ஜனவரி 9ஆம் தேதியன்று கும்பளம்தோடி என்ற பகுதியில் தீப்பிடித்துள்ளதாக கம்பியில்லாத் தொலைபேசி மூலமாக தலைமை அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பினர். காவல்துறை தனி அலுவலர் திரு. பி.ஆர்.மேனன் உடனடியாக 100 காவலர்களை இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களின் தலைமையில் தீக்கிரையாகி கொண்டிருக்கும்

பகுதிக்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியை தீவிரமாக தொடங்கும்படி கட்டளையிட்டார். தீ மிகவும் அசுர வேகத்தில் பரவிக் கொண்டு கடவுள் அய்யப்பனின் தலமாகிய அந்த அடர்ந்த காட்டையே அழிக்கும் நிலைக்கு எத்தனித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் காவல் படையினர் அந்த இடத்தை சென்றடைந்தனர். அருகில் தண்ணீர் வசதியோ போதுமான அளவு மணலோ கிடையாது. காவலர்கள் என்ன செய்வது என்று அறியாமல் குழப்பத்திற்கிடையே கையற்ற நிலையில் தவித்துப் போயினர். ஆனால் தனி ஆயுதக் காவல்பிரிவைச் சார்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலும், கேரள ஆயுதக் காவல் பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பால்ராமும் பலவிதமான சிந்தனையில் ஈடுபட்டனர். இறுதியாக ஒரு விந்தையான எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது போலும். ஒரே சமயத்தில் 100 காவலர்களையும் தீயை நோக்கி சிறுநீர் விடும்படி அந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் கட்டளையிட்டனர். தீ மெதுவாக தணிந்தது. முடிவாக அணைக்கப்பட்டு விட்டது. சில தினங்களுக்கு முன்னர் மகர விளக்கு விழாவிற்காக சபரிமலைக்குச் சென்ற செய்தியாளர்களிடமும் இந்நிகழ்ச்சிகளை தனிக்காவலர் அலுவலர் மேனன் அவர்கள் விளக்கினார். தக்க சமயத்தில் செயல்புரிந்து  வரவிருந்த பெரும் விளைவை தடுத்த தற்காக அந்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், அவர்கள் சேவையை பாராட்டி தகுந்த பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

(ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்-
17.1.1978, செவ்வாய், கொச்சி பதிப்பு

-விடுதலை,23.5.14

புத்தரின் ஆத்மா மறுப்பு



புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒரு பார்ப்பனர் ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன? என்று வினவினார்.

ஆத்மா (உயிர்) எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள்? கண்களைத் தோண்டி விட்டால், அந்த ஆத்மாவால் (உயிரால்) பார்க்கமுடியுமா? காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்கமுடியுமா? மூக்கை எடுத்துவிட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா?

நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால் (உயிரால்) முடியுமா? என்று கேட்டுவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்.

-விடுதலை,30.5.14

கடவுள் எங்கே இருக்கிறான்?




ஜெபமாலை உருட்டுவதை விடு, அத்துடன் பாட்டையும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயிகளிடமும் கடவுள் இருக்கிறான்.

அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

குறிப்பு: கோயிலில் கடவுள் இருக்கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
ஜாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
நீதிஅறம் அழித்து வரல்
நிர்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத்தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

- திரு.வி.க.

-விடுதலை,30.5.14

பூசணிக்காய் மகத்துவம்




புராணத்திலே கூறப்பட்டுள்ள கடவுள்கள் எப்படித் தோன்றினர் என்ற செய்திகளை நாம் படிக்க நேரிடும் போது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மக்களின் அறிவின்மையும் முட்டாள்தனமும் அவர்களுடைய விபரீதமான கற்பனையும் நமக்கு நன்கு தெளிவாகின்றது. அது - விஞ்ஞானம் வளராத காலம்.

மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் இருந்த காலம்.

அவ்வாறு அவர்களை சிந்திக்க விடாமல் அந்த கடவுளைக் கற்பித்தவர்கள் மக்களை முட்டாள்களாக்கி விட்டிருந்த காலம்.

அவரவர் வசதி, கற்பனைக்கு ஏற்றவாறு கடவுளை கற்பனை செய்து பரப்பியவர் களும் அதை நம்பி ஏமாந்தவர்களும் வாழ்ந்த காலம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் மக்களுடைய சிந்தனை, அறிவு இரண்டுமே இன்னும் புதுப்புதுக் கடவுள்களைக் கற்பிப்பதில்தான் ஈடுபட்டு இருக்கிறது. உண்மையைச் சிந்திக்க மறுப்பதோடு தங்கள் கற்பனையைத்தான் வளர்த்து வருகின்றார்கள்.

கல்லைக் கடவுள் என்றார்கள் - அதை வணங்கினார்கள். அதற்குப் பால் அபிசேகம், நெய் அபிசேகம் நடத்தினார்கள். எண்ணெய்க் காப்பு சாத்தினார்கள். சாணிக்கு பொட்டிட்டார்கள் - சாமி என்றார்கள். கடவுளின் பெயரால் காலத்தையும் செல்வத்தையும் தங்கள் சக்தியையும் வீணாக்கினார்கள்.

இன்று இதோ ஒரு புதுக் கற்பனை!

திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பல் குலங்கரா என்ற ஊரில் பூசணிக்காய்ப் பொட்டிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு ஊதுபத்தி கற்பூர ஆரத்தி காட்டி இருக்கிறார்கள். பால், நெய் என்றும் இன்னோரன்ன நைவேத்தியம் படைத்து இருக்கிறார்கள்.

இத்தனையும் செடியிலே பந்து போல் குண்டாகக் காய்க்காமல் நீள் வடிவத்திலே பாம்புபோல் காய்த்துள்ள பூசணிக்காய்க்கு அடித்த சான்ஸ். தினமும் பக்த கோடிகள் ஆயிரக்கணக்கில் அந்த பூசணிக்காயைக் கும்பிட விஜயம் செய்கின்றனர்.

வளைந்து காய்ந்த பூசணிக்காயைக் கடவுள் என்று வணங்கும் பக்தர்களே! கடவுள் உண்மையில் இருப்பாரேயானால் அந்தச் செடியிலே காய்த்துள்ள அந்த பூசணிக்காய் இன்னும் குறைந்தபட்சம் ஆறு மாதமாவது காய்ந்துப் போகாமல் இருக்குமா?

ஒரு பூசணிக்காய் இயற்கைக்கு மாறாக வளைந்து காய்த்ததைக் கடவுள் என்று வணங்குகிறீர்களே...! உலகத்தில் இயற்கையாக பிறவாமல் வளைந்த முதுகோடு (கூன்) பிறக்கிறார்களே அவர்கள் எல்லாம் கடவுள்களா? அல்லது பிறவிக் கோளாறுகளோடு பிறக்கிறார்களே அவர்களெல்லாம் கடவுள்களா? அவர்களுக்கு பாலாபிசேகமும், நெய்யாபிசேகமும் செய்தீர்களா? அல்லது செய்ய முன் வருவீர்களா?

இன்னுமொரு சுவையான செய்தி... இந்தப் பெயரைச் சொல்லி பண்ட் கலெக்சன் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம். இது என்ன நீங்கள் செய்கின்ற விபரீதமான கற்பனைக்கு கூலியா?

ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு, நாள்: 26.5.1978
-விடுதலை,30.5.14

வியாழன், 12 ஜனவரி, 2017

வாரியாருக்கு வாயடைப்பு




திருவாரூரில் படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் ஊருக்கு காலட்சேபம் செய்ய திருமுருக கிருபானந்த வாரியார் அடிக்கடி வருவார். அவரைக் கலாட்டா செய்ய வேண்டுமென்பதற்காகவே, பள்ளிக் கூடத்திற்கு டிமிக்கி கொடுத்து விட்டு நண்பர்களுடன் செல்வேன்.

காலட்சேபத்தில் கதை கூறும்போது திரு.வாரியார் அவர்கள், உயிருள்ள ஒன்றையும் - மிருகங்களையோ, பறவைகளையோ கொன்று மனிதன் சாப்பிடுவதற்காக கடவுள் படைக்கவில்லை என்றார். நான் எழுந்து, சிங்கத்திற்கு கடவுள் என்ன உணவை படைத்தார் என அவரிடம் கேட்டேன்.

வாரியார் என்னை உட்காரும் படி அடக்கிவிட்டு தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதைச் சாப்பிட லாமா? என்று மாமிசம் உண்போர் கேட்பார்கள். காய்கறி களை பறித்தபின் அவைகளின் வளர்ச்சி தடைப்படு வதில்லை. ஆனால், மனிதன் காய்கறிகளைத் தாராளமாக உண்ணலாம்; இது யாருக்கும் தெரியாது என்றார்.

உடனே நான் எழுந்து, கீரைத் தண்டை வேரோடு பறித்து உண்கிறோம்; அது எப்படி? என்று கேட்டேன். மறுபடியும் என்னை அடக்கி உட்கார வைத்தார் வாரியார்.

அன்று நான் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. அதனால் நானும் என்கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.

- கலைஞர்,  ஆதாரம்: சுடர் கொழும்பு

எவன் பிராமணன்?



எழுத்துரு அளவு    ஒரு பிரா மணனோ அல்லது வேறு யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும் போது, பிராமணரல் லாதார் அதை எதிர்த்துப் போரிட் டால் அதை முழுக்க முழுக்க நான் ஆதரிக்கிறேன்.

நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண் டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப்பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணன் அல்லன்.

- காந்தியார் 16.9.1927 அன்று தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில்

-விடுதலை,12.9.14

பூமியை அரசர்கள் மாறி மாறி ஆள்வதேன்?


சிவனும் பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்து கொண்டிருந்தும் விந்து வெளிப்படாத நிலையில், தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர்.

ஏனெனில், இவ்வளவு நீண்ட காலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.

விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்து விட்டார்களே என்று ஆத்திரத்தில், அவர்களின் மனைவிகள் எல்லாம் மலடாக போகக்கடவது என்று பார்வதி தேவியார் சாபமிட்டாளாம்.

மற்றும் தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீது பார்வதிக்கு கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆள வேண்டும் என்று சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம்.

ஆதாரம்: வால்மீகி இராமாயணம்


பாவ புண்ணியம்

சமுதாயத்தில் உயர்ந்த வகுப்பார் - தாழ்ந்த வகுப்பார் என்ற பிரிவினை இருப்பது அவரவர்களின் பூர்வ ஜென்ம பலனே என்று கூறுகிறார்கள். இது வெறும் கற்பனையே.

பாவம் செய்தவர்கள் தாழ்ந்த வகுப்பினராகவும், புண்ணியம் செய்தவர்கள் உயர் வகுப்பின ராகவும் பிறப்பதாக சொல்கிறார்களே, முன்ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் எதற்காக மறு படியும் பிறக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டாமா?

ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம், முன்ஜென்ம பாவ புண்ணியம் என்று கூறுவது தவறானதாகும். மக்கள் மாற்றிக் கொண்டாக வேண்டும்.

28.7.1963 அன்று அய்தராபாத் பொதுக் கூட்டத்தில் நேரு



சிவனும் பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்து கொண்டிருந்தும் விந்து வெளிப்படாத நிலையில், தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர்.

ஏனெனில், இவ்வளவு நீண்ட காலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.

விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்து விட்டார்களே என்று ஆத்திரத்தில், அவர்களின் மனைவிகள் எல்லாம் மலடாக போகக்கடவது என்று பார்வதி தேவியார் சாபமிட்டாளாம்.

மற்றும் தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீது பார்வதிக்கு கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆள வேண்டும் என்று சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம்.

ஆதாரம்: வால்மீகி இராமாயணம்

பாவ புண்ணியம்




சமுதாயத்தில் உயர்ந்த வகுப்பார் - தாழ்ந்த வகுப்பார் என்ற பிரிவினை இருப்பது அவரவர்களின் பூர்வ ஜென்ம பலனே என்று கூறுகிறார்கள். இது வெறும் கற்பனையே.

பாவம் செய்தவர்கள் தாழ்ந்த வகுப்பினராகவும், புண்ணியம் செய்தவர்கள் உயர் வகுப்பின ராகவும் பிறப்பதாக சொல்கிறார்களே, முன்ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் எதற்காக மறு படியும் பிறக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டாமா?

ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம், முன்ஜென்ம பாவ புண்ணியம் என்று கூறுவது தவறானதாகும். மக்கள் மாற்றிக் கொண்டாக வேண்டும்.

28.7.1963 அன்று அய்தராபாத் பொதுக் கூட்டத்தில் நேரு
-விடுதலை,12.9.14