வெள்ளி, 27 ஜனவரி, 2017

அய்யப்பனைக் காப்பாற்றிய சிறுநீர்!

கடந்த 17.1.1978-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சியிலிருந்து வெளியிடும் செய்தித்தாளை படிக்க நேர்ந்தது. அதில் எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ் என்ற பகுதியில் ஒரு செய்தியை படித்து வியப்பும் அதேபோல் சிரிப்பும் உண்டாயிற்று.

அய்யப்பப் பக்தர்கள் தான் இதற்குப் பதில் கூற வேண்டும். அதில் கண்டுள்ள செய்தியின் தமிழ் மொழியாக்கம் இதோ!

‘Urln Quers Fire’

(எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ்), கோட்டயம், ஜனவரி -16, சிறுநீர் மீண்டும் செய்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்றும் எதிர்பாராத இடங்களில் கூட ஆச்சரியப்படத்தக்க செயல்களைப் புரிந்துள்ளது. சிறுநீரின் உபயோகம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கும்பளம் தோடி என்ற சபரிமலை வனப்பிரிவைச் சேர்ந்த பகுதி சாம்பலாகி இருக்கும். சபரிமலையின் எல்லா பகுதிகளும் காவல் புரிந்து வந்த காவல்துறையினர் ஜனவரி 9ஆம் தேதியன்று கும்பளம்தோடி என்ற பகுதியில் தீப்பிடித்துள்ளதாக கம்பியில்லாத் தொலைபேசி மூலமாக தலைமை அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பினர். காவல்துறை தனி அலுவலர் திரு. பி.ஆர்.மேனன் உடனடியாக 100 காவலர்களை இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களின் தலைமையில் தீக்கிரையாகி கொண்டிருக்கும்

பகுதிக்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியை தீவிரமாக தொடங்கும்படி கட்டளையிட்டார். தீ மிகவும் அசுர வேகத்தில் பரவிக் கொண்டு கடவுள் அய்யப்பனின் தலமாகிய அந்த அடர்ந்த காட்டையே அழிக்கும் நிலைக்கு எத்தனித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் காவல் படையினர் அந்த இடத்தை சென்றடைந்தனர். அருகில் தண்ணீர் வசதியோ போதுமான அளவு மணலோ கிடையாது. காவலர்கள் என்ன செய்வது என்று அறியாமல் குழப்பத்திற்கிடையே கையற்ற நிலையில் தவித்துப் போயினர். ஆனால் தனி ஆயுதக் காவல்பிரிவைச் சார்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலும், கேரள ஆயுதக் காவல் பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பால்ராமும் பலவிதமான சிந்தனையில் ஈடுபட்டனர். இறுதியாக ஒரு விந்தையான எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது போலும். ஒரே சமயத்தில் 100 காவலர்களையும் தீயை நோக்கி சிறுநீர் விடும்படி அந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் கட்டளையிட்டனர். தீ மெதுவாக தணிந்தது. முடிவாக அணைக்கப்பட்டு விட்டது. சில தினங்களுக்கு முன்னர் மகர விளக்கு விழாவிற்காக சபரிமலைக்குச் சென்ற செய்தியாளர்களிடமும் இந்நிகழ்ச்சிகளை தனிக்காவலர் அலுவலர் மேனன் அவர்கள் விளக்கினார். தக்க சமயத்தில் செயல்புரிந்து  வரவிருந்த பெரும் விளைவை தடுத்த தற்காக அந்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், அவர்கள் சேவையை பாராட்டி தகுந்த பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

(ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்-
17.1.1978, செவ்வாய், கொச்சி பதிப்பு

-விடுதலை,23.5.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக