ஞாயிறு, 6 நவம்பர், 2016

இவர்தான் ஞானப்பால் உண்டவராம்


சீர்காழியில் பார்ப்பனர் குலத்தில் சிவ பாத இருதயர்க்கும் பகவதி அம்மைக்கும் மகனாகத் திருஞான சம்பந்தன் பிறந்தான். மூன்றாம் வயதில் பார்வதி தேவி கொடுத்த முலைப்பாலைக் குடித்து எல்லா ஞானமும் கைவரப் பெற்றாராம். அப்போது தோடுடைய செவியன் என்று பதிகம் பாடினாராம்.
திரு நனிபள்ளிக்குச் சென்று பதிகம்பாடிப் பாலை நிலத்தை நெய்தல் நிலமாக மாற்றினார். திருநெல்வாயில் அறத்துறைக்குப் போகும்போது முத்துச்சிவிகை. முத்துக்குடை.முத்துச் சின்னம் என்ற மூன்றும் பெற்றார். திருப்பாச்சில் ஆச்சிரமத்தில் கொல்லி மழவன் மகளின் முயலக நோயைத் தீர்த்தார். கொடி மாடச் செங்குன்றூரில் அடி யார்களுக்கு ஏற்பட்ட குளிர் சுரத்தைப் பதிகம் பாடி நீக்கினார்.
பட்டீச்சுரத்தில் முத்துப் பந்தல் பெற்றார். திருவாவடுதுறையில் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழி பெற்றார். திருமருகல் என்ற ஊரில் பாம்பு கடித்து இறந்து போன வணிகனை உயிர் பெற்று எழச் செய்தார். திருவீழிமிழலையில் தங்கி இருந்த போது பஞ்சம் வந்தது. அந்தப் பஞ்சம் தீரும் வரை இறைவன் அளித்த காசு மாற்றுக் குறைவாக இருந்ததால் பதிகம் பாடி  மாற்று குறையாத பொற்காசு பெற்றார்.
திருமரைக்காட்டில் வேதம் பூசித்துப் பூட்டிய கதவை அப்பர் திறக்கப் பாடினார். சம்பந்தர் அடைக் கப் பாடினார். திருமரைக்காட்டி லிருந்து சம்பந்தர் மதுரைக்குப் போகும் போது கோளறு பதிகம் பாடினார். மதுரையில் பாண்டியனது சுர நோயைத் திருநீற்றுப் பதிகம் பாடித் தீர்த்தார். சமணர்களோடு வாதம் செய்து அவர்களை வென்றார். மதுரையிலிருந்து திரும்பும்போது கொள்ளம் புதூரில் ஓடக்கோல் இல்லாமல் ஓடம் செலுத்தினார்.
திருஓத்தூரில் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கிக் காய்க்கும் படி செய்தார். திருமயிலாப்பூரில் எலும்பைப் பூம் பாவை என்ற பெண்ணாக்கினார் என்றெல்லாம் கதைகளை அளந்து கொட்டுகிறார்! களே! அவர் வாழ்ந்தது 16 வயது மட்டும் தான் யார் யாருக்கோ நோய் தீர்த்தவர். ஏன் அற்பாயுளில் செத்துப் போனாராம்?
-விடுதலைஞா.ம.,28.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக