வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

அமர்நாத் யாத்திரை எனும் கொலைக்களம் இன்னும் எத்தனை மனித உயிர்கள் தேவை?


இமயத்தையொட்டிய தெற்கு காஷ்மீர் பகுதியில் ஆண்டுதோறும் 48 நாள்களில் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தைக் காண்பதற்காக செல்கிறார்கள்.

எல்லையோர மாநிலமான காஷ்மீரில் பதற்றம் நிறைந்து காணப்படுகின்ற நேரத் திலும், பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர், மாநில நிர்வாகம், மத்திய உள் துறை அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை எந்திரங்களும் முடுக்கிவிடப் படுகின்றன என்றால், அமர்நாத் யாத்திரை என்று கூறப்படுகின்ற இந்து மத பக்தர்களின் பயணமாகத்தான் இருக்கிறது. 
அமர்நாத் பயணத்தில் வருபவர்களுக்கு மத வேறுபாடுகளின்றி முசுலீம்கள் பெரு மளவில் உதவிகள் செய்து வருகின்றனர். மனிதநேயத்தைக்காண வேண்டுமானால் காஷ்மீரிகளிடம் காணலாம் என்று உணர்ச்சிமிகுதியில் அமர்நாத் பயணக் குழுவின் பக்தரான உத்தரப்பிரதேசம் மீரட்டைச் சேர்ந்த அஜீத் குமார் அரோரா என்பவர் கூறுவது சமூக வலைத்தளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.. சகோதரத் துவத்துடன் நெடுந்தொலைவிலிருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு மத வேறுபாடுகள் பார்க்காமல் உணவளிக்கிறார்கள் காஷ்மீர் மாநில முசுலீம்கள்.

2016இல் 22 பேர் இறப்பு

2016 ஆம் ஆண்டில்  காஷ்மீர் மாநிலம் முழுவதும் பதற்றமாக இருந்த நேரத்தில் அமர்நாத் பயணம் நடைபெற்றது. 2.2 லட்சம்பேர் பங்கேற்ற அமர்நாத் பயணத் தில் இருவர் விபத்திலும், மற்றவர் உடல் நலக்குறைவாலும் ஆக மொத்தம் 22 பேர் உயிரிழந்தார்கள் என்று ஆளுநர் இரங்கல் தெரிவித்தார். (இந்தியா டுடே ஏடு 18.8.2016)

எகனாமிக்ஸ் டைம்ஸ் தகவலின்படி, 2016ஆம் ஆண்டில் அமர்நாத் பயணக் குழுவில் இடம்பெற்றவர்கள் 29 பேர் உயிரிழந்தார்கள். மேலும் பாதுகாப்புப்படை வீரர்கள் பலருடன் உள்ளூர் முசுலீம்கள் இருவர் ஆகியோரும் மாரடைப்பு உள் ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந் தார்கள்.  மேலும், கடைசி 25 நாள்களில் பனிலிங்கம் முன்னதாகவே உருகத் தொடங்கியதால் அமர்நாத் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டில் 2.96 லட்சம், 2008 இல் 5.33 லட்சம், 2009இல் 3.81 லட்சம், 2010இல் 4.55 லட்சம், 2011இல் 6.36 லட்சம், 2012இல் 6.22 லட்சம், 2013இல் 3.53லட்சம், 2014இல் 3.72 லட்சம், 2015இல் 3.52 லட்சம் 2016இல் 2.2லட்சம் எண்ணிக்கையில் அமர்நாத் பயணம் மேற்கொண்டனர்.

1996இல் 243 பேர் இறப்பு

22.8.1996 அன்று மோசமடைந்த பருவ கால நிலையால், அமர்நாத் பயணம் செய்த 243 பக்தர்கள் உயிரிழந்தனர். அமர்நாத் யாத்திரையில் ஏற்படுகின்ற அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நிதிஷ் சென்குப்தா விசாரணைக் குழு அமைக்கப் பட்டது. அதன்பின்னர் இடையிடையே நடைபெற்ற திடீர்த் தாக்குதல்கள், தாக்கு தலுக்கான முயற்சிகளைத் தொடர்ந்து தீவிர வாதிகளின் தாக்குதல்கள் எப்போதுமில் லாத அளவுக்கு அமர்நாத் பயணப்பாதை களில் மோசமாக நடைபெற்றது.

2000இல் 18 பக்தர்கள் உள்பட 34 பேர் இறப்பு

1.8.2000 அன்று தீவிரவாதிகளின் தாக் குதலில் 18 பக்தர்கள் உள்பட 34 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போதைய முதல்வர் ஃபரூக் அப்துல்லா உத்தரவின்பேரில் இராணுவ தளபதி ஜே.ஆர்.முகர்ஜி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் உள்துறை தலைமைச்செயலாளர் சி.போன்சாங், அனந்த்நாக் காவல்துறை துணை ஆணை யர் ஜி.ஏ.பீர் மாநில அரசின் பாதுகாப் புக்கான அலுவலர் மற்றும் 15 படையினர் இடம்பெற்றனர். முகர்ஜி குழு அறிக்கையில் (2000ஆம் ஆண்டில்) தீவிரவாதிகளின் தாக்குதலின்போது கொல்லப்பட்ட 16 பேரில் சிஆர்பிஎப் படையினரின் துப்பாக்கிச் சூட்டின்போது 6 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 12 பேர் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது. முகர்ஜியின் அறிக்கை ஆளுநருக்கு அளிக்கப்பட்டு, ஆளுநர் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார். அதன்பின்னர் அவ்வறிக்கை மத்திய அரசின் சார்பில் வெளிப்படுத்தப்படவே இல்லை என்று அனந்த்நாக் மேனாள் துணை ஆணையர் ஜிஏபீர் குறிப்பிட் டுள்ளார்.

அமர்நாத் பயணம்குறித்த பாதுகாப்பு நடைமுறைகளில் குறைபாடுகள்குறித்து 2012ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தானாகவே வழக்கை எடுத்துக்கொண்டு விசாரணை செய்தது.

2012ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ரிட் (எண்284) சிவில் வழக்கில் ஜம்மு - காஷ்மீர் அரசின் உள் துறை அமைச்சகத்தின் சார்பில் அமர்நாத் பயணப்பாதுகாப்புகுறித்த முறையான செயல்பாட்டு நடைமுறைகள் (ஷிtணீஸீபீணீக்ஷீபீ ளிஜீமீக்ஷீணீtவீஸீரீ றிக்ஷீஷீநீமீபீuக்ஷீமீs-ஷிளிறி) உருவாக்கப் பட்டு, மாநில உள்துறை அமைச்சகத்தின் ஆணையாக (எண் 226) 10.10.2013 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, ‘பயணக் குழுவினர் தாக்கப்படுவது குறித்த விளக் கங்கள்’ எனும் தலைப்பில் குறிப்பிடு கையில், அமர்நாத் பயணத்தில் பாதுகாப்பு சூழ்நிலை, பயணப் பாதைக்கான வரை படம், தீவிரவாதிகள் தாக்குதலுக்கான சாத் தியமான பகுதி மற்றும் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலை, பயணத்தின் உணர்ச்சிகரமான தன்மை,  அமர்நாத் பயணத்துக்கு பெரும் முக்கியத்துவமளிக் கின்ற விளம்பரங்கள் உள்ளிட்ட கார ணங்களால் பயணப்பகுதி முழுவதும் தீவிர வாத தாக்குதல்களால் பிரச்சினைக்குரிய தாகவே இருந்துவருகிறது. முறையான செயல்பாட்டு நடை முறை கள் (Standard Operating Procedures-SOP) 6.6.1 பத்தியில் குறிப்பிடும் போது, ஒருங்கிணைந்த தலைமையகத்தின் செயல்பாடுகளின்படி, உளவுத்துறையினரின் வழிகாட்டுதலைக்கொண்டு இராணுவம், காவல்துறை மற்றும் பாதுகாப்புத்துறை யினர் அவரவர் துறைகளைச் சேர்ந் தவர்கள் பாதுகாப்பு பணிகளைக் கவனிக்க வேண்டும். தாக்குதல்களைத் தடுத்திடும் வண்ணம் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் கண்காணிப்பாளர்களை நியமிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பெருமளவில் சரிவடைந்த 
பக்தர்கள் எண்ணிக்கை

ஆனாலும், மற்ற ஆண்டுகளைவிட 2017ஆம் ஆண்டின் அமர்நாத் பயணக் குழுவில் பக்தர் எண்ணிக்கை பெருமளவு சரிவடைந்துள்ளது. நாளொன்றுக்கு ஒரு பாதையில் 7500 பேர் வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் அமர்நாத் பய ணத்தில் கலந்து கொண்டவர்கள் லட்சங் களில் 2007 - 2.96; 2008 - 5.33; 2009 - 3.81;  2010 - 4.55;  2011 - 6.36; 2012- 6.22; 2013- 3.53;  2014 - 3.72; 2015- 3.52;  2016- 2.2; 2017- 2.0.
-விடுதலை ஞா.ம.,22.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக