வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

அமர்நாத் குகையில் அற்புத பனி லிங்கமா?




இமயமலையில் உள்ள அமர் நாத் குகையில் ஒவ்வொரு ஆண் டும் குறிப்பிட்ட சில மாதங்களில் அற்புத சிவலிங்கம் ஒன்று தோன்றி காட்சியளிக்கிறது என்றும், பின் அது தானே மறைந்து விடுகிறது என்றும், பக்தர்கள் போற்றிப் புகழ்ந்து வருகிறார்கள்.  ஆண்டு தோறும் இந்த அற்புத சிவலிங் கத்தைக் கண்டு வணங்கி வழிபாடு நடத்துவதற்காக பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் அந்த இடத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள் கிறார்கள்.

சிவனும் - பார்வதியும் வாழ்ந்த குகை அதுவென்றும், அந்தக் காலத்தில் பார்வதிதேவி வழிபாடு செய்து வந்த சிவலிங்கமே அதுவென்றும் கதைகள் புனைந்து பரப்பி வருகின்றார்கள். காஷ்மீரில் உள்ள வழிபாட்டு மய்யமான அமர்நாத்திற்கு பகல்ஹாமில் இருந்து கந்தன்வாடி வழியாக 38 கிலோமீட்டர் செல்ல வேண்டும். 12,729 அடி உயரத்தில் இந்த குகையில் இருந்து, புகழ்பெற்ற கோல்ஹாய் பனிச்சிகரம் அதிக தொலைவில் இல்லை.

அமர்நாத்தில் உள்ள அந்தக் குகையில் குளிர்காலத்தின் தொடக்கத்தில் தோன்றுகின்ற ஒரு பனிக்கட்டியின் வடிவத்தைத்தான் சிவலிங்கமாகக் கருதி வழிபடுகிறார்கள். குகையின் மேல்புறத்தில் உள்ள ஒரு இடுக்கு வழியாக கசிந்து வருகின்ற தண்ணீர் துளித்துளிகளாக கீழே விழுகின்றன. பனிக் காலத்தின் கடும் குளிரில் தண்ணீர்ப் பனிக்கட்டியைத்தான் சிவலிங்கமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். நானும் ஒருமுறை பயணம் செய்து அந்தக் குகைக்குச் சென்றேன். அதைப் பார்வையிட்டேன். அப்போது அந்தப் பனிக்கட்டி லிங்கத்தை நிழற்படமும் எடுத்து வந்தேன். அந்த ஆண்டில் அப்போது நிலவிய குளிரின் தன்மைக்கேற்ப அமைந்த பனிக்கட்டியின் வடிவமே ஒளிப்படத்தில் பதிவானது.

குகைக்கு மேலேயிருந்து விழுகின்ற தண்ணீரின் அளவும், அன்றைய சூழ்நிலையில் உள்ள குளிரின் தன்மைக்கு ஏற்பவும் சிவலிங்கத்தின் வடிவம் சிறியதாகவோ, பெரியதாகவோ தோற்றம் அளிக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் சுற்றுப்புறச் சூழ்நிலை சூடாக - வெப்பமாக மாறும்போது பனிலிங்கம் உருகி இல்லாமலேயே போய்விடுகிறது. டிசம்பர், சனவரி மாதங்களில் அந்தப் பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டு கிடக்கிறது. அமர்நாத் குகையில் உள்ள சிவலிங்கத்தின் அருகே ஒரு மின் வெப்பக் கருவியை (ஹீட்டர்) வைத்துப் பார்க்கட்டுமே. அப்போது தெரியும், அது கரைந்து தண்ணீராக மாறிப் போவதை. இப்படிப்பட்ட சிவலிங்கங்களை நாம் குளிர்சாதனப் பெட்டியில் (ஃபிரிஜ்) கூட உருவாக்கலாம்.
- ஜோசப் இடமருகு

-விடுதலை ஞா.ம,22.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக