செவ்வாய், 30 ஜூலை, 2019

சமணர்கள் வீட்டு அழகிய பெண்களின் கற்பை அழிக்க வரவேண்டுமாம்"


பண்: பழம்பஞ்சுரம்                                                                                                                                              பாடல் எண் : 1


வேத வேள்வியை நிந்தனை செய்துழல்


ஆத மில்லியமணொடு தேரரை


வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே


பாதி மாதுட னாய பரமனே


ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்


ஆல வாயி லுறையுமெம் மாதியே


பொழிப்புரை: உமாதேவியைத் தன் உடம்பில் ஒரு பாதியாக வைத்துள்ள பரமனே! தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! வேதத்தையும், வேள்வியையும், பழித்துத் திரியும் பயனற்றவர்களாகிய சமணர்களையும், புத்தர்களையும் வாதில் வென்றழிக்க உம்மை வேண்டுகின்றேன். உமது திருவுள்ளம் யாது? உலகனைத்தும் உமது புகழே மிக வேண்டும். திருவருள்புரிவீராக!

மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்


திண்ண கத்திரு வாலவா யாயருள்


பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்


பெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.


மதுரை வாழ் சிவனே, சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள் புரிவாயாக என திருஞான சம்பந்தர் பாடியுள்ளார் - இதற்கெல்லாம் சங்பரிவார்கள் என்ன கூறப் போகிறார்கள்?

-  விடுதலை ஞாயிறு மலர், 27.7.19

மதம் மாற்றம் செய்தவர்கள் யார்?



கி.பி. அய்ந்து, ஆறு, ஏழாம் நூற்றாண்டுக ளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பவுத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ, வைணவ மதங்கள் முடங்கிக் கிடந் தன. மக்களில் பெரும்பாலோர் சமணராக வும் பவுத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பவுத்த மதங் களைத் தழுவியிருந்தனர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ அடி யார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் ‘பக்தி’ இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பவுத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.

‘சமண சமயம் பலவிதத்தில் தாக்கப் பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளை வித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந் துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.

- மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும் (பக்கம் 68)

‘வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால்

பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக்

குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே

அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!’

- தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்கு கிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பவுத்தர்களைக் குறிக்கும்.

திருநாவுக்கரசர்!

தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் ‘லோகவிபாகம்‘ என் னும் நூலை எழுதினார். கி.பி. 458இல் சிம்ம வர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரச னது  இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் ‘லோகவிபாகம்‘பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவா மூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் ‘தருமசேனர்’ என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.

- மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன், Chennai, Page 27-29

-Mysore Archaeological Report, 1909-10, Page 112

சமண மதம் துடைக்கப் படுதல்

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத் தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத் திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் ‘குணதரஈச் சரம்‘ என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.

- Page 275, பல்லவர் வரலாறு

இங்கு சமணர் கோவில் இருந்தது என் பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலை யில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன் றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.

- South Arcot District, Gazetter, Page 369.

பெரிய புராணம்

தரும் செய்தி!

‘வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த

காடவனுந் திருவதிகை நகரின் கட் கண்ணுதற்குப்

பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட

இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.

- தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை

- திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.

திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!

‘மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஒரு பார்ப்பனன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ர ஹிக்கும்படி வேண்டினர்.’

- கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.

கழுவில் ஏற்றப்பட்ட சமணர்கள்

‘பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த  சிவா பராதங் கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சம ணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.’

- சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை 1925, page 18

‘அரசர் குலச்சிறையாரை நோக்கி, ‘சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச் சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறை யாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதி பாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிர வரும் தானாகவே ஏறினார்கள்.’

- ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி, 1948, page 18

‘அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறி களை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.’

- க. வெள்ளைவாரணன்,பன்னிரு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1972, page 144

(கழுவில் ஏற்றப்பட்டனர் என்பதே உண்மை)

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

‘மன்னன் சமண விரோதியாகி, பாண் டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர் களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’

- அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, page 28

‘கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ் வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார் கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங் குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோம யத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அது வும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண் டார்கள்.’

‘விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதி யிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணின வர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.’

- பூவை கல்யாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம், சென்னை, 1925, page 494.

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவி லேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல் கள் என்ன ஆயிற்று தெரியுமா?

‘கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கவ்விப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.’

‘மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கவ்விப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.’

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை, 1937, page 1195.

‘கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன் பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டி லிருந்து அவை அழிந்து போயின.’

- பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய ‘திருஞான சம்பந்தர் காலம்‘ என்ற ஆங்கில நூல்.

‘திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்க யாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற் றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச் சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடை பெற்று வரும் உற்சவங் களில் அய்ந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.’

- மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் 68



திருமங்கையாழ்வார்

தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந் திருந்தார். அவர் சமண பவுத்த சமயங்க ளைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.

- மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் 277

கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.

இவர் நாகப் பட்டினத்துப் பவுத்த விகா ரத்தில் இருந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கோவில் திருப்பணிகள் செய்தார். பவுத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப் புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.

- மயிலை சீனி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை, பக்கம் அய்ம்பத்து இரண்டு.

- மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

‘திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கோவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டி னத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹ மிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ர ஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டு ரைத்து  நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.’

- நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சம ணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.

- புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் 189

‘நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.’

‘கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத் தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவி லுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.’

- எஸ். பத்மநாபன், குமரி மாவட்ட கோவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52

செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்க டபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடு களுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.

- மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் 74

திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண் டதுமான திருவாரூர் திருக்குளம் இப் போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர் கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக் கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங் களும், மடங்களும், பள்ளிகளும், பாழி களும் இருந்தன. அப்போது ‘தண்டியடிகள்’ என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித் துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப் போதுள்ள பெரிய குளமாகத் தோண் டினான்.

‘பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து’

- திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் 69

கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத் திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கோவிலைக் குறிப்பிடுகிறது. திருக்கோவிலூரில் இருந்த ‘மிலாட்’ அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அரு கிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.

- சமணமும் தமிழும், பக்கம் 139

நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப் போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர் (மகாவீரர்) 24ஆவது தீர்த்தங்கரர். இவரது பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சம ணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.

- சமணமும் தமிழும், பக்கம் 140.

அய்யகோ கிறித்தவர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று மாரடித்து ஒப்பாரி வைக்கும் பிஜேபி, சங்கபரிவார்கள் கூட்டம் சமணர்களைக் கொன்றொழித்த கொடுமைக்கு என்ன பதில்? திருநீறு பூசச் செய்து உயிர்ப்பிச்சை செய்த அச்சுறுத் தலை எந்தப் பட்டியலில் சேர்ப்பது! சமணர் களைக் கழுவேற்றும் காட்சிகள் செய்யாறு கோயிலுக்குச் சென்றால் சிற்பங்களாக இன்றும் பார்க்கலாமே!

மேலே எடுத்துக்காட்டப்பட்டவை எல்லாம் ஆதாரப் பலங்களைக் கொண்டது என்பதை மறக்க வேண்டாம்.

- விடுதலை ஞாயிறு மலர்,27.7.19

வெள்ளி, 26 ஜூலை, 2019

பெண்களிடம் கல்லடிபட்ட ஏழுமலையான்

திருப்பதி - திருமலை கோவில் புராணம் என்ன கூறுகிறது?

சோழ அரசன் மகன் ஆகாசராசன் மனைவி தரணி தேவி. இவர்களுக்குப் பிள்ளையில்லாததால், ஆகாச ராசன் யாகம் செய்ய எண்ணி, யாக சாலைக்கான இடத்தை உழுதான். அந்தக் கலப்பை உழவுச் சாலில் ஒரு பொன் தாமரையும், அதில் ஒரு பெண் குழந்தையும் காணப்பட்டன. அரசன் அந்தக் குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்து வளர்த்து வரச் செய்தான். அதற்குப் பத்மாவதி என்று பெயரிட்டான். வளர்ந்து கன்னிப் பருவமடைந்த பத்மாவதி ஒரு நாள் மலர் கொய்ய மலர் வனம் சென்றாள்.

ஏழுமலையானான நாராயண மூர்த்தி மலை யில் வேட்டையாடி விட்டு, அடிவாரத்துக்கு இறங்கியபோது, பூம் பொழிலில் பத்மாவதியைக் கண்டு, ஆசைப்பட்டு அவளை அணுகினார்.

(ஆக, ஆசாபாசம் கொண்டவர்தான் ஆண்ட வன்!)

ஓ பெண்ணே! நான் உன் பேரில் விருப்பம் கொண்டு இவ்விடம் வந்தேன். என்மீது தயையுள்ளவளாய் என்னை ஆலிங்கனம் செய்துகொள்'' என்று அவளிடம் கூறினார்.

(ஆகா, என்ன பண்பாடு!')

அந்த மங்கை, ஓய்! நீ உலகத்தில் சொல்லாத வசனங்களைச் சொல்கிறாய். என் அப்பா ஆகாச ராஜன் இதைக் கேட்டால் உன் உசி ரைப் போக்கிவிடுவார்'' என்று சீற்றத்துடன் சொன் னாள்.

அவளுடைய பேச் சைக் காதில் போட் டுக் கொள்ளாமல், நாராயணமூர்த்தி (ஏழு மலையான்) அந்தப் பத்மாவதியை அணுகினார்.

அவள், ஆத்திரமடைந்து, அவளும், தோழியர்களும் அவரைக் கற்களால் அடித்தனர். அவர் அந்தக் கல்லடிகளைப் பொறுக்கமாட்டாமல் திரும்பி வேங்கடாத்திரிக்கு (திருமலை)ச் சென்றார்.'' (இது திருமலைக் கோவில் புராணக் கதை).

கடவுள் என்றால் விரும் பாத பெண்ணை நேசிக்கவேண்டுமா? கோபம் கொண்டு அந்தப் பெண் கல்லால் அடித்தும் வெட்கப்படாதது வெட்கம் கெட்ட செயல் அல்லவா!

மாபெரும் சக்தி கொண் டவன் ஏழுகொண்டல வாடு' என்கிறார்கள்.

ஒரு பெண்ணிடம் அவர் ஜம்பம் பலிக்கவில்லையே!

- மயிலாடன்

 - விடுதலை நாளேடு, 21.7.19

வியாழன், 25 ஜூலை, 2019

தேவன் ஒருவனே.... ஆனால்.....

#மீள்_பதிவு

ஆச்சிரியமூட்டும் உண்மைகள்....

கிறிஸ்துவ மதம் :-
-----------------------------
     தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ,உலகெங்கும் ஒரே மதம் (கிறிஸ்துவம்)

   ஆனால்... "லத்தீன் கத்தோலிக்" பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் "சிரியன் கத்தோலிக்" பிரிவு தேவாலயத்துக்குள் செல்ல மாட்டார்கள்.

    இந்த இரண்டு பிரிவினரும் "மார்த்தோமா" இன சர்ச்சுக்குள் செல்வதில்லை.

    இந்த மூவருமே " பெந்தகொஸ்தே " திருச்சபைக்குள் நுழைய முடியாது.

     மேற்கண்ட நான்கு பிரிவினரும் "சால்வேஷன் ஆர்மி " தேவாலயத்துக்குள் செல்ல முடியாது.

      இந்த ஐவரும் "செவன்த்டே அட்வென்டிஸ்ட் " இன சர்சுக்குள் போக மாட்டார்கள்.

     இவர்கள் ஆறு   பிரிவினருமே "ஆர்த்தோடக்ஸ்" பிரிவு ஆலயத்துக்குள் போவதில்லை.

    இந்த ஏழு பிரிவுகளை சேர்ந்தவர்கள் "ஜேகோபைட் " பிரிவினரின் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

      இது போல் மொத்தம் 146 பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே...

      ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்ற பிரிவினருடன் தங்கள் தேவாலயத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

    ஆனால்... ..
              தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ஒரே மதம் (கிறிஸ்துவம்)    
  ???????????????

- ஆறாம் அறிவு, அனிசு அனி, முகநூல் பக்கம், 25.7.19

திங்கள், 22 ஜூலை, 2019

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட காரணம்- இந்துமத விளக்கம்

பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாய் ஏற்பட காரணம் என்ன தெரியுமா?

இந்திரன் ஒரு பிராமணனான கொடும்பாவியை கொன்றுவிட்டான்.

பிராமணன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும் அவனை தண்டிக்க வர்ணாசிரமம் அனுமதிக்காது.

இந்திரனின் பாவத்தை என்ன பண்ணுவது என்று யோசித்த இந்திரன்,

ஒரு வருடத்திற்குபிறகு பூமியில் கால்வாசியை புதைத்தான். இதனால் பாலைவனம் உண்டாகவிட்டது.

இன்னொரு கால்வாசியை பெண்களுக்கு கொடுத்தான்.

இதனால் தான் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறதாம்!!

இதற்கு பகரமாக தொடர்ச்சியான காம ஆசையை பெண்களுக்கு வரமாக வழங்கினானாம்!!

ŚB 6.9.9

शश्वत्कामवरेणांहस्तुरीयं जगृहुः स्त्रियः
रजोरूपेण तास्वंहो मासि मासि प्रदृश्यते ॥ ६.९.९ ॥

śaśvat-kāma-vareṇāṁhas
turīyaṁ jagṛhuḥ striyaḥ
rajo-rūpeṇa tāsv aṁho
māsi māsi pradṛśyate

இந்திரனுடைய வரத்தினால் (வரம்) பெண்கள் தொடர்ச்சியான காம ஆசையை பெற்றார்கள். அவர்கள் இந்திரனுடைய பாவத்தில் (பிராமணனை கொன்றபாவம்) கால்வாசியை பெற்றுகொண்டனர். இதனாலே மாதாமாதம் (மாதவிடாய்) தோன்றுகிறது.
( ஸ்ரீமத் பாகவதம் 6:9:9 )

இந்து பெண்களுக்கு இந்த கொலையால் மாதவிடாய் ஏற்படுது.
சரி… கிறிஸ்தவ பெண்களுக்கும் முஸ்லிம் பெண்களுக்கும் ஏன் ஏற்படுகிறது??

அவர்கள் இந்திரனை மனிதனாக கூட மதிப்பதில்லையே!!!

அதுமட்டுமல்ல,  பெண்களுக்கு தொடர்ச்சியான காம ஆசையை இந்திரன் வரமாக கொடுத்தானாம்.

அதாவது பெண்கள் காமுகர்களாம்!!!
- தர்மன் தர்மன் முகநூல் பதிவு, 22.7.19

மகளுடன் உடலுறவு கொள்ள ஆயத்தமான பிரம்மா.

பாகவத புராணம் 10ஆவது காண்டம் அத்தியாயம்85 சுலோகம் 47.

SB 10.85.47 — The Supreme Lord said: During the age of the first Manu, the sage Marīci had six sons by his wife Ūrnā. They were all exalted demigods, but once they laughed at Lord Brahmā when they saw him preparing to have sex with his own daughter.

முதல் மனுவின் காலத்தில் மரிசி என்ற ஞானி இருந்தான். அவனுக்கு அவனது மனைவி ஊர்னாவினால் ஆறு ஆண்பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் உயர்ந்த தேவர்களாக இருந்தனர்.
ஆனாலும் ஒருநாள், பிரம்மன் தன் மகளை புணர தயாரான போது சிரித்துவிட்டனர்.

எங்கே உள்ளது என்று கூறியபின்பும் ஆதாரம் கேட்கும் அரைவேக்காடுகள் இங்கே சரிபார்த்துக் கொள்ளலாம்.
https://www.vedabase.com/en/sb/10/85

- முகமது நசீம் முகநூல் பதிவு, 22.7.19

புதன், 10 ஜூலை, 2019

அய்யப்பன் பிறந்த கதை.

#இந்து மத புராணங்களும், 18+ கதைகளும்.
#ஐயப்பன் பிறந்த கதை.
   சாமியேய்.....சரணம் அய்யப்பா..!
நம்ம பிரெண்ட் ஒருத்தன் பாஸு பேரு மிக்கேல்.நல்ல பையன் தான் கட்டிங் அடிக்கிற வரைக்கும்.சவம் குடிச்சிட்டான் போற,வர்ரவனையெல்லாம் புடிச்சி அடிப்பான்.வழக்கமா எங்கிட்டாவது ஒரண்டைய இழுத்துட்டு Phone அடிப்பான்."மச்சான் ஆள கூட்டிட்டு சீக்கிரம் ஸ்பாட்டுக்கு வா"னு.ரெண்டு நாளா Phone ன காணல என்னாச்சோனு வீட்டுக்கு போனேன் அவுங்க மம்மி மிக்கேல் ஆண்டவருக்கு செபமாலை ஸ்தோத்திரம் சொல்லிட்டு இருக்க, இவன் கருப்பு சட்டையும்,நெத்தியில பட்டையுமா கட்டில்ல சரிஞ்சி கெடக்குறான்.இன்னாடா மச்சி இது கோமாளி வேசம் சீ னு சொன்னா.."கோமாளி இல்ல மச்சி நானு கன்னிச்சாமி"னு கதவுடுறான்.அந்த நேரமா பாத்து ஜெபத்த முடிச்சிட்டு வந்த அம்மாகிட்ட இன்னாமா இதுனு கேக்க,"சவம் எவ்வளவோ சொல்லியாச்சி மக்கா குடிக்காதனு கேக்கனும்லா நேத்து குடிச்சிட்டு இவனும்,முருகேசனும் மூணாவது தெருவு பாண்டிய புடிச்சி அடிச்சிருக்கானுவ அவன் கொண்டு போயி பெட்டீசன குடுத்துட்டான்,போலீசு இவனுவள தேடிட்டு இருக்கு இவனுவ நைட்டோட நைட்டா எங்கையோ போயி மாலைய போட்டுட்டு வந்து படுத்து கெடக்கானுவ,ரெண்டு நாளா வீட்டவுட்டும் வெளிய போவல குடிக்கவும் இல்ல சரி சனியன் அப்புடியாவது ஒரு நாப்பது நாளு குடல் அவியாம இருக்குதேனு நெனச்சி நானும்,அப்பாவும் ஒன்னும் சொல்லல" னு சொன்னாங்க.ஓ அப்புடியா மேட்டரு சரிம்மா நான் பாத்துக்கிறேன்னுட்டு "சாமி வாங்க சாமி டீ சாப்புட்டு வர்லாம்"னு ரெண்டு வேரும் வெளிய கிளம்பிட்டோம்."சாமி மாலையெல்லாம் போட்டுருகீங்க சந்தோசந்தான் இந்த அய்யப்பன் பொறந்த கதை தெரியுமா?"னு கேட்டேன்."இல்ல சாமி எனக்கு இயேசு பொறந்த கதை தானே தெரியும்"னு சொன்னாப்புல. சரி சாமி அதாவது தெரிஞ்சிதே சந்தோசம்னு ஒக்கார வெச்சி ஒரு அரமணி நேரம் திணற,திணற ஐயப்பன் கதைய அவுத்து விட்டேன்.பாவம் அடுத்த ஒரு மணி நேரத்துல சாமி மலையேறிட்டாப்புல...! மிக்கேலோட அம்மாதான் ரெம்ப நாளா என்னய கொலவெறியோட தேடிட்டு இருந்தாங்க சிறுத்த சிக்கும் சில்வண்டு சிக்குமா? ஏரியாவ விட்டே எஸ்கேப்.
  
  ரைட்டு பாஸு அந்த கதைய விடுங்க இப்போ Mr.மணிகண்டன்,தர்ம சாஸ்தா,அரிகரசுதன்னு பல பெயர்களால அழைக்கப்படுற "ஐயப்பன்"கதை இன்னானு பாக்கலாம்.ஒருகாலத்துல கௌதமர்னு ஒரு முனிவர் இருந்தாராம் அவுரு பிரம்மாவோட பொண்ணு அகலிகைய கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.இந்திரனுக்கு அகலிகைய எப்புடியாவது அடஞ்சே தீரனும்னு வெறி கெளம்ப ஒரு நாளு நடுச்சாமத்துல கௌதமர் வீட்டு முன்னாடி வந்து சேவல் மாதிரி கூவ தலைவரு விடிஞ்சிடிச்சேனு ஆத்துக்கு குளிக்க போய்ட்டாரு. அந்த நேரமா பாத்து இந்திரன் கௌதம முனிவரா மாறி பொண்டாட்டிய போட்டுதாக்கிட்டான்.ஆத்துபக்கம் போன கௌதமரு இன்னும் விடியவே இல்லியே இந்த சேவல் ஏன் கூவிச்சினு கடுப்புல சேவல பாக்க வீட்டுக்கு போறாப்புல வீட்டுல இருட்டு அறையில் முரட்டு குத்து நடந்துட்டு இருக்குது. யார்ரா அவன் நம்மள ஆத்துபக்கம் வெரட்டிட்டு இங்க ஆனந்தமா இருக்குறதுனு கதவ தட்டுறாப்புல. ஆள பாத்ததும் அரண்டு போன இந்திரன் பூனை போல வேசம் போட்டு வாசல் வழியா கம்பி நீட்ட த்தா..!டேய் இந்திரா என்கிட்டயே ஒன்னோட வேலைய காட்டுறீயா இந்தா வாங்கிக்க சாபம்னு விட்டாரு பாரு.அதாவது "எந்த சுகத்துக்காக நீ அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைய போட ஆசப்பட்டியோ அது உன்னோட ஒடம்பு ஃபுல்லா வரக்கடவது"னு சாபத்த போட இந்திரன் ஒடம்பெல்லாம் பெண்குறியோட அசிங்கமா ஓடிபோய் தாமரை தண்டுல ஒளிஞ்சிகிட்டான்.அடுத்து எங்க அவள "ஏன்டி நான்தான் குளிக்க போனனே வந்தவன் யாருனு தெரியாத அளவு சொரண கெட்டு போயா இருந்த நீ இந்தா வாங்கிக்க ஒனக்கு ஒரு சாபம்"னு அகலிகை கல்லா மாறட்டும்.இராமன் வந்து ஒன்ன ரட்சிப்பாருனு ரெண்டு பேருக்கும் சாபத்த பார்சல் பண்ணிட்டாரு.இந்த சாபத்தால இந்திரனோட சொத்து சுகமெல்லாம் போயி ஆளு ஒன்னும் இல்லாத ஓட்டாண்டியா ஆகி போனான்.யோக்கிய சீலன் இந்திரனுக்கு ஒன்னுனா சும்மா இருப்பார்களா "தேவர்கள்"விஷ்ணு கிட்ட போயி முறையிட பாற்கடல கடைங்கடா அதுல இருந்து எல்லாம் ரிட்டன் வரும் அப்புறம் சாகாவரம் உள்ள அமிர்தமும் வரும்னு சொல்ல மேரு மலைய மத்தாவும்,வாசுகி பாம்ப கயிறாவும் போட்டு மலைய கடஞ்சானுங்க.தயிர் கடையிறதே கடுப்பான வேல இதுல தயிர்சாதம் சாப்புடுற தேவர்கள் கடல கடையுற அளவுக்கு வொர்த்தானவனுங்களா So,நம்மாளுங்க அசுரர்கள உதவிக்கு கூப்புட்டானுங்க அப்போ அமிர்தத்துல பாதி எங்களுக்கும் தரனும்னு அக்ரிமெண்ட போட்டு நம்மாளுங்களும் கடல கட,கடனு கடஞ்சாங்க.அப்போ பாத்து வாசுகி பாம்பு வலிதாங்க முடியாம கதற வாய்ல இருந்து "காலம்"னு சொல்லுற விசம் வெளிய வந்துச்சாம்,அதே நேரம் கடல்ல இருந்து "ஆலம்"னு இன்னொரு விசம் வெளிய வர பயந்து போன பக்கிங்க சிவன்கிட்ட போய் கம்ளெய்ண்ட் பண்ண Mr.பரமு "ஆல-கால"வெசத்த குடிச்சி திரு நீலகண்டனா மாறிட்டாப்லயாம்.மறுபடியும் கடைய இந்திரனோட Property எல்லாம் ஒவ்வொன்னா வர கடைசி வரைக்கும் அமிர்தம் மட்டும் வரவேயில்லையாம்.கடுப்பான தேவர்கள் எல்லாம் விஷ்ணு சட்டைய புடிச்சி யோவ் வருமா,வராதா சொல்லும்யா இன்னும் எம்புட்டு நேரம் கடையிறது கைவலிக்கிதுனு அழ அப்புறம் விஷ்ணு மனசிறங்கி போய் பாருங்கடாப்பா அமிர்தம் வந்துடிச்சின்னாராம்.தேவர்கள் விஷ்ணுவ மீட் பண்ணிட்டு திரும்பி வர்ர கேப்புல நம்மாளுங்க அமிர்தத்த கைபற்றிட்டாங்க.According to the அக்ரிமெண்ட் பாதி,பாதி பங்கு வைக்கிறதுல தேவர்களுக்கும்,நம்மாளுங்களுக்கும் கருத்து வேறுபாடு கைகலப்பு வரைக்கும் போவ,தேவர்கள் எல்லாம் "டீச்சர் அவன் என்ன நுள்ளிட்டான்"னு அழுதுட்டே விஷ்ணுகிட்ட போயி அசுரர்கள் எல்லாம் அமிர்தத்த குடிச்சி சாகா வரம் வந்துட்டா மொத வேலையா நம்மள சாவடிச்சிருவானுங்க பாஸு So,அவனுங்க குடிக்காத மாதிரி எதாவது ஐடியா பண்ணி மொத்தத்தையும் நம்மளே ஆட்டைய போட எதாவது வழிபண்ணுங்க ஆண்டவரேனு ஒப்பாரி வைக்க.ஒன்னும் பிரச்சனை இல்ல நான் பாத்துக்கிறேன்னு விஷ்ணு பகவான் "மோகினி"அவதாரம் எடுத்து அரகுறை டிரஸ்ல டான்ஸ் ஆடிட்டே நம்மாளுங்க அசந்த நேரமா பாத்து மொத்த அமிர்தத்தையும் "அவா" வாயிலயே ஊத்திட்டான்.அப்போ கஷ்டப்பட்டு கடல கடஞ்ச நாங்கெல்லாம் பைத்தியகாரங்க, நோகாம நொங்கு திங்குற நீங்க எல்லாம் காரிய காரங்க நல்லா இருக்குடா ஒங்க நியாயம்.

  இங்கிட்டு விஷ்ணு சன்னி லியோனா மாறி டான்ஸ் ஆட கைலாயத்துல ஒக்காந்து வேடிக்கை பாத்துட்டு இருந்த சிவபெருமானோட ****கரகாட்டம் ஆட. அமிர்தத்த பங்கு போட்டுட்டு வேசத்த கலச்சிரலாம்னு ஓரமா ஒதுங்குன விஷ்ணுவ சிவன் ஓரங்கட்டிட்டாரு.யோவ் இன்னாயா இது நான் ஆம்பிளையானு விஷ்ணு கதற இப்போதைக்கு நீ மோகினிதானே வாடி என் தமிழ்ச்செல்வி ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லினு வெச்சி செஞ்சிட்டாரு.ஆரம்பத்துல மறுத்தாலும் ஆம்பிளையா ஆயிரத்தெட்டு குடிய கெடுத்துருக்கோம்.பொம்பளயா கொஞ்ச நேரம் அந்த சுகத்த அனுபவிப்போம் இப்போ இன்னா பெருசா வந்துர போவுதுனு அரியும்-அரனும் கட்டிப்புடி,கட்டிப்புடிடானு கலந்து கட்டுனதுல சிவனுக்கு விந்து சாடுற நேரம் ஹாலிவுட் XXX மாதிரி விஷ்ணுவோட கையில அடிச்சி ஊத்த அரியும்-சிவனும் இணைந்த ஹரிகரசுதன் "கையப்பன்" உருவாகுறாப்புல.இவன வீட்டுக்கு தூக்கிட்டு போனா என்பொண்டாட்டி செருப்பால அடிப்பாடானு சிவன் சொல்ல ஒன்னோட பொண்டாட்டியாச்சும் செருப்பால அடிப்பா என்  பொண்டாட்டி சோத்துல வெசத்த வெச்சி ஆளயே காலி பண்ணிருவா சகல இன்னா பண்ணலாம்னு ரெண்டு பேரும் முடிவு பண்ணி குழந்த கழுத்துல ஒரு மணிய கட்டி காட்டுல தூக்கி போட்டுட்டு வீட்டுக்கு ஓடிட்டானுங்க.இது "விஷ்ணு புராணம்"சொல்லுற கையப்பன் என்கிற ஐயப்பன் பொறந்த கண்றாவிக் கதை.

பத்மபுராணம் இதே கதைய கொஞ்சம் வேற மாதிரி சொல்லுது.

- ஏவின்மனே முகநூல் பக்கம்

வியாழன், 4 ஜூலை, 2019

அரங்கநாதனும் - கைலியும்!

கேள்வி: லுங்கி (கைலி, சாரம்) கட்டிக் கொண்டு கோவிலுக்குள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு தேவையா?

பதில்:தேவைதான். கோவில் ஒன்றும் கண் காட்சிக் கூடமில்லை. அது புனிதமான வழிபாட்டுக்குரிய இடம்.

'விஜயபாரதம்', ஆர்.எஸ்.எஸ். வார இதழ் 14.6.2019, பக்கம் 36

விஜயபாரதத்துக்கு' அவர்கள் நம்புகிற கடவுள்கள்பற்றியோ, கோவில்களின் நடைமுறை கள்பற்றியோ கூட ஒன்றும் தெரியாது போலிருக்கிறது.

அந்த ஏட்டுக்கு நாம் பதில் சொல்லுவது பொருத்தமாக இருக்காது. அவர்களின் வகையறாவைச் சேர்ந்த கல்கி'யின் மூலம் பதில் சொன்னால்தான் சரிபட்டு வரும்.

12.9.1982 கல்கி'யில் பின்கண்ட செய்தி வெளி யாகி உள்ளது.

"ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் அர்ஜுன மண்டபத்தில் துலுக்க நாச்சியார் சன்னதி ஒன்று இருக்கிறது.

அமாவாசை, மாதப் பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் துலுக்க நாச்சியாருக்காக உற்சவமூர்த்தி ஸ்ரீரங்க நாதருக்கு திருமஞ்சனம் செய்து, கைலி கட்டி அலங்கரிக்கிறார்கள்.''

மறுபடியும் சொல்லுகி றோம் - மீண்டும் அடித்துச் சொல்லுகிறோம்!

இதனை வெளியிட்டு இருப்பது சாட்சாத் கல்கி' இதழே! கருப்புச் சட்டை யோடு கல்கி'யையும் இணைத்துக் கதை கட்ட முடியாது அல்லவா!

இப்பொழுது சொல் லுங்கள். இவர்களில் காத்தல் கடவுளான மகாவிஷ்ணுவான ஸ்ரீரங்கம் அரங்கநாதனுக்கு அமா வாசை, மாதப் பிறப்பு, ஜன்ம நட்சத்திரத்தில் கைலி கட்டி அழகு பார்க்கலாமாம்.

அதற்கு அவாளின் ஆக மத்தில் எல்லாம் அனுமதி உண்டு.

ஆனால், அரங்கநாத னின் பக்தர்கள், அந்த அரங்கநாதனைத் தரிசிக்கக் கைலி கட்டிக்கொண்டு போகக்கூடாதாம். இது என்ன இரட்டை அளவுகோல்?

ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் துலுக்க நாச்சியார் எங்கு வந்தார்? இதில் மதம் மாறியது அரங்கநாதரா? துலுக்க நாச்சியாரா? விஜயபாரத'ங்களுக்கே வெளிச்சம்!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 4.7.19

செவ்வாய், 2 ஜூலை, 2019

சைவமும்_சமணமும்

இந்தியாவில் தோன்றிய பழைய இறைமறுப்புக் கொள்கைகளை சமணம் என்ற பொதுப்பெயரில் அடையாளப்படுத்துவர். சமணர் என்பதற்கு எளிய வாழ்க்கையையும் துறவு நிலையையும் பின்பற்றுபவர்கள் என்று பொருள். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சில குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே ஜைனத்தை மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என பண்டைய தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பௌத்தம், அஞ்ஞானம், வேதாந்தம் போன்றவற்றையும் சமணம் என்றே அடையாளப்படுத்தினர்.

சரி விடையத்திற்கு போவோம்..

கி.பி ஏழாம் நூற்றாண்டளவில் ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய முட்டாள் பாண்டிய மன்னன் நின்றசீர்நெடுமாறன், சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான்.

சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது.

வாதம் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. சிவன் பெயர் எழுதிய சீட்டு நீரில் அடித்து செல்லபடவில்லையாம், சமணர்கள் கடவுள் இல்லை என்ற சீட்டு நீரில் அடித்துசெல்லபட்டதாம். (என்ன திருகுதாளம் செய்தானுகளோ!)
இதனால் கடவுள் இருப்பு நிரூபிக்கபட்டு விவாதத்தில் தோற்றதாக கூறி எண்ணாயிரம் சமணர்களும் கழுவேற்றப்பட்டார்கள். இதற்கான ஒழுங்குகள் செய்தது குலச்சிறை நாயனார்.

"துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" 

எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது. கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த மன்னன் விட்டுவிடவில்லை. மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

இவ்வாறு பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

சாவிற்கு பயந்த சமணர்கள் விபூதி இட்டு சைவத்தை ஏற்று மதம்மாறினார்கள்.

திருஞானசம்பந்தன், திருநாவுக்கரசர் முதல் தொண்டரடிபொடியாழ்வார் வரை சமணத்திற்கு இளைத்த அநீதி கொஞ்சநஞ்சமல்ல.

திருஞான சம்பந்தன் சமண சமய பெண்களை கற்பழிக்க அருள் தருமாறு கடவுளை வேண்டி தேவாரமே பாடியுள்ளான். அந்த தேவாரம் பின்வருமாறு அமைகிறது..

"மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே."  

பொருள்:

மண் அகத்திலும் = மண்ணிலும், இந்த பூமியிலும்

வானிலும் = தேவர் உலகிலும்,

எங்குமாம் = வேறு எல்லா இடத்திலும்

திண் அகத்து = திண்மையான மதில்களை கொண்ட

திரு ஆலவாய் = மதுரை (திரு + வால் + வாய்)

அருள் = அருள் செய்ய வேண்டும்

பெண் அகத்து எழில் = பெண்களிடம் உள்ள எழில்

சாக்கியப் பேய் அமண் = சாக்கியரோடு கூடிய பேய் போன்ற சமண சமய

தெண்ணர் = திண்ணர், திண்மையான உடல் உள்ளவர்கள், குண்டர்கள்,

கற்பழிக்கத் திரு உள்ளமே = கற்பை அழிக்க திருவுள்ளம் அருள வேண்டும்.

இது சம்பந்தனின் யோக்கியதை.

"கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் சமணமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலத்தில் அதாவது பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து போயின."

இந்த வரலாறுகள் கண்டிப்பாக எல்லோரும் தெரிந்திருக்க வேண்டியவை.
- வேணுகோபால சங்கர் ஆறாம் அறிவு முகநூல் பக்கம்