வெள்ளி, 26 ஜூலை, 2019

பெண்களிடம் கல்லடிபட்ட ஏழுமலையான்

திருப்பதி - திருமலை கோவில் புராணம் என்ன கூறுகிறது?

சோழ அரசன் மகன் ஆகாசராசன் மனைவி தரணி தேவி. இவர்களுக்குப் பிள்ளையில்லாததால், ஆகாச ராசன் யாகம் செய்ய எண்ணி, யாக சாலைக்கான இடத்தை உழுதான். அந்தக் கலப்பை உழவுச் சாலில் ஒரு பொன் தாமரையும், அதில் ஒரு பெண் குழந்தையும் காணப்பட்டன. அரசன் அந்தக் குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்து வளர்த்து வரச் செய்தான். அதற்குப் பத்மாவதி என்று பெயரிட்டான். வளர்ந்து கன்னிப் பருவமடைந்த பத்மாவதி ஒரு நாள் மலர் கொய்ய மலர் வனம் சென்றாள்.

ஏழுமலையானான நாராயண மூர்த்தி மலை யில் வேட்டையாடி விட்டு, அடிவாரத்துக்கு இறங்கியபோது, பூம் பொழிலில் பத்மாவதியைக் கண்டு, ஆசைப்பட்டு அவளை அணுகினார்.

(ஆக, ஆசாபாசம் கொண்டவர்தான் ஆண்ட வன்!)

ஓ பெண்ணே! நான் உன் பேரில் விருப்பம் கொண்டு இவ்விடம் வந்தேன். என்மீது தயையுள்ளவளாய் என்னை ஆலிங்கனம் செய்துகொள்'' என்று அவளிடம் கூறினார்.

(ஆகா, என்ன பண்பாடு!')

அந்த மங்கை, ஓய்! நீ உலகத்தில் சொல்லாத வசனங்களைச் சொல்கிறாய். என் அப்பா ஆகாச ராஜன் இதைக் கேட்டால் உன் உசி ரைப் போக்கிவிடுவார்'' என்று சீற்றத்துடன் சொன் னாள்.

அவளுடைய பேச் சைக் காதில் போட் டுக் கொள்ளாமல், நாராயணமூர்த்தி (ஏழு மலையான்) அந்தப் பத்மாவதியை அணுகினார்.

அவள், ஆத்திரமடைந்து, அவளும், தோழியர்களும் அவரைக் கற்களால் அடித்தனர். அவர் அந்தக் கல்லடிகளைப் பொறுக்கமாட்டாமல் திரும்பி வேங்கடாத்திரிக்கு (திருமலை)ச் சென்றார்.'' (இது திருமலைக் கோவில் புராணக் கதை).

கடவுள் என்றால் விரும் பாத பெண்ணை நேசிக்கவேண்டுமா? கோபம் கொண்டு அந்தப் பெண் கல்லால் அடித்தும் வெட்கப்படாதது வெட்கம் கெட்ட செயல் அல்லவா!

மாபெரும் சக்தி கொண் டவன் ஏழுகொண்டல வாடு' என்கிறார்கள்.

ஒரு பெண்ணிடம் அவர் ஜம்பம் பலிக்கவில்லையே!

- மயிலாடன்

 - விடுதலை நாளேடு, 21.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக