வெள்ளி, 11 அக்டோபர், 2019

பிள்ளையார் 'குணக்களஞ்சியம்'

மயிலாடன்




இந்தத் தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்‘ பிள்ளையாரின் குண விஷயங்களை வித்தாரமாக எழுதித் தள்ளியுள்ளது.

1. பிள்ளையாரை மனதார நினைத்தாலே போதும் விக்கினங்களிலிருந்து காப்பார் (விக்னேஷ்வரான விநாயகன் உண்டியலை அபேஸ் செய்தபோது அவர் சக்தி எங்கே போனதாம்?).

2. அரக்கர்களை அழித்தவன் ஆதலால் பிள்ளையாரை நினைத்தால் வீரம் கிட்டும் (கடவுளின் வேலை சண்டை போடுவதும், அழிப்பதும் தானா?)

3. விநாயகரின் பெரிய தலையே அவர் ஞானம் உடையவர் என்பதற்கு அடையா ளம். (பெரிய தலை இருந்தால் ஞானம் என்று எந்த முண்டம் சொன்னது?).

4. பார்ப்பதற்கே ஒரு கம்பீரம் நிறைந்த அழகிய உருவம் கொண்டவர் பிளளையார் (பிள்ளையார் போல குழந்தை பிறந்தால் கொஞ்சுவார்களா - கழுத்தை முறித்துக் கொல்லுவார்களா?).

5. சமதிருஷ்டி உடையவரை மீறி உள்ளே நுழைந்த தந்தையானாலும் தடுக்கக் கூடியவர் (பார்வதி தேவியார் குளிக்கும்போது உடலின் அழுக்கைத் திரட்டி உருவாக்கப்பட்டவர் தான் பிள்ளை யாராம் - இருக்கட்டும். பார்வதி தேவி குளிக்கும் இடத்திற்கு சிவன் சென்ற போது அவனைத் தடுத்து நிறுத்தினான் பிள் ளையார் என்பதைத்தான் ‘விஜயபாரதம்‘ இப்படி எழுதியிருக்கிறது. அந்த சக்தி பிள்ளையாருக்கு இருந்தால் தடுத்த பிள்ளையாரின் கழுத்தை ஒரே வெட்டாக வெட்டித் தள்ளினானே சிவன், அப் பொழுது இந்தப் பிள்ளையாரின் சக்தி ‘லீவு’ எடுத்துக் கொண்டு போய் விட்டதா?)

6. உதவும் குணம் உடையவராம் இந்த விநாயகர், அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டு ஆணவம் நீங்கப் பெற்ற காவிரியை மீண்டும் ஓட வைத்தவர் (காவிரி பிரச்சினைக்காக இவ்வளவுப் போராட்டம் ஏன்? விநாயகனுக்குக் கொழுக்கட்டை வைத்துப் பூஜை போட்டால் தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓட இவ்வளவு எளிதான வழி இருக்கிறதே - இதனை ‘விஜயபாரதம்‘ கையாண்டு கருணை மழை பொழிய செய்யக் கூடாதா?)

7. புதுமையாக சிந்தித்தார்: தாய் தந் தையை சுற்றி வந்தாலே அகில உலகையும் சுற்றி வந்த பேறு கிடைக்கும் என உணர்த் தியவராம் இந்தத் தொந்தி கணபதி. (ஒரு மாங்கனிக்காக விநாயகனும் முருகனும் சண்டை போட்டபோது, எனது முடியை முதலில் தொட்டு வருபவர்களுக்குத்தான் இந்த மாங்கனி என்றாராம் அப்பா சிவன். முருகன் மயிலேறி பறந்தானாம். விநாய கனோ தன் தாய் தந்தையரைச் சுற்றி முதலில் வந்தானாம். இதைத்தான் இப்படி ஜோடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஏடு. இதில் விநாயகனின் தந்திரம் இருக்கிறதே தவிர போட்டியை வெல்லும் ஆற்றல் இல் லையே! சரி, விநாயகன் அறிவாளி என்றால் அவன் சகோதரன் முருகன் பரம முட்டாளா?)

8. தியாகம் : மகாபாரதம் எழுதுவதற்கு அழகிய தன் தந்தத்தையே உடைத்தவர் (தந்தத்தினால் அவ்வளவு பெரிய மகா பாரதத்தை எழுத முடியுமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். தன் சக்தியால் ஒரு எழுது கோலை உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதானே?)

9. நம்பிக்கை: விநாயகர் தன்னை நம்பியவர்களை எப்பொழுதும் கைவிடுவ தில்லை. உதாரணமாக வள்ளியை மணக்க உதவி புரிந்தது. (சகோதரனுக்காக எந்த வேலையைச் செய்துள்ளார் பார்த்தீர்களா? ஒரு வள்ளியைக் கை பிடிக்கக் கூட சகோதரன் முருகன் கையாலாகாதவனா?)

10. எளிமை: ஒரு குழந்தைகூட விநாயகனை எளிதாக வரைந்து விட முடியும். (யானை முகம், பெருத்த தொந்தி, தந்தம், வாகனமான மூஞ்சுறு இவை அத்தனையும் கொண்ட ஓர் உருவத்தை எளிதாக வரைந்து விட முடியுமா? இவர் எளிமையான கடவுள் என்றால் மற்ற இந்து மதக் கடவுள்கள் கடுமையானவர்கள் தானா?)

11. புலனடக்கம்: அதாவது யானையை அடக்க அதன் பாகன்கள் அங்குசத்தைப் பயன்படுத்துவர், ஆனால் அந்த அங்கு சத்தையே தன் ஆயுதமாகத் தரித்தவராம். ஒருவனது கட்டுப்பாடே அவனை சிறந்த தலைவனாக்கும் என உணர்த்துபவர் விநா யகராம். (தன் தும்பிக்கையால் வல்லபை என்ற பெண்ணின் குறியில் என்ன செய்தார் என்பதுதானே இவர்களின் புராண லட் சணம்!).

ஒரு கடவுளச்சியின் உடல் அழுக்கி லிருந்து பிள்ளையார் உருவம் போல ஒரு பிள்ளை என்றால், இந்த அசிங்கத்தை அநாகரிகத்தை என்னவென்று சொல்லு வது?

அழுக்கிலிருந்து பிள்ளை பிறக்குமா?

இந்த ஆபாச - அருவருப்புக் கற்பனைக் கடவுளுக்கு எத்தனை எத்தனை இலட்ச ணங்களை - ஆர்.எஸ்.எஸ். ஏடு வரிந்து கட்டிக் கொண்டு எழுதுகிறது.

கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது என்று கூறுவானாம். இதற்குப் பொருத்த மானது - ‘விஜயபாரத’த்தின் அளப்புகள்!

- விடுதலை ஞாயிறு மலர், 5 .10 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக