வெள்ளி, 19 ஏப்ரல், 2019

முருகனின் அருவருப்பான பிறப்பு!

முருகனின் பிறப்பு கள்ளத்தனமானதா ?

அறிவுக்குப் பொருந்துமா ?

தோழர்கள் படித்துவிட்டு எச்சைக்கு விளக்குங்கள் ..!!

#முருகன்பிறப்பு இது பக்தாள் விட்டது தான் ..!

சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங்கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, “இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும்” என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அந்தப்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார். பூமி அதை தாங்க மாட்டாமல் பூமி முழுதும் கொதிகொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து பிரம தேவன் கட்டளைப்படி அதை கங்கையில் கொண்டு சேர்த்து, அவ்வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தைப் பெற வேண்டுமென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ்வீரியத்தைப்பெற, அவ் வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட, கங்கை அதை தாங்கமாட்டாமல் மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி “ ஏ கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தை தாங்க முடியாவிட்டால் பனிமலை அருகில் விட்டுவிடு” என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ்வீரியத்தை பனிமலையின் அருகில் விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற அதை இந்திரன் பார்த்து அக்குழந்தைக்கு பால் கொடுத்து வளர்க்க கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்கு பால் கொடுத்து வளர்த்து வரலானார்கள். பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக் குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா தேவிகள் ஆறுபேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும், மேல்கண்ட ஆறுபேரின் முலையிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில் பால்குடித்ததால் ஷண்முகன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

தொடரும் ...

பி என் எம் பெரியசாமி !
- முகநூல், 19.4.18

வேதவியாசருக்கு சுகர் பிறந்த கதை.

#சுகர்

வேதவியாசருக்கு சுகர் பிறந்த கதை.

ஒருநாள் வியாசர் தியானத்தில் இருந்தபோது அவரையறியாமல் விந்து வெளிப்பட்டுவிட்டது. சிந்தி கிடந்த அந்த ‘ரேதஸ்’ஸை ஒரு கிளி என்ன பண்ணியது? கொத்தித் தின்றுவிட்டது.

அதை கொத்தித் தின்ற கிளி சும்மாயிருக்குமா?... அந்தக் கிளி கர்ப்பமாகி விட்டதாம். கிளி கர்ப்பமானால் என்ன செய்யும்? முட்டை போடும். குஞ்சு பொரிக்கும். அது இன்னொரு அழகான கிளியாகும். ஆனால்... இந்த கிளி அப்படி அல்ல. வியாஸரின் வீரியம் சாப்பிட்ட கிளியல்லவா? அதனால் கர்ப்பமான கிளி... ஒரு குட்டியைப் போட்டது. கிளி குட்டி போட்டதா?... புராணம் அப்படித்தான் சொல்கிறது. கேள்வி கேட்கப்படாது. கேட்டால் தெய்வ குற்றம் ஆகிவிடும்.

அந்த கிளிக்குட்டி(!) எப்படி இருந்ததாம்?... தலையெல்லாம் கிளிபோல இருந்ததாம். உடல் மட்டும் மனுஷ்ய பாவணையாய் அமைந்ததாம். என்னடா இது புதுக் கொடுமையாக இருக்கிறதே என்கிறீர்களா?... இது பழம்பெரும் ‘கொடுமை’.
இதை உண்மை என்று நம்பவும் ஒரு கூட்டம் இருக்கதானே செய்கிறது.

இந்த கிளிக்குட்டிதான் சுகர்.

“எம்ப்ரவ் விஷந்தம்அனுபேதம் உபதே ஹிருத்யம்தனவ பாயஹைவிரக காதரஹ ஆஹிஜாகாதேதீ தன்மயேதய தரவோ...”

#Share_This

#அர்த்தமுள்ள_ஆரிய_இந்துமதம்

-வேணு கோபாள சங்கர்- ஆறாம் அறிவு, முகநூல் பக்கம்

ஆன்மீக காமக் களியாட்டங்கள்!

கள்ளக்காதல்பற்றி ஆய்வு செய்த ஆர்.எஸ்.எஸ். எச்சியே!
கள்ளக்காதல்பற்றி ஆய்வு செய்யும் ஆரியத்தின்  நச்சியே! உனது ஆரிய பாரம்பரிய பாரதக் கதை - அதன் பாத்திரங்களிலிருந்து தொடங்கலாமா?

பஞ்ச பாண்டவர்கள் அய்வரும் குந்திக்கு எப்படி பிறந்தவர்கள்; இதிகாச கதைப்படி யாருக்குப் பிறந்தவர்கள்? பீஷ்மரின் கதை - மச்சகந்தி' பரிமளகந்தியானது - பருவ மடையாத பெண்களிடம் மோகித்து, சூரியனையே மறையச் செய்ததாக கதை விட்டு கலவி செய்த கதை தெரியுமா?

அட துரோபதியின் மைந்தனே! தூ, தூ'' என்ற அறிவாளிகள் - உரைத்து உமிழ்ந்த எச்சிலில் மிதப்பவனே!

உனது இராமன் ஏன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னான்?

பிறகு காட்டிற்குக் கொண்டு போய் நிறைமாத கர்ப்பிணியை தவிக்க விட்டான். அவளது கள்ளத் தொடர்பினால் ஏற்பட்ட கரு (இராவணனின்) என்ற சந்தேகத்தினால்தானே!

கடவுள் அவதாரத்திற்கே இப்படி ஒரு சந்தேகமா? என்று கேட்கமாட்டீர்களா?

கவுதம முனிவரின் மனைவி  அகலிகையைக் கற்பழித்ததினால், தேவேந்திரன் உடம்பெல்லாம் அது'' எங்கும் என்ற சாபம் பெறப்பட்டான்.

அதுமட்டுமா?

தாயையும் புணர்ந்த மாபாதகம் செய்தவனை ஏற்ற திருவிளையாடல்' புரிந்த தீவினைத் தீவட்டிகளே, திராவிடத்திடம் வாலாட்டாதே - வாலை ஒட்ட நறுக்குவோம்!

அரண்மனை நாயே,

அடக்கடா வாயை!'

என்ற கலைஞரின் வசனம்தானடா உனக்கு வாயடைப்புக்கு ஆப்பு!

உளறி, உளறி உன் அறியாமையால் ஊர் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

எவ்வளவு காலம் இந்த ஆட்டம் - பாட்டம்!

பார்ப்போம்! பார்ப்போம்!!

- ஊசி மிளகாய்
- விடுதலை நாளேடு, 19.4.18

வியாழன், 4 ஏப்ரல், 2019

மாசி மகம் எந்தெந்த கடவுளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது?


இல்லாத இந்து மதத்தில் ஆண்டு முழுவ தும் மதப் பண்டிகைகள், மத விழாக்கள், மத சடங்குகளுக்கு பஞ்சமே கிடையாது.

தமிழ்ப் பெயர்களே இல்லாத ஆண்டை தமிழ் ஆண்டு என்று நம்பவைத்து, சித்திரை முதல் பங்குனி வரை பக்தியின் பெயரால் மக்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள்.

ஆண்டாண்டு காலமாக கடவுள், மதம், பக்தியின் பெயரால் கற்பனையான கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு, இல்லாத ஒன்றை இருப்பதுபோல் கூறிக்கொண்டு, எப்படியாவது மக்களை ஏமாளிகளாக ஆக்கிவிட்டு, அம்மக்களிடம் பார்ப்பனர் களின் சுரண்டல் தொடர்ந்து கொண்டிருக் கிறது.

பொருளாதார ரீதியில் சுரண்டல்கள் ஒரு பக்கம் என்றால், தப்பித்தவறியும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்துவிடக்கூடாது என்ப தற்காக, தொடர்ச்சியாக மூடத்தனங்களில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்ற அவல நிலையில் தமிழர்களின் வாழ்வு பாழாக் கப்பட்டு வருகிறது.

மாசி மாத பவுர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாள் மாசி மகம் எனப்படுகிறதாம். அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டும் சிறப்புக்குரியது என்றும், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர் களாக புவி ஆள்வார்கள் என்றும், மிகுந்த சக் தியும் திறனும் படைத்தவர்களாக இருப்பார் கள் என்றும் மூடத்தனங்கள் விதைக்கப்பட்டு உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப கோணத்தில் மகாமகம்  நடைபெறுவதைப் போல், வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் அழைக்கப்படுகிறதாம்.

மாசி மக திருநாளில் அனைத்துக் கோயில் களிலும், தீர்த்தவாரி நடைபெறுகிறதாம். இந்நாளில் சிவன் வருணனுக்கு சாப விமோசனம் அளித்தானாம். அதனால் சிவனை வழிபடலாமாம்.

சிவனின் மனைவி பார்வதி இதே நாளில்தான் தட்சனின் மகள் தாட்சாயணி யாக அவதரித்ததாகவும், அதனாலேயே பெண்களுக்குரிய விரதநாளாகவும், சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகவும் இருக்கிறதாம்.

தந்தைக்கே மகன் முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் இதேநாள்தானாம். இதனால் முருகனை வழிபடலாமாம்.

பெருமாள் வராக அவதாரம் (பன்றி) எடுத்து பாதாளத்தில் இருந்த பூமியை மீட்டு  வெளிக்கொணர்ந்த நாளும் இதே நாள் தானாம். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளாம்.

இவ்வாறு இந்தநாள் அனைத்துக் கடவுளர்களையும் வழிபடுவதற்கான நாளாக உள்ளதாம். இந்நாள் தோஷங்களை நீக்கும் புண்ணிய நாளாகவும் கருதப் படுகிறதாம்.

இந்நாளில் புண்ணிய தலங்களை தரி சிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது அய்தீகம் என்றும், நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மையைத் தரும் என்றும் மாசிமகத்தில் விரதங்கள் இருந்து பயன் பெறுவதற்காக பக்தர்களை அழைக்கிறார் களாம். இதுதான் ஆரியர்களின் சூழ்ச்சி வலை. மோட்சம், வைகுந்த பதவிகள், சொர்க் கம் உள்ளிட்டவற்றுடன், வேண்டியது கிட்டும் என்று பேராசையை புகுத்தி, மக்களிடம் மூடத்தனங்களைத் திணித்து, அவர்களின் அறியாமையையே மூலதன மாகக் கொண்டு சுரண்டல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ள உழைக்கும் மக்களுக்கு, பார்ப்பனர்களின் நயவஞ்சகத்தை உணர் வதற்கு உரிய வாய்ப்புகள் இன்றி, அறி யாமை இருளில் தள்ளப்பட்டு வருகின் றனர்.

கடவுள், மதம், பழக்க வழக்கம் என்று கூறிவிட்டால், ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்விகளுக்கு இடமே கிடை யாதே!. கேள்வியைக் கேட்பதற்கு தயாராகி விட்டான் என்றால், நரகம், மறுபிறப்பு உள்ளிட்டவற்றைக் கூறி பயபக்தியின் பெயரால் அடக்கிவிடுவதும், அதையும் மீறி கேள்வி கேட்டால் நாத்திகன் என்று தூற்றுவதுமாக ஆரியர்கள் அப்பாவி மக்கள்மீது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர்.

முந்தைய ஆண்டுகளில் இதுபோன்ற வழிபாடுகளை செய்ததன் விளைவு என்ன என்று சிந்தித்துப்பார்த்தால், அதனால் பயனேதும் இல்லை என்பதை உணர்ந்து, தொடர்ந்து வரும் காலங்களில் இயல்பாக விட்டுவிடுவார்கள். ஆனால், அவர்களை சிந்திக்க விடாமல் மூடத்தனங்களை தொடர்ச்சியாக திட்டமிட்டு பரப்பிவரு வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதே ஆரியம். கல்வி பெற்ற தமிழர்களையும் ஆரியம் விட்டுவைக்காமல், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வாயிலாக விடாமல் மூடத்தனங்களைத் திணித்து வருகிறது.

ஆரியப்புரட்டுகளைத் தவிடு பொடி யாக்கியவர்  தந்தைபெரியார்தான். திரா விடர் கழகம்தான்.

கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி கிடைத்தது தந்தை பெரியாரின் தொண் டால்தான் என்பதை உணர்ந்திட்டால் ஆரியத்தின் அடிமைத்தளைகளிலிருந்து விடுபடலாம். ஆரியத்திடம் சிக்கி சீரழிந்து வரும் அப்பாவி மக்கள் உணர்வார்களா? விழிப் பார்களா?

- விடுதலை ஞாயிறு மலர், 9. 3 .19

புதன், 3 ஏப்ரல், 2019

சந்தி சிரிக்கும் இந்து மதக் கோட்பாடு!

தொழில்கள் அனைத்துக்கும் அவற்றை நடத்துவதற்கான விதிமுறைகள் உள்ளன; அரசியல் தொழில் ஒன்றைத் தவிர! அதே போல மதங்கள் அனைத்தும் நன்னடத்தைக்கான விதிமுறைகளைக் கொண்டுள்ளன, ஆனால் இந்துக்களுக்கு மட்டும் அது போன்ற விதிமுறைகள் இல்லை. எனவே, அண்மையில் அலகாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது அகில உலக இந்து மாநாட்டில் கலந்து கொண்ட தர்மாச்சாரியார்கள், ஆச்சார்யஸம்ஹிதா என்ற ஆறு விதிமுறைகளை இந்துக்களுக்காக அறிவித்துள்ளார்கள்.


கிறித்துவர்களின் பத்து கட்டளைகளைப் (Ten Commandments) போல கண்டிப்பானதாகவும், திட்டவட்டமாகவும் இந்து விதிமுறைகள் இல்லாமையால் அதுபற்றி யாரும் அஞ்சவேண்டியதில்லை. பத்துக்கட்டளைகள் மிகவும் எளிதானவை. கொலை, சோரம் போதல், பல கடவுள் வழிபாடு (Polytheism) முதலியவற்றைக் கண்டிக்கின்றன. இதை அறிந்த இந்து மத ஆச்சாரியார்கள் சடங்கிற்காக ஆறு இந்து விதிமுறைகளை அறிவித்துள்ளனர். அதனால், மிகவும் மோசமான அயோக்கியர்கள் கூட அந்த விதிமுறைகளைச் சுலபமாகப் பின்பற்ற முடியும் அல்லவா?

ஆறு விதிமுறைகள்


அந்த ஆறு விதிமுறைகளின்படி, ஒரு இந்து 1) சூரியனை வழிபட வேண்டும்; 2) பகவத்கீதையை படிக்கவேண்டும்; 3) தனக்கு விருப்பப்பட்ட (இந்துக்) கடவுளின் படத்தை தனது இல்லத்தில் மாட்டி வைத்திருக்க வேண்டும்; 4) ஓம் என்ற அடையாளச் சின்னத்தை நூலில் அல்லது சங்கிலியில் கட்டி அணிந்து கொள்ள வேண்டும்; 5) வருகை அட்டை (Visiting Card) மற்றும் குறிப்பேடுகளில் இந்த (ஓம்) அடையாளத்தைப் பதித்துக் கொள்ள வேண்டும்; 6) துளசிச் செடியை வீட்டின் முன் வளர்க்க வேண்டும்.

இந்த விதிமுறைகள் எந்த வகையிலும் இந்து சமுதாயத்தை வளப்படுத்துவதாகவோ, பலப்படுத்துவதாகவோ அல்லது காலத்திற் கேற்றாற்போல மாற்றி அமைக்க போவதாகவோ தெரியவில்லை. இவை கலப்படம் அற்ற, சுயநலவாதிகளின் சொந்த நலனுக்கும், வளமைக்கும் ஆன தனிப்பட்ட திரு விளம்பரக் கட்டளைகள் ஆகும்

உட்பூசல்கள்!

மேலும், பெரும்பாலான இந்துக்கள் தத்தம் பிரிவுகளின் கொள்கைகளை விட்டுக்கொடுத்து இந்த ஆறு விதிமுறைகளையும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். முதல் உலக இந்து மாநாட்டின் கூற்றுப்படி பவுத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்துக்களே! ஆனால், இவர்கள் அனைவரும் பகவத் கீதையை நம்பி அதைப் படிக்கமாட்டார்கள். (ஏனெனில், பகவத்கீதை  வைணவர்களின் புத்தகம்; அது அவதாரங்களின் புகழ் பாடுகிறது). இவர்கள் மூர்த்தியை (அ) சிலையை வழிபடமாட்டார்கள். ஓம் என்ற அடையாளத்தை அணிந்து கொள்ளமாட்டார்கள். (ஏனெனில், 'ஓம்' என்பது ஒரு சூழ்ச்சியான ஆண்-பெண் உறுப்புக்களைக் குறிக்கும் பாலுணர்வு அடையாளம் ஆகும்).

மீண்டும் மீண்டும் பித்தலாட்டங்கள்!

உண்மையான விதிமுறைகள் எனில், அவைகள் தனிப்பட்ட  மனிதனின் மன வளர்ச்சியையும், சிந்தனைத்திறனையும் உயர்த்த வேண்டும். அப்படி  உயர்ந்தால், சமுதாய அமைப்பும் உறுதிப்படும். அத்தகைய விதிமுறைகள் இந்து மதத்தில் மண்டியிருக்கும் புராணம், சடங்கு, சாத்திரம், சம்பிரதாயம் என்னும் நாற்றமடிக்கும் கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதாக இருக்கவேண்டும். இந்து தர்மாச்சாரியார்கள் (இந்து சமுதாயத்தைப் புனரமைக்க) தீவிர அறுவை சிகிச்சை எதையும் செய்யமுடியாது என்பது பகுத்தறிவாளர்கள் அறிந்த விஷயம். அதனால், பித்தலாட்டத்தையே மீண்டும் மீண்டும் பேணி, வளர்த்துப் பாதுகாக்கிறார்கள்,

- நன்றி  "காரவன்", ஏப்ரல் 1, 1979

தமிழாக்கம்: ச.ராமசாமி

- விடுதலை ஞாயிறு மலர், 24 .3 2019

செவ்வாய், 26 மார்ச், 2019

பங்குனி உத்திரம் என்ற பசப்பு பக்தியின் ஆபாசத்துக்கு எடுத்துக்காட்டு

பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக் குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாதங்களில் 12ஆம் மாதமாகிய பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளாகும். நட்சத்திரங்களில் 12ஆம் நட்சத்திரம் உத்திரம். முருகன் கோயில்களில் இந்நாளில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

மீனாட்சி கல்யாணம்


சிவனுக்கும் பார்வதிக்கும் சோம சுந்தரர் என்றும், மீனாட்சி என்றும் கூறி, திருமணம் செய்வித்த நாள் பங்குனி உத்திரநாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களின் ஆறுதலுக்காக சிவன் பார்வதியை  மணந்தானாம்.

இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணி களால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துகள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளி யறைக்கு அனுப்பி வைப்பார்களாம்.

பங்குனி உத்திரக் கல்யாணத் திருவிழா அன்றைய நாளில் சைவர்கள் விரதமிருப்பர். பகற் பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் இருப்பார்களாம். இத னைக் கல்யாணசுந்தர விரதம் என்கிறார்களாம்..

பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தான். ராமன், சீதையை கரம் பிடித்தான். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தான். அரங்கநாதன் ஆண்டாள் முதலிய கடவுளர்களின் திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றன வாம். இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் கூறப்படுகிறதாம்.

இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருக னையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.

அசுரர்களை முருகன் அழித்த நாளாம்


பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தானாம். அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருந்ததாம். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்ட வனுமான தாரகாசுரன் ஆட்சியில், தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வந்தா னாம்.

அதனால், முருகன், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகா சுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட,  இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப் படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரி சூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண் டும் மூர்க்கத் தனமாக தாக்கினான். எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகனின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதன் மூலம் அறிந்த முருகன், நேரடியாக போர்க் களத்திற்கு  சென்று  கடுமையாக தாக்கினானாம்.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் தாரகாசுரன் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்தான். முருகன், தன் வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிய, துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகா சுரனை கொன்றதாம். அதன் பிறகு முருகன், தெய்வானையை மணந்தானாம். அந்த நாளே பங்குனி உத்திரமாம்.

இப்படி சற்றும் அறிவுக்கு பொருந்தாத கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு காலங்காலமாக பக்தியின் பெயரால் மக்களை அறி வுக்குருடர்களாக ஆக்கியதுடன், சிறுபிள்ளை விளையாட்டாக திருவிழாக்களை நடத்தச் செய்து, ஏமாந்த மக்களை வஞ்சித்து வருகின்ற பார்ப்பனக்கூட்டத்தின் வஞ்சகத்தைப்புரிந்து கொண்டு விழிப்பைப் பெறுவது எப்போது? சர்வ சக்தியுள்ளவன் கடவுள் என்றால், அவனுக்கு வேல் எதற்கு? சூலாயுதம்தான் எதற்கு?

எல்லாம் அவன் செயல் என்றால், அசுரர்களின் செயல் யார் செயல்?


அசுரர், தேவருக்குள் பிரச்சினை என்றால், தேவர்களை மட்டும் காக்க வேண்டிய அவசியம்தான் என்ன? கடவுளுக்கு எதற்கு ஆண்டு தோறும் திருமணங்கள்? வைபவங்கள்? விழாக்கள்? அதனால் விளையும் நன்மைதான் என்ன? நேரமும், பொருளும், உழைப்பும் பாழாவதைத் தவிர வேறு ஏதேனும் உண்டா? பக்தர்கள் சிந்தித்தால், பார்ப்பனர்களின் சூழ்ச்சி வலைகளிலிருந்து விடுதலை பெற்றிடலாமே!

-  விடுதலை நாளேடு, 20.3.19

ஞாயிறு, 3 மார்ச், 2019

சிவராத்திரியின் யோக்கியதை

தந்தை பெரியார்
சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ள படியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன் றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக் கோளாறு உண்டாகும்.
ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமைப்பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற் கைக்கும், மக்கள் நடப்பு-பண்பாடுகளுக்கும் பொருந் தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!
முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலைமுதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லையாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தது. ஒரு புலி இந்த வேடனைக் கண்டு விட்டது. இவனைப் பின் தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வமரத்தின் மேல் ஏறிக்கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின் கீழ் தங்கல் போட்டது. புலியும் அவன் இறங்கு கிறானா என்று பார்த்து கொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக்களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வமர இலைகளைக் கொத்து கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழை யின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப்பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக்கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம்; அன்று இரவு வேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.
(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டுசென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம் தான்)
அவன் மாலை மழையில் நனைந்து குளித்தது போல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல் , அவன் அறியாத லிங்கத்தின் மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்தது போல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிடவேண்டும் என்ற எண்ணமில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட மழைத் தண்ணீ ரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின் மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான் உலகை அடைந் தானாம்.
அடுத்த கதை - ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் சுத்த அயேக்கியனும் ஒழுக்கக் கேடனும் ஆவானாம். இதனால் ஊரை விட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோயிலை அடைந்தானாம். அப்போது அந்த கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்து விட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்கு சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன் பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களை பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈசுவரலிங்க சிலைக்கு தீபாராதனை செய்தது போலவும், பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பன பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக்கொலை; அவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை.
மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வெருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்த சிவராத்திரிகள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல் , மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்று தான் நாம் கேட்கின்றோம்.
இந்த பாழும் அர்த்தமற்ற-பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத நமக்கு இழிவையும் அவ மானத் தையும் தருவதான பண்டிகைகளுக்கும், உற்சவத் திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொரு ளையும் பணத்தையும் விரயப் படுத்துவது மக்களின் அறியா மையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர் களின் ஆதிக்கமும், தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்க வேண்டும்.
- விடுதலை நாளேடு, 3.3.19