ஞாயிறு, 24 ஜனவரி, 2021

சிவ_பார்வதி_விவாஹம்

#சிவ_பார்வதி_விவாஹம்
அல்லது 
#பார்வதி_பரிணயம்

சிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த விவாஹ வைபவத்தை ஶ்ரீ வாமந புராணம் விளக்குகிறது.அதில் ஒரு பகுதியை கீழே தருகிறேன்;

நந்தியினது ஆணையின்படி மகாவிஷ்ணு முதலிய சகல தேவர்களும் மகாதேவன் வசிக்கும் மந்த்ர மலைக்கு வந்து சேர்ந்தனர்.அதிதி ஸுரபி,ஸுரமை என்பவர்கள் பரமாத்மாவிற்கு விவாகத்திற் கேற்ற அலங்காரங்களைச் செய்தனர்.விருஷபாருடராகச் செல்லும் சுந்தரேசனுக்கு இருபுறத்திலும் விஷ்ணுவும் பிரம்மாவும் செல்ல, ஐராவதத்தின் மீதிருந்து இந்திரன் பின்னின்று வெண்குடை பிடிக்க, கங்கையும் யமுனையும் சாமரம் வீச,கந்தர்வகணம் பாட, கின்னரர் வாத்திய சேவை செய்ய,
அப்ஸரஸுகள் ஆட பகவான் ஆகாச வீதியில்  புறப்பட்டார்.16 கோடி ருத்ரரும்,12 கோடி ஆதித்யரும், 8 கோடி வசுக்களும்,67 கோடி கணங்களும்,24 சிவ கணங்களும் பகவானுடன் கூட கிளம்பிற்று.
ஹிமவான்(பார்வதியின் தந்தை),
சகல தேவர்களையும் மகாதேவனோடு நன்கு வரவேற்று பூஜித்து ரத்னவேதியில்(சிம்மாசனம்)பார்வதியை அமர்த்தி,வந்த வரனை அர்ச்சித்து,புலகன் பேத்தியும் என் கன்யையும் பித்ருக்களின் தௌஹித்ரியும்(மகள் வயிற்று பேத்தி) மேனையின் பெண்ணுமான பார்வதியைத் தமக்கு கன்யாதானம் செய்கிறேன்,அவளை ஏற்று அருள் புரிய வேண்டும் என்றார்.மகாதேவர் தனக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை என்று கூறி தேவியை ஏற்றுக்கொண்டார்.பிரும்மா அருகிலிருந்து சகல வைதிக காரியங்களையும் செய்து வைத்தார்.பார்வதிக்குத் தோழியும்  பரமசிவனுன் பக்தையுமான மாலினி என்பவள் பரமாத்மாவினது பாதாரவிந்தங்களைப் பிடித்துக் கொண்டு தன் தோழிக்கு பூர்ண சம்பத்தை அளிக்க வேண்டும் என பிரார்த்தித்தாள்.பகவான் உமாதேவியைச் சங்க சக்ர கதா பாணியான மகாவிஷ்ணுவாகச் செய்து போதுமா? என்றார்.அதைக் கண்டு எல்லோரும் ஆனந்த்தித்தனர்.பார்வதி தேவியின் அழகைக் கண்டு சதுர்முகனுக்கு(பிரும்மாவிற்கு) மோகம் உண்டாக இந்த்ரியம் ஸ்கலநமாகி முன்பாக மணலில் விழுந்தது.அதை அவர் ஒருவரும் அறியாமல் மணலில் மறைக்க ஆரம்பித்தார். இதை ஞானக்கண்ணால் அறிந்த கைலாசநாதன்,அதிலிருந்து 88000 வாலகில்ய ரிஷிகள் ஜனிக்கப் போகின்றனர், அதைத் தடுக்காதே என்று பிரும்மனைப் பார்த்துக் கூறினார்.அங்ஙனமே மகரிஷிகள் உண்டாகி கௌரீ கல்யாண வைபவத்தைக் கண்டு சந்தோஷசித்தனர்.பரமாத்மாவினது விவாஹ வைபவத்தைக் கண்டு சகல பிராணிகளும் சந்தோஷம் அடைய உமாபதி விருஷபத்தின் மீதேறி கைலாசம் சென்றார்.

சிவனைப் பற்றிய புராண கதைகளில் விஷ்ணு பிரும்மா இருவரையும் மதிப்பிற் குறைவாகவும், விஷ்ணு பற்றிய புராணங்களில் சிவனை,பிரும்மனை அவமதித்தும்,பிரும்மனைப் பற்றிய புராணங்களில்,சிவன் விஷ்ணுவை நிந்தித்தும் கதைகள் ஏராளமாய் புணையப் பட்டுள்ளன. 

வழக்கம் போல ஆட்சேபணை தெரிவிப்பவர்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான்.வைதிக புராணங்கள் அனைத்திலும் இப்படியான ஆபாசமான கதைகளே உள்ளன.இவை அனைத்தும் வைதிகர்களால் மொழிபெயர்கப்பட்ட நூல்கள்.வேறு யாருடைய சொந்தச் சரக்கு அல்ல.மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட கதைகளும் அல்ல.ஆதலால்,
என்மீது கோபம் கொள்ளாமல் பொறுமையுடன் ஒரு சில வைதிக புராணங்களையாவது படியுங்கள்.உண்மையை நீங்களே உணர்வீர்கள்.

நிழற்படம்: மூன்றாண்டுகளாக வட இந்திய டிவிக்களில் தொடர்ந்து வெளிவந்த “Devon Ke Dev... Mahadev”  சீரியலின் காட்சி!

- தினகரன் செல்லையா ஆறாம் அறிவு, முகநூல் பக்கம், 24.1.21

செவ்வாய், 19 ஜனவரி, 2021

ஆன்மிகம் - அவர்கள் பார்வையில்

“எல்லாம் தெய்வச் செயல், கடவுளே எல்லாம் பார்த்திருப்பாருன்னு விட்டிருந்தா நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன்.

அந்தச் சூழ் நிலையில் உத்தியோகத்தைவிட்டு, தைரியமாக சென்னைக்கு வந்து, ஒரு வாசலில்ல காத்திருந்தது என் முயற்சி”

(‘ராணி' 20.7.2008)

கேள்வி: 1) “அரசியல் - ஆன்மிகம் ஒப்பிடுங்க?”

ரஜினிகாந்த்: “ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. ஏன்னா, அது பாம்பும், கீரீயும் மாதிரி எ.திர்த் திசையில் உள்ளவை”

- 1995 டிசம்பர் மாதம் தன் பிறந்த நாளான 12 மற்றும் 13 ஆகிய இரு நாள்களில் அரசு தொலைக் காட்சிக்கு (தூர்தர்ஷன்) ரஜினிகாந்த் அளித்த பதில்.

கேள்வி: இலவசங்களைக் கொடுத்து ஓட்டு வாங்கிடலாம் என்ற அரிய தத்துவத்தை முதலில் கண்டு பிடித்த ஜீனியஸ் காங்கிரஸா, திமுகவா?

சோவின் பதில்: இவர்கள் யாருமில்லை, விபூதி, குங்குமத்தோடு நிற்காமல் புளியோதரை, வெண் பொங்கல்ன்னு இலவசமாக கொடுத்தால் பக்தர்கள் வருவாங்கன்னு கண்டு பிடிச்சது கோவில்கள் தான்.

(‘துக்ளக்': 20.6.2012)

கேள்வி: சென்னைத் தீவுத்திடலில் திருப்பதி ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து?

சோவின் பதில்: “இவ்வளவு கட்டணம் செலுத்தினால் வெங்கடேஸ்வரப் பெருமாளை உங்கள் வீட்டிற்கும் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம்“ என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்று தான் குறை.

(‘துக்ளக்': 23.4.2006, பக்கம் 17)

கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?

சோவின் பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்கு பொய்யை அருள் வாக்காக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையாகவே நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

(துக்ளக்: 26.10.2016, பக்கம் 23)

வெள்ளி, 8 ஜனவரி, 2021

ஆண்டாள் யார்?


சில நாட்களிற்கு முன் தினமணி செய்தித்தாளில் கவிஞர் வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள்” எனும் கட்டுரையில் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியம் இன்று தமிழக ஊடகப்பரப்பிலும், பொதுவெளியிலும் பெரும் கருத்துமோதலை ஏற்படுத்தியுள்ளது.  அதில் அவர் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியத்தில் ஆண்டாள் ஒரு தேவடியாள் எனக் குறிப்பிட்டதே இந்தக் குழப்பங்களிற்கெல்லாம் காரணம்.  இதனை இவர் ஒன்றும் சொந்தக்கருத்தாகக்கூறவில்லை, மாறாக அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட “Indian movement – some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது என மேற்கோளே காட்டியிருந்தார்.  உடனேயே ஆண்டாளினை வைரமுத்து கேவலப்படுத்திவிட்டார் என இந்துமதவாதிகள் பொங்கியெழுந்து அவரது தலையினை வெட்டவேண்டும் என தலிபான் அவதாரம் எடுத்துவிட்டார்கள். இன்று இவ்வாறு கூச்சலிடும் மதவாதிகளின் முன்னோர்களே இந்துமதத்தின் ஒரு சடங்காக தேவடியாள்/ தேவதாசி முறையினைப் பேணியவர்கள் என்பதுதான்  இங்கு வேடிக்கையானது.

தேவடியாள்(பரத்தை)வரலாறு:

இந்த விலைமகளிர் தொழிலே உலகின் முதற்தொழில் என வேடிக்கையாகக் கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் இந்த விலைமகளிரின் தோற்றம் என்பது வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்டது. வரலாற்றில் தாய்வழிச் சமுதாயமாக மனிதர்கள் இருந்தபோது எல்லோருமே பொதுமகளிராகவேயிருந்தார்கள்(1). அதே போன்று சங்ககாலத்திலும் இற் பரத்தை(ஒருவனிற்கு மட்டும்),நயப்புப் பரத்தை(பலருக்கும் நயப்பவள்) மருதநிலத்தில் இருந்ததாகக் குறிப்புக்கள் உண்டு. அதே போன்று சங்கமருவிய காலத்தில் பரத்தையர்முறைமை இருந்தற்கு தரவாக மாதவி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறார். இவ்வாறு காலகாலமாக பரத்தைமுறை காணப்பட்டாலும் அதனை மதச்சடங்காக மாற்றி கடவுளுடன் தொடர்புபடுத்தியது பார்ப்பன வைதீக(இன்றைய இந்து) மதமேயாகும்.  வைதீக மதமே தேவடியாள் (தே= தெய்வம்+அடியாள்= பணிபுரிபவள்) எனும் கருத்துருவாக்கத்தினை உருவாக்கி அதனை பொட்டுக்கட்டல் எனும் சடங்காக கோயிலிலேயே அந்தணர்களைக் கொண்டு நடாத்திவைத்தது.  இதனை பெருமளவிற்கு நிறுவனரீதியான நடைமுறைக்குள்ளாக்கியது இராசராச சோழன் ஆட்சியிலேயிலேயே இடம்பெற்றது என்பதற்கு தரவாக தஞ்சைப் பெருங்கோயில் கல்வெட்டுக்கள் (2)காணப்படுகின்றன. இராசராச சோழன் காலத்திலேயே இவ்வாறு தேவடியாள் முறை நிறுவனரீதியாக மதச் சடங்காக ஆக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே கோயில்களில் நிறுவனரீதியற்ற முறையில் பின்பற்றப்பட்டு வந்திருக்கலாம் என உய்த்துணரமுடிகிறது. அக் காலப்பகுதியிலேயே (குறிப்பாக எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ) ஆண்டாள் வாழ்ந்தாகக் கருதப்படுகிறது.

ஆண்டாள் உண்மையிலேயே தேவடியாளா (தேவதாசியா) என்றால் அது விவாதத்திற்குரியது. இந்துமத விளக்கத்தின்படி தெய்வத்திற்கே (தே) பணிபுரிபவள்(அடியாள்) என்றவகையில் தேவடியாள் எனத் துணிந்து கூறலாம். மறுபுறத்தில் பொதுவழக்கிலுள்ள தேவதாசி என்ற சொல்லிற்கான விளக்கத்தின்படி பொதுமகளா எனப் பார்த்தால், அதற்கான நேரடித்தரவுகள் எதுவுமில்லை.  மேலே குறிக்கப்பட்ட இண்டியானா பல்கலை ஆய்வானது ஆண்டாளின் பாடல்களில் காணப்படும் பாலியல் விடுதலைத் தன்மையினை அடிப்படையாகக்கொண்டே குறித்த முடிவிற்கு வந்திருக்கலாம். அதாவது பெண்களின் விடுதலை பெருமளவிற்கு அடக்கிவைக்கப்பட்டிருந்த அன்றைய நிலையில் ஒரு இளம்பெண் இவ்வாறு பாலியல் வேட்கை சொட்ட சொட்ட பாடல்களைப் பாடியிருக்க முடியுமா என்ற கேள்வியின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டிருக்கலாம். அது முடிந்த முடிவல்ல என்பது உண்மையே.

ஆண்டாள் அவமானக் குறியீடா?

ஒரு வாதத்திற்காக ஆண்டாள் அவ்வாறு பரத்தையாகவிருந்திருந்தாலும்கூட, அது அவரிற்கான அவமானமல்ல, மாறாக அது அந்த மதப் பிற்போக்குத்தன மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானமாகவே கருதப்படவேண்டும்.  ஆண்டாளின் பாடல்கள் கூட ஒரு பெண்ணின் பாலியல் விடுதலை உணர்வின் வெளிப்பாடாகவே கருதப்படவேண்டும்.  அதே போல ஆண்டாளின் தமிழ்ப் புலமையும், தமிழே வழிபாட்டு மொழியாகக் கருதப்படவேண்டும் என்ற மொழியுணர்வும் போற்றப்படவேண்டும். இதனால்தானோ என்னவோ  வைணவத் தென்கலை  சித்தாந்தத்தின் படி  ஆழ்வார்கள் பத்து  பேர் மட்டுமே (ஆண்டாள் , மதுரகவி ஆகியோரிற்கு இடமில்லை) . பின்பு ஆழ்வார்கள் பன்னிரண்டாக அதிகரிக்கப்பட்டாலும், சில வைணவர் ஆண்டாளையும், மதுரகவியினையும் இன்றும் ஏற்றுக்கொள்வதில்லை.  அதே போன்று ஆண்டாள் என்பதே ஒரு கற்பனைப் படைப்பு என ஏற்கனவே ராஜாஜி கூறியபோது (3) எதுவுமே பேசாதிருந்த மதவாதிகள், பா.ராகவன் ஆண்டாளைப் பற்றி ஏற்கனவே கிழக்குப் பதிப்பகத்தின் பெயரில் இதனைவிட கடுமையாக விமர்சித்து நூல் வெளியிட்டபோது மவுனமாகவிருந்த  மத வாதிகள் இப்போது பொங்குவதன் நோக்கம் கவனித்திற்கொள்ளப்படவேண்டும்.

வைரமுத்து எதிர்ப்பு அரசியலின் பின்னனி:

மேலே குறிப்பிடப்பட்ட பா.ராகவனும், ராஜாஜி ஆகியோர் பிரமணராகவிருந்தபடியால் அப்போது மவுனம் காத்த மதவாதிகள் இப்போது தமது மனுதர்மத்தின்படி பிரமணரல்லாத வைரமுத்து மேற்கோள் காட்டியதற்கே அவரது தலையினைக் காவு கேட்கிறார்கள். இன்னும் சில மிதவாதிகளோ(?) சன்னதியில் வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறார்கள்.  வைரமுத்துவோ யாராவது தனது மேற்கோளைத் தவறாக புரிந்து துன்புற்றிருப்பார்களேயானால் அதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். இதற்குப் பின்னும் மதவாதம் அடங்கியபாடில்லை.  இங்குள்ள நகைமுரண் என்னவெனில் இன்று வைரமுத்து இந்து மதத்தினை புண்படுத்திவிட்டதாக கூறும் மதவாதிகள்தான் அன்று தேவடியாள் முறையினை ஆதரித்து அதற்காக வாதிட, மறுபுறத்தே வைரமுத்துவின் கருத்துரிமைக்காகப் போராடும் பகுத்தறிவாளர்களே அன்று தேவடியாள் முறையினை ஒழிக்கப்போராடியிருந்தார்கள். குறிப்பாக சட்சபையில் தேவதாசி முறையினை ஆதரித்த இந்துமதக் காவலரான   சத்தியமூர்த்தி ஐயரினை எதிர்த்து சுப்புலட்சுமி ரெட்டி முன்வைத்த வாதம் (படம் காண்க) மிகவும் பரவலடைந்திருந்தது. தேவதாசி முறை ஒழிப்பில் டாக்டர் முத்துலட்சுமி, ராமாமிர்தம் அம்மையார், தந்தை பெரியார், அமிகம்மிகாயேல் என்ற கிறிஸ்தவ பெண் போதகர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பு அளப்பெரியது.

வைரமுத்து மீதான வன்மத்திற்கு மற்றொரு காரணமும்  உண்டு.  வைரமுத்துவின் இந்தக் கட்டுரையினை ஒரு தொடராகவே வெளியிட்டுவருகிறார். இதற்கு முந்திய ஒரு வள்ளலார் பற்றிய கட்டுரையில் வள்ளலாரின் மறைவு பற்றிய உண்மைத்தன்மையினை வெளிக்கொண்டுவந்திருந்தார்.  அதாவது வள்ளலாரின் பார்ப்பனய எதிர்ப்பு ஆன்மீகத்தில் கலங்கிப்போன மதவாதிகள் இறுதிக்காலத்தில் வள்ளலாரை தனிமைப்படுத்தி அவரினை எரித்துக்கொன்றுவிட்டு, அருட்பெரும் சோதியில் கலந்துவிட்டார் (நந்தனை எரித்துவிட்டு கூறியது போன்று)எனக் கதைகட்டிவிட்டிருந்ததனைக் கேள்விக்கு உட்படுத்தியிருந்தார். அப்போது கூச்சல் போட்டு தாம் அம்பலப்பட்டுப்போவதனை விரும்பாத பார்பனியம் இப்போது ஆண்டாள் விடயத்தினை முன்வைத்து தமது வன்மத்தை வெளிக்காட்டுகிறது. இவையே வைரமுத்து மீதான வன்மத்திற்கு காரணங்களே தவிர, அவர்களிற்கு ஆண்டாள் மீதான பற்றுக் காரணமில்லை.

மதநம்பிக்கைகள் கேள்விக்கோ ஆய்விற்கோ அப்பாற்பட்டவை  என்று கருதுவோமாயின் இன்றைக்கும் பூமி தட்டை என்று நம்பிக்கொண்டும், கணவன் இறந்தவுடன் மனைவியினை எரித்துக்கொண்டும் இருக்கவேண்டியிருந்திருக்கும்.  எனவே வள்ளலார் அருட்சோதியில் எவ்வாறு கலக்கச்செய்யப்பட்டார் என்பது மட்டுமல்லாமல் ஆண்டாள் எவ்வாறு காற்றுடன் கலந்து காணமாற்போனார் எனவும் ஆய்வு செய்யப்படவேண்டும்.  துணைநின்றவை

  1. குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் (தமிழாக்கம்) (page7) -பிரடெரிக் எங்கல்ஸ்
  2. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்(p.137) – க. கைலாசபதி
  3. “வாடாத மலர் ஆண்டாள்” – the tamil hindu.com (1-1-2015)

http://inioru.com/andal-devdhasi-vairamuththu-issue/

(சாவித்திரி கண்ணன்)

தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆண்டாள் குறித்த சர்ச்சையை பக்தர்களுக்கும் – பகுத்தறிவாளர்களுக்குமான சர்ச்சையாக பலரும் புரிந்து கொள்கிறார்கள்.
இது மிகத்தவறான புரிதல்!

இதை பக்தர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்குமான மோதலாக உருவாக்கி வளர்த்தெடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்பதே உண்மை!
உண்மையில் உண்மையான பக்தர்களும், உண்மையான பகுத்தறிவுவாதிகளும் இதில் சம்பந்தப்படவேயில்லை. இந்த சர்ச்சைக்குள் அவர்கள் இல்லை.
இந்த சர்ச்சைக்கும் அவர்களுக்கும் சம்பந்தமேயில்லை. அப்படி சம்பந்தப்படுத்திவிட நினைப்பவர்கள் முற்றிலும் தோல்வியே அடைவார்கள்.Image result for ஆண்டாள்

பக்தனின் மனநிலையும், பகுத்தறிவாளரின் மனநிலையும் முற்றிலும் வெவ்வேறான தளத்தில் இயங்குபவை. பக்தி மனநிலை என்பது உணர்ச்சி பிரவாகமானது, நெகிழ்ச்சியானது, எதையும் பிரித்து பார்க்கத் தெரியாதது, அனைத்தையும் ஒன்றாக பாவிப்பது. தன்னை எதிரியாகக் கருதுபவனைக் கூட தன்னுள் ஒருவனாக பாவிக்கும் பரந்துபட்ட மனநிலையை கொண்டது.

பகுத்தறிவானது நிகழ்காலத்தில் தான் தேடிப்பெற்ற தகவல்களோடு எது ஒன்றையும் அதன் சமூகம் மற்றும் சரித்திரம் சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகுவது! வைரமுத்துவின் கட்டுரை என்பது பகுத்தறிவு சார்ந்தது.

பகுத்தறிவு என்பது உண்மைக்கான தேடலை அடிப்படையாகக் கொண்டது. அது எப்போதும் கட்டமைக்கப்பட்ட மாயைகளோடு சமரசம் கொள்ளாது.
எல்லா மனிதர்களுக்கும் பகுத்தறிவும் உண்டு, பக்தியும் உண்டு. இவை இரண்டும் களந்தவன் தான் எந்த மனிதனும்! ஒருவன் தான் பிறந்து வாழும் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்ததே ஒன்றை பக்தியோடு அணுகுவதும், மற்றொன்றை பகுத்தறிவு கொண்டு அணுகுவதும் அமைகிறது.
அந்தக் கட்டுரையில் வைரமுத்துவின் பகுத்தறிவையும் நான் கண்டேன். பக்தியையும் நான் உணர்ந்தேன். அவரது பக்தி என்பது தமிழமொழிசார்ந்தது. ஆண்டாளின் தமிழ் ஆளுமை வைரமுத்துவை தமிழ்பக்தி பரவசத்தில் ஆழத்தியிருப்பதை கட்டுரை நெடுகிலும் எவராலும் உணரமுடியும். அந்த தமிழ்பக்தி தான் அவரை, ‘ஆண்டாள் ஆன்மீகம் சார்ந்தவர்களுக்குரியவள்’ என்று புறக்கணித்து சொல்லமுடியாமல், நெஞ்சில் வாரியெடுத்து புளகாங்கிதம் அடைய வைக்கிறது. தலையில் தூக்கி வைத்து ஆனந்தக்கூத்தாட வைத்துள்ளது.

பாருங்கள், அவர் தேடிகண்டடைந்த ஆய்வு ஆண்டாளை தேவதாசி குலத்தவள் என்றதை ஆண்டாளுக்கான ஒரு குறையாகவோ, அவமானத்திற்குரியதாகவே வைரமுத்துவிற்கு கருதத்தோன்றவில்லை. ஆண்டாள் யாராக இருந்தாலும் அவளை கொண்டாடத் தயங்காத மனநிலை அவருக்கு பூரணமாக வாய்த்துள்ளதால் தான் அவர் தைரியமாக தன் கட்டுரையிலும், சொற்பொழிவிலும் அதை பதிவு செய்துள்ளார்.

ஆண்டாளின் பக்தர்களுக்கும், உண்மையான ஆன்மீக அன்பர்களுக்கும் வைரமுத்துவின் அதே மனநிலை தான் இருக்கமுடியும். ஓரே வித்தியாசம் வைரமுத்துவினுடையது மொழிசார்ந்த தமிழ் பக்தி! மற்றவர்களுடையதோ தெய்வீக உணர்வு சார்ந்த பக்தி.

பக்தி சார்ந்த மனநிலை என்பது மிகவும் நுட்பமானது. அதேசமயம் திட்பமானது. அது எந்த அறிவுசார்ந்த வாதங்களாலும், நிருபணங்களாலும் தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள முடியாதது. அதை பொருட்படுத்தாதது.

“கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் 
கந்தனே உனை மறவேன்….”

என்று பரவச மனநிலையிலேயே ஒரு பிசிறும் இல்லாமல் பின்தொடர்வது! அது தான் நம்பும் ஒன்றிற்காக தன்னைத்தானே முழுமையாக அர்பணிப்பது. சர்வபரித்தியாகத்திற்கும் சித்த மாயிருப்பது. எந்த மதமோ, குலமோ பாகுபாடு பாராதது!

கல்லோ, கதிரவனோ, மரமோ, விலங்குகளோ, ஊர்வனவோ, பறப்பனவோ… அனைத்திலும் தெய்வத்தைக் காண்பது.

தமிழ்நாட்டில் ‘குலதெய்வம்’ என ஒவ்வொரு குடும்ப மரபிற்குமான தெய்வவழிபாடு உள்ளது. இந்த குலதெய்வம் சாமிகளில் பலரும் வாழ்ந்து மறைந்தவர்களே! நாட்டார் தெய்வங்கள், தமிழ்மண்ணின் சாமிகள் எனப்படும் கண்ணகி, இசக்கியம்மன், நல்லதங்காள், பாப்பாத்தி, கருப்பாயி, சுடலைமாடன், மதுரைவீரன்… இவர்களின் கதை என்ன? இவர்களெல்லாம் ரத்தமும், சதையுமாக பல மனிதர்களையும் போல குற்றங்கள், குறைகளோடு வாழ்ந்து மறைந்தவர்களே…!

ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், பதவிகளில் இருந்தாலும், அந்தஸ்து பெற்றிருந்தாலும், அயல்நாடுகளில் வாழ்ந்தாலும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை மறப்பதில்லை. அந்த சாமிகளின் கதை எவ்வளவு அவலமானதாக, சோகமயமானதாக இருந்தாலும் நம்பிக்கை சிதைவதில்லை. இது தான் பக்தியின் இயல்பு!

காரணம் ஒருவர் யாரை அல்லது எதை வழிபடுகிறார் என்பதை விடவும், அப்படி வழிபடும் போது அவருக்கு கிடைக்கும் உணர்ச்சி நிலை, உருவாகக்கூடிய உன்னதமான மனநிலை தான் அவருக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை, பிடிமானத்தை ஏற்படுத்துகிறது. இந்த நம்பிக்கையும், பிடிமானமும் ஏற்பட்ட பின்பு அவர் நிச்சயம் பகுத்தறிவு கண்கொண்டு தான் வழிபடும் இறையை ஆராய முற்படுவதில்லை. மாறாக அதனோடு ஐக்கியப் படுவதில் தான் பேரார்வம் கொண்டவராக இருப்பார்.

பக்தி என்ற உன்னதமான விஷயத்தை கொண்டு பல்வேறு ஆதாயம் தரும் அணுகுமுறைகள் நடக்கலாம். பணத்திற்கான, செல்வாக்கிற்கான ஒரு கருவியாகவும் பலர் இதை பயன்படுத்தலாம். ஆனால் இதெயெல்லாம் பக்தர்கள் உணராமலில்லை. எனினும் இதனால் மனமாச்சரியங்கள், துவேஷங்கள் ஏற்படாதவண்ணம் சமூகமானது ஒரு இணக்கமான சூழலை பேணவிரும்புகிறது. அவரவர் வினையின் பலனை அவரவர் அனுபவிக்காமல் தப்பமுடியாது. ஆகவே, நம்மை நாம் சரியாக வைத்துகொள்வதற்கான ஒரு கருவியாக பக்தியை, இறைநம்பிக்கையை கைகொள்ளவேண்டும் என்பதே பெரும்பாலான கோடானகோடி பக்தர்களின் மனநிலையாக உள்ளது.Image result for ஆண்டாள்

பகுத்தறிவாளர்கள் பக்தர்களுக்கு எதிரியல்ல. பக்தியின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கைகளையும். சமூக அநீதியையும் எதிர்ப்பவர்களே பகுத்தறிவாளர்கள். பக்தி வசப்பட்ட மனிதனை கடந்த காலங்களில் ஆதிக்க சக்திகள் தவறாக வழிநடத்தியுள்ளன. அதனால் உடன்கட்டை, பால்யவிவாகம், சாதி ஆதிக்கம், சாதிபாகுபாடு, பெண்களுக்கு எதிரான அநீதி, போன்றவை நிகழ்ந்தன. அனைவருக்கும் கல்வி, சமத்துவத்திற்கான போராட்டம் போன்ற விஷயங்களில் பகுத்தறிவாளர்கள் தலையிட்டு இருக்காவிட்டால் இன்று இந்த அளவுக்கு, சமூகம் முன்னேற்றம் கண்டிருக்கவாய்ப்பில்லை.

சகமனிதனான பக்தன் மீது கொண்ட அக்கறையினால் தான் ராஜாராம் மோகன்ராய் தொடங்கி பெரியார் ஈறாக பலர் கடும் எதிர்ப்புகளையும் மீறி மூடநம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கினார். ஆகவே, பகுத்தறிவாளர்களை பகைவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளுக்கும் பக்தர்கள் இறையாகக்கூடாது!
பக்த்தறிவாளர்களின் பார்வையை பக்தர்கள் பரிசிலனைக்கு உரியதாக கருதலாம் அல்லது புறக்கணித்துவிட்டுச் செல்லலாம்.
அப்படி ஒருவர் பரிசிலனைக்கு எடுத்துக் கொளவதன் மூலம் ஏதோ ஒரு அறியாமையிலிருந்தோ. ஆபத்திலிருந்தோ கூட விடுபடும் வாய்ப்பு அமையலாம். ஆனால் இதனால் பகுத்தறிவாளர்கள் அடையக்கூடிய ஆதாயம் ஏதுமில்லை. அவர்களின் பேச்சை புறக்கணிக்கப்பதாலும் பகுத்தறிவாளர்கள் இழப்புதற்கு ஏதுமில்லை.
ஆனால், பகுத்தறிவாளர்களுக்கு எதிராக பக்தர்களை கொம்பு சீவி விடுபவர்களுக்கு நிறைய உள்நோக்கங்கள் உள்ளன.
பக்தி நெஞ்சம் யாரையும் பகையாய் கொள்ளாது என்பதற்கு பாரதிபாடலே உதாரணம்.

தின்னவரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் – நன்நெஞ்சே
அன்னை பாராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவோம் நன்செஞ்சே!

பகுத்தறிவாளர்களுக்கும் பாரதியிடமே விளக்கம் பெறுவோம்.

உண்மையின் பேர் தெய்வமென்போம் – அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக்கண்டோம்.

ஒரு மக்கள் சமுதாயமானது சமச்சீரோடு இயங்குவதற்கு பெருமளவு பக்தர்களும், சிறிதளவு பகுத்தறிவாளர்களும் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள்!


வருந்துகிறேன்: ஆண்டாள் கட்டுரை குறித்து வைரமுத்து

 11th January 2018     

vairamuthu

‘தமிழை ஆண்டாள்’ என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக் கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்.

அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து.

ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை.

ஆண்டாளைப் பற்றி அந்தக் கட்டுரையில் என்னால் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

– வைரமுத்து


தினமணி வருந்துகிறது!

தமிழுக்கு உரமூட்டிய தகுதிசால் முன்னோர்களை வளரும் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற உயரிய எண்ணத்துடன்தான் ‘இலக்கிய முன்னோடிகள்’ குறித்த கட்டுரைகள் ‘தினமணி’யில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டுரைகளின் வாசிப்பும் அதன் தொனியும் எத்தகையவை என்பதை இளம் தலைமுறையினர் அறிவதற்காகவே, முதல்நாள் கவிஞர் வைரமுத்து வாசிக்க அடுத்த நாள் ‘தினமணி’யில் கட்டுரை வெளியாகிறது.

கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த இராஜபாளையத்தில் அரங்கேற்றியதன் காரணமே, ஆண்டாளின் பெருமையை தூக்கிப் பிடிக்க வேண்டும், அவரது தமிழ் ஆளுமை உரக்க ஒலிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

கவிஞர் வைரமுத்து தனது உரையின் தொடக்கத்திலேயே ஆண்டாள் அவதரித்த மண்ணைத் தொட்டு வணங்குவதாகக் குறிப்பிட்டே தொடங்கினார். ஆண்டாள் குறித்து உயர்வானவற்றைப் பதிவு செய்த அவரது கட்டுரையில் அமெரிக்க ஆய்வையும் சுட்டிக்காட்டியது தவறு என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. அந்தக் கருத்தை தமிழர்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் தனது நோக்கமே தவிர, அந்தப் பதிவின் மூலம் யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அந்தப் பதிவு பலருடைய உணர்வுகளை புண்படுத்தியதற்காக வருத்தமும் தெரிவித்திருக்கிறார்.

‘தினமணி’ நாளிதழைப் பொறுத்தவரை தமிழையும் ஆன்மிகத்தையும் ஒருசேர தூக்கிப் பிடிக்கும் நாளிதழ். இந்தக் கருத்து “தினமணி’யில் வந்திருக்க வேண்டாம் என்கிற பலருடைய ஆதங்கம் புரிகிறது. தவறுதான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆண்டாளை தமிழ் தெய்வமாக, பக்தி இலக்கியத்தின் உச்சமாக, வணக்கத்திற்குரிய அன்னையாக ‘தினமணி’யும் கருதுகிறது.

கவிஞர் வைரமுத்து இது குறித்து விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்துவிட்டாலும்கூட, ‘தினமணி’யின் மூலம் அந்தக் கருத்து பதிவாகி இருக்கிறது என்பதால் வாசகர்களுக்கும் ஆன்மிக அன்பர்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதிலோ, மன்னிப்புக் கோருவதிலோ எங்களுக்கு சற்றும் தயக்கம் இல்லை. ‘தினமணி’ வருந்துகிறது!

– ஆசிரியர்

“ஆண்டாள் தேவதாசியாக இருந்திருந்தால் அது அந்த காலகட்டத்தில் மானக்கேடு அல்ல, அரிய கெளரவம்”.

Published by Vijithaa on 2018-01-12

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து தனது உரையில் ஆண்டாளை தவறாக விமர்சித்ததாக பா.ஜ.கவினர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த சிலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர மாலிக் என்ற ஆய்வாளர் ஆண்டாள் என்ற பாத்திரம் “திருவரங்கத்திலேயே வாழ்ந்து  மடிந்த ஒரு தேவதாசி” என்று குறிப்பிட்டுள்ளதை தனது உரையில் கவிஞர் வைரமுத்து சுட்டிக் காட்டுகிறார்.

இந்த கருத்துக்கு தான் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆவேசமாக பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இந்துமத ஆர்வலர்கள் வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது கருத்தை பிரபல நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் ஆண்டாளை யாரும் அரசியலாக்க வேண்டாம். அது ஆண்டாளுக்கு செய்யும் அநீதி என குறிப்பிட்டுள்ளார்.

 

“பண்டைய இந்து மதம் சார்ந்த நாகரிகங்களில் தேவதாசி என்பவள் கடவுளுக்கு மட்டுமே கடமைப்பட்டவள். ஆணுக்கு அடங்கி அடிபணிய தேவையில்லாத மிக உன்னத சமூக அந்தஸ்தையும் மரியாதையும் பெற்றவள். பண்டைய கிரேக்கத்திலும் ‘vestal virgins ” உண்டு.

ஆண்டாள் தேவதாசியாக இருந்திருந்தால் அது அந்த காலகட்டத்தில் மானக்கேடு அல்ல அரிய கெளரவம்.

கோவிலுக்கு மட்டுமே தொண்டாற்றிய பல கலைஞர்கள் காலப்போக்கில் நலிந்துவிட்டார்கள். தேவதாசி குலம் தெருவுக்கு வந்துவிட்டது.

எனினும் தேவர் அடியாள் என்றால் விபச்சாரி என்ற கருத்து வேரூன்றியது 1950க்களுக்கு அப்பால்தான். தேவர் அடியார் என்றால் கெட்ட வார்த்தை என்று பேசுபவருக்கு இந்து சமய சமூக வரலாறு சரியாக தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இதை சொன்னால் உடனே எனக்கும் தேவதாசி, விபச்சாரி போன்ற பட்டங்கள் சூட்டுவார்கள். நீ உத்தமியா? என்று ஏசுவார்கள். என் ஜாதியை அலசுவார்கள்.

ஏன்? என்றால், இங்கு பெண் பேசுவதே பெருங்குற்றம். உண்மையை ஆராய்ந்து சொல்வது ஊர்மேய்வதற்கு ஒப்பு. மெய்ப்பொருள் காண்பது ஒழுக்க குறைவு. தமிழை நேசிப்பதும் கலையை விரும்புவதும் களவாணித்தனம். சினிமாக்காரி மதத்தையோ தமிழையோ பற்றி வாயை திறப்பது தேசத்துரோகம்.

21ஆம் நூற்றாண்டில் இன்னும் நம்மை இறுக்கி பிடித்திருக்கும் பெண்ணடிமை, ஜாதி தளைகளை ஒரு குழந்தை அனாயாசமாக வென்றதே அன்று !! அந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வைணவர்களுக்கு மட்டும் தாயார் அல்ல, வைரகவிஞர்களுக்கும் தாயார்தான். ஆண்டாளை யாரும் அரசியலாக்க வேண்டாம். அது ஆண்டாளுக்கு செய்யும் அநீதி.


வைரமுத்து,ஆண்டாள்


 andal

வைரமுத்து ஆண்டாளின் சாதி குறித்துச் சொல்லியிருந்ததை ஒட்டிய விவாதம் இணையச்சூழலிலும் அரசியல்களத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்து முழுமையான மன்னிப்பு கோரியிருப்பதனால் அது இப்போது ஓய்ந்துவிட்டிருக்கும். இருப்பினும் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. வைரமுத்து சார்ந்த ஒரு விவாதத்தில் இருப்பதனால் புறக்கணித்துச் செல்வது எவ்வகையிலும் முறையாகாது.

ஆண்டாள் குறித்து மிகமிகக்குறைவான சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெரியாழ்வார் பாடல்களில் இருக்கும் சிலவரிகள். அவை அவர் பெரியாழ்வாரின் மகள் என்றும் பெருமாளுக்குத் தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்தார் என்றும் மட்டுமே காட்டுகின்றன. அவர் குறித்த புராணம் அவ்வரிகளிலிருந்து உருவாகி வந்திருக்கலாம்.

இவற்றிலிருந்து ஆண்டாளின் சாதி குறித்து எதையும் நாம் ஊகிக்க முடியாது. ஆகவே அதுகுறித்த ஊகங்கள் எல்லாமே தனிநபரின் சமூகப்பார்வை சார்ந்தவை மட்டுமே. மேலைநாட்டு அறிஞர்கள் சிலரும் அவர்களை ஒட்டி எழுதும்  டி.செல்வராஜ், சோலை சுந்தரப்பெருமாள் போன்ற சிலரும் பக்தி இயக்கக் காலகட்டத்தை சமூக மோதல்களின் காலகட்டமாக காண விழைகிறார்கள். ஆகவே அனைத்து இடங்களிலும் மேல்கீழ்சாதி, வர்க்கப்பிரிவினை சார்ந்த மோதல்களைக் கண்டடைகிறார்கள். அதன் விளைவாகவே எளிதாக ஆண்டாள் தேவதாசியாக இருக்கலாம் என்பதுபோன்ற ஊகங்களைச் சென்றடைகிறார்கள்

நான் பக்தி காலகட்டத்தை மாபெரும் ஒருங்கிணைப்பின் காலகட்டம் என நினைப்பவன். இந்துமதம் உருவாகத் தொடங்கிய காலம் முதலே நிகழ்ந்துவரும் தொகுப்பு – ஒருங்கிணைப்பு முறைமை அதன் உச்சத்தை அடைந்தது பக்தி இயக்கத்தின்போதுதான். ஆகவே முரண்பாட்டை கண்டுபிடிக்கும் நோக்கை நிராகரிக்கிறேன். ஆனால் அதைச் சொல்பவர்களின் தரப்பைப் புரிந்துகொண்டு, அதற்கும் கருத்துவிவாதத்தில் ஓர் இடமுண்டு என எடுத்துக்கொண்டு மறுக்கிறேன்.

இரண்டு வினாக்கள் உள்ளன. ஒன்று, ஆண்டாள் பாடல்களிலுள்ள பாலியல்கூறுகளும், ஆண்டாளின் கதையும் ஒருவகை பாலியல்சுதந்திரத்திற்கான குரல்களாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? ஆண்டாளை அக்கால சாதிய,ஆணாதிக்க அமைப்புக்கு எதிரானவராக கட்டமைக்கமுடியுமா?

இல்லை என்பதே என் புரிதல். ஆண்டாளின் கதை என்பது சங்ககாலம் முதல் தமிழ்மண்ணில் இருந்துவந்த நப்பின்னை என்னும் தொன்மக் கதாபாத்திரத்தின் இன்னொருவடிவம் மட்டுமே. தொன்மங்கள் எப்போதும் ஒரு தொடர்ச்சியிலேயே உள்ளன. சிறிய மாறுதல்களுடன் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கதைமாந்தர்களாக வெளிப்படுகின்றன. ஆண்டாளின் கதையை மீராபாய் வரை சிறிய மாறுதல்களுடன் காணமுடியும்.

ஆகவேதான் ராஜாஜி ஆண்டாள் என்னும் கதாபாத்திரமே பெரியாழ்வாரின் புனைபெயராக இருக்கக்கூடும் என்று எண்ணினார். ஆனால் பெரியாழ்வார் கவிதைகளை விட உணர்வுநிலை, மொழியாட்சி இரண்டிலும் மிக உச்சத்தில் நிற்பவை ஆண்டாளின் கவிதைகள் என்பதனால் அது ஏற்கத்தக்கது அல்ல

ஆண்டாளின் கவிதைகளிலுள்ள பாலியல்கூறுகளை மீறல் என்று சொல்லமுடியுமா? தமிழிலும் வடமொழியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைசார்ந்த அழகியல்தான் ஆண்டாளிடம் வெளிப்படுகிறது. தமிழின் நீண்ட அகத்துறைப்பாடல்களின் மரபில் ஆண்டாளை மிகச்சரியாகப் பொருத்தலாம். ஆண்டாளுடையது எவ்வகையிலும் மீறலோ மிகையோ அல்ல. முற்றிலும் மரபுசார்ந்த மனநிலையே ஆகும்.

கவிதையில் கவிஞர் வெளிப்படுத்தும் தன்னிலை என்பது அக்கவிதைக்குள் திகழும் ஒரு உருவகம் மட்டுமே. மரபான சொற்களில் சொல்லப்போனால் ஒரு ஃபாவம். அதை அவருடைய நேரடி உணர்வுவெளிப்பாடு என்று கொள்வதைப்போல கவிதைநிராகரிப்பு வேறில்லை. இது இன்றைய நவீனக்கவிதைக்கும் பொருந்தும். கவிதை என்பது அக்கவிஞரின் உச்சகட்ட உணர்வுநிலை ஒன்றை மட்டுமே காட்டுகிறது, அவருடைய ஆளுமையை அல்ல.ஐம்பதாண்டுகளாக நவீனக்கவிதைக்குள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கருத்து இது.

அதேசமயம் ஆண்டாள் உட்பட பெண்பால் புலவர்கள் அனைவரையும் தமிழ்ச்சூழலில் பெண்களின் இடம்சார்ந்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதும் மதிப்பிடுவதும் எல்லாம் இயல்வதே. பெண்ணியல்பு எப்படி அவற்றில் வெளிப்படுகிறது என விமர்சகர்கள் கூறலாம். புதிய அவதானிப்புகள் எழலாம்.நவீன இலக்கிய ஆய்வின் வழிமுறை அது. அந்தக்கருத்துக்கள் அக்கவிஞர்களின் கவிதைகள் இயங்கும் ஆழ்நிலையை உள்வாங்கி செய்யப்பட்டவை என்றால் இலக்கிய உலகில் ஏற்கப்படும். வெறும் சமூகவியல் அரசியல் ஊகங்கள் என்றால் உரிய எள்ளலுடன் கடந்துசெல்லப்படும்.

பக்திக்குள் பல்வேறு வகையில் வெளிப்படும் அகத்துறை உணர்வுநிலைகளை காமம் என வகைப்படுத்திப் புரிந்துகொள்வது போல அபத்தமான  வாசிப்பு பிறிதில்லை. இது ஆண்டாளுக்கு மட்டும் அல்ல நம்மாழ்வாருக்கும் ஜெயதேவருக்கும் பொருந்துவதே. செயின்ட் ஜானின் இறைக்காதல்நிலை சார்ந்த பாடல்களுக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபின் மனோன்மணிப் பாடல்களுக்கும் பொருந்துவதே

கவிதைக்குரிய ஓர் அழகியல்மரபு, ஒரு தரிசனநிலை இது. இதை உலகியலுக்கு அப்பால் செல்ல முடியாத மேலைநாட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவர்களிடம் அதைச் சொல்வதே நம் கவிமரபின் மனநிலையாக இருக்கவேண்டும். அவர்கள் சொன்னவற்றிலிருந்து மேலும் கீழே சென்று பார்ப்பது அல்ல. டி.செல்வராஜும் வைரமுத்துவும் கொண்டுள்ள மனநிலை என்பது அடிப்படையில் இந்த அன்றாடக் கீழ்மைநோக்கு கொண்டுள்ளது. அது ஆண்டாளின் கவிதைகளுக்கு மட்டுமல்ல அத்தகைய மனநிலையில் எழுதப்படும் அத்தனை கவிதைகளுக்கும் இழுக்கு சேர்ப்பதுதான்

ஆனால், இது சமகாலத்தின் ஒரு போக்கு. கவிதையை, வரலாற்றை எளிய உலகியல்சூத்திரங்களால், அன்றாட அரசியலால், மேலோட்டமான கொள்கைகளால் வகுத்துக்கொள்ள முயல்வது. இவர்களின் முன் கவிதை ஒருவகை சிறுமைகொள்கிறது. இங்கே கவிதையை அறிந்தவர்கள் எல்லா நிலையிலும் அதற்கு எதிராகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். வைரமுத்துவுக்கு எதிரான இலக்கியவாதிகளின் ஒவ்வாமை என்பது இந்த சிறுபோக்கிற்கு எதிரானதுதான். வைரமுத்துவை ஞானபீடத்திற்குப் பரிந்துரை கடிதம் அளித்த தமிழகத்துப் பாரதிய ஜனதாக் கட்சித்தலைவர்களுக்கு இந்த எதிர்ப்பைப் புரிந்துகொள்ள இயலாது.

கடைசியாக, ஆண்டாளை ஏன் தேவதாசி என ஊகிக்கக் கூடாது? அவ்வாறு ஓர் ஊகம் ஓர் அறிஞருக்கு இருக்கும் என்றால் அது ஒரு தரப்பு. மறுக்கப்பட வேண்டியது. தேவதாசி என்பது அன்றைய சமூகப்படிநிலையில் தாழ்ந்த ஒன்று அல்ல. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மணந்து பட்டத்தரசியாக்கிய பெண்மணி கூட தேவதாசி மரபைச் சேர்ந்தவர் என ஆய்வாளர் சொல்வதுண்டு. அது எவ்வகையிலும் ஆண்டாளை இழிவுசெய்வதல்ல. மெய்யாகவே தேவதாசி என்றாலும் அவர் கவிதைக்கு அணுவிடையும் குறைவு வருவதுமில்லை. தேவதேவன் சொல்வதுபோல உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என்பதற்காக உலகியலைக்கொண்டு கவிதையை மதிப்பிடுவது பெரும்பிழை

ஆனால் அவ்வாறு ஆண்டாளின் ஆளுமையை, வாழ்க்கையை வகுத்துக்கொள்வது ஆண்டாளின் கவிதையின் உள்ளடக்கத்தையும் உணர்வுநிலைகளையும் கண்டிப்பாக இழிவுசெய்வதே. ஆண்டாளின் கவிதைகளில் உள்ள காதல்பித்து நிலையை தேவதாசியின் வாழ்க்கைப்பின்புலத்தில் வைத்துப்பார்ப்பது அக்கவிதையை கீழ்மைப்படுத்திப் புரிந்துகொள்வதேயாகும். தேவதாசி வாழ்க்கையின் இயல்பான அம்சமாக அந்தக் காதல்வரிகளை கொண்டாலும் சரி, அவ்வாழ்க்கையை மீறும்பொருட்டு எழுதப்பட்டவையாகக் கொண்டாலும் சரி

ஆண்டாளின் மிகச்சிறந்த வாசகரான ஜெயகாந்தன் ஓர் உரையாடலில் கூறினார், ஆண்டாள் பாடும் அந்நிலை உடலில் அமைதல் அல்ல, உடலை உதறிச்செல்லுதல் என. ‘உடல்துறப்பே மெய்மைக்கான வழி’ என் அவர் கூறியதை நினைவுகூர்கிறேன். உடலெனும் காமத்தை அல்ல, உடலை எரித்து மெய்ப்பொருளாகிய எல்லையின்மையைத் தழுவும் விழைவையே அக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அதிலுள்ள மீப்பெரும் தாபம் என்பது எந்த  மெய்யுசாவியும் கொள்ளும் பரிதவிப்புதான். இங்கு இவ்வாறு அமைந்தபடி எங்கும் எவ்விதமும் உள்ள முழுமையை அடைவதற்கான எழுகையும் ஏக்கமும்..  காதல்பித்து என்பது அதன் மொழிபுமுறை. அது மிகமிகத் தொன்மையான ஒரு ஃபாவநிலையும்கூட  .

வைரமுத்துவின் உரையிலுள்ள குறைபாடு மெய்ப்பொருள்தேடும் பெருங்கவிதைக்கு முன் சின்னஞ்சிறு உள்ளத்துடன் நின்றதே. இதே உளநிலையுடன் அவர் பிரமிளையோ தேவதேவனையோ அணுகியிருந்தாலும் அது இதேபோல கண்டிக்கப்படவேண்டிய பெரும்பிழையே. ‘மன்னிக்கவும் வைரமுத்து, உங்களுக்குரிய இடமல்ல இது’ என்பதே அவருக்குரிய பதில்.

ஆனால், இதையொட்டி வைரமுத்து மீது பொழியப்படும் வசைகளும் அவர் எதிர்கொள்ளும் மிரட்டல்களும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. இங்குள்ள மதவாதிகள் சிலர் அவர்கள் எப்படி மதஇலக்கியத்தை அணுகுகிறார்களோ அப்படித்தான் அத்தனைபேரும் அணுகவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் உணர்வுகள் புண்படுகின்றன என்றும் கொள்ளும் ஆவேசமும் அதன்பொருட்டு வெளிப்படுத்தும் ஆபாசமான வசைகளும் மிகமிக ஆபத்தானவை. எதிர்காலத்தில் இங்கே சுதந்திர சிந்தனையே சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்குபவை.

ஏனென்றால் இங்குள்ள இலக்கியங்களில் பெரும்பகுதி மதம்சார்ந்த இலக்கியமே. இங்குள்ள வரலாறு பெரும்பகுதி மதம்சார்ந்ததே. மதத்தை இவர்கள் வரையறைசெய்துள்ளபடியே அனைவரும் அணுகவேண்டுமென இவர்கள் சொல்வார்கள் என்றால் அதன்பின் இங்கே சிந்தனையே இருக்கமுடியாது. இவர்கள் இங்கே கொண்டுவர எண்ணுவது தாலிபானிய அரசியலை என்றால் அதை எதிர்த்து கடந்தே ஆகவேண்டும்.

ஆண்டாள் உட்பட இந்துமதநூல்கள் இலக்கியப் படைப்புகளும்கூடத்தான். ஆண்டாள் தமிழிலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று.மதத்தின் திருவுரு மட்டும் அல்ல.அழகியல்சார்ந்து இலக்கணம் சார்ந்து, வாழ்க்கைநோக்கு சார்ந்து அவருடைய பாடல்கள் இலக்கியச்சுவைஞர்களாலும் அறிஞர்களாலும் பலகோணங்களில் ஆராயப்படும். நாளை உருவாகிவரும் பலவகையான இலக்கியக்கோட்பாடுகள் அவர் படைப்புகள் மேல் போடப்பட்டு ஆராயப்படும். வெவ்வேறு கணிப்புகளும் ஊகங்களும் முன்வைக்கப்படும். வெவ்வேறு உலகப்படைப்புகளுடன் ஒப்பிடப்படும். கம்பராமாயணம் போன்ற அத்தனை நூல்களும் அவ்வாறுதான் வாசிக்கப்பட்டன, வாசிக்கவும்படும்.

மதநம்பிக்கையாளர்கள் அவற்றை மதநோக்கில் வாசிக்கலாம். ஓர் அறிவுத்தரப்பு என்னும் நிலையில் நின்று பிற தரப்புகளை முழுமூச்சாக எதிர்க்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் பிறர் அவ்வாறு வாசிப்பது தங்கள் மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என தெருவிலிறங்கி வசைபாடுவார்கள் என்றால் அவர்கள் வாழ்வது நாகரீக உலகில், ஜனநாயகத்தில் என்று அவர்களுக்கு நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. இந்தியாவில் வேறெங்குமில்லாத அளவுக்கு தமிழகத்தில் மரபும்,செவ்விலக்கியங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன. எந்த ஆய்வுநோக்கும் இல்லாமல் வெறும் காழ்ப்பைக்கொட்டும் அணுகுமுறைகள் இங்கே ஓங்கி ஒலித்தன, ஒலிக்கின்றன. இவர்கள் நாவில் இந்துமதத்தின் பெருங்கவிஞர்களும் ஞானிகளும் இழிவுபடுத்தப்படாத நாளே இல்லை. அதற்கு எதிர்வினையாகவே இன்று இந்த மறுபக்க மூர்க்கம் உருவாகி வந்துள்ளது.

இன்று ஆண்டாள் குறித்த ஒரு போகிறபோக்கிலான குறிப்பு வரும்போது ஓரளவு சமநிலை கொண்டவர்கள்கூட ஏன் பதைப்படைகிறார்கள் என்றால் இந்த ஒற்றைவரி தற்குறிகளான தமிழ் அரசியல்பேச்சாளர்களின் வாயில் எப்படி முடைநாற்றமெடுத்து வெளிவரும் என்பதற்கான அனுபவப்புரிதல் அவர்களுக்கு உள்ளது என்பதனால்தான். இப்போதே இணையத்தில் நாம் காண்பது அந்தக் கீழ்மையைத்தான். ஆனால் அதற்கு எதிர்வினையாக எழும் குரல்களில் உள்ள கீழ்மை மேலும் குமட்டல் ஏற்படுத்துகிறது. இக்குரல் இந்துக்களுடையதல்ல, இந்து மெய்மரபின் தரப்பும் அல்ல. முதல்தரப்பைப்போலவே இதுவும் தெருமுனை அரசியலின் ஓசை மட்டுமே.

இருதரப்பிலிருந்தும் எழும் வெறுப்புக்கூச்சல்களுக்கு நடுவே நின்றுகொண்டு பேசவேண்டியிருக்கிறது. ஒருபக்கம் கருத்துரிமையை ஒடுக்கும் மதம்சார்ந்த இறுக்கத்திற்கு எதிராக. கூடவே மரபையும் அறிவியக்கத்தையும் சிறுமைசெய்யும் அரசியல்கீழ்மைக்கு எதிராக. இன்றுமுதன்மையாகக் கண்டிக்கவேண்டியது வைரமுத்துவுக்கு எதிராகச் சொல்லப்படும் கீழ்த்தரமான வசைகளையே. (ஜெயமோகன்)

http://www.jeyamohan.in/105607#.WnJNB66nGM8

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

தமிழில் குரான்


குரான் தமிழில்
https://truthaboutislam.net/read-quran-online-for-free-tamil/?fbclid=IwAR0xxfBCqZZsi_RUbRmNWmmeXidyuUAZ7uOFpBg1ObzI_7Y2BALn0GzLRlg#!#/en.ahmedali+quran-wordbyword+ta.tamil/1

புதன், 23 டிசம்பர், 2020

சிவ_மகாபுராணம்_கூறும்_முருகனின்_பிறப்பு


பார்வதி கல்யாண வைபவத்தைக் கேட்டுப் பரவசப்பட்டிருந்த நைமிசாரண்யவாசிகள் சூத புராணிகரை நோக்கி, மகா ஞானியே! மாபெரும் புண்ணிய சீலரே! சிவபபருமான் பார்வதி தேவியாரை மணஞ்செய்த பிறகு புத்திரனைப் பெற்று, தாராகாசுரனை எப்படி வதைத்தார் என்பதையும் கேட்க வேண்டும் என்று நாங்கள் மிகவும் ஆவல் கொண்டிருப்பதால் அதையும் விபரமாகக் கூறியருள வேண்டும் என்று கேட்டார்கள். சூதமாமுனிவர் சொல்லத் தொடங்கினார்.

நைமிசாரணிய வாசிகளே உமையாளான பார்வதிதேவியாரை திருமணஞ் செய்துகொண்ட பிறகு பார்வதி தேவியோடு  அந்தப்புரமடைந்து  வெகுகாலம் வரைக்கூடி மகிழ்ந்து லீலாவினோதங்கள் புரிந்து கொண்டேயிருந்தார்கள். தாரகாசுரனால் மிகவும் தொல்லைகளுக்குப்  பாத்திரமாகித் தாரகாசுரவதத்திற்கு  எப்போது சிவகுமாரன் உற்பத்தியாவானோ என்று ஏங்கி கிடந்த தேவர்களோ தங்கள் வேதனைகளுக்கு விமோசனம் தேடவேண்டி துடிதுடித்தார்கள். ஆனால் அந்தப்பரத்திலுள்ள தேவியோடு கூடி மகிழ்ந்து கொண்டேயிருக்கும் சிவபெருமானைக் கண்டு விண்ணப்பஞ் செய்ய  சந்தர்ப்பம் வாய்க்காததைக் கருதி பெருந் துயரத்தில்ந்தார்கள். அநேக வருஷங்கள் கழித்து தங்களைத் தாங்களே நிந்தனை செய்து கொண்டு தாரகாசுரனின் கொடுமைக்கு எப்படியும் ஒரு முடிவு கண்டாக வேண்டுமென்று தீவிர எண்ணங் கொண்டு, அக்கினி பகவானை அணுகி அக்கினி தேவனே! சிவபெருமான் பார்வதி தேவியாரை அணுகி தாரகனை சம்ஹாரம் செய்ய இன்னும் புத்திரோற்பத்தி செய்யவில்லையே  நீர் எங்களிலும் சிறந்தவராதலால் எங்கள் கவலையைச் சிவபெருமானிடம் சொல்லி தாரகனை வதைக்க வழி செய்யும்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். தேவர்கள் வேண்டுகோளைத் தாமதப்படுத்த மனமில்லாத அக்கினித்தேவன் உடனே ஒரு புறா வடிவமெடுத்து சிவபெருமான் லீலா விநோதத்தில்  மூழ்கியிருந்த அந்தப்புறத்தினுள் புகுந்து சென்றான்! அப்போது சர்வாந்தாமியான சங்கரர் அந்தப் புறா வடிவத்தை கண்டு, யாரடா அவன் கபோத வடிவோடு வந்திருப்பவன்? என் வீரியத்தை இவனே தாங்கட்டும் என்று கூறி வீரியத்தை விட புறா வடிவிலிருந்த அக்கினி தேவன் அவ் வீரியத்தை வாயில் கவ்விக்கொண்டு பறந்து சென்றான்.ஆனால் சிவனாரின் வீரிய வெப்பத்தைத் தொடர்ந்து தாங்கிப் பறக்க வலுவில்லாமல் போகவே கங்கா நதியில்  விட்டு விட்டான். கங்காநதியும் அதைத் தாங்க  முடியாமல் அதைத் தருப்பைப் புல்லில் விட்டது. அந்த தருப்பைப் புல்லில் விடப்பட்ட வீரியத்திலிருந்து அதிசுந்தரத் தோற்றமாய் கண்டதும் சகல சுகங்களையும் கொடுக்கத்தக்க வன்மையும்  உடையவராய்க்  குமார ரூபத்தில் திருமுருகன் தோன்றினார். அப்தபாது நீராட வந்த ஆறு இராஜ கன்னியர்கள் அக்குழந்தையைக் கண்டு என் குழந்தை இது! என் குழந்தை இது என்று ஒவ்வொருவரும் கூறி,அக்குழந்தைக்குப் பால் கொடுத்தார்கள். அப்போது  குமாரக் கடவுளான முருகப்பபருமான் ஆறுமுகத்தோடு ஆறு இராஜ கன்னியரிடமும் பால்பருகினார்.  இதனால்தான்,முருகக் கடவுளுக்கு  ஷாண்மாதுரன்(அறுவர் புதல்வன்) என்றும் ஆறுமுகன் என்றும் பெயர் வந்தது. 

-சிவமகா புராணம்-ஞான சம்ஹிதை

குறிப்பு: நைமிசாரண்ணியம் என்பது ஒரு வனத்தின் பெயர்.பிண்ணூட்டத்தில் நூலின் பகுதி இணைக்கப்பட்டுள்ளது.
- ஆறாம் அறிவு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 23.12.20


சுப்பிரமணியனது பிறப்பு


சனி, 12 டிசம்பர், 2020

துரோணாச்சாரி பிறப்பு கதை

மகாபாரதத்தில் பெண்களைப் பற்றி இழிவுபடுத்தியிருக்கும் சுலோகங்களைப் பற்றி எழுதிய பதிவிற்கு Durairaj Kurusamy எனும் நண்பர்,
“புராணத்தில் உள்ளது பெரும்பாலும்  எதுவும் இப்பொழுது நடைமுறையில் இல்லை.இதை சொல்வதால் என்ன பயன் உங்களுக்கு?” என கேள்வி எழுப்பியிருந்தார். 

இதே மாதிரியான கேள்விகளை மற்ற சில நண்பர்களும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அவர்களுக்கான பதில்தான் இப் பதிவு. 

மகாபாரதம்  துரோணாச்சாராரின் பிறப்பு குறித்து Times of India வின் தமிழ் பதிப்பான “சமயம்” இணைய தளத்தில் (www.tamil.samayam.com) 16th April 2020 வெளியான கதையை அப்படியே கீழே தருகிறேன். 

“துரோணாச்சாரியரின் பிறப்பு 
மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருவான துரோணாச்சாரியரின் பிறப்பானது மிகவும் சுவாரசியம் நிறைந்தது. சொல்லப்போனால் உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை துரோணாச்சாரியர் என்றால் அது மிகையல்ல. முனிவர் பரத்வாஜருக்கும் கிருதாஜி என்ற அப்சரா என்பவருக்கும் மகனாய் பிறந்தவர் தான் துரோணர். முனிவர் பரத்வாஜர் ஒரு மாலை பொழுதில் வழிபாடு செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். எப்போதும் கங்கை நதியில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்த அவர் அன்று குளிக்கும் போது ஒரு அழகான பெண் அந்த கங்கை நதியில் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மயங்கி நின்றார்.

முதல் சோதனைக் குழாய் குழந்தை?

முனிவர் பரத்வாஜரைப் பார்த்ததும் அந்த அழகான அப்சரா கிருதாஜி ஒரு இடுப்பு துணியை உடுத்திக் கொண்டு கங்கை ஆற்றிலிருந்து வெளியே வந்தாள்‌. முனிவர் பரத்வாஜர் அந்த இந்திரனும் சொக்கிப் போகும் பேரழகில் மயங்கி நின்றார். அந்த ஈர உடையின் அழகில் மயங்கிய அவருக்குத் தானாகவே விந்து வெளியேறியது. அப்போது அந்த விந்தணுவை ஒரு களிமண் பானையில் சேகரித்துக் கொண்டு அவருடைய ஆசிரமத்தில் ஒரு இருண்ட அறையில் சேமித்து வைத்தார். அந்த பானையில் இருந்து தான் துரோணர் பிறந்தார். 'துரோணம்' என்றால் பானை என்று பொருள், அதிலிருந்து 'துரோணர்' என்பது பானையிலிருந்து பிறந்தவர் என்ற பொருளில் வழங்கப்படுகிறார்.”

இந்தியாவின் முன்னனி நாளிதழான “The Times of India”,துளியும் டெஸ்ட் டியூப் மருத்துவத்திற்கு சம்பந்த மில்லாத துரோணரின் பிறப்பை உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை என எழுதி நம்பவைத்து ஏமாற்றுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்?! 

தவிர துரோணர் அப்பாவி ஏகலைவனின் கட்டை விரலை காணிக்கையாக வாங்கி பெருமை சேர்த்தவர். மானசீகமாக குருவாக ஏற்றுக் கொண்ட சீடனுக்கு துரோகம் இழைத்து வஞ்சகமாக சீடனையே பலியாக்கியவர். இவரது பெயரில் ”துரோணாச் சாரியார் பட்டம்” என சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளருக்கு மத்திய அரசால் வழங்கப் படுகிறது.இது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?! சத்ரியர்களுக்கும் பிராம்மணர்களுக்கு மட்டுமே பயிற்சியும் மற்றவர்களை பறக்கணித்த துரோணரின்  பெயரால் பட்டம் வழங்கப்படுதிலிருந்தே வர்ணாசிரமம் எல்லாத் தளங்களிலும் ஆட்சி செய்வதை எளிதில் அறிந்து கொள்ள இயலும். 

இப்படி ஒரு கதையல்ல இரண்டு அல்ல, ஆயிரக் கணக்கில் புராணங்களில் கதைகள் உண்டு. இந்தக் கதைகளில் அறிவியல் உள்ளது ஆன்மீகம் உள்ளது என பொய்களை அள்ளி மக்களுக்கு பரப்பும் தீய சக்திகளின் வேலைகள் இருக்கும் வரை, இந்த ஏமாற்றுக் கதைகளின் உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதும் அவசியமாகிறது. இதுவே மக்களை விழிப்புணர்வுப் பாதைக்கு இட்டுச் செல்லும். 

Youtube சேனலில் ஒரு பெண், துரோணரின் கதையை விலாவாரியாக எடுத்துரைப்பதைக் கவனித்தேன்,ஆனால் அவரும் ஏகலைவனுக்கு துரோணர் செய்த துரோகத்தைக் கூறவில்லை.ஆனால் துரோணரின் பிறப்பினை டெஸ்ட் டியுப் பேபி என சொல்லத் தவறவில்லை. Youtube ன் link யை கீழே தந்துள்ளேன். 
அவர் கூறிய கதையின் ஆங்கில வடிவம் கீழே: 

Unheard Mythological Stories 
Rishi Bharadwaja is the father of Dronacharya and mother is an Apasara name Krithaji.
One evening Rishi Bharadwaja was getting ready to do his evening prayers. He went to the Ganga River to take his usual bath but was amazed to find a beautiful woman bathing at his usual spot in the river.
On seeing Rishi Bharadwaja, the beautiful Apsara Krithaji got out of the Ganga River wearing a single loin cloth. Rishi Bharadwaja was moved by the heavenly beauty of the Apsara.
Suddenly the most unthinkable happened - Apsara Krithaji slipped on the banks of the river and the loin cloth slipped from her body.
Rishi Bharadwaja was overpowered by the moment and he involuntarily emitted his semen. The Rishi collected this sperm in aclay pot and stored it in a dark place in his Ashram.
Drona was born in this pot.
'Dronam' means pot and 'Dronar' is one who was born from the pot.
It would not be wrong to say that Dronacharya is the first test tube baby in the world.
Dronacharya spent his youth in poverty, but studied religion and military arts together with the prince of Panchal, Drupad. Drupad and Dronacharya became close friends and Drupad, in his childish playfulness, promised to give Dronacharya half his kingdom upon ascending the throne of Panchal. For the sake of his wife and son, Dronacharya desired freedom from poverty. Remembering the promise given by Drupad, he decided to approach him to ask for help. However, drunk with power, King Drupad refused to even recognize Dronacharya and humiliated him by calling him an inferior person.
On being insulted and neglected by his fellow brother (Gurubhai- bond of studying together in an ashram) King Drupad, he went to Suryadesh and was appointed as a royal guru of the Kauravas and Pandavas. He was a master of advanced military arts, including the Devastras and during the war of Mahabharata he fought bravely on behalf of the Kauravas. After Bhisma-Pitamah, he was the army-chief of the Kauravas. He was a partial incarnation of Agni.
When the time came for Guru Dakshina,Drona asked his students to defeat Drupad and capture him alive. Duryodhan and his brothers took up the challenge first, and declared war on Drupad, however they were beaten in battle. That is when Arjun along with Bheem, attacked Drupad's army, defeated him, and bought him as a prisoner to Drona.  Drona forgave Drupad and returned half of his kingdom and made Ashwatthama king of the other half.

https://youtu.be/6SLP4QmLO2M
- தினகரன் செல்லையா , ஆறாம் அறிவு முகநூல் பதிவு, 11.12.20