இரா.கண்ணிமை
விஷ்ணு (கிருஷ்ணன்) மும்மூர்த்தி களில் ஒருவரான தேவன் விஷ்ணு வென்றால் - இரட்சிக்கிறவன் என்பது பொருளாம். புராணங்களில், விஷ்ணுவை மகாதேவன் என்று சொல்லப்படவில்லை. விஷ்ணுவுக்கு பல பெயர்களும் - அவதாரங்களும் உண்டாம்.
விஷ்ணுவின் மறுபெயர்கள்:
அச்சுதன் - சரவணச் செல்வன் - அரி அரிந்தமன் - உவணதேவன் - கடல்வண் ணன் - கமலக்கண்ணன் - கரியன் - கருட கேதனன் - கேசவன் - கொண்டல் வண் ணன் - சக்கரபாணி - சக்ராயுதன் - சக்கிரி - சங்கமேந்தி - சனர்த்தனன் - சம்பு - சலச லோசனன் - சாரங்கபாணி - சிறீதரன் - சவுரி - திருநாதன் - துளாய்மவுலி - நாராயணன் - நெடியோன் - பிச்சை - பஞ்சாயுதன் - பதுமநாதன் - பிரமன்றாதை - பிள்ளை கேள்வன் - பீதாம்பரன் - பூமிகொழுநன் - பெம்மான் - பெருமான் - மாதவன் - மாயன் - மால் - முகுந்தன் - முண்டகாசனைக் கேள்வன் - வலவன் - வனமாலி - விண்டு வேலைற்றுயின் றோன், என்பனவாம்
தச அவதாரப் பெயர்கள்
மச்சன் - கூர்மன் - வராகன் - நரசிங்கன் - வாமணன் - இந்திரவாசன், உலகளந்தோன், கிரிவிக்கிரன், பரசுராமன் - இராகவன், இராமன், நாகுத்தன் - பலபத்திரராமன், குண்டலன் அலகை முலையுண்டோன் - கண்ணன் - கிருஷ்ணன், கோவிந்தன், தாமோதரன், தேவகி மைந்தன், நந்தநந்த னன், பஞ்சவர்தூதன் - புத்தன், மதுசூதனன், முராரி, கோபாலன், கோபிநாதன் பலராமன் என்பதும் விஷ்ணுவின் பெயர்களே.
விஷ்ணு - சுய உருவை, நாலுகையு டையதாய் கறுப்பு நிறத்திற் செய்து, மஞ்சள் நிற ஆடையை அணிவித்து வணங்கு வார்கள். விஷ்ணு பக்தர்களில் சிறீ வைண வர், ராமாஞ்சி மதத்தார், எம்பெருமாள் மதத்தார், சாத்தாதிகள், எனப்பல வகுப்பாய் பிரித்து, மந்திரங்கள் சடங்குகளுடன் விஷ்ணுவை தெய்வமென்றும், சிறீமன் நாராயணனென்றும் போற்றி வணங்கி வருகிறார்கள்.
பிர்மாவுக்கு ஆயுள் கணித்திருப்பது போல், விஷ்ணுவுக்கும் ஆயுள் கணிக்கப் பட்டிருக்கிறது, விஷ்ணுவுக்கு ஆயுள் பதிநான்கு கோடியே நாற்பது லட்சம் (14,40,00,000) ஆண்டுகள். விஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம்.
விஷ்ணுவுக்கு மனைவி - வைப்பாட்டி யாரும் உண்டு. மனைவியின் பெயர் லட்சுமி. இவள் பிர்மாவின் உடன்பிறந்த சகோதரி. ருக்மணி, ராதை வைப்பாட்டிகள். இவையன்றி இளம் பெண்களைக் கற்பழித் துக் கறைப்படுத்தி, சீர்கெடச் செய்த காம சேட்டைகள் நிறைந்த கதைகள் ஏராளம் உண்டு. இத்தனையும் சேர்ந்ததயையே கிருஷ்ணலீலை என்கிறார்கள்.
கல்வியறிவும், நாகரீகமும், நாட்டு முன்னேற்றமும் பெற்றுள்ள இக்காலத்தில் புராணச் செயல்கள் உச்சம் பெற்றிருந்த காலங்களில் நடத்திய கிருஷ்ணலீலையைப் போல நடந்தேறச் சமயம் பெற்றால் இளம் பெண்களைப பெற்ற பெற்றோரின் கண் ணும் மனமும் இக்காதல் காட்சிகளைக் கண்டு சகிக்குமா? கொழுந்துவிட்டுத் தாவிப் படர்ந்து பற்றி எரியும் நெருப்பு முன் விழுந்த மெழுகு போல் பொங்கி உரு காதோ? இப்படி காமச்செயல் புரிவோரை இன்று எவரேனும் கண்டால் மனங்கனிய கடவுளென்று வணங்க மனம் இடம் தருமா? இக்காமக்கோட்டிக் காட்சி நாடகக் கதையை கண்கூடாகப் பார்க்கவும், கேட்கவும் கூடுகின்ற கூட்டம் அங்கங்கே எண்ணற்ற பல ஆயிரம் என்பது பொருந்துமல்லவா? இப்படி கண்ணன் காதல் கதையை உணர்ந்து அறியாதிருப்பது எத்தனை பரிதாபமென்பதை சற்று சிந்தியுங்கள்.
ஒருமுறை கிருஷ்ணன் நடத்திய காதற் செயலால் பார்வதியிட்ட சாபம் பலித்துப் பாம்பாய்ப்போன கதையும், தனக்கு மனை வியிருந்தும் திருப்தியின்றி ஒரு காட்டு வேடுவப்பெண்ணை இச்சித்து மோகித்துக் கூடிப் புணர்ந்ததை தன் மனைவி லட்சுமி கேள்விப் பட்டு கிருஷ்ணனை வாசல் வழியாய் நுழைய விடாதபடி - வாயில் காவலருக்குக் கட்டளையிட கிருஷ்ணன் வேறுவழியாய் உட்புகுந்து வந்ததாயும் கதையுண்டு.
விஷ் ணு, கிருஷ்ணவதாரத்தில் நடத் திய காமச்சேட்டைகளும், ரிஷிபத்தினி களில் உண்டாக்கிய கற்பழிவும், நட்டமும் கணக்கற்றதாய்த் தெரிகிறது. இதன் உண் மையினை அய்ந்தாம் .. பாரதத்தில் மிகத் தெளிவாய் அறியலாம். அவற்றில் சிசு பாலன் அரசக் கூட்டத்தில் கிருஷ்ணவதார மெடுத்த விஷ்ணுவின் தீயச் செயல்களில், செவிசாய்த்து கேட்டு சகிக்க முடியாத - வெட்கத்துக்குரிய பெருங்குற்றங்களை அறவே தள்ளிவிட்டு அதில் கண்டபடியே கீழே விளக்கிக் காட்டியுள்ள சிலவற்றைப் பாருங்கள்.
பாரதம், சபாபர்வம் 27ஆம் பக்கம்: “சூதுவாது அக்கிரமம், கொலை, களவு, கள், காமம் முதலியவை நிறைந்த பாண்டமாகிய இந்தக் கரியக் கிருஷ்ணனை ஆக்கிரம கண்ணியனாக்கி, பூசைகொடுவென்று வியாசர் சொல்லுவது தகுதியா?”
“தன்னைப் பெற்ற தேவகியிடத்து ஒரு பெண்ணை உண்டாக்கி வைத்தான்...
“தன்னைப் பெற்ற தேவகியிடத்து ஒரு பெண்ணை உண்டாக்கி வைத்தான்...
“ஆச்சியர், வெண்ணையைத் திருடித் திருடித் தின்கிறபோது, கண்டுபிடித்து, அசோதையிடத்து வந்து முறையிட அசோதை யிவனைப் பார்த்து என்னடா கிருஷ்ணா வெண்ணையைத் திருடித் தின்பது தகுதியா எனக்கேட்க - தன் கையிலிருந்த வெண்ணையை நக்கி கொண்டே நான் அறியேன் என்று பொய்மை கூறினான். (பாரதம் - சபாபர்வம் 28ஆம் பக்கம் பார்க்கவும்)
ஆயர் மாதர்கள் இவன் செய்யும் துடுக்கனைத்தும் அசோதைக்குச் சொல்லி, தங்களுக்கு நன்மை கிடையாதிருப்பதை நினைத்து திருஷ்டாந்தத்துடன் பிடித்துப் போக வேண்டுமென்று தகுந்த முயற்சி யோடிருக்கும்போது ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்வான்’, என்ற பழமொழி போல (பாரதம் - சபாபர்வம் 29ஆம் பக்கம்) வெண்ணெய் திருடித்தின்ற இந்த கிருஷ்ணன் ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டு, பூனை வாயில் எலிபோல மன வருத்தமுற்றிருக்க, ஆயர் மாதர் இவனைப் பிடித்துக் கல்லுரலில் கட்டி அசோதைக்குத் தெரியப்படுத்த, அசோதை வந்து திருடர்க்கு தரப்படும் தண்டனையை அவ்விடத்தில் தானே செய்யக் கருதி இவனைத் தன் கையிலிருக்கும் பிரம்பாலும், ஆயர்மாதர் மத்தாலும் அடிக்க, கிருஷ்ணன் அடிபட்டு ஓவென்று அலறி இரண்டு கண்ணிலும் அருவிபோல ஜலம் வர அழுதான்...” தன் னந்தனியாக ஒரு மாது செல்வாளாகில் அவளைப் பின்தொடர்ந்து தன் கருத்துக் கிசைந்தவிடம் சமீபித்தபோது வேடரைப் போல் வீழ்ந்து கற்பழித்துத் திரிந்தான் - (பாரதம் - சாபபர்வம் 20ஆம் பக்கம் காண்க)
ஆயர் மாதர்கள் இவன் செய்யும் துடுக்கனைத்தும் அசோதைக்குச் சொல்லி, தங்களுக்கு நன்மை கிடையாதிருப்பதை நினைத்து திருஷ்டாந்தத்துடன் பிடித்துப் போக வேண்டுமென்று தகுந்த முயற்சி யோடிருக்கும்போது ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்வான்’, என்ற பழமொழி போல (பாரதம் - சபாபர்வம் 29ஆம் பக்கம்) வெண்ணெய் திருடித்தின்ற இந்த கிருஷ்ணன் ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டு, பூனை வாயில் எலிபோல மன வருத்தமுற்றிருக்க, ஆயர் மாதர் இவனைப் பிடித்துக் கல்லுரலில் கட்டி அசோதைக்குத் தெரியப்படுத்த, அசோதை வந்து திருடர்க்கு தரப்படும் தண்டனையை அவ்விடத்தில் தானே செய்யக் கருதி இவனைத் தன் கையிலிருக்கும் பிரம்பாலும், ஆயர்மாதர் மத்தாலும் அடிக்க, கிருஷ்ணன் அடிபட்டு ஓவென்று அலறி இரண்டு கண்ணிலும் அருவிபோல ஜலம் வர அழுதான்...” தன் னந்தனியாக ஒரு மாது செல்வாளாகில் அவளைப் பின்தொடர்ந்து தன் கருத்துக் கிசைந்தவிடம் சமீபித்தபோது வேடரைப் போல் வீழ்ந்து கற்பழித்துத் திரிந்தான் - (பாரதம் - சாபபர்வம் 20ஆம் பக்கம் காண்க)
“தாயோடு பிறந்த அம்மானாகிய நஞ்சனை கிஞ்சித்தேனும் இரக்கமில்லாமல் கொன்று போட்டான்”.
“தன் தந்தையோடு பிறந்தவளை அத் தையென்று மதிக்காமல், அவளைக் கட்டிப் புணர்ந்தான்.
“இந்தக் கிருஷ்ணனுக்கு, ஏழு மனைவி கள் இருக்கிறார்கள். அவர்களிருக்க, பதினாயிரம் கோபிகாஸ்திரிகளை மனைவி களாக வைத்திருக்கிறான்” என்று சிசுபாலன் சொன்னான். அப்படிவெட்கத்திற்குரிய பற்பல குற்றங்களை விவரித்தபின் கிருஷ் ணனை நோக்கி நானாவித தண்டனைகளில், அவன் மீளவும் சொன்னதாவது. “அடா கொலையாளி, ஸ்திரிகளை கொலை செய்வது மகாபாதகமென்று பேதைகளுக் குத் தெரிந்திருக்க நீ அஃது உணராமல், உனக்குப் பாலூட்டும் தாயாகிய ஒரு ஸ்திரியை கொலை செய்தாயே!...”
“அடா பாவி உன் செயல்களில் ஒன்றாவது நன்னெறிக்கேதுவாக இருக் கின்றதா? நான் எவ்வளவு எடுத்துரைத்தேன். நல்ல யோக்கியதையுடையவனாய் இருப் பாயாகில் விடை கொடாதிருப்பாயோ. நீ தான் விடை கொடாமலிருந்தாலும் சபை யார் மவுனமாக இருப்பார்களோ? நான் கூறுவது உண்மையாய் இருப்பதினால், நீயும் சித்திரப் பதுமைபோல சற்றும் அசைவின்றி இருக்கின்றனையே என்றான்.
அவதரித்த விஷ்ணுவாகிய கிருஷ்ண னோவெனில் சினந்து, சிசுபாலனைக் கொன்று போட்டானே ஒழிய, அதெல்லாம் பொய்யென்று மறுக்க, அவனாற் கூடாமற் போயிற்று. (பாரதம் - சபாபர்வம் 36 ஆம், 38ஆம் பக்கம்) அல்லாமலும் தன் குருவின் மனைவியை களவாய்க் கொண்டு போய், கானகத்தில் கூடியிருந்ததாகக் கதையுண்டு. இதல்லாமல், தன் தாயையும், சகோதரியை யும் மோகித்து பற்பலச் செயல்களைச் செய்ததாயும் தெரிகிறது.
கடைசியாய் கிருஷ்ணன் ஓர் ஆல மரத்திலேறி படுத்திருக்கையில், வேடன் ஒருவன் மிருகமென்றெண்ணி அம்பால் எய்ய - அம்பு பட்டு செத்து. உடல் கழுகு களால் கொத்தப்பட்டதாகவும், நரிகளால் பிடுங்கப் பட்டதாயும் கதையுண்டு.
பார்த்தீர்களா? - இத்துணைச் செய்தி களையும் நாம் கற்பனையாகக் கூறவில்லை. அவர்கள் எழுதி வைத்த புராணத்திலி ருந்தே கிருஷ்ணபரமாத்வாவின் வண்ட வாளங்கள் தெரிகின்றன. இதைப் பார்த்த பிறகும் படித்த பிறகும் கிருஷ்ண ஜெயந் தியைக் கொண்டாடப் போகிறீர்களா?
-விடுதலை,24.8.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக