- இரா.கண்ணிமை
விநாயகன் யார்? விநாயகன் சிவனின் மூத்தமகன். விநாயக உருவம் யானைத் தலையும், பெறுத்த வயிறும், ஒரு தும்பிக்கையும், நான்கு கைகளுடையதாய் கல், மரம், சுண்ணாம்பு, களிமண், சாணி மற்றும் பஞ்சலோகங்களிலும் செய்து வைத்து சிவ மதத்தார் தொழுவதைக் காணலாம்.
விநாயகனின் மறு பெயர்கள்
விநாயகனின் மறு பெயர்கள் அங்குச பாசமேந்தி - அம்பிகை தனயன் - அரிமருகன் - ஆகுவாகனன் - இறை மகன் - ஈசன் மைந்தன் - ஏகதந்தன் - ஏரம்பன் - அய்ங்கரன் - ஒற்றைக் கொம்பன் - கங்கை பெற்றோன் - கணபதி - கயமுகன் - கிரிமுகன் - கவுரிசேயன் - காமன் மைத்துனன் - நால்வாயன் - பாசாங்குசன் - முன்னோன் - மூத்தோன் - விக்கினேசுவரன் என்பனவாம்.
விநாயகன் ஒரு முறை கெஜமுகா அசுரனை அழிக்க நினைத்த போது அசுரன் எலி அவதாரமெடுத்து விநாயகனை எதிர்க்கவே - விநாயகன் அந்த எலியின் மேலேறி அதைத் தனக்கு வாகனமாக்கிக் கொண்டானாம்.
விநாயகனை பார்வதி என்னும் துர்க்கை பெற்றபோது சனியீஸ்வரனும், தேவர்களும் பிள்ளையாரைப் பார்க்க வந்தார்களாம். சனியீஸ்வரனின் தோஷம் தாக்கியதால் - இவன் தலை சாம்பலாய்ப் போய்விட்டதாம். பிர்மா வடபுறம் நோக்கி நிற்கும் மிருகத்தின் தலையை அறுத்துப் பொருத்த சனிக்குக் கட்டளையிட - சனி யானை முகத்தோன் என்றழைக்கப்பட்டானாம். தன் தாயின் கண்பட்டு இப்படி ஆனதாலும், தன் தம்பி மகன் வெட்டிப்போட்டதாயும், தக்கன் யாகத்தை அழிக்க இவன் வீரபுத்திரனை அனுப்பியபோது யானைகளின் புணர்ச்சியைக் கண்டு தாங்களும் யானை உருவாகி அவ்வாறே புணர்ந்து சிறிய யானை முகத்தையுடைய விநாயகன் பிறந்தான் என்று சொல்லப்படுகிறது.
பாடல்
பாவமிகப் பண்ணி மற்றேவுலனேயவன் புதல்வன்
தேவனோ வச்சிவனானான், சிந்துரமாயப் பார்வதி
கைம் மாவுருவாகிப் புணர வந்துதித் தானைந்து கர
மேவுங்கரி முகனாயத் தேவனெனால் விற்பனமோ?”
சிவன் - உனக்கு எந்த பெண் வேண்டுமென்று விநாயகனை கேட்க - விநாயகன் தன் தாயைப்போல் ஒத்த ஒரு பெண் வேண்டுமென்று சொன்னானாம். பெண்கள் நடமாடும் குளக்கரையிலும், வழிகளிலும் நின்று அம்மாதிரிப் பெண்ணைக் கொள்ளச் சொன்னதாய் கதை.
பேரின்ப மாணியின் விருத்தம் -
சத்திவயிற் றுதித்த சிவன் தன்னை யீன்ற
தாயாரைத் தாரமெனப் புணர்ந்த தாலே
பித்தனென்று வுலகோர் சொல் வசையைக் கேட்டுப்
பித்தராச ராந்தவ ரலாகா தென்று
அத்திமுகன் நாயின் மேலாசை யுற்று
அவுடனைப்போய் வணங்குவரு மவதி மட்டும்
நித்தநெடுந் தெருக்கள் தண்ணீர் துறைமுச்சந்தி
நேர்வழியிற் காத்திருப்ப நிலத்துள் ளோரே?
விநாயகனுக்குத் திருமணமே இல்லை. ஆண்டில் ஒரு முறை களிமண்ணால் விநாயகர் சிலை செய்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடி சிலையை கிணற்றில் போட்டு விடுகிறார்கள்.
போக முனிவர் விநாயகர் வரலாறை கூறுகிறார் - பாருங்கள்
போகர் ஏழாயிரம் 4ஆம் காண்டம்
பாடல் 507
அதிதமாங் கணபதியு மென்ற நாமம்
அவுதனில் மனிதரல்லால் வேறொன் றல்ல
துதிதமுள்ள கடவுளா யிருப்பா ரானால்
தொல்லுலகில் உயிரோடே யிருக்கா ரோதான்
பதிதமுள்ள பாடல்களில் சுவாமி யென்றும்
பாடினார் வெகுகோடி மாந்த ரப்பா
நிதிதமுள்ள கணபதியின் தேகந் தானும்
நிலையாத அநித்திய மென்ன வாச்சே!
பாடல் 508
என்னவே கணபதியு நீனி லத்தில்
எழிலான தேகத்தை மறந்து போனார்
பன்னவே பாரினிலே தேவ னானால்
பாழான தேகமது மண்ணுக் காமோ
துன்னதுவே காயமது நிலைப்ப தற்கு
தொல்லுலகில் கோடான கோடி கற்பம்
முன்னவே காயாதி கற்பு முண்டு
மூவுலகில் கற்றூணாய் இருந்தாற் காணே.
போக முனிவர் 500ஆம் பாடல் - திரேதாயுகத்தில் விநாயகன் தும்பிக்கையுடன் மனித உருவில் பிறந்தவர் என்றும், 505 இல் குடிமக்களனைவரும் இவனை தேவனாக்கினார்கள் என்றும், 508ஆம், 509ஆம் பாடல்களில் - இவன் நீண்ட காலம் உயிர்வாழ்ந்த மனிதனேயன்றி தேவன் அல்லவென்றும் திட்டமாய்த் தெளிவு படுத்திக் காட்டுகிறது.
எப்படியும் இவன் தன் தாயைப் போல ஒரு பெண்சாதி வேண்டுமென்று ஆசைப்பட்டதிலிருந்து இவன் மனிதன் தான். தேவன் இல்லை என்பது விளங்குகிறது - என்று போக முனிவரே கூறுகிறார். மேலும் விநாயகனைப் பற்றி அறிய, கந்த புராணம் - கயமுகனுற் பத்தி படலம் 146ஆம் 147ஆம், 148ஆம் பாடல்களையும் பிள்ளையார் கதை அகவலையும் பார்க்கலாம்.
பார்த்தீர்களா - கணபதி தாசர்களே! - இந்தக் கதைகளை யெல்லாம் நாம் சொந்தமாகக் கதைக்கவில்லை. உங்களின் சொந்த புராணத்திலிருந்தே சொல்லியுள்ளோம்.
வீரசத்தி விநாயகன் - வரசித்தி விநாயகன் - இப்படி எத்தனையோ விநாயகர்கள் - நாட்டிலே முளைத்துள்ளன. விநாயகன் யார்? அவனது வரலாறு பழைய கதைதானே? - என்கிறீர்களா? ஆம்! அதையே தான் மீண்டும் ஒரு முறை விளக்கமாக கூறுகிறோம். தெரிந்து கொள்ளுங்கள்.
பார்வதி தேவியின் கழுத்து அழுக்கில் உருட்டி உண்டாக்கப் பட்டு குளியலறைக் காவலுக்கு நிறுத்தி வைக்கப் பட்டு - தேவியின் குளியல் நேரம் - சிவன் குளியலறைக்குள் புக - அழுக்குப் பிள்ளை தடுக்க - சினம் கொண்ட சிவன் அந்தப் பிள்ளை கழுத்தை வெட்டி அறைக்குள் நுழைந்தான். விவரம் தெரிந்த பார்வதி அழுது புலம்ப - தேவியின் விருப்பத்திற்கிணங்க உயிர் கொடுக்க நினைத்துப் பார்க்க - வெட்டப்பட்ட முண்டமிருக்க - தலை மட்டும் காணாமற்போக - சிவன் காட்டுக்கு ஓடி யானையின் தலையை வெட்டி வந்து முண்டத்தில் ஒட்ட வைத்து உயிர்கொடுத்தான். அந்தப் பிள்ளைதான் விநாயகன் - என சொல்கிறதே ஒரு புராணம்.
கைலாயத்தில் உள்ள வனத்தில் சிவனும் பார்வதியும் உலாவச் சென்றதாகவும் - அங்கே யானைகள் இரண்டு, குட்டி போடும் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும், அதைக் கண்ட தேவி பார்வதி, சிவனை ஒரு விதமாகப் பார்க்கவும் - அவனும் புரிந்து கொண்டு நோக்கமறிந்து யானைகள் ஈடுபட்ட வேலையில் ஈடுபட்டு போட்டார்களாமே ஒரு குட்டி! இப்படியும் புராணம் செப்புகிறது.
தலை மட்டும் யானையாகவும் உடல் மனித உருவிலும் எப்படி? ஒரு வேளை தேவி பெண் உருவிலும், சிவன் ஆண் யானையாகவும் மாறி போட்ட குட்டியா? அன்றி சிவன் மனித உருவிலும், தேவி பெண் யானையாகவும் மாறி கலந்து போட்ட குட்டியா? இதில் எந்த விநாயகன் உங்களின் விநாயகன்? அவனது பிறப்பு பற்றி நீட்டுவதற்கு விரும்பாமல் இத்துடன் நிறுத்துகிறோம்.
விநாயகனென்ன - அவனது அப்பன் சிவன் - தம்பி கோவணத்துடன் - கையில் தண்டு பிடித்துள்ள அப்பன் - மாமன் விஷ்ணு - பிர்மா - பத்தினிமார்கள் - 33 கோடி தேவர்கள் - 48 ஆயிரம் ரிஷிகள் - கின்னரர் - கிம்புருடர் - அஷ்ட திக்குப் பாலர்கள் - நாயன்மார்கள் - ஆழ்வார்கள் - சங்கராச்சாரியார் - ஜீயர்கள் - பண்டாரங்கள் - சாயிபாபாக்கள் - இத்தனையின் அடிப்பொடிகள் அத்தனையையும் பல முறைகளிலும் சந்தித்து வெற்றி நடைபோட்டு வீர உலா வந்து கொண்டிருக்கிறோம் நாங்கள்.

விநாயக சதுர்த்தியை விவரம் புரியாமல் கொண்டாடிக் கொண்டிருப்போரே! ஆத்திரப் படாமல் - நிதான புத்தியுடன் பதில் சொல்லுங்கள். விநாயகனா? வினை தீர்ப்பவனா?
-விடுதலை,4.9.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக