இறைவன் சர்வ வல்லமையுள்ளவன். பரிபூரணமானவன். மனிதனை படைத்த இறைவன் அவனுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை தேர்ந்தெடுத்தான்.
மனிதர்கள் தங்களது அறியாமையாலும், அத்தூதர் மீது கொண்ட பாசத்தாலும் தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களையே இறைவனுக்கு சமமாக்குகின்றனர். இறைவனால் அனுப்பப்பட்ட அத்தூதர்களையே இறைவன் என்று சொல்பவர்களை நம்மால் காணமுடிகிறது. இதுப்போன்று இறைவன் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நபர் தான் இயேசு.
இயேசு தன் வாழ்நாளில் தான் இறைவன் என்று எப்போதும் சொல்லியது இல்லை. இருந்தாலும் அவர் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கையால் அவரையே இறைவனுக்கு சமமாக்குகின்றனர். இயேசு உட்பட அனைத்து தீரக்கதரிசிகளாலும் போதிக்கப்பட்ட ஒரே இறை கொள்கை இயேசுவின் காலத்திற்கு பிறகு சில கிறிஸ்தவர்களால் திரித்துவமாக வழிகேடாயிற்று. ஆயினும் அவர்கள் வேதம் என்று நம்பும் பைபிளும் திரித்துவத்திற்கு எதிராக தான் நிற்கிறது.
பிதா குமாரன் பரிசுத்த ஆவி இந்த மூவரும் தனித்தனி நபர்களாக இறைத்தன்மையில் சமமானவர்களாக உள்ளனர் என்று சில கிறிஸ்தவர்கள் கூறி கொண்டாலும் இதற்கான ஆதாரம் பைபிளில் எங்கும் இல்லை. இந்த திரித்துவத்திற்கு முரணாண போதனைகளை தான் இயேசு போதித்துள்ளார்.
எல்லா தீர்க்கதரிசிகளாலும் பரிசுத்த ஆவி அறியப்பட்டு இருந்தாலும் இயேசுவுக்கு பிறகே அவரது விசுவாசிகளால் பரிசுத்த ஆவிக்கு இறைத் தன்மை கொடுக்கப்பட்டு திரித்துவத்தின் ஒரு நபரானார். பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் இறைத்தன்மையில் சமம் என்று கிறிஸ்தவர்கள் நம்பினாலும் பைபிள் வேறு விதமாக போதித்துள்ளது.
மத்தேயு 21:10. அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
11. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
இயேசுவோடு வாழ்ந்த அவரது விசுவாசிகள் யாவரும் இயேசுவை தீரக்கதரிசி என்றே நம்பியதாக பைபிள் சொல்கிறது. இயேசுவும் தன் வாழ்நாளில் எப்போதும் தன்னை கர்த்தருக்கு சமமானவர் என்று சொல்லவில்லை. கர்த்தர் ஒருவரையே வணங்குபவராக இயேசு இருந்தார்.
39. சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26)
யோவான் 14:28 ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
மேற்கண்ட பைபிள் வசனத்தில் சிந்திக்கும் மக்களுக்கு நற்போதனை நிச்சயம் உள்ளது. இயேசு கர்த்தரின் அடியாராக வாழ்ந்து அவரையே இயேசு வணங்கினார் என்பதற்கு போதுமான சான்றாகவும் உள்ளது .
இயேசுவை பற்றி தவறாக பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படும் ஆனால் பரிசுத்த ஆவியை பற்றி தவறாக பேசினால் இம்மையிலும் மறுமையிலும் அது மன்னிக்கப்படாது என்று இயேசு கூறுகிறார்.
அதாவது;
மத்தேயு 12:32. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
திரித்துவத்தின் ஒரு பாகமாக விளங்கும் இயேசுவை தவறாக பேசினால் அது மன்னிக்கப்படுமாம். மற்றொரு பாகமான பரிசுத்த ஆவியை தவறாக பேசினால் அது மன்னிக்கப்படாதாம். என்ன ஒரு ஏற்றத்தாழ்வு? கிறிஸ்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா? இந்த வசனத்தில் அவர்கள் நம்பும் திரித்துவம் உடைந்து விட்டது.
உண்மையில் இயேசு யார்?
11. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.(மத்தேயு 21)
30. "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (குர்ஆன் 19)
உண்மையில் இயேசு யார் என்ற கேள்விக்கு பைபிளும் குர்ஆனும் சொல்லும் ஒரே பதில் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்பதே.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⭐⭐எமது தளம் பற்றி⭐⭐
✍இஸ்லாத்திற்கெதிராக அவதூறுகளை பரப்பி வரும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மறுப்பு கொடுக்கும் தளம் இது.
✍இன்னும் அவர்கள் நம்பும் அசத்தியத்தை பைபிளை கொண்டு நிரூபிக்கும் தளம் இது.
✍மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுக்கும் தளம் இது.
✍எமது பக்கத்தை Like செய்து எம்மோடு இணைந்திருங்கள்.
- சத்தியத்தை நோக்கி, முகநூல் பக்கம்
15.2.18