வியாழன், 8 பிப்ரவரி, 2018

மாடர்ன் சுடிதாரில் கடவுளச்சி அபயாம்பிகையாம்




மயிலாடுதுறை, பிப்.6 மயிலாடு துறையிலுள்ள மயூரநாதர் கோவிலில்அம்மன் சிலைக்கு சுடிதார்அலங்காரம் செய்த 2 அர்ச்சகர்களை திருவாவடு துறை ஆதீனம் பணியிடை நீக்கம் செய்து உள்ளார்.

நாகைமாவட்டம்மயி லாடுதுறையில் திருவாவடு துறை ஆதீனத்திற்குச் சொந்த மான மயூரநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ளஅபயாம்பிகைஅம்ம னுக்கு தைமாத வெள்ளிக்கிழ மையையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 2 ஆம் தேதி தை மாத 3 ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றதாம்.

அப்போது அர்ச்சகர்கள், அபயாம்பிகை அம்மனுக்கு சந்தன காப்பில் சுடிதார் அலங்காரம் செய்து இருந்தனர். இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்திருந்ததை கோவிலுக்கு வந்த பெண்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களிலும் வெளியிட்டனர். இந்தப் படக்காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆகம விதிமுறைகளை மீறி செயல்பட்டதாலும், மயூர நாதர் கோவில் தேவஸ்தான அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்காமலும், அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த மயிலாடுதுறையை சேர்ந்த அர்ச்சகர்கள் கல்யாணசுந்தரம்(வயது 75), அவரது மகன் ராஜு(வயது 45) ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

இரு கோவில்களில்

கோபுர கலசங்கள் திருட்டு

அம்பத்தூர், பிப்.6 இரு கோவில்களின் கோபுர கலசங்களை, யாரோ சிலர் திருடிச் சென்றனர். சென்னை, அம்பத்தூர், வெங் கடாபுரத்தில், சிறீ தேவி கருமாரியம்மன் கோவில், மேனாம்பேட்டில், மகா சுவர்ண கணபதி கோவில் ஆகி யவை உள்ளன. நேற்று காலை, கோவிலை திறக்க, அவற்றின் நிர்வாகிகள் வந்த போது, கோபுர கலசங்கள் திருடு போனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய் என, கூறப்படுகிறது. அம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

யாகத்தின் பலன்: இருவர் பலி!

பவானி, பிப். 6- ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை கிராமத்தில் பவானி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரத்தில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் எல்லா சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று பூஜை நடத்தி சிறப்பு யாகம் செய்தனர். அப்போது கோவிலின் அருகே பழைமைவாய்ந்த புளியமரம், ஆலமரம் இருந்தன. இந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. யாகம் நடத்திய புகை அந்தத் தேனீக்கூடுகள் மீதுபட்டவுடன் தேனீக்கள் நாலாபுறமும் பறந்து வந்து யாகம் நடத்திய பக்தர்களை கொட்டியது.

இதில் ஜம்பை பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (70), மயில்சாமி (60), சின்னயம்மன், கணேசன் மற்றொரு கணே சன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி, மயில்சாமி பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பவானி காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

கோவிலில், யாகம் நடத்தியபோது தேனீக்கள் கொட் டியதில் 2 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விடுதலை நாளேடு,6.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக