அறிவுக்கு பொருந்தாத புராணக் கற்பனைக் கதைகளையொட்டி, மகாசிவராத்திரி, மயானக் கொள்ளை எனும் மூடத்தனங்கள் பக்தி வெறி யாட்டங்கள் பல்வேறு இடங்களிலும் நடை பெற்று வருகின்றன.
மயானக் கொள்ளைக்கான புராணக்கதை
துவக்கத்தில் பிரம்மனுக்கு அய்ந்து தலைகள் இருந்தனவாம். சிவனின் மனைவியான பார்வதி பிரம்மனின் அய்ந்து தலைகளைக் கண்டு சிவன் என்று நினைத்து வணங்கினாளாம்.
இதனைக் கண்டு பிரம்மன் நகைத்ததால் சினம் கொண்ட பார்வதி, சிவனிடம் முறையிட்டா ளாம். ஆவேசமடைந்த சிவன் பிரம்மனின் ஒரு தலையை கொய்துவிட்டானாம். அப்போது கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்ட தாம். பிரம்மனின் கபாலத்தையே பிச்சைப் பாத்திரமாகக்கொண்டு சிவன் பிச்சையெடுத்தானாம். மண்டையோடான அந்த கபாலத்தில் போடப்படும் உணவெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதாம். ஆகவே, உலகுக்கே படியளக்கும் சிவனுக்கே உணவு கிட்டவில்லையாம். இந்தக் கபாலம் சிவனுக்குப் படைக்கும் உணவை உண்டு விடுவதால், பசி யால் பித்து பிடித்து காடுமலைகளில் அலைந்து திரியும் சிவன், மகா சிவராத்திரியன்று மயானத் தில் இருந்தானாம்.
இந்த நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்டதற்கு பார்வதியே காரணமானவள் என்று கோபம்கொண்ட சரஸ்வதி, 'கொடிய உருவத்துடன் நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்' என பார்வதிக்கு சாபமிட்டாளாம்.
அதனால், பார்வதி பூவுலகில் பல இடங் களுக்குச் சென்று முடிவில் மலையரசனுக்கு உரிமையான ஓர் நந்தவனத்தில் தவம் இருக்கத் தொடங்கினாளாம். அங்கு காவலுக்கு இருந்த மீனவக் காவலாளி தடுத்தும் புற்றால் தன்னை மூடிக் கொண்டு அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாளாம். மலையரசன் புற்றை கலைக்க முற்பட, அவன் தன் ஆற்றலை இழந்துவிட்டானாம். மலையனூர் கோயிலில் பருவத குல மீனவ சமூகத்தினரே பூசாரிகளாக உள்ளனர். இந்தக் கோவிலுக்கு சிவன் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாளாம். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, மகாலட்சுமி கூறியபடி, அம்மன் மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட் டாளாம். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது. பிரம்ம கபாலம் மீண்டும் சிவனின் கைகளை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்தி விட்டாளாம். இந்தப் புராணத்தையொட்டி, அம்மன் கோயில்கள் உள்ள ஊர்களில் மயானக் கொள்ளை நடந்து வருகிறது
மயானக் கொள்ளை நடை பெறும் நாளில் கோவிலில் இருந்து அம்மன் உருவச்சிலை ஊர்வலமாக எடுத்துச் செல் லப்பட்டு, மயானப் பகுதியில் பக்தர்கள் அளிக்கின்ற நாண யங்கள், காய்கறிகள், உணவு பொருட்கள் வாரி இறைக் கப்படுகிறது. சில பகுதிகளில் எருமை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் திருவிழாவின் பெயரால் வெட்டப்படுகின்றன.
"சாமி' வந்து ஆடுவதாகக் கூறி ஆக்ரோசத் துடன் ஆடுபவர்கள், உயிர்க்கோழி மற்றும் இறைச்சி, எலும்புகளை வாயால் கடித்தபடி ஆட்டம் போடுகின்றனர். சென்னையின் பல பகுதிகளிலும், மேல்மலையனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அங்காளம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை நடைபெற்றது.
சுடுகாட்டிலிருந்து மனித எலும்புகளை பூசாரி கடித்தபடி ஆட்டம்
அங்காளம்மன் கோயிலிருந்து அம்மன் உருவ சிலையுடன் மயானப் புறப்பாடு நடந்தது. அம்மன் சிலை ஊர்வலத்தில் முன்னதாக பூசாரிகள் பிரம்மனின் கபாலத்துடன் ஆட்டம் போட்டபடி சென்றனர். அங்காளம்மன் சிலை யுடன் மயானம் செல்லும் வழி நெடுகிலும் கூடியிருந்த பக்தர்கள் நாணயங்கள், காய்கனிகள், உணவு பொருட்கள், தானியங்களை வாரி இரைத்தனர். படையலிட்டு குவியலாக வைத் திருந்த உணவு பொருள்களை பூசாரிகளும், பொதுமக்களும் கொள்ளை (எறி) விட்டனர்.
கோவையில் சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள் ளிரவு பூஜைகள் நடத்தப்பட்டன. மாசாணியம் மனின் இருதயத்தில் இருந்து கைபிடி மண்ணை எடுத்த பூசாரி, மனித எலும்புகளை எடுத்து வாயில் கடித்து ஆர்ப்பரித்து பெருங்கூச்சலுடன் மயான கொள்ளையில் ஆட்டம் போட்டார்.
சிவராத்திரி 'மஞ்சு விரட்டு'
காளை முட்டி ஒருவர் பலி
செங்கம் அருகே, மகா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த, மஞ்சு விரட்டில், காளை முட்டியதில் ஒருவர் பலியானார். திருவண்ணா மலை மாவட்டம், செங்கம் அடுத்த நவாப் பாளையம் கிராமத்தில், சிவராத்திரியை முன் னிட்டு, மஞ்சு விரட்டு நடந்தது. மஞ்சு விரட்டில் பங்கேற்ற, கெங்காபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பவர் உயிரிழந்தார்.
திருவிழா ஊர்வலத்தை வேடிக்கை பார்த்த
சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
வந்தவாசி சன்னதித் தெருவில் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு மயானக் கொள்ளை திருவிழா நடைபெறும். அதன்படி, வந்தவாசி சின்ன தெருவைச் சேர்ந்த கவுதம் (13) மற்றும் உசேன் (11) ஆகிய இருவரும், சன்னதி தெருவில் உள்ள தனியார் கட்டடத்தின் மாடியில் இருந்தபடி ஊர்வலத்தை வேடிக்கை பார்த்தனர். கட்டடத்தையொட்டி சென்ற மின்சார கம்பியின்மீது கவுதமின் கால் தவறுதலாகப் பட்டது. இதில், மின்சாரம் பாய்ந்து கவுதம் மற்றும் அருகில் நின்றிருந்த உசேன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இருவரையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கவுதம் ஏற்கெனவே இறந்துவிட்டான். உசேன் ஆபத்தான நிலையில் இருப்பதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
சிவராத்திரியில் 'ஜக்கி'யின் வியாபாரம்
‘ஈசனுடன் ஓர் இரவு’ நிகழ்வு எனும் பெயரில் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் பக்தி வியாபாரத்தை நடத்தி வசூல்வேட்டை நடத்தியுள்ளார்.
இரவு முழுவதும் மக்கள் விழித்திருக்கும் வண்ணம் துள்ளலான இசை நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தது ஈஷா. இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளுடன் ஈசனுடன் ஓர் இரவு எனும் சிவராத்திரி விழாவை நடத்தியுள்ளார். விழாவில் கலந்துகொள்வதற்கு அனைவரும் அனுமதிக்கப்படவில்லை. பணம் செலுத்த வாய்ப்பில்லாத பக்தர்கள் தடுப்புக்கட்டைகளுக்கு வெளியே நிறுத்தப்பட் டனர்.
“கங்கா ரூ. 50,000, யமுனா ரூ.20,000, நர்மதா ரூ.5,000, கோதாவரி ரூ.1,000, கடைசியாக காவிரி ரூ.500 என்று நதிகளின் பெயரில் கட்டணம் வசூலிக்கப் பட்டு, அதன் அடையாள மாக ஒரு பட்டையை ‘வாட்ச் போல’ கையில் ஒட்டிவிட்டார்கள்.
ரூ.50,000 கட்டணம் செலுத்தியவர்கள் ஆதி யோகி சிலைக்கு அருகில் உட்கார்ந்து பார்க்க லாம் என்றும், ரூ.20,000 மற்றும் ரூ. 10,000 கட்டணம் செலுத்தியவர்கள் சற்று பின்னால் இருந்து காணலாம் என்றும் திரையரங்க வரிசை போல் அமைத்திருந்தனர். ரூ.5,000 செலுத்திய வர்கள் எல்.சி.டி. திரைக்கு முன்பாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
கட்டணம் ஏதும் செலுத்தாதவர்கள் தடுப்புக் கட்டைகளுக்கு அப்பால், அமர வேண்டும். நாற்காலிகள்கூட கிடையாது. வெறுமனே தரை யில் அமர வேண்டும். அதன்படி அழைத்து வரப்பட்ட மக்கள் அமர்ந்திருந்தனர். இலவசப் பகுதியில் ஒரு எல்.சி.டி திரைகூட இல்லை. பலர் அசதியில் சிவராத்திரி என்றுகூட பார்க் காமல் படுத்துத் தூங்கிவிட்டார்கள். எண்ணற்ற ஜோசியக்காரர்கள் நடைபாதைகளை ஆக்கிரமித் திருந்தார்கள். திருப்பூர் போன்ற பல ஊர்களிலி ருந்தும் ஈஷா யோகா மய்யத்தின் ஏற்பாட்டின் பேரில் வந்தவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கேள்விகளுக்கு பதில்கள் இல்லை
'விகடன்' இணையத்தில் குறிப்பிட்டுள்ள தாவது: இது தொடர்பாக ஈஷா யோகா மய்யத் தினரிடம் விளக்கம் பெற முயற்சித்தோம். மின்னஞ்சல் மூலமாக ஈஷா யோகா மய்யத்தி னரிடம் கீழ்கண்ட கேள்விகளை அனுப்பினோம்.
1. 'இறைவன் முன் அனைவரும் சமம்’ என முழங்கும் ஈஷா, நன்கொடை என்கிற பெயரில் அதிக நன்கொடை கட்டியவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்தது. ஆர்வத்தோடு மட்டும் வந்த ஏழைகளுக்கு அளித்த ட்ரீட்மென்ட் சரியா?
2. இருக்கையில் அமர்ந்து ஈசனுடன் ஓர் இரவு நிகழ்வை கொண்டாடுவதற்கு குறைந்த பட்சம் 500 ரூபாய் நன்கொடை. அதைக் கூட செலுத்த முடியாதவர்கள் என்ன செய்வது?
3. எல்லோருக்கும் இலவசமாக வழங்கப் படும் என ஈஷாவால் அறிவிக்கப்பட்ட ருத் திராட்சை கூட நன்கொடை அளித்தவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறதே... ஏன்?
4. 'நதிகளை மீட்போம்' என்ற திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ஈஷா. ஆனால், புட்டி யில் தண்ணீர் விற்பனை செய்யும் பன்னாட்டு தண்ணீர் நிறுவனத்தின் தயாரிப்புகளை நிகழ் வில் வழங்கியது, ‘நதிகளை மீட்போம்’ திட்டத் துக்கே முரணாக இருக்கிறதே! இது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற விரும்புகிறோம்!
இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் அது தொடர்பான விவாதத்தையும் ஈஷா யோகா மய்யத்தினரிடம் மேற்கொள்ள முயன் றோம். இது தொடர்பாக ஈஷா யோகா மய்ய மக்கள் தொடர்பு அதிகாரிகளிடமும் பேசினோம். 'பதில் அனுப்புவார்கள்' என்று மட்டும் சொன் னார்கள். ஆனால், இந்தக் கட்டுரைப் பதிப்பிக் கப்படும் வரை பதில் அளிக்கவில்லை. தொலை பேசி உரையாடலிலும் மதிப்பான பதில் கிடைக்கவில்லை என்று "விகடன் இணையத் தில்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு, 16.2.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக