பெண்களுக்கு கத்னா (விருத்த சேதனம்) செய்வது. அதாவது பெண்ணின் பாலுணர்வை தூண்டும் கிளிட்டோரிஸை சேதப்படுத்துவது இஸ்லாத்தில் கடமை.
பெண்களுக்கு கத்னா செய்வது சுன்னத் என்பது இஸ்லாமிய ஷரீஅத்தில் உறுதியாக கூறப்பட்ட விசயமாகும். இதில் சந்தேகப்பட வேண்டியத் தேவையில்லை.
முஸ்லிம்கள் கத்னா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் பல ஹதீசுகள் வந்துள்ளன. "எவர் இஸ்லாத்தை தழுவுகிறாரோ அவர் கத்னா செய்து கொள்ளவும். அவர் பெரியவராக இருந்தாலும் சரியே என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும், உடம்புக்கு பாதிப்பில்லாத முறையில் கவனமாக இலகுவான முறையில் கத்னா செய்யுங்கள். ஏனெனில் கத்னா செய்வது முகத்தை மிகவும் செழிப்படையச் செய்யக் கூடியதாகவும், திருமணத்தின் போது மிகவும் இன்பமளிப்பதாகவும் இருக்கும்' என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஜல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
புகாரி, முஸ்லிம் ஆகிய இரு இமாம்களும் அறிவிக்கும் ஹதீஸில் ,' ஆண் குறியில் கத்னா செய்யப்பட்ட (மொட்டுப் பகுதி) பெண் குறியில் கத்னா செய்யப்பட்ட பகுதியோடு இணைந்து விட்டால் குளிப்பு கடமையாகிவிடும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதில் 'கிதான்' என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
பித்ரத்- இயற்கை விசயமாகும் என்பதும் இதனை ஒவ்வொரு முஸ்லிமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. கத்னா என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு கடமையாகும்.
'ஐந்து விசயங்கள் பித்ரத் இயற்கையைச் சேர்ந்தது. அவைகளாவன: கத்னா செய்வது, மாமஸ்தான முடியை நீக்குவது, மேல் மீசையை கத்தரிப்பது, நகம் வெட்டுவது, கக்கத்து முடியைப் பிடுங்குவது ஆகிய ஐந்துமாகும்.'
பெண்களுக்கு கத்னா செய்வதின் அவசியம்:
'கத்னா செய்வது நிச்சயமாக முகத்தை செழிப்புறச் செய்யும். திருமணத்தின் போது இன்பமாக இருக்கும்'
'நிச்சயமாக கத்னா செய்வது பெண்களுக்கு சங்கையானதாகும்' என்று ஹதீதுகளில் வந்திருக்கிறது.
ஆணுக்குரிய கத்னாவை பகிரங்கமாகவும், பெண்களுக்குரிய கத்னாவை பகிரங்கப்படுத்தாமல் மறைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பது ஹதீசில் கூறப்பட்டிருக்கும் விசயமாகும்.
அத்துடன் ஆண் பிள்ளைக்கு பால் அருந்தக்கூடிய காலத்தில், பிள்ளை பிறந்து முதல் வாரத்தில் அல்லது அதற்கு பின்னால் செய்ய முடியும். பெண் பிள்ளைகளுக்கு பருவ வயதை அடைவதற்கு முன்பாக கத்னா செய்ய வேண்டும் என்பதாக ஹதீசுகள் தெளிவாக அறிவிக்கின்றன.
1994 அக்டோபர் மாதத்தில் எகிப்திலிருந்து வெளிவரும் 'அல் அஸ்ஹர்' என்ற பத்திரிகையில் அல் கிதான்' என்ற தலைப்பில் ஓர் ஆராய்ச்சி கட்டுரை அஷ்ஷெய்கு ஜாதுல் ஹக் அலி ஜாதுல் ஹக் அவர்களால் எழுதப்பட்டது. அதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் கத்னா செய்வது இஸ்லாமிய இயற்கை விசயத்தில் உள்ளதாகும் என்று ஆதாரத்துடன் எழுதியுள்ளார்.
எகிப்து தாருல் இப்தாவின் தலைவரான முஹம்மத் ஸெய்யித் தன்தாவி அவர்கள் கத்னா பற்றிய தெளிவான ஷரீஅத் சட்டங்களை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள்.
இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கத்னா செய்வது ஆண், பெண் இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறார்கள். 'ஆண்கள் விசயத்தில் கத்னா வாஜிபாகும் என்பதாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள். பெண்கள் கத்னா விசயமாக இமாம் ஹன்பல் அவர்களிடமிருந்து இரு அறிவிப்புகள் வந்துள்ளன. அவற்றில் மிகவும் வெளிப்படையான கூற்று பெண்களுக்கும் கத்னா 'வாஜிப்' கடமை என்பதாகும்.
இது பெண் அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம். பெண்களை அடிமைப்படுத்தி வைத்தார்கள், உரிமைகள் மறுத்தார்கள், ஆடை என்ற பெயரில் மொத்தமாக மூடி வைத்தார்கள், அத்துடன் பாலின உணர்ச்சியை தூண்டும் கிளிட்டோரிசையும் முகத்தை அழகுற செய்யும் என்று பொய் காரணம்கூறி சிதைத்து விடுகிறார்கள். மதத்தின் பெயரால் அயோக்கியத்தனங்கள்.
ஆதாரம் கேட்கும் அரைகுறைகளுக்காக.
الوهاب بن عبد الرحيم الأشجعي قالا حدثنا مروان حدثنا محمد بن حسان قال عبد الوهاب الكوفي عن عبد الملك بن عمير عن أم عطية الأنصارية أ امرأة كانت تختن بالمدينة فقال لها النبي صلى الله عليه وسلم لا تنهكي فإن ذلك أحظى للمرأة وأحب إلى البعل قال أبو داود روي عن عبيد الله ب عمرو عن عبد الملك بمعناه وإسناده قال أبو داود ليس هو بالقوي وقد روي مرسلا قال أبو داود ومحمد بن حسان مجهول وهذا الحديث ضعيف(அபூதாவூத் - 4587)
- முகமது நசீம் - ஆறாம் அறிவு, முகநூல் பதிவு, 9.4.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக