வியாழன், 12 ஏப்ரல், 2018

உலகை_ஆளும்_ஆபிரகாம்.

#உலகை_ஆளும்_ஆபிரகாம்.

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபிரகாம் என்பவரே #யூதம்,#கிறிஸ்தவம்,#இஸ்லாம் என்கிற   இந்த மாபெரும் மூன்று  மதங்களுக்கும் சிறிய ஏழு(7) மதங்களுக்கும்  சொந்தக்காரர் எனக்கூறப்படுகிறது. அத்துடன் #வைஸ்னவத்துக்கும் (இந்து) முன்னோடியாக கருதப்படுகிறது..

கி.மு 2100 அளவில் வாழ்ந்ததாக கூறப்படும் ஆபிரகாம்(இப்ராஹிம்) என்பவரால் உருவான மதமே #ஆபிரகாமிய_மதம் (#abrahamic_religion) இதனை ஆபிராகாமின் நம்பிக்கை (#abramin_Faith) எனவும் கூறுவர்.

ஒரே ஒரு கடவுள் தான் என்கிற #ஓரிறைக்கொள்கையை(#Monotheism) முன்  நிறுத்தியவர் ஆபிரகாம்.

இந்த ஆபிரகாமினால் உருவானதே #யூத மதம்(Judaism) .
கி.மு 2000 ம் ஆண்டளவில்.   (இன்றைக்கு 4000 ம் ஆண்டுக்கு முதல் அதாவது வேதகாலத்துக்கு முன்)
ஆபிரகாமினால் உருவான யூத மதத்தில் பிறந்த இயேசு ( சங்க காலம்/ இன்றைக்கு 2000 வருடத்துக்கு முன்) யூதமதத்தின் இருக்கமான சட்டதிட்டங்களை தளர்த்தி இறைவன் எல்லாருக்கும் #பொதுவானவன். உலகில் எல்லா மக்களும் சமமானவர்கள்   என மத புரட்சி செய்தார் அதவாது யூதமதத்தை  புதுப்பித்தார்.    ( இதனால் அவர் கொல்லப்பட்டார்) பின்பு அவரால் உருவான அந்த பொது மறையே கிறிஸ்தவம் என அழைக்கப்பட்டது.

எனவே கிறிஸ்தவம் கி.பி 1 நூற்றாண்டில் யூதமதத்திலிருந்து உருவானது.
இந்த யூத,  கிறிஸ்தவ மதங்களைவிட ஏராளமான மதங்கள் #ஆபிரகாமின் ஏனைய வாரிசுகளால் உருவாக்கப்பட்டிருந்தன.

அதேபோல் அங்கு #சோராஸ்ட்ரியம் (Zoroastrianism) என்னும் மதமும் இருந்தது இது ஆபிரகாமுக்கு எல்லாம் முற்பட்ட #ஈரானியரின் மதம்.

கி.பி 570இல் பிறந்த நபி #முகமதுவால் கி.பி 610 ல்  இஸ்லாம் சமயம் உருவாக்கப்பட்டது. அதாவது மேலுள்ள யூதம் கிறிஸ்தவம் சொராஸ்ட்ரியம் மற்றும் ஏனைய ஆபிரகாமின் மதங்கள் எல்லாவற்றையும் ஒன்றினைத்து அந்த சூழலுக்கு ஏற்றாப்போல்  முக்கியமான கருப்பொருளை ( மக்களுக்கு தேவையானதை) மட்டும் எடுத்து   (தேவையில்லாத, ஒவ்வாதா சிந்தனைகளை, தணிக்கை செய்து #நபி  முகமதுவாலும் அவரது நண்பகர்களாயிருந்த துறவிகள், புலவர்களாலும் உருவாக்கப்பட்ட புதிய மதமே #இஸ்லாம். இதனாலேதான் இஸ்லாத்தை இறைவனின்(அல்லாவின்) இறுதி  வெளிப்பாடு/சீர்திருத்தம் ( final revelation)  என்று இஸ்லாமியர் கூறுவார்கள்.

ஆபிரகாமிலிருந்து யூதமும்
யூதத்திலிருந்து கிறிஸ்தவமும்
கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமும் தோன்றியதனாலேதான் இந்த மூன்று மதங்களையும் ஆபிரகாமின் மதங்கள்( abrahamic religion) என இவற்றுக்கு பெயர்.  இவை  சகோதர மதங்களாக இருப்பதால்
மூன்று மதங்களுக்கிடேயேயும் நடக்கும் சண்டைகளும் #பங்காளி சண்டைதான் ( குடும்ப சண்டை).

இந்த மூன்று ஆபிரகாமின் மதத்துக்குள் #இந்து மதம் வரவில்ல என்றாலும் #ஆரிய  பிராமணர்கள் ஆபிரகாமின் வாரிசுகள்  என பல ஆய்வுகள் நிறுவியுள்ளன எனவே #வைஸ்னவ சமயத்தையும் ஆபிரகாமின் வாரிசாக உள்ளடக்கலாம்.

இந்துசமயத்தின் தொன்மைக்காலமான #வேதகாலம்(#vedic_age) ஆபிரகாமின் பின்பே தொடங்குகிறது( ஆபிரகாம் கி மு 2100, வேதகாலம் கி.மு 1500 தொடக்கம் கி.மு 600)
இந்த வேதகாலத்தில்தான் நால்வகை வேதங்களும் எழுதப்பட்டன .இந்த வேதங்களில் முதல் வேதமான #ரிக் வேதம் எழுதப்பட்ட அதே நேரத்தில்தான் யூத மதத்தின் #தோராவும் எழுதப்படுகிறது.

ஆரிய_திராவிட கோட்பாடுகளில் ஆரியரானா #வைஸ்னவ மதத்தினர் மத்திய ஆசியாவிலிருந்து(மொசெப்பத்தேனியா)  வந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த #ஆரிய_பார்ப்பணர்கள் ஆபிரகாமின் வாரிசுதான் என முடிவெடுக்கப்படுகிறது.
#மொழி அடிப்படையில் #இந்தோ_ஆரிய மொழிக்குடும்பமான சமஸ்கிருதம், அரபி யூதர்களின் எபிரேயம் ஆபிரகாம் பேசிய அரமேயம் எல்லாம் ஒன்றோடு ஒன்று இனைந்ததாக காணப்படுகிறது. ஏன் ஐரோப்பிய மொழிகள் கூட இந்த அரமேயத்திலிருந்துதான் பிறந்தன. தமிழை தவிர அனைத்து இந்திய மொழிகளும்(சிங்களம் உட்பட) இந்தோ- ஐரோப்பிய மொழிக்குடும்பம், இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்துக்குள் அடங்கும்.
எனவே மொழியின்(சமஸ்கிருதம்)  அடிப்படையிலும் ஆரிய வைஸ்னவர்கள் ஆபிரகாமின் உறவினர்களே ஆரியர்.

வெள்ளை நிற உடல், கலாச்சாரம் கொள்கை சிந்தனை அனைத்திலும் பிராமணர்கள் ஒத்துப்போவதால் அவர்களை ஆபிரகாமின் வாரிசு என்கிறார்கள் Abraham(அரமெக்)--Ibrahim(அரபிக்)--bramin (பிராமின்).

( யூதர்களின் சாயல் அப்படியே பிராமணர்களில் காணப்பாடுவதாலும்,தோராவின் கட்டமைப்பு வேதங்களில் காணப்படுவதாலும் பிராமணர்கள் ஆபிரகாமின் வாரிசுகளே)

*உலக மக்கள் தொகையில் 33% கிறிஸ்தவர்களும்
23% இஸ்லாமியர்களும்
1% யூதர்கள் மற்றும் ஏனைய  ஆபிரகாமின் மதங்களும் உள்ளன மொத்தம் 57% இவர்களுடன் வைஸ்னவம் (இந்து) 15% சேர்த்தால் 72%  வீதம்
அதாவது உலக சனத்தொகையில் 72% ஆபிராகாமுடைய வாரிசுகளாக உள்ளனர்.
இதன் அடிப்படையில் உலகை ஆள்வது ஆபிரகாம்தான்.

ஆபிரகாமின் மதங்கள்
1-யூதம்
2-கிறிஸ்தவம்
3-இஸ்லாம்
4-சமாரியர்
5-ட்றூஸ்(druze)
6-ராஸ்தfபாரை
7-யசீதி
8-பபிஸ்ம்(babism)
9-பஹாய்
10-மண்டேஸ்ம்(mandaeism)
(வைஸ்னவம்-11)
- சன் இராபின்- முகநூல் பதிவு, 19.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக