செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தீபாவளி’ப் புளுகு!




தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடச் சொல்வதற்கு மக்களை நம்ப வைப்பதற்குச் சோடிக்கப்பட்ட கதை எப்படி இருக்கிறது என்றால்.


ஒரு புளுகனைப் பார்த்து இன்னொரு புளுகன், "எங்கேடா உன் பையன்?" என்று கேட்டதற்கு அவன், வானம் ஓட்டையாகப் போய்விட்டது அதை அடைக்க எறும்பைப் பிடித்து அதன் தோலை உரித்து வானத்தில் போய்த் தையல் போட்டுத்தைப்பதற்குச் சென்றிருக்கிறான் என்று சொன்னானாம்.


இதற்கும் இந்தத் தீபாவளிப் பண்டிகைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டு மென்கிறேன். சிந்தனையுள்ள பகுத்தறிவுள்ள மனிதன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடலாமா என்று சிந்திக்க வேண்டு மென்கிறேன். 
- தந்தை பெரியார் (விடுதலை 29.12.1970)


தமிழ்நாட்டில் தீபாவளி வந்தது எப்போது?

தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகள் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்க தைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு(Financial New Year)  விழாவாகும். இது விஜய நகரத்திலும் புதுக் கணக்கு புத்தாண்டு விழாவாகக் கொண்டாடப் பட்டதை நிக்கோ லோடி காண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும், மார்வாரிகளுக்கும் புதுக் கணக் குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத் திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.

வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள்.

ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை  செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப் பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டா டப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளி அன்று புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை. 
பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் எழுதிய
“மதுரை நாயக்கர் வரலாறு”
என்ற நூலில் பக்கம் 433-434

- விடுதலை ஞாயிறு மலர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக