கொச்சி, அக் 21 கேரளத்தை ஒட்டிய தமி ழக பகுதிகளில் இருக்கும் அய்யப்பன் கோவில்களில் பெண்கள் வழிபட முழு உரிமையும் உள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் பெண்கள் வழிபாடு
ஆதிகாலத்தில் இருந்தே பெண்க ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா சபரி மலையில்? சபரிமலையில் பெண் களுக்கு அனுமதி இல்லை என்று ஒரு சாரார் தொடர்ந்து மறுப்பு கூறி வந்தாலும், உண்மையாகவே கேரளாவில் இருக்கும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி அனைவரின் மனதி லும் எழுந் துள்ளது.
ஏன் அனுமதி மறுப்பு?
சபரிமலையில் உள்ள அய்யப்பன் பிரம்மச்சாரியம் கடைப்பிடிக்கும் ஒரு கடவுள் என்ற அய்தீகம் ஆன்மிகவாதி களால் நம்பப் படுகிறது. 10 முதல் 50 வயதிலான பெண்கள் மாதாந்திர விலக்கு ஆகும் காரணத்தால் அது புனிதமற்ற தன்மை என்றும், அதனால் கோவிலில் தீட்டு உண்டாகக் கூடும் என்றும், அய் யப்பனின் பிரம்மச்சாரியத்திற்கு ஒவ்வாத செயல் என்றும், கற்பிக்கப்பட்டு வந்தது. அதனால் தான் குறிப்பிட்ட வயதுப் பெண்கள் அந்த கோவிலுக்குள் அனு மதிக்கப்படுவதில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது.
அய்யப்பன் கோவில்- அய்யன் கோவில்
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் அய்ய னார் சாமிகள் காவல் தெய்வமாக இருப்ப தைப் போலவே, ஆரியங்காவு பகுதியில் இருந்த அய்யப்பன் கோவி லும் முன்னொரு காலத்தில் எல்லை காவல் தெய்வமாக, சிறு தெய்வ வழி பாட்டில் முக்கிய பங்கு வகித்த தெய்வ மாக இருந்தது. வழிபாடுகளில் இரண்டு கடவுள்களுக்கும் அதிக அளவில் ஒற்று மைகள் இருக்கின்றன. பழங்குடிகளின் ஊர்க்காவல் தெய்வமாக இருந்த இக் கோவில் பிற்காலத்தில் உயர்ஜாதி மலை யாள இந்துக்களாலும், பந்தளம் ராஜ குடும்பத்தாலும் பராமரிக்கப்பட்டு, அக் கோவிலின் நிர்வாகத்தினை அவர்கள் ஏற்று நடத்தத் தொடங்கினார்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் கேரளத்தில் இருக் கும் பல்வேறு அய்யப்பத் திருத்தலங் களில் அய்யப்பன் திருமணமான கடவு ளாகவே காட்சி அளிக்கிறார். உதாரணம்: அச்சன்கோவில். கோவை போன்ற கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதிகளில் இருக்கும் அய்யப்பன் கோவில்களில் பெண்கள் வழிபட முழு உரிமையும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
ஆனால், சபரிமலையில் பெண்கள் நுழையக் கூடாது என 1972-ஆம் ஆண்டு தான் தடையே விதித்தார்கள். அதற்கு முன்புவரை ஆண்களைப் போலவே பெண் களும் சென்று அய்யப்பனை வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. 1972 -இல் தடை விதிக்கப் பட்டாலும் பெரிதாக நடைமுறைப்படுத்த வில்லை. 1986 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்ப்படம் அந்தக் கோவில் சன்னி தானத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற் காக 7,500 ரூபாய் கட்டணத்தையும் பெற்றிருக்கிறது தேவசம் போர்டு.
பெண்கள் வழிபாடு கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பு
1990- ஆம் ஆண்டு போடப்பட்ட பொது நல வழக்கின் காரணமாகவே 10- முதல் 50 வயது வரை உள்ள பெண் கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1993- ஆம் ஆண்டு பெண்கள் கோவி லுக்குள் நுழையக்கூடாது என ஆணை பிறப்பித்தது கேரள உயர்நீதிமன்றம். அதன் பின்னால் இருந்தே பெண்கள் இக்கோவிலுக்கு வருவதில்லை. ஆனால் ஆதிகாலத்தில் இருந்தே சோறுண்ணும் சடங்கிற்காக பெண்கள் இந்த கோவி லிற்கு வருவது வழக்கமான ஒன்றாகும்.
1939 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ராணியாக இருந்தவர் அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்தி யிருக்கிறார் என்பதற்கான சான்றுகளும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
முன்னாள் பிரதமரின் செயலாளர் டி.கே.ஏ.நாயரின் அனுபவம்
1991- ஆம் வருடத்திற்கு முன்பு வரை குறிப்பிட்ட வயது பெண்களுக்கு கோவி லுக்குள் அனுமதி இல்லை என்ற ஒரு சட்டம் கிடையாது. இந்தியாவில் இருக் கும் மற்ற கோவில்களைப் போலவே இங்கும் பெண்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங்கின் முன்னாள் செயலாளராக பணியாற்றி வந்த டி.கே.ஏ.நாயர் இது குறித்து கூறுகையில், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் முதன் முறையாக சபரிமலை சென்றபோது நான் என் அன்னையின் மடியில் அமர்ந்திருந்தேன். அன்று எடுத்துக் கொண்ட நிழற்படம் இன்றும் எங்களிடம் இருக்கிறது என்று கூறினார். அவர் காட்டிய அந்த நிழற் படத்தில் ஒரு இளம்பெண் கருவறையில் இருக்கும் கடவுளை வேண்டிக் கொண் டிருப்பதாக இருந்தது.
- விடுதலை நாளேடு, 21.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக