வியாழன், 4 அக்டோபர், 2018

மகாபாதகம் தீர்த்த படலமா?

திருவிளையாடல் புரா ணத்தில் மகாபாதகம் தீர்த்த படலத்திலுள்ள ஒரு பாடல் இதோ:

தோதக வாசக மாமது ராபுரி சூழ்பதியிற்

போதக மாக மறையோன் புதல்வன் பிதாவைக் கொன்று

தீதகந் தன்னிலுஞ் செய் யா(த)து செய்தவை செப்பவொண்ணா

பாதகந் தீர்த்தசொக் கேபர தேசி பயகரனே! முற்காலத்திலே, ஒரு பிராமணனுக்கு ஒரு பிள்ளை யுண்டாயிற்று. அந்தப் பிள் ளையை நன்றாக வளர்த்தார்கள். அவனும் மன்மதனைப் போலானான்.

அவன் காமவிகாரத்தால், தாயுடைய அழகாலும் தாயுடனே கூடினான். இப்படி யிருக்கிறதைத் தகப்பன் கண்டான். கண்டவுடனே, தகப் பனைத்தானே மண் வெட்டியினால் வெட்டிக்கொன்று போட்டுப், "பாலும் சோறும் தின்னான்; விக்கிச் செத்தான்!" என்று சொல்லி ஒருவரையும் கூட்டாமல் தனியே எடுத்துக் கொண்டு போய், சுட்டுப் போட்டான்.

அதன்பின், தங்கள் திரவியமெல்லாம் எடுத்துக் கொண்டு, இரண்டு பேருமாக(ப்) புறப்பட்டு   காட்டுக்குள்ளே கள் ளரிவனை யடித்துத் திரவி யத்தைப் பறித்துக் கொண்டு, பிராமணத்தியையும் பிடித்துக் கொண்டு போனார்கள்,

அப்போது, இவனுக்கு அடிபட்ட புண்ணெல்லாம் புழுத்துச் சொறிகிறதினாலே வருந்திக் காசிமுதலான தீர்த்தங் களாட வேணுமென்று போனான். இவனைப் பிரம்ம ஹத்தி துடந்து (தொடர்ந்து) பத்தியு(ருக்கிக்) கரையிலே தள்ளிவிடும்.

இப்படி யனேக(த்) தேவாலயங்களெல்லாம் அலைந்து திரிந்து, மதுராபுரியிலே வந்தான்; வந்து, பொற்றா மரையிலே   முழுகிச் சுவாமி கிட்டப் போகச்சே, இதே நந்தீசு வரர், "மகாபாதகா, போகாதே!" யென்றார். அப்பொழுது, சுவாமி யிரங்கி, "யவனை மறியாதே! விட்டுவிடு!" என்றார். அம்மனிருந்து, "அவன் மகா பாதகனல்லோ ?" வென்றபோது சுவாமியிருந்து, "நம்மை நோக்கி வந்தானே; அதுவுமல்லாமல், அறிவு, பொறை, நீதி, வாய்மை, உடையவரைக் காண்கிறது (காப்பது) பாரமல்()லா? துணை யில்லாமல் தளர்வோரைக் காற்கிறதே தர்மமெ"ன்று சுவாமியம்மனுக்குச் சொல்லி யவனை யழைத்துப் "பொற்றா மரையிலே முழுகி யபிஷேகம் பண்ணின தீர்த்தத்திலும் முச்சந்தி முழுகிச் சிவனடியார் பாததீர்த்தமும் உள்ளே கொண்டு மெய்(ச்) சொல்லும், பிக்ஷையமுதும் ஒருபோதுண்டு, அய்ம்புலனடக்கி, காயத்ரி ஜபம் ஆயிரத்தெட்டு நூறு செபித்து, சிறீ ருத்திரமும் தினம் வட்டஞ்செய்து, இப்படி ஒரு வருஷம் செய்தால் அந்தப் பாதகம் தீருமெ"ன்று சுவாமி யருளின படிக்கு அந்தப் பிராமணன் தப்பாமற் செய்து முனிவர்கள் சந்தோஷிக்கிற சரீரமாயிற்று; ஆகையினாலே, எந்தத் தலத் திலும் தீராத பாதகம் சொக்கனாத சுவாமி தீர்த்தபடியினாலே மகாபாதகந் தீர்ந்த தென்றவாறு.

அபிஷேகம் பண்ணின தீர்த்தத்தில் அவன் மூன்று திரம் (மூன்று முறை) முழுகிப் பாபந் தீர்ந்தபடியினாலே, மகாபாதகம் தீர்ந்த தீர்த்தமென்றவாறு." இவ்வாறு கூறுவது திருவிளையாடல் புராணம்.

தாயைப் புணர்ந்தாலும் அவனுக்கு இந்து மதத்தில் மகா மோட்சம் உண்டு. இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம், வெட்கக் கேடு!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 28.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக