செவ்வாய், 10 நவம்பர், 2015

பார்ப்பனர்கள் அர்ச்சகர்களான வரலாறு


சரவணா இராஜேந்திரன்
தமிழகத்தில் சமயக்குரவர்களுக்கு முன்பு மிகச்சொற்பமாக வைதீக மதத் தாரும்,   சைவம் மற்றும் வைணவம் இருந்து வந்தது, சமணமும், பவுத்தமும் சாமானிய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை புழக்கத்தில் இருந்தன. சமயக்குரவர்களின் எழுச்சி யால் சைவமும் ஆழ்வார்களால் வைண வமும் எழுந்து சமண பவுத்த மதங் களை அழித்துவிட்டன, அந்த மத பள்ளிகளும், விகாரைகளும் சைவம் (திருப்பரங்குன்றம் மற்றும் திருச்சி மலைக்கோட்டை) மற்றும் வைணவ (அழகர்கோவில், தல்லாகுளம்) தலங் களாக மாற்றப்பட்டன.  அதிகார மய்யத்தின் மதமாற்றத்திற்கு பெண்கள் பெரிதும் காரணமாக இருந்ததை அனைத்து வரலாற்று நூல்களும் குறிப்பிடுகின்றன. சமண, சமய தலைநகரமாக விளங்கிய மதுரை சைவ சமய உறைவிடமாக மாறியதற்கு முக்கிய காரணம்  கூன்பாண்டியனின் மனைவி யான மங்கையர்க்கரசி என்ற மானி என்ற கோப்பெருந்தேவியார்  சோழச் சக்ரவர்த்தியின் மகளாவார், சைவ, வைணவ சமயங்கள் செழித்திருந்த காலத்தில் மன்னர்கள் நேரடியாக கோவிலின் உள்ளறைக்கு சென்று விக்ரகங்களுக்கு பூசைகள் நடத்தினர், இதற்கான எடுத்துக்காட்டாக கூன் பாண்டியனின் மனைவி தனது கையாலேயே அர்ச்சித்த மலர்களை பெண்டிருக்கு கொடுத்தார் என்ற பதிவே இதற்கு உதாரணமாக காண லாம், இதன் பிறகு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சைவ வைணவ மதங்கள் அதிகாரம் மற்றும் செல்வம் சேர்க்கும் ஆசையின் காரணமாக தங் களுக்குள் போட்டியிட ஆரம்பித்தனர். மத நம்பிக்கையில் அதீத பற்று கொண்ட மன்னர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில் யாகசாலைகள் மட்டும் கட்டிக்கொண்டு புரோகிதம் பார்த்த வைதீக பார்ப்பனர் தங்களது ஆதிக் கத்தை நிலை நிறுத்த திட்டமிட்டனர். இக்காலகட்டத்தில் வடக்கே மெல்ல மெல்ல முகமதிய மன்னர்களின் ஆளுமை துவங்கிய பிறகு பார்ப்பனர்கள் கோவில் தொடர்பான பணிகளை விட முகமதியமன்னர்களின் கையாள்களாக பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டனர். இதே நேரத்தில் தக்காண பீடபூமியில் முக்கியமாக சாளுக்கியர் மற்றும் விஜயநகர பேரரசர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த பார்ப்பனர்கள் மெல்ல மெல்ல தமிழகத்தை நோக்கி குடும்பமாக இடம்பெயர்ந்தனர். இதை தஞ்சைபல்கழைக்கழகத்தில் உள்ள பல செப்பேடுகள் உறுதி செய்கின்றனர்.
இவர்களின் பலர் ஆதிசங்கரரின் ஒன்றுபட்ட அத்வைத முறையை கற்றுக் கொண்டவர்கள், ஆதிசங்கரர் வைதீகத்தில் இங்குள்ள அனைத்து மதக்கொள்கையையும் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தார், இது சனாததன விதிகளின் படி இருந்ததால் வடக்கிலும் பிரபலமானது, முகமதியர்களின் அதிகார ஏஜெண்டுகளாக உருமாறி யிருந்த வடக்கத்திய பார்ப்பனியம் இதை முழுமையாக் ஏற்றுகொண்டது, இங்கிருந்து தான் பார்ப்பனர்கள் மாமிசம் கைவிடும் கொள்கை ஆரம்ப மானது.  இதை தீவிர சனாதனிகளான அகோரிகளும், வங்கப்பார்ப்பனர்களும் சாளுக்கிய ஆளுமைக்குட்பட்ட சில பார்ப்பனக்குழுக்களும் எதிர்த்தனர்.    தமிழகத்திற்குள் நுழைந்த பார்ப் பனர்கள் ஆதிசங்கரரின் அத்வைத முறையை பரப்பி முதல்முதலாக ஆலயங்களுக்குள் ஆலோசகர்களாக நுழைந்தனர். காலம் 8ஆ-ம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை இந்த 300 ஆண்டு காலத்தில் மிகபெரும் மாறுதல்களை தமிழகம் (மதவரலாற்றில்) காணத் துவங்கியது, ஆலோசகர்களாக நுழைந்த பார்ப்பனர்கள் முதலில் ஒரு கட்டத்தில் கருவறைக்குள் நுழைந்த உடன் முதலில் செய்தது, தமிழில் பூசைகள் நடை பெறுவதை நிறுத்தினர். அதன் பிறகு தாங்கள் கொண்டுவந்த வடமொழி பூசைகள் தொடர்கதையானது, அது வரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருந்த சைவ வைணவ தலைமை பண்டாரங்களும் பட்டர் களும் சிவாச்சார்களும் பின்னுக்கு தள்ளப்பட்டனர். பண்டாரங்களையும், பட்டர்களையும்  எடுபிடியாக மாற்றிக் கொண்ட பார்ப்பனர்கள் வருவாயைக் குறியாக்கொண்டு மாயவதம் மற்றும் யாகம் இதர என பெருவாரியாக செய்யத் துவங்கினர், இரக்கமற்ற முறையில் அதிகாரவர்க்கத்தை சூழ்ச்சி களின் மூலம் மடக்கி தங்கள் ஆளு மையை முழுமையாக தனதாக்கிக் கொண்டனர்.
சுமார் 300 ஆண்டு தொடர்ந்து நடந்து வந்த சூழ்ச்சி வெளியே தெரிந்த போது அதன் உண்மை முகம் மிகவும் கொடூரமாக இருந்தது. இந்த கால காட்டத்தில் ராசராசசோழன் மிகவும் பெருவாரியான புரோகிதர்களை தமிழகத்திற்குள் அழைத்து வந்தான், இது எந்த சூழ்ச்சியினால் நடைபெற்றது என்று இதுவரை புரியாவிட்டாலும், சோழர்களின் தொடர்போர் நடவ டிக்கை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் ஆகியிருக்ககூடும்,   அதிகார மையம் முழுவதுமாக கோவில் களுக்கு மற்றப்பட்டது, மூவேந்தர்கள் மட்டுமல்ல குறுநில மன்னர்களும் அரசபையில் பொது பிரச்சனைகுறித்து ஆலோசனை நடத்தியதாக 9-ம் நூற்றாண்டுகளுகு பிறகான பதிவுகள் மிகவும் அரியதாகவே காணப்படுகிறது. மக்களுக்கும் மன்னருக்குமான உறவு கிட்டத்தட்ட அறுந்துவிட்ட நிலை யில் மன்னருக்கும் பார்ப்பனர்களுக்கு மான உறவுஇறுகிவிட்டது, இதுதான் சோழப் பேரரசில் 10-ம் நூற்றாண்டில் அதிக அளவு பார்ப்பனர்கள் நுழைவ தற்கும் அவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்காத செல்வம் தருவதற்கும் காரணமாக அமைந்து விட்டதாக இருக்ககூடும் (வேறு எந்த காரணமாக இருந்தாலும் இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை)
கி.பி.10-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு கோவில்கள் உச்சநீதிமன்றங்களைப் போல் ஆனது, அங்கு மன்னரின் ஆணைக்கூட சொல்லாக்காசாகிவிடும், இதற்கு பெரிய எடுத்துக்காட்டு உடை யார்குடி கல்வெட்டில் கிடைக்கிறது. இராசராசரின் மகன் ஆதித்த கரிகாலனை கொலை செய்த பார்ப் பனர்களான ரவிதாசன், பரமேசுவரன், சோமன், மற்றும்  தேவதாசன் ஆகி யோர்களை தண்டிக்க பார்ப்பனர்கள் அடங்கிய குழு உடையார்குடி சிவன் கோவில் கூடி அவர்களுக்கு கொடுத்த தண்டனை இவ்வாறு 32 பசுக்கள், 12குடம் பொன் மற்றும் அவர்களுக்கு பணியாட்கள் ,ஆடைகள் கொடுத்து நாட்டு எல்லைவரை பல்லக்கில் வைத்து அழைத்துச்சென்று விட்டு விட்டு வரவேண்டும் என்று தீர்ப்பளித் தாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
பார்ப்பனர்கள் மாத்திரம் கோவில் பூசாரியாகும் எழுதாத சட்டம், பார்ப்பனர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள அரசர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குள் நுழையும் விதிகள், பிறர் கோவில் சுற்றுப்பிரகாரத்திற்கு வெளியே நின்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற நிலையும் சில மக்கள் பிரிவிற்கு கோவில் உள்ள தெருக்களில் கூட நுழையக் கூடாது என்ற நிலையும் உருவானது, இவ்வாறு தனது ஆதிக் கத்தில் கோவில் களை கைப்பற்றிய பார்ப்பனர்கள் தாங்கள் கொண்டுவந்த புராணம் மற்றும் இதர கதைகளை மேலும் பொய்களையும் கட்டுக் கதை களையும் புகுத்தி அவர்களாகவே விதிகள் எழுதத் துவங்கியது பலனாக இன்று வரை கோவில்களில் அருட்சக ராக உள்ளனர்.    ஆதாரம்:-தஞ்சை கல்வெட்டுகள் (சென்னை அருஞ்காட்சியகம்), இந்து மதக் கொடுங்கொன்மை வரலாறு (தவத்திரு தர்ம தீர்த்த அடிகளால்),
- இந்தியாவில் மட்டும் சாதி இருப்பது ஏன்? (வே.கன்னுப்பிள்ளை) அய்.ஏ.எஸ்.
-விடுதலை ஞா.ம.,7.9.13

கிருஷ்ணன் என்னும் காமக் கிறுக்கன்

-மின்சாரம்
கடவுள்கள் பிறக்கின்றனவாம். அப்படி என்றால் இந்தக் கடவுளைப் பெற்றவர்கள்தான் கடவுள்களா?
பெற்றவர்கள் கடவுள் என்றால் ஒவ்வொரு குழந்தையையும் பெற்றெடுத்த ஒவ்வொருவரும் கடவுள் ஆகிவிடவில்லையா?
கடவுள்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்பொழுது ஒன்றே கடவுள் என்ற உளறலை நினைத்து வாயால் எப்படிச் சிரிக்க முடியும்?
கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்லி அடிக்கும் லூட்டி இருக்கிறதே கொஞ்ச நஞ்சமல்ல.
கோகுலாஷ்டமி என்று கொண்டாடு கிறார்கள். சரி.. கிருஷ்ணன் பிறந்த தாகவே வைத்துக் கொள்வோம். அது கூட ஒரே மாதிரி இருக்க வேண் டாமா?
வசுதேவனுக்கும் தேவகிக்கும் பிறந்தவன் கிருஷ்ணன் என்று ஒரு கதை.
இன்னொரு கதை  இருக்கிறது; - கேட்கவே அசிங்கமாக இருக்கும். அதற்கு நாம் பொறுப்பல்ல. இந்தக் கதையைக் கட்டிய இந்துமத ஆபாசக் காரர்களே பொறுப்பை ஏற்க வேண்டும்.
தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது. இராட் சதர்கள் தொல்லை பொறுக்க முடிய வில்லை. அதைப் போக்க வலிமை யுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான்? (ஏதோ அவன் கையில் கிடைத்தது என்று வைத்துக் கொள்ளுங்களேன்!) தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத் தானாம்.
இந்த இரண்டு மயிரில் ஒன்று கருப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கருப்பு மயிர் கிருஷ்ண னாகவும், வெள்ளை மயிர்  அவன் அண்ணனாகவும் ஆயின என்று சொல்வது அபிதான கோசம்.
இந்த அசிங்கத்தைப் பற்றி யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது. கேட்டால் அர்த்தமுள்ள இந்து மதம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி வாயை அடைக்கப் பார்ப்பார் கள். அது சரி, உலகில் அதர்மம் பெருகி விட்டது என்று பூதேவர்கள் சொன் னார்களே _- அந்த உலகம் என்பது இந்தியா மட்டும் தானா? அமெரிக்கா, ஆப் பிரிக்கா எல்லாம் அந்த உல கில் அடங்கிடவில்லையா? அங்கெல்லாம் ராட்சதர்கள் தொல்லை கொடுக்கவில் லையா? என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள் -_ கோபம் பொத் துக் கொண்டு கிளம்பி விடும்.
இது ஒருபுறம் இருந்து தொலையட்டும்; இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை - எப்படிப்பட்ட பத்திரிகை? - எவ்வளவு விஞ்ஞான தொழில் நுட்ப சாதனங்களையெல்லாம் பயன்படுத்தி வண்ண வண்ணமாக பல பதிப்புகளாக வெளி வந்து கொண்டு இருக்கிறது.
அந்தப் பத்திரிகை கிருஷ்ணன் பிறந்த தேதியை, (Date of Birth) வெளி யிட்டுள்ளது என்றால் சாதாரணமானதா?
கடந்த 28ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினார்களே _- அது கிருஷ்ணனின் 5125ஆம் ஆண்டு பிறந்த நாளாம். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.8.2013).
ஆகா! எப்படிப்பட்ட ஆராய்ச்சி! அந்த இங்கிலீஷ் ஏடு கிருஷ்ணக் கடவுளின் பராக்கிரமங்களை எப்படி எல் லாம் எழுதித் தள்ளி இருக் கிறது. கொஞ்சம் பொறுமையாகப் படியுங்களேன். (நாங்கள் படித்த துன்பத்தை நீங்களும் அனுபவிக்க வேண் டாமா?)
இதோ, இந்தியன் எக்ஸ் பிரஸ் எழுதுகிறது; -படிக்கவும்.
இந்த நாட்டு மக்கள் கிருஷ் ணனின் வரலாறு என்ற நிலைப்பாடுபற்றி ஒரு நாளும் அய்யங் கொண்டதில்லை. காலனி படையெடுப்பாளர்கள் கிருஷ்ணனை ஒரு இதிகாச கதாநாயகன் ஆகக் காட்டிப் பல கட்டுக் கதைகள் புனையும் வரை.
நம் நாட்டில் சில புகழ் பெற்ற, ராமன், கிருஷ்ணன், புத்தர், மகாவீரர், சங்கரர் போன்ற எல்லோருக்கும் தெரிந்த, புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ள நிகழ்ச்சிகளின், பாத்திரங் களின், அவர்களைச் சுற்றி நடந்துள்ள நூற்றுக்கணக்கான,  கோடிக்கணக்கான வருடங்களுக்கு முந்திய கால கட்டத்தை நிர்ணயிப்பதற்கு தொல். துறை வானவியல் துறைகள், பெரும் இதிகாசத் தலைவர்களின் வாழ்வு பற்றி அறிய பல புதிய எல்லைகளைக் கடந்து வந்துள்ளன.
புராணங்களின்படி  கடவுள் கிருஷ்ணன் நள்ளிரவில் பிறந்தவர். அந்த இரவு, சந்திரனின் எட்டாம் இடத்தில் உள்ள அஷ்டமித்திதி சந்திரன் ரிஷப (எருது) அருகில் உள்ளது. பிறந்த நட்சத்திரம் ரோகிணி; மாதம், சரவண.
இந்த விவரங்கள், கிருஷ்ணனின் வாழ் நாட்களில் இருந்த வான்வெளி நிலைகளைப் பற்றி, மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளைக் கொண்டு நாம் கிருஷ்ணனின் பிறந்த நாளை அறிகிறோம். அந்த முயற்சியின் விளைவாக, ஆங்கிலக் காலண்டர் படி கிறிஸ்துவின் பிறப்புக்கு முன் 3112 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 27ஆம் தேதி என்று கணிக்கப்படுகிறது.
இந்திய வழக்கப்படி கிருஷ்ணனின் பிறப்பு ஸ்ரீஜெயந்தி என்றும் அழைக் கப்படுகிறது. இந்திய வானவியலில் ஜெயந்தி என்ற சொல்லிற்கு சுவை யான ஒரு காரணம் இருக்கிறது. சில விண்மீன்களுக்கு ஏற்படும் சந்திர இடைவெளிகளுக்கு இந்திய வானவிய லாளர்கள் சிறப்புப் பெயர்களைக் கொடுத்து உள்ளனர். மிதுன கோள் கட்டமைப்பில் புனர்வசு நட்சத்திரத்தின் சந்திர நிலை ஏற்படும்போது ஜெயா என்று அழைக்கப்படுகிறது.
மிதுன கட்டமைப்பில் புஷ்ய நட்சத்திரத்தில் சந்திர நிலை ஏற்படும் போது, அதற்கு நசினி என்று பெயர். விருச்சிக கட்டமைப்பில் சரவண நட்சத்திரத்தில் சந்திரன் ஏற்படுவதற்கு விஜயர் என்று பெயர். அதேபோல ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் நிலை ஏற்படும்போது அதற்கு ஜெயந்தி என்று பெயர்.
(‘Indian Express’ 27.8.2013)
சந்திரன் ரோகிணி நடசத்திரத்தில் இருந்தபோது நிகழ்ந்த கிருஷ்ணன் பிறப்பு ஜெயந்தி என்று அழைக்கப் படுகிறது. கிருஷ்ணனிடம் தொடர்பு இருந்த காரணத்தால், ஜெயந்தி மிகவும் பிரபலமடைந்தது.
பல நூற்றாண்டுகாலமாக, ஆண்டு தோறும், இந்தியர்கள் கிருஷ்ணனின் பிறந்த தினத்தை சரவண மாதத்தில், ரோகிணி நட்சத்திரத்தில், கிருஷ்ண பட்ச அஷ்டமியில், (தேய்பிறைச் சந்தி ரனின் 8ஆம் இடம்), புராணங்களின் அடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இருந்தாலும் பொது அறிவிற்கு, பிறந்த ஆண்டு என்னவென்று தெரிய வில்லை.
தொல்லியல் வானவியல் தவிர, பல வழிகளிலும் கிடைக்கப் பெறுகிற புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கிருஷ்ணன் கிறிஸ்து பிறப் பதற்கு முன், 3112 ஆண்டுகளுக்கு முன் பிறந்துள்ளான். ஆகவே 2013ஆவது ஆண்டு, கிருஷ்ணனின் பிறப்பிலிருந்து 5125 ஆண்டுகளாகிறது.
கடவுள் கிருஷ்ணனின் 5125ஆவது பிறந்த நாளை, இந்தியாவின் மிகவும் நேசிக்கப்பட்ட கடவுள், உண்மை யிலேயே ஒரு வரலாற்று நாயகன் என்றும் 5000 ஆண்டுகளுக்கு முன் பேயே நமது கோளுக்கு வந்துள்ளார் என்று அறிந்து கொண்டாடுவோமாக.
எக்ஸ்பிரஸில் இப்படி எழுதியவர்கள் D.K. ஹரி, D.K. ஹேமா ஹரி, பாரத் ஞானம் நிறுவனர்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் இந்தக் கட்டு ரையை எழுதியவர் கூறும் வானியல் விஞ்ஞானம் எந்தத் தரத்தைச் சார்ந்தது என்பதைச் சம்பந்தப்பட்ட வானியல் அறிவியலாளர்கள் தான் சொல்ல வேண்டும்.
சூரியன் என்ற நட்சத் திரத்தை கோள் என்னும் பட்டியலில் அடைத்து வைத்துள்ள இந்தப் புராண அறிஞர்கள் எந்த எல்லைக்கும் சென்று எந்த அளவுக்கும் புளுகக் கூடியவர்கள்தாம்.
இந்த அற்புதங்களை எல்லாம் பயன்படுத்தி ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் ஏட்டை அச்சிட்டுக் காட்டச் சொல் லுங்கள் பார்க்கலாம். (அறிவைக் கெடுப்பவர் களுக்குத் தூக்குத் தண் டனை கொடுக்க வேண் டும் என்று தந்தை பெரி யார் கூறியது எவ்வளவுத் துல்லியமானது என்பதை அறிந்து கொள்க!)
இந்தக் கடவுளுக்கு உள்ள தனித் தன்மைகள் இருக்கின்றனவே - அவை மிக மிக அசாதாரண மானவை!
சின்ன வயதில் வெண் ணெயைத் திருடித் தின்ற வனாம்;  வாலிப வயதில் பெண்ணைத் திருடிய வனாம் (கடவுள் என்றால் இப்படி யல்லவா இருக்க வேண்டும்!)
திருட்டைக் கடவுள்மூலம் தேசிய மயமாக்கியவர்கள் இந்த இந்துத்துவ வாதிகள் தான் - _ எக்ஸ்பிரஸ் பத் திரிகை வகையறாக்கள்தாம்.
இந்தக் கிருஷ்ணன் அவதாரத்தில் திருக்கல்யாணக் குணமே கோபிகைகளோடு கொஞ்சுவது தான்! ஒரு பெண் இரு பெண் அல்ல. அறுபதனா யிரம் கோபிகைகளோடு கொஞ்சக் கூடிய காமக் கே()டியாம்.
ஒரு படம் இதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் மாட்டப்பட்டு இருக்கும். இப்பொழுது அந்தப் படத்தை அதிகம் காண முடியவில்லை (தந்தை பெரியார் பிரச்சாரத்தின் காரணமாக வெட்கப்பட்டுக் கழற்றி எறிந்திருக்கலாம்).
பெண்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருப்பார்கள்; கடவுள் கிருஷ் ணன் இருக்கிறானே - அவன் என்ன செய்வான் தெரியுமா?
கரையில் துணிகளைக் கழற்றி வைத்து விட்டுப் பெண்கள் குளிக்கப் போனார்கள் அல்லவா! அந்தத் துணிகளைத் திருடிக் கொண்டு போய் மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு குளிக்கும் பெண்களை ரசித்துக் கொண்டிருப்பான் அந்தக் கிருஷ்ணன் என்னும் கடவுள்.
பெண்கள் கெஞ்சிக் கூத்தாடி துணிகளைக் கேட்டபோது, கரைக்கு வந்து இரு கைகளையும் தூக்கிக் கும் பிட்டுக் கேட்க வேண்டும் என்றவன் தான் இந்துக்களின் முக்கிய கடவுள்.
இந்தக் காட்சியைப் படமாக்கி வீட் டுக்கு வீடு மாட்டி வைத்திருந்தார்களே.
ஆபாசத்தைப் பக்தி என்று அள்ளிப் பருகிய இந்தக் கேவலத்தை என்ன சொல்ல!
இந்தக் கிருஷ்ணன் என்ற கடவுள் கற்பிக்கப்பட்டதே கவுதம புத்தருக்குப் பிறகுதான்.
யாகக் கலாச்சாரத்தை எதிர்த் தவர் கவுதம புத்தர்; ஒழுக் கத்தைப் போதித்தவர் அந்த உத்தமபுத்திரன். மன்னர் குலத்தில் தோன்றிய அந்த மதி வாணரின் பிரச்சாரத்தால் பார்ப்பன ஆதிக்கம் குடை சாய்ந்து விழுந்தது. வருணா சிரமம் விழுந்து  விட்டது! உயிர்ப் பலி யாகங்கள் மக் களால் வெறுத்தொதுக்கப்பட் டன. கவுதம புத்தரின் கருணை வெள்ளத்தில் மக்கள் நீந்தி மகிழ்ந்தனர். ஆரியக் கலாச் சாரம் ஆயிரம் அடிக்கும் கீழே புதைக்கப்பட்டது.
இந்த ஒழுக்கச் சமூக அமைப்பைச் சீர்குலைக்க காமத்தை முன்னிறுத்திக் கற்பிக் கப்பட்டவன் இந்தக் கிருஷ்ணன் என்னும் கற்பனைப் பாத்திரம்.
வண்டி வண்டியாக கதை களைக் கிளப்பி விட்டார்கள். இன்றைக்கும் சினிமா கலாச் சாரம் கிளம்பி இளைஞர்களைத் தம் வலைக்குள் இழுத்து மூடிக் கொள்ளவில்லையா? இந்த யுக்திதான் அன்று கிருஷ்ண அவதாரமாக ஆக்கப்பட்டது.
இந்தக் கிருஷ்ணன் தான் கீதையை  அருளியவனாம்! கொலையைத் தருமமாக உப தேசித்தவன். தன் சுற்றத்தாரைக் கொலை செய்வதற்கு அர்ச் சுனன் தயங்கியபோது கொல்லு; கொலை செய்யத் தயங்காதே! நீ அழிப்பது உடலைத் தான் _ ஆத்மா வையல்ல என்று கொலையை ஒரு கருத்தாக்கமாக உபதேசித்த உபத் திரக்காரன் தான் இந்தக் கிருஷ்ணன்.
இந்தக் கீதா உபதேசம்தான் இந்தியாவில் ஆன்மா என்று அடே யப்பா எப்படியெல்லாம் பிரச்சாரப் புழுதியைக் கிளப்பி விட்டார்கள்.
நம்மூர் மார்க்ஸிஸ்டு தலைவர் ஈ.கே. நாயனார்கூட (கேரள முதல் அமைச்சர்) கீதையைக் கொண்டு போய் போப்புக்குக் கொடுக்கிற அளவுக்குப் புத்தியைத் தடுமாற வைத்து விட்டார்களே. பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (கீதை அத்தியாயம் 18 சுலோகம் 441) என்று சொல்லும் கீதையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் கீதை வழி நடப்போம் என்று ஒரு பெண் முதலமைச்சரையே சொல்ல வைத்து விட்டார்களே!

புத்தர் கொள்கையை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை
புத்தர்பிரான் அறமொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறர் மனைவியை விரும்பாதே என்பது; இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணாவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக்கட்டிப் பரப்பப்பட்டது. காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே கிருஷ்ண லீலா கதையின் நோக்கம்.
புத்தர் கொள்கைகளின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது.
_ (என்சைக்ளோபீடியா- பிரிட்டானிகா)

-விடுதலை ஞா.ம.,31.8.13

திங்கள், 9 நவம்பர், 2015

கிறித்துவத்தில் இப்படி ஒரு கொடுமையா?


கிறித்துவ இல்லத்தரசிகளை ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்காக ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது; விவிலிய நூல் விதித்தவாறு நடந்தே றிய திருமணங்கள் முறியாமல் பார்த் துக் கொள்வது இந்த அமைப்பின் பொறுப்பாம். இதற்காக இந்த அமைப்பு பரிந்துரைப்பதெல்லாம் வேறொன்றுமில்லை; சிறுவர்களுக்கு அளிக்கும் தண்டனையைப் போல மனைவிமார்களின் பிட்டத்தில் கணவர்கள் அடிக்க வேண்டுமாம்.
இந்த இயக்கத்தைப் பின்பற்றும் ஒரு கணவன் கடவுளுக்குப் பயந்த தனது மனைவியை எந்தப் பொருள் கொண்டும் அடிக்கலாம் என்று முடிவு செய்வதில் கணவன் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியமாம். எடுத்துக் காட்டாக தலைமயிரைப் படிய வைக்கப் பயன்படுத்தும் பிரஷ் மனைவியை அடிப்பதற்கு மிகவும் பொருத்தமானதுதான்; என்றாலும் அது எளிதில் உடைந்துபோகுமே. அதற்கு மாற்றாக, டேபிள் டென்னிஸ் மட்டை மிகவும் பொருத்தமானதாக வும், எளிதில் உடையாத உறுதி கொண்டதாகவும் இருக்கும். ஆனால் மனைவிமார்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கத் தேவையான வலியை அந்த மட்டையால் அடிப்பது ஏற்படுத்தாமல் போய்விடக்கூடும்.
இந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் செயல் முறைகளை விவரிக்கும் 54 பக்க ஆவணம்  ஒன்று இந்த அமைப்பில் புதியதாக சேர்பவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள,  தேவையான ஆலோ சனைகள், குறிப்புககளில் மேற்கூறிய தகவல்களும் அடங்கியுள்ளன.
இந்த ஆவணத்தைத் தயாரித்த வர்கள் இந்த அமைப்பினைப் பற்றி கீழ்க் குறிப்பிட்டவாறு விவரிக்கின் றனர்:
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவரது ஆலோசனையை மற்றவர் ஒப்புக் கொள்ளும் இல்லற வாழ்க் கையின் பங்குதாரர்களான கணவன், மனைவியிடையே பின்பற்றப்படும் செயல்முறைதான்  இல்லத்தரசிகளை ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கான இந்த இயக்கம். வீட்டின் தலைவர், அதாவது கணவர் ஆரோக்கியமான, உரமும் ஊக்கமும் வாய்ந்த உறவு முறையை வென்றடைவதற்குத் தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள் வார்.  தேவையற்ற தீயொழுக்கத்தைப்  பங்களிப்பவர்களைத் தண்டிப்பதன் மூலம்,   ஆபத்து நிறைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் விளைவுகள் ஏற்படாமல் குடும்ப உறுப்பினர் களைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான குடும்ப சூழலை உருவாக்கவும்,  குடும்பத்தின் மேம்பட்ட நன்மைக் காகவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குடும்பத் தலைவரின் கடமையாம்.
பிட்டத்தில் அடிப்பதா?
ஒழுங்குமுறையிலான கிறித்துவ இல்லத்தை நிலை நாட்ட பிட்டத்தில் அடிப்பது, உரிமைகளை மறுப்பது, சிறிது நேரத்துக்கு ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதிக்க மறுப்பது போன்ற தண்டனைகள் அளிக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டதே இந்த இயக்கம்  என்று அதன் இணையதளம் தெரிவிக் கிறது. விவிலிய நூலில் விவரித்துள்ளபடி அதிகாரம் செலுத்துபவர் கணவனாகவும், அடிமைபோல் கீழ்ப்படிந்து நடப்பவர் மனைவியாகவும் இருப்பர் என்று அந்த இணையதளம் தெரிவிக்கிறது. பாலியல் நுகர்வில் மனநிறைவை எட்டுவதற்கான வழியாக இந்த பிட்டத்தில் அடித்தல் மற்றும் அதனைப் போன்ற இதர தண்டனைகளை  பிடிஎஸ்எம் சமூகத் தின் பிரிவு ஒன்று பயன்படுத்துவதாகக் கூறி இந்த விளக்கங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் வெளியாட்கள் சிலரும் உள்ளனர். பிட்டத்தில் அடிப் பது பற்றிய இணைய தளம் அல்ல இது;  அதே போல் இது ஒரு ஆண், பெண் இணைப்பு சேவையும் அல்ல. தனிப் பட்டவர்களின் விளம்பரம், எரிச்சலூட் டும் பிதற்றல்கள், பாலுணர்வு தூண்டு தல்  அளிக்கும் கதைகள் அல்லது மாறுபட்ட வாழ்க்கை முறைகளைத் தெரிவிப்பதும் அல்ல என்று இந்த அமைப்பின் இணையதளம் தெரி விக்கிறது.
வெளிச்சத்துக்கு வந்தது!
இத்தகைய சமூக அமைப்புகளும், அவற்றின் இணையதளங்களும் பல ஆண்டு காலமாக இருந்து வருகின்றன. அன்றாட மிருகம்  (Daily Beast) என்ற இதழில் இந்த அமைப்பைப் பற்றி அண்மையில் வெளிவந்த செய்தி இந்த இயக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இத்தகைய வாழ்க்கை முறையைப் பின் பற்றும் கணவன் மனைவியர் ஆயிரக்கணக்கில் இருப்ப தாகக் கூறும் இக்கட்டுரை, இந்த அமைப்பின் செயல்பாடுகள் பற்றி தெரிவிக்கும் ஆலோசனைக் கையேட் டினைத் தயாரித்து வெளியிட்ட செஸ்லா மற்றும் கிளின்ட் ஆகியோரி டம் நேர் காணலுடன் இக்கட்டுரை வெளிவந்துள்ளது.  ஒரு ஆக்க பூர்வமான வாழ்க்கை முறையாக இந்த இயக்கத்தை விருப்பத்துடன் பின்பற்றும், கணவன் மனைவியரிடையே செஸ்லா மற்றும் கிளின்ட் போன்றோர் பலர் உள்ளனர். இந்த இயக்கத்தைப் பற்றி  தான் புலன் விசாரணை செய்தபோது பெரும் பாலான பெண்கள் இந்த இயக்கத்தைப் பற்றி ஆக்கபூர்வமான கருத்தை எழுதி அனுப்பியுள்ளனர் என்று  லாரா ருபினோ என்பவர் தெரிவிக்கிறார்.
தண்டனை அளிக்கப்பட்ட பின் தாங்கள் மிகுந்த அமைதியுடன் இருப்பது போல் உணர்வதாக பலரும் தெரி வித்துள்ளனர். மனைவி மற்றும் அவர் களது திருமணம் பற்றி கணவன் எடுத்துக் கொள்ளும் அக்கறையின் வெளிப்பாடே இது என்றும், அவர்களின் நடத்தையை மாற்றிக் கொள்ள இதுவே போதுமானது,  பிட்டத்தில் அடி பட்ட பிறகு தாங்கள் தூய்மை அடைந்தவர்களாக மனைவி மார்கள் உணர்கின்றனர், இத்தகைய தண்டனை அளிக்கப்படுவதன் மூலம், தீர்க்கப்படாமல் இருக்கக் கூடிய பிரச்சினை பற்றிய ஒரு விவாதத்தை மேற்கொள்ளும்  பதற்றமும், கவலையும் கொண்டவர்களாக மனைவிமார்கள் இருக்கத் தேவையில்லை என்று ரூபினோ எழுதுகிறார்.
என்றாலும், தங்களை அச்சுறுத் துவதாக அமைந்துவிட்ட  குடும்ப வாழ்க்கையில் தாங்கள் சிக்கிக் கொண்டது போல சில பெண்கள் உணருகின்றனர் என்பதற்கான ஆதாரங்களை டெய்லி பீஸ்ட் இதழ் தேடிக் கண்டு பிடித்து வெளிக் கொண்டு வந்துள்ளது.
ஒரு கணவன் மனைவியரிடையே ஒரு நியாயமான, சரியான உறவு முறையை ஏற்படுத்திக் கொள்ளும் வழியாக இதனை நல்ல மன நிலையில் உள்ள எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்; முட்டாள்கள் மட்டுமே ஒப்புக் கொள்வார்கள்,   மனைவியை ஒரு குழந்தை போல நடத்தும் இந்த உறவு முறை அறிவுக்குப் பொருந்தாத, உணர்ச்சிகளுக்கு அடிமையாகக் கூடிய மக்கள் பலரை நிச்சயமாகக் கவர்ந் திழுக்கக்கூடியதே என்று கிறித்தவக் குடும்பங்களில் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதைப் பற்றிய விவகாரத் தில் நிபுணரான, தடயவியல் மனோ இயலாளர் ஜிம் ஆல்ட்ஸ்ரஃப் கூறுகிறார். குடும்பத்தினை உண வளித்துக் காக்கும் பொறுப்பு ஆண்களுக்கு இருப்பதால், அவர்களே குடும்பத் தலைவர்கள் என்று பைபிள் கூறுவதாக,  முரண்பாடு மிகுந்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பிரியான் பிஷர் கூறினாலும், மனைவி களை ஒழுக்கப்படுத்தும் இந்த இயக் கத்திற்கும் பைபிளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.
பைபிளில் எங்கே இருக்கிறது?
ஒரு மின் அஞ்சலில் அவர் கூறு கிறார்: இந்த இயக்கத்தின் செயல் பாடுகளும், பிரச்சாரமும் மிகுந்த அச்சம் தருபவையாக, வழக்கத்திற்கு மாறானவையாக, திரித்துக் கூறப் பட்டவையாக, பைபிளுக்கும், கிறித்துவ மதக் கோட்பாடுகளுக்கும் மாறான வையாக உள்ளன, தங்கள் மனைவி களுக்காக கிறித்துவ கணவர்கள் தங்கள் உயிரையே தருவார்கள் என்று பைபிள் கூறுகிறது. நிலையான வாழ்க்கையின் பரிசாக பெண்களை மரியாதையுடன் சக வாரிசுகளாக நடத்த வேண்டும் என்றும் பைபிள் கூறுகிறது என்று அவர் கூறுகிறார். மனைவிகள் தங்கள் கணவர்களின் தலைமையின் கீழ் தங்களைத் தாங்களே உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புதிய ஏற்பாடு கூறுகிறது. ஆனால் மனைவி கீழ்படிந்தவராக இருக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. கணவனுக்கு மனைவி கீழ்ப்படிய வேண்டும் என்றோ, அவ்வாறு கீழ்ப்படிய மறுக்கும் மனைவியை கணவன் தண்டிக்கலாம் என்றோ பைபிளில் எந்த இடத்திலும் சொல்லப்பட்டிருக்கவில்லை என்று பிஷர் கூறுகிறார்.
இந்த இயக்கத்தைப் பற்றிய பிரச்சாரக் குரல் பலத்து ஒலிக்கும் போக்கு அமெரிக்காவில் உள்ள சில பிற்போக்கு மனப்பான்மை கொண்ட கிறித்துவர்களிடம் வளர்ந்து வருகிறது.
மனைவியைத் தண்டிக்கும் இத்தகைய வாழ்க்கை முறையைக் கண்டித்து  கேள்வி கேட்பவர்களுக்கு இந்த வாழ்க்கை முறையைப் பின் பற்றுபவர்கள் இதனை தங்களது ஆன் மீகத்தின் ஒரு நீட்சியாகக் காண்பதாகக் கூறுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
தாங்கள் விரும்பும் எந்த ஒரு வழியிலும் தங்களது மதத்தைப் பின்பற்றவும், பைபிளுக்குத் தங்களின் வழியில் விளக்கம் கூறுவதற்கும் தங்களுக்குத் தகுதியும், உரிமையும் உள்ளது. கணவனுடனான தங்கள் உறவில் இத்தகைய தண்டனை மூலம் ஒழுக்கப்படுத்தப்படுவதை மனைவிகள் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர் என்று மெக்கான் ஸ்டகல் எழுதுகிறார்.
இந்த வாழ்க்கை நடைமுறையைச் சுற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடைகள் தெளிவின்றி உள்ளன. இவற்றின் பாதிப்புகள் என்ன என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
-விடுதலை ஞா.ம.,6.7.13

எத்தனை முட்டாள்கள்?

இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களில் இன்னமும் எத்தனை முட்டாள்கள் திவசம் செய்கிறீர்கள். உன் அப்பன் செத்தான்.
நீதானே குழியில் போட்டுப் புதைத்தாய்?
தீயிட்டுக் கொளுத்தினாய்? அதன்பின் எதற்காக உன் அப்பனுக்குத் திவசம் கொடுக்கிறாய்?
செத்தவன் நரகத்திற்குப் போகிறான்.
சொர்க்கத்திற்குப் போகிறான் என்கிறபோது  மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பது பித்தலாட்டந்தானே? இதன் மூலம் காசு கொடுப்பவன், நாமாகவும், காசு பெறுபவன் பார்ப்பான் தானே?
- தந்தை பெரியார்
(பெரியார் களஞ்சியம் தொகுதி 19 300ஆம் பக்கத்தில் இருப்பது)


-விடுதலை ஞா.ம.,20.7.13

பூசாரிகளின் யோக்கியதை!

இந்துமத அறக்கட்ட ளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் ஆண்டு நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக் கையை 1962ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன.
நாங்கள் தேசத்தின் பல்வேறு  பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது.
அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறை யாக படித்தவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதிவிலக்குகள் உள்ளன. இந்த விதிவிலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.
பொருளறியாத புலம்பலே மந்திரம்!
அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது.
தெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களிடத்திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலை யில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை.
சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?
ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழி பாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப்படுகிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.
தெய் வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை.
மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார். தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை, எந்தவகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.
-விடுதலை,2.10.15

ஞாயிறு, 1 நவம்பர், 2015

பிள்ளையாருக்கும் நமக்கும் தொடர்பு உண்டா?


பிள்ளையார் யார்? அறிஞர்கள் பார்வையில்....

மராட்டியர்களின் தனிப் பெருங் கடவுள் விநாயகர். அவர்களது தேசியத் திருவிழா விநாயகர் சதுர்த்தி. பம்பாய் சேட் டுகள் வருமுன்பே அவர்கள் நாட்டுக் கடவுள் தமிழ் நாட்டில் புகுந்து தெருக் கோடி, ஆற்றோரம், குளக் கரை, அரச மரத்தடி மற்றும் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களையும் ஆக்கிரமித் துள்ளது.
தமிழகத்துக்குள் நுழைந்ததெப்படி?
சோழ சாம்ராஜ்யத்தில் அமைச்சராக இருந்த சேக் கிழார் - சிறந்த வீரனான சிறுத்தொண்டர் படை யுடன் வடக்கே சென்று வாதாபியைக் கைக் கொண்ட வரலாற்றை பெரிய புராணமாகப் பாடுகிறார்.  கிபி.641 -_ 642ல் மகாபுலி புரத்து மன்னன் நரசிங்கவர் மனின் படைத் தளபதியே சிறுத் தொண்டர் வாதாபியை வென்றவர். கணபதிக்கு வாதாபி கணபதி என்பதும், வாதாபி வெற்றியே கணபதீச் சுரம் கோயில். அன்று முதல் கணபதி திரு விளையாடல் தமிழ்நாட்டில் வளரத் தொடங்கியது.
மதுரைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அறிஞர் தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் கூறு கிறார், தொல்காப்பியத்தைப் பார்க் கிறேன், வேழமுகனைக் காணோம். சங்க நூல்களில் தும்பிக்கை ஆழ்வார் தோற்ற மளிக்கவில்லை. மணிமேகலை, சிலப்பதி காரம், பதினெண்கீழ்க்கணக்கு எனப் பழங்காலத்திலிருந்து புதுக்காலம் வரை எங்கும் பிள்ளையார் காணவில்லை. கபிலர் பிள்ளையார் இரட்டை மணி மாலை பாடியது. சங்க காலக் கபிலர் அல்ல என்பது தெளிவு. கரிய தேவ நாயனார் என்பவரே அதீப்பாடலைப் பாடியவர். முதன் முதலில் கணபதி என்ற பெயர் கேட்கப்படுவது கணபதிச்சுரம் என்ற கோயிலைக் கட்டிய சிறுத் தொண்ட நாயனார் காலத்தில்
சிவன் யார்? முருகன் யார்? கைலாயம் என்பது கோயில் என்பதன் திரிபு சிவன் என்பது சிவந்தவன் என்னும் பொருள் தரும் தனித் தமிழ்ச்சொல். பண்டையோர் இப்பெயரை ஆதியில் ஞாயிறுக்கிட்டு வழங்கினர். எனவே ஞாயிறு அதாவது சூரிய வழிபாடே தமிழர் வழிபாடு. முருகன் என்பதற்கு இளையவன், அழகு என்றும், இள ஞாயிறே முருகன் எனப்பட்டது. ருத்திரன் என்பது சிவன் என்பதன் வடமொழி (தமிழர் சரித்திரம் ந.சி. கந்தையா).
சூரிய வழிபாடும் இயற்கை வழிபாடும் வழிவந்த தமிழகத்தில் பிள்ளையார் புகுந்து, சிவனுக்கு மகனாகவும், முருக னுக்கு அண்ணனாகவும் புகுந்தது தமி ழகத்தில் சமயத்தில் ஆரிய ஊடுருவலால் தான்.
தமிழகத்தில் பிள்ளையார் வணக்கம் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வந்தது. அதற்குமுன் பிள்ளையார் பெயர் இல்லை. கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குமுன் உள்ள சுவடிகளிலும்  பிள்ளையார் சுழி காணப்படுகிறது. தமிழகத் தில் ஓலையில் எழுதும் பழக்கம் சுமார் 2000 ஆண்டு களுக்குமுன்பே தோன்றியிருக்கிறது. ஓலை காய்ந்திருந்தாலும் பச்சை யாக இருந்தாலும் எழுத் தாணி கூர்மையாக இருந்தாலும் மொக்கையாக இருந்தாலும் எழுத வராது. அதை பதத்தைப் பார்க்க ஒரு சுழியையும், கோட்டையும் இழுத்துப் பார்ப்பதுண்டு. இதுவே பிள்ளையார் சுழி ஆகி யிருக்க வேண்டும் (கி.ஆ.பெ. விசுவநாதம்) பிள்ளையார் பிரம்மச்சாரியா? இவர் சித்தி, புத்தி, வல்லபை மற்றும் விஷ்ணுகுமாரி களான மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரணம், மங்கலை, கேசனி காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலிய பெண்களை மணந்தவர்.
மேலும் இறைவன் உலகையும் உயிர்களையும் உற்பத்தி செய்ய நான் முகனைப் படைத்தார். பிரம்மாவுக்கு உயிர்களைப் படைப்பதெப்படி என்று புரியவில்லை. அவருக்கு அருள்புரிய ஆனை முகன் வடிவில் ஆண்டவன் வந்தான். அறிவினைத் தூண்டும்படியான புத்தி, காரியத்தை முடிக்க சித்தி என்ற இரு சக்திகளைப் பிரித்து பிரமனிடம் அனுப்ப தன் புதல்விகளாக அவர்களை ஏற்றுக் கொண்ட பிரமன் படைக்கும் தொழிலை ஆரம்பித்தார். தொழிலை முழுதுவமாக உணர்ந்து கொண்ட பிரம்மா, பிள்ளையாரிடமிருந்துபெற்ற சக்திகளை திரும்ப அவரிடமே சேர்க்க எண்ணி திருமணம் என்ற பெயரில் செயல்படுத்த விரும்பினார். சித்தி, புத்தி திருமணம் விநாயகருக்கு நடந்து சுபம், லாபம் என இரு குழந்தைகள் பிறந்தன.
மேலும் பிள்ளையார் பிறப்பு, அசுரனை அழித்து மூஷிகனை வாகன மாக்கியது போன்ற ஆபாசங்கள் கணக்கிலடங்கா.
அதைத்தான் தந்தை பெரியார் சொல்கிறார், தமிழிலிருந்து சைவ வைணவ போன்ற சமயத் தொடர்பான வடமொழிகளை எடுத்து விட்டால் பெரும்பாலான மூடப் பழக்கங்கள் ஒழிந்துபோகும். மதத்துக்கும் அது தொடர்பான மூடப்பழக்கங்களைக் குறிப்பதற்கும் வடமொழியில் தான் சொற்கள் இருக்கின்றன. தமிழில் இல்லை
தமிழ்நாட்டில் பிறந்து, தமிழே வீட்டில் பேசி, தமிழராகவே வாழ்ந்த வடமொழி அறிஞர்கள் தமிழ் நூல் களைப் புறக்கணித்தார்கள். தமிழை நீச பாஷை என்றும் வடமொழி தேவபாஷை என்றும் எந்த நூலிலாவது உயர்ந்த கருத்துக்கள் இருந்தால் அது வடமொழியி லிருந்து கடன் வாங்கப்பட்டது என்றும் தமிழ் நூல்களைப் படிக்காமல் புறக் கணித்தார்கள் என்ற டாக்டர் மு.வ. அவர்களின் கருத்துரையையும் நோக்குக.
ஆரியப் பண்டிகையைத் தவிர்ப்போம்!
- சிவ. பாலசுப்ரமணியன், கண்ணந்தங்குடி மேலையூர்
விடுதலை ஞா.ம.16.8.14

உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கில் ஆதிசங்கரரின் சமாதியும் போச்சே!



டேராடூன், ஜூன் 23- உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், ஆதிசங்கரரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக, அங்கிருந்த பக்தர்கள் தெரிவித்துள் ளனர்.
கேரள மாநிலம் காலடியில் பிறந்தவர், ஆதிகுரு சங்கராச்சார்யா என, அழைக்கப்படும், ஆதிசங்கரர்.  பல சமய நூல்களுக்கு விளக்க வுரை எழுதியவர். இந்திய துணைக் கண்டம் முழுவதும் பயணித்து, அத்வைத பீடங்களை நிறுவியவர். இவரின் சமாதி, உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோவிலின் பின்புறம் இருந்தது. இது, எட் டாம் நூற்றாண்டில் கட் டப்பட்டதாக கூறப்படு கிறது. சமீபத்தில், உத்தர கண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இந்த சமாதியும், அடித் துச் செல்லப்பட்டு விட் டதாக, அங்கிருந்தவர் கள் தெரிவித்துள்ளனர். கேதார்நாத் கோவிலில், அர்ச்சகர் ஒருவர் கூறிய தாவது:கடந்த ஞாயிறு இரவில், பலத்த மழை பெய்தது. இதுவரை, இப்படிப்பட்ட மழையை, நான் பார்த் தது இல்லை. நேரம் செல்ல செல்ல, மழை வலுத்தது. கோவிலின் அருகே செல்லும் மந்தா கினி ஆற்றில், வெள்ளம் கரை புரண்டோடியது.
கரையை கடந்து, கோவில் இருந்த பகுதிக்குள்ளும், வெள்ள நீர் புகுந்தது. மிகுந்த வேகத்துடன் வந்த வெள்ளப் பெருக்குடன், சகதியும் சேர்ந்து வந்த தால், கோவிலின் பெரும் பாலான பகுதி, சகதி யால் மூடப்பட்டது. உயிரை பாதுகாத்து கொள்வதற்காக, அங் கும், இங்கும் ஓடினோம். அங்கே, பாதுகாப்பான இடம் என்று, எதுவுமே இல்லை. கோவிலின் ஒரு பகுதியில் வெள்ள நீர் இல்லாததை பார்த்து, அங்கு ஓடினோம்.
வெள்ளச் சீற்றத்தில், எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, ஆதிசங் கரரின் சமாதியும் அடித் துச் செல்லப்பட்டது. ஆதிசங்கரர் சமாதியின் பெரும்பாலான பகுதி களை காணவில்லை. மேலும், அங்கிருந்த ஆதி சங்கரரின் இரண்டு சிலைகள், ஸ்படிக லிங்கம், அனுமன் சிலை ஆகியவையும், வெள் ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டன. அந்த பகுதி முழுவதும், சகதிகளுக்குள், உடல் கள் புதைந்து கிடந்தன. அங்கிருந்த ஆசிரமமும், இருந்த இடம் தெரி யாமல், வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டு விட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.
-விடுதலை,23.6.13

.