திங்கள், 9 நவம்பர், 2015

கிறித்துவத்தில் இப்படி ஒரு கொடுமையா?


கிறித்துவ இல்லத்தரசிகளை ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்காக ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது; விவிலிய நூல் விதித்தவாறு நடந்தே றிய திருமணங்கள் முறியாமல் பார்த் துக் கொள்வது இந்த அமைப்பின் பொறுப்பாம். இதற்காக இந்த அமைப்பு பரிந்துரைப்பதெல்லாம் வேறொன்றுமில்லை; சிறுவர்களுக்கு அளிக்கும் தண்டனையைப் போல மனைவிமார்களின் பிட்டத்தில் கணவர்கள் அடிக்க வேண்டுமாம்.
இந்த இயக்கத்தைப் பின்பற்றும் ஒரு கணவன் கடவுளுக்குப் பயந்த தனது மனைவியை எந்தப் பொருள் கொண்டும் அடிக்கலாம் என்று முடிவு செய்வதில் கணவன் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியமாம். எடுத்துக் காட்டாக தலைமயிரைப் படிய வைக்கப் பயன்படுத்தும் பிரஷ் மனைவியை அடிப்பதற்கு மிகவும் பொருத்தமானதுதான்; என்றாலும் அது எளிதில் உடைந்துபோகுமே. அதற்கு மாற்றாக, டேபிள் டென்னிஸ் மட்டை மிகவும் பொருத்தமானதாக வும், எளிதில் உடையாத உறுதி கொண்டதாகவும் இருக்கும். ஆனால் மனைவிமார்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கத் தேவையான வலியை அந்த மட்டையால் அடிப்பது ஏற்படுத்தாமல் போய்விடக்கூடும்.
இந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் செயல் முறைகளை விவரிக்கும் 54 பக்க ஆவணம்  ஒன்று இந்த அமைப்பில் புதியதாக சேர்பவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள,  தேவையான ஆலோ சனைகள், குறிப்புககளில் மேற்கூறிய தகவல்களும் அடங்கியுள்ளன.
இந்த ஆவணத்தைத் தயாரித்த வர்கள் இந்த அமைப்பினைப் பற்றி கீழ்க் குறிப்பிட்டவாறு விவரிக்கின் றனர்:
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவரது ஆலோசனையை மற்றவர் ஒப்புக் கொள்ளும் இல்லற வாழ்க் கையின் பங்குதாரர்களான கணவன், மனைவியிடையே பின்பற்றப்படும் செயல்முறைதான்  இல்லத்தரசிகளை ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கான இந்த இயக்கம். வீட்டின் தலைவர், அதாவது கணவர் ஆரோக்கியமான, உரமும் ஊக்கமும் வாய்ந்த உறவு முறையை வென்றடைவதற்குத் தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள் வார்.  தேவையற்ற தீயொழுக்கத்தைப்  பங்களிப்பவர்களைத் தண்டிப்பதன் மூலம்,   ஆபத்து நிறைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் விளைவுகள் ஏற்படாமல் குடும்ப உறுப்பினர் களைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான குடும்ப சூழலை உருவாக்கவும்,  குடும்பத்தின் மேம்பட்ட நன்மைக் காகவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குடும்பத் தலைவரின் கடமையாம்.
பிட்டத்தில் அடிப்பதா?
ஒழுங்குமுறையிலான கிறித்துவ இல்லத்தை நிலை நாட்ட பிட்டத்தில் அடிப்பது, உரிமைகளை மறுப்பது, சிறிது நேரத்துக்கு ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதிக்க மறுப்பது போன்ற தண்டனைகள் அளிக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டதே இந்த இயக்கம்  என்று அதன் இணையதளம் தெரிவிக் கிறது. விவிலிய நூலில் விவரித்துள்ளபடி அதிகாரம் செலுத்துபவர் கணவனாகவும், அடிமைபோல் கீழ்ப்படிந்து நடப்பவர் மனைவியாகவும் இருப்பர் என்று அந்த இணையதளம் தெரிவிக்கிறது. பாலியல் நுகர்வில் மனநிறைவை எட்டுவதற்கான வழியாக இந்த பிட்டத்தில் அடித்தல் மற்றும் அதனைப் போன்ற இதர தண்டனைகளை  பிடிஎஸ்எம் சமூகத் தின் பிரிவு ஒன்று பயன்படுத்துவதாகக் கூறி இந்த விளக்கங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் வெளியாட்கள் சிலரும் உள்ளனர். பிட்டத்தில் அடிப் பது பற்றிய இணைய தளம் அல்ல இது;  அதே போல் இது ஒரு ஆண், பெண் இணைப்பு சேவையும் அல்ல. தனிப் பட்டவர்களின் விளம்பரம், எரிச்சலூட் டும் பிதற்றல்கள், பாலுணர்வு தூண்டு தல்  அளிக்கும் கதைகள் அல்லது மாறுபட்ட வாழ்க்கை முறைகளைத் தெரிவிப்பதும் அல்ல என்று இந்த அமைப்பின் இணையதளம் தெரி விக்கிறது.
வெளிச்சத்துக்கு வந்தது!
இத்தகைய சமூக அமைப்புகளும், அவற்றின் இணையதளங்களும் பல ஆண்டு காலமாக இருந்து வருகின்றன. அன்றாட மிருகம்  (Daily Beast) என்ற இதழில் இந்த அமைப்பைப் பற்றி அண்மையில் வெளிவந்த செய்தி இந்த இயக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இத்தகைய வாழ்க்கை முறையைப் பின் பற்றும் கணவன் மனைவியர் ஆயிரக்கணக்கில் இருப்ப தாகக் கூறும் இக்கட்டுரை, இந்த அமைப்பின் செயல்பாடுகள் பற்றி தெரிவிக்கும் ஆலோசனைக் கையேட் டினைத் தயாரித்து வெளியிட்ட செஸ்லா மற்றும் கிளின்ட் ஆகியோரி டம் நேர் காணலுடன் இக்கட்டுரை வெளிவந்துள்ளது.  ஒரு ஆக்க பூர்வமான வாழ்க்கை முறையாக இந்த இயக்கத்தை விருப்பத்துடன் பின்பற்றும், கணவன் மனைவியரிடையே செஸ்லா மற்றும் கிளின்ட் போன்றோர் பலர் உள்ளனர். இந்த இயக்கத்தைப் பற்றி  தான் புலன் விசாரணை செய்தபோது பெரும் பாலான பெண்கள் இந்த இயக்கத்தைப் பற்றி ஆக்கபூர்வமான கருத்தை எழுதி அனுப்பியுள்ளனர் என்று  லாரா ருபினோ என்பவர் தெரிவிக்கிறார்.
தண்டனை அளிக்கப்பட்ட பின் தாங்கள் மிகுந்த அமைதியுடன் இருப்பது போல் உணர்வதாக பலரும் தெரி வித்துள்ளனர். மனைவி மற்றும் அவர் களது திருமணம் பற்றி கணவன் எடுத்துக் கொள்ளும் அக்கறையின் வெளிப்பாடே இது என்றும், அவர்களின் நடத்தையை மாற்றிக் கொள்ள இதுவே போதுமானது,  பிட்டத்தில் அடி பட்ட பிறகு தாங்கள் தூய்மை அடைந்தவர்களாக மனைவி மார்கள் உணர்கின்றனர், இத்தகைய தண்டனை அளிக்கப்படுவதன் மூலம், தீர்க்கப்படாமல் இருக்கக் கூடிய பிரச்சினை பற்றிய ஒரு விவாதத்தை மேற்கொள்ளும்  பதற்றமும், கவலையும் கொண்டவர்களாக மனைவிமார்கள் இருக்கத் தேவையில்லை என்று ரூபினோ எழுதுகிறார்.
என்றாலும், தங்களை அச்சுறுத் துவதாக அமைந்துவிட்ட  குடும்ப வாழ்க்கையில் தாங்கள் சிக்கிக் கொண்டது போல சில பெண்கள் உணருகின்றனர் என்பதற்கான ஆதாரங்களை டெய்லி பீஸ்ட் இதழ் தேடிக் கண்டு பிடித்து வெளிக் கொண்டு வந்துள்ளது.
ஒரு கணவன் மனைவியரிடையே ஒரு நியாயமான, சரியான உறவு முறையை ஏற்படுத்திக் கொள்ளும் வழியாக இதனை நல்ல மன நிலையில் உள்ள எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்; முட்டாள்கள் மட்டுமே ஒப்புக் கொள்வார்கள்,   மனைவியை ஒரு குழந்தை போல நடத்தும் இந்த உறவு முறை அறிவுக்குப் பொருந்தாத, உணர்ச்சிகளுக்கு அடிமையாகக் கூடிய மக்கள் பலரை நிச்சயமாகக் கவர்ந் திழுக்கக்கூடியதே என்று கிறித்தவக் குடும்பங்களில் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதைப் பற்றிய விவகாரத் தில் நிபுணரான, தடயவியல் மனோ இயலாளர் ஜிம் ஆல்ட்ஸ்ரஃப் கூறுகிறார். குடும்பத்தினை உண வளித்துக் காக்கும் பொறுப்பு ஆண்களுக்கு இருப்பதால், அவர்களே குடும்பத் தலைவர்கள் என்று பைபிள் கூறுவதாக,  முரண்பாடு மிகுந்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பிரியான் பிஷர் கூறினாலும், மனைவி களை ஒழுக்கப்படுத்தும் இந்த இயக் கத்திற்கும் பைபிளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.
பைபிளில் எங்கே இருக்கிறது?
ஒரு மின் அஞ்சலில் அவர் கூறு கிறார்: இந்த இயக்கத்தின் செயல் பாடுகளும், பிரச்சாரமும் மிகுந்த அச்சம் தருபவையாக, வழக்கத்திற்கு மாறானவையாக, திரித்துக் கூறப் பட்டவையாக, பைபிளுக்கும், கிறித்துவ மதக் கோட்பாடுகளுக்கும் மாறான வையாக உள்ளன, தங்கள் மனைவி களுக்காக கிறித்துவ கணவர்கள் தங்கள் உயிரையே தருவார்கள் என்று பைபிள் கூறுகிறது. நிலையான வாழ்க்கையின் பரிசாக பெண்களை மரியாதையுடன் சக வாரிசுகளாக நடத்த வேண்டும் என்றும் பைபிள் கூறுகிறது என்று அவர் கூறுகிறார். மனைவிகள் தங்கள் கணவர்களின் தலைமையின் கீழ் தங்களைத் தாங்களே உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புதிய ஏற்பாடு கூறுகிறது. ஆனால் மனைவி கீழ்படிந்தவராக இருக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. கணவனுக்கு மனைவி கீழ்ப்படிய வேண்டும் என்றோ, அவ்வாறு கீழ்ப்படிய மறுக்கும் மனைவியை கணவன் தண்டிக்கலாம் என்றோ பைபிளில் எந்த இடத்திலும் சொல்லப்பட்டிருக்கவில்லை என்று பிஷர் கூறுகிறார்.
இந்த இயக்கத்தைப் பற்றிய பிரச்சாரக் குரல் பலத்து ஒலிக்கும் போக்கு அமெரிக்காவில் உள்ள சில பிற்போக்கு மனப்பான்மை கொண்ட கிறித்துவர்களிடம் வளர்ந்து வருகிறது.
மனைவியைத் தண்டிக்கும் இத்தகைய வாழ்க்கை முறையைக் கண்டித்து  கேள்வி கேட்பவர்களுக்கு இந்த வாழ்க்கை முறையைப் பின் பற்றுபவர்கள் இதனை தங்களது ஆன் மீகத்தின் ஒரு நீட்சியாகக் காண்பதாகக் கூறுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
தாங்கள் விரும்பும் எந்த ஒரு வழியிலும் தங்களது மதத்தைப் பின்பற்றவும், பைபிளுக்குத் தங்களின் வழியில் விளக்கம் கூறுவதற்கும் தங்களுக்குத் தகுதியும், உரிமையும் உள்ளது. கணவனுடனான தங்கள் உறவில் இத்தகைய தண்டனை மூலம் ஒழுக்கப்படுத்தப்படுவதை மனைவிகள் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர் என்று மெக்கான் ஸ்டகல் எழுதுகிறார்.
இந்த வாழ்க்கை நடைமுறையைச் சுற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடைகள் தெளிவின்றி உள்ளன. இவற்றின் பாதிப்புகள் என்ன என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
-விடுதலை ஞா.ம.,6.7.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக