செவ்வாய், 10 நவம்பர், 2015

பார்ப்பனர்கள் அர்ச்சகர்களான வரலாறு


சரவணா இராஜேந்திரன்
தமிழகத்தில் சமயக்குரவர்களுக்கு முன்பு மிகச்சொற்பமாக வைதீக மதத் தாரும்,   சைவம் மற்றும் வைணவம் இருந்து வந்தது, சமணமும், பவுத்தமும் சாமானிய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை புழக்கத்தில் இருந்தன. சமயக்குரவர்களின் எழுச்சி யால் சைவமும் ஆழ்வார்களால் வைண வமும் எழுந்து சமண பவுத்த மதங் களை அழித்துவிட்டன, அந்த மத பள்ளிகளும், விகாரைகளும் சைவம் (திருப்பரங்குன்றம் மற்றும் திருச்சி மலைக்கோட்டை) மற்றும் வைணவ (அழகர்கோவில், தல்லாகுளம்) தலங் களாக மாற்றப்பட்டன.  அதிகார மய்யத்தின் மதமாற்றத்திற்கு பெண்கள் பெரிதும் காரணமாக இருந்ததை அனைத்து வரலாற்று நூல்களும் குறிப்பிடுகின்றன. சமண, சமய தலைநகரமாக விளங்கிய மதுரை சைவ சமய உறைவிடமாக மாறியதற்கு முக்கிய காரணம்  கூன்பாண்டியனின் மனைவி யான மங்கையர்க்கரசி என்ற மானி என்ற கோப்பெருந்தேவியார்  சோழச் சக்ரவர்த்தியின் மகளாவார், சைவ, வைணவ சமயங்கள் செழித்திருந்த காலத்தில் மன்னர்கள் நேரடியாக கோவிலின் உள்ளறைக்கு சென்று விக்ரகங்களுக்கு பூசைகள் நடத்தினர், இதற்கான எடுத்துக்காட்டாக கூன் பாண்டியனின் மனைவி தனது கையாலேயே அர்ச்சித்த மலர்களை பெண்டிருக்கு கொடுத்தார் என்ற பதிவே இதற்கு உதாரணமாக காண லாம், இதன் பிறகு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சைவ வைணவ மதங்கள் அதிகாரம் மற்றும் செல்வம் சேர்க்கும் ஆசையின் காரணமாக தங் களுக்குள் போட்டியிட ஆரம்பித்தனர். மத நம்பிக்கையில் அதீத பற்று கொண்ட மன்னர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில் யாகசாலைகள் மட்டும் கட்டிக்கொண்டு புரோகிதம் பார்த்த வைதீக பார்ப்பனர் தங்களது ஆதிக் கத்தை நிலை நிறுத்த திட்டமிட்டனர். இக்காலகட்டத்தில் வடக்கே மெல்ல மெல்ல முகமதிய மன்னர்களின் ஆளுமை துவங்கிய பிறகு பார்ப்பனர்கள் கோவில் தொடர்பான பணிகளை விட முகமதியமன்னர்களின் கையாள்களாக பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டனர். இதே நேரத்தில் தக்காண பீடபூமியில் முக்கியமாக சாளுக்கியர் மற்றும் விஜயநகர பேரரசர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த பார்ப்பனர்கள் மெல்ல மெல்ல தமிழகத்தை நோக்கி குடும்பமாக இடம்பெயர்ந்தனர். இதை தஞ்சைபல்கழைக்கழகத்தில் உள்ள பல செப்பேடுகள் உறுதி செய்கின்றனர்.
இவர்களின் பலர் ஆதிசங்கரரின் ஒன்றுபட்ட அத்வைத முறையை கற்றுக் கொண்டவர்கள், ஆதிசங்கரர் வைதீகத்தில் இங்குள்ள அனைத்து மதக்கொள்கையையும் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தார், இது சனாததன விதிகளின் படி இருந்ததால் வடக்கிலும் பிரபலமானது, முகமதியர்களின் அதிகார ஏஜெண்டுகளாக உருமாறி யிருந்த வடக்கத்திய பார்ப்பனியம் இதை முழுமையாக் ஏற்றுகொண்டது, இங்கிருந்து தான் பார்ப்பனர்கள் மாமிசம் கைவிடும் கொள்கை ஆரம்ப மானது.  இதை தீவிர சனாதனிகளான அகோரிகளும், வங்கப்பார்ப்பனர்களும் சாளுக்கிய ஆளுமைக்குட்பட்ட சில பார்ப்பனக்குழுக்களும் எதிர்த்தனர்.    தமிழகத்திற்குள் நுழைந்த பார்ப் பனர்கள் ஆதிசங்கரரின் அத்வைத முறையை பரப்பி முதல்முதலாக ஆலயங்களுக்குள் ஆலோசகர்களாக நுழைந்தனர். காலம் 8ஆ-ம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை இந்த 300 ஆண்டு காலத்தில் மிகபெரும் மாறுதல்களை தமிழகம் (மதவரலாற்றில்) காணத் துவங்கியது, ஆலோசகர்களாக நுழைந்த பார்ப்பனர்கள் முதலில் ஒரு கட்டத்தில் கருவறைக்குள் நுழைந்த உடன் முதலில் செய்தது, தமிழில் பூசைகள் நடை பெறுவதை நிறுத்தினர். அதன் பிறகு தாங்கள் கொண்டுவந்த வடமொழி பூசைகள் தொடர்கதையானது, அது வரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருந்த சைவ வைணவ தலைமை பண்டாரங்களும் பட்டர் களும் சிவாச்சார்களும் பின்னுக்கு தள்ளப்பட்டனர். பண்டாரங்களையும், பட்டர்களையும்  எடுபிடியாக மாற்றிக் கொண்ட பார்ப்பனர்கள் வருவாயைக் குறியாக்கொண்டு மாயவதம் மற்றும் யாகம் இதர என பெருவாரியாக செய்யத் துவங்கினர், இரக்கமற்ற முறையில் அதிகாரவர்க்கத்தை சூழ்ச்சி களின் மூலம் மடக்கி தங்கள் ஆளு மையை முழுமையாக தனதாக்கிக் கொண்டனர்.
சுமார் 300 ஆண்டு தொடர்ந்து நடந்து வந்த சூழ்ச்சி வெளியே தெரிந்த போது அதன் உண்மை முகம் மிகவும் கொடூரமாக இருந்தது. இந்த கால காட்டத்தில் ராசராசசோழன் மிகவும் பெருவாரியான புரோகிதர்களை தமிழகத்திற்குள் அழைத்து வந்தான், இது எந்த சூழ்ச்சியினால் நடைபெற்றது என்று இதுவரை புரியாவிட்டாலும், சோழர்களின் தொடர்போர் நடவ டிக்கை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் ஆகியிருக்ககூடும்,   அதிகார மையம் முழுவதுமாக கோவில் களுக்கு மற்றப்பட்டது, மூவேந்தர்கள் மட்டுமல்ல குறுநில மன்னர்களும் அரசபையில் பொது பிரச்சனைகுறித்து ஆலோசனை நடத்தியதாக 9-ம் நூற்றாண்டுகளுகு பிறகான பதிவுகள் மிகவும் அரியதாகவே காணப்படுகிறது. மக்களுக்கும் மன்னருக்குமான உறவு கிட்டத்தட்ட அறுந்துவிட்ட நிலை யில் மன்னருக்கும் பார்ப்பனர்களுக்கு மான உறவுஇறுகிவிட்டது, இதுதான் சோழப் பேரரசில் 10-ம் நூற்றாண்டில் அதிக அளவு பார்ப்பனர்கள் நுழைவ தற்கும் அவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்காத செல்வம் தருவதற்கும் காரணமாக அமைந்து விட்டதாக இருக்ககூடும் (வேறு எந்த காரணமாக இருந்தாலும் இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை)
கி.பி.10-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு கோவில்கள் உச்சநீதிமன்றங்களைப் போல் ஆனது, அங்கு மன்னரின் ஆணைக்கூட சொல்லாக்காசாகிவிடும், இதற்கு பெரிய எடுத்துக்காட்டு உடை யார்குடி கல்வெட்டில் கிடைக்கிறது. இராசராசரின் மகன் ஆதித்த கரிகாலனை கொலை செய்த பார்ப் பனர்களான ரவிதாசன், பரமேசுவரன், சோமன், மற்றும்  தேவதாசன் ஆகி யோர்களை தண்டிக்க பார்ப்பனர்கள் அடங்கிய குழு உடையார்குடி சிவன் கோவில் கூடி அவர்களுக்கு கொடுத்த தண்டனை இவ்வாறு 32 பசுக்கள், 12குடம் பொன் மற்றும் அவர்களுக்கு பணியாட்கள் ,ஆடைகள் கொடுத்து நாட்டு எல்லைவரை பல்லக்கில் வைத்து அழைத்துச்சென்று விட்டு விட்டு வரவேண்டும் என்று தீர்ப்பளித் தாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
பார்ப்பனர்கள் மாத்திரம் கோவில் பூசாரியாகும் எழுதாத சட்டம், பார்ப்பனர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள அரசர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குள் நுழையும் விதிகள், பிறர் கோவில் சுற்றுப்பிரகாரத்திற்கு வெளியே நின்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற நிலையும் சில மக்கள் பிரிவிற்கு கோவில் உள்ள தெருக்களில் கூட நுழையக் கூடாது என்ற நிலையும் உருவானது, இவ்வாறு தனது ஆதிக் கத்தில் கோவில் களை கைப்பற்றிய பார்ப்பனர்கள் தாங்கள் கொண்டுவந்த புராணம் மற்றும் இதர கதைகளை மேலும் பொய்களையும் கட்டுக் கதை களையும் புகுத்தி அவர்களாகவே விதிகள் எழுதத் துவங்கியது பலனாக இன்று வரை கோவில்களில் அருட்சக ராக உள்ளனர்.    ஆதாரம்:-தஞ்சை கல்வெட்டுகள் (சென்னை அருஞ்காட்சியகம்), இந்து மதக் கொடுங்கொன்மை வரலாறு (தவத்திரு தர்ம தீர்த்த அடிகளால்),
- இந்தியாவில் மட்டும் சாதி இருப்பது ஏன்? (வே.கன்னுப்பிள்ளை) அய்.ஏ.எஸ்.
-விடுதலை ஞா.ம.,7.9.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக