செவ்வாய், 10 நவம்பர், 2015

கிருஷ்ணன் என்னும் காமக் கிறுக்கன்

-மின்சாரம்
கடவுள்கள் பிறக்கின்றனவாம். அப்படி என்றால் இந்தக் கடவுளைப் பெற்றவர்கள்தான் கடவுள்களா?
பெற்றவர்கள் கடவுள் என்றால் ஒவ்வொரு குழந்தையையும் பெற்றெடுத்த ஒவ்வொருவரும் கடவுள் ஆகிவிடவில்லையா?
கடவுள்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்பொழுது ஒன்றே கடவுள் என்ற உளறலை நினைத்து வாயால் எப்படிச் சிரிக்க முடியும்?
கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்லி அடிக்கும் லூட்டி இருக்கிறதே கொஞ்ச நஞ்சமல்ல.
கோகுலாஷ்டமி என்று கொண்டாடு கிறார்கள். சரி.. கிருஷ்ணன் பிறந்த தாகவே வைத்துக் கொள்வோம். அது கூட ஒரே மாதிரி இருக்க வேண் டாமா?
வசுதேவனுக்கும் தேவகிக்கும் பிறந்தவன் கிருஷ்ணன் என்று ஒரு கதை.
இன்னொரு கதை  இருக்கிறது; - கேட்கவே அசிங்கமாக இருக்கும். அதற்கு நாம் பொறுப்பல்ல. இந்தக் கதையைக் கட்டிய இந்துமத ஆபாசக் காரர்களே பொறுப்பை ஏற்க வேண்டும்.
தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது. இராட் சதர்கள் தொல்லை பொறுக்க முடிய வில்லை. அதைப் போக்க வலிமை யுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான்? (ஏதோ அவன் கையில் கிடைத்தது என்று வைத்துக் கொள்ளுங்களேன்!) தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத் தானாம்.
இந்த இரண்டு மயிரில் ஒன்று கருப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கருப்பு மயிர் கிருஷ்ண னாகவும், வெள்ளை மயிர்  அவன் அண்ணனாகவும் ஆயின என்று சொல்வது அபிதான கோசம்.
இந்த அசிங்கத்தைப் பற்றி யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது. கேட்டால் அர்த்தமுள்ள இந்து மதம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி வாயை அடைக்கப் பார்ப்பார் கள். அது சரி, உலகில் அதர்மம் பெருகி விட்டது என்று பூதேவர்கள் சொன் னார்களே _- அந்த உலகம் என்பது இந்தியா மட்டும் தானா? அமெரிக்கா, ஆப் பிரிக்கா எல்லாம் அந்த உல கில் அடங்கிடவில்லையா? அங்கெல்லாம் ராட்சதர்கள் தொல்லை கொடுக்கவில் லையா? என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள் -_ கோபம் பொத் துக் கொண்டு கிளம்பி விடும்.
இது ஒருபுறம் இருந்து தொலையட்டும்; இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை - எப்படிப்பட்ட பத்திரிகை? - எவ்வளவு விஞ்ஞான தொழில் நுட்ப சாதனங்களையெல்லாம் பயன்படுத்தி வண்ண வண்ணமாக பல பதிப்புகளாக வெளி வந்து கொண்டு இருக்கிறது.
அந்தப் பத்திரிகை கிருஷ்ணன் பிறந்த தேதியை, (Date of Birth) வெளி யிட்டுள்ளது என்றால் சாதாரணமானதா?
கடந்த 28ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினார்களே _- அது கிருஷ்ணனின் 5125ஆம் ஆண்டு பிறந்த நாளாம். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.8.2013).
ஆகா! எப்படிப்பட்ட ஆராய்ச்சி! அந்த இங்கிலீஷ் ஏடு கிருஷ்ணக் கடவுளின் பராக்கிரமங்களை எப்படி எல் லாம் எழுதித் தள்ளி இருக் கிறது. கொஞ்சம் பொறுமையாகப் படியுங்களேன். (நாங்கள் படித்த துன்பத்தை நீங்களும் அனுபவிக்க வேண் டாமா?)
இதோ, இந்தியன் எக்ஸ் பிரஸ் எழுதுகிறது; -படிக்கவும்.
இந்த நாட்டு மக்கள் கிருஷ் ணனின் வரலாறு என்ற நிலைப்பாடுபற்றி ஒரு நாளும் அய்யங் கொண்டதில்லை. காலனி படையெடுப்பாளர்கள் கிருஷ்ணனை ஒரு இதிகாச கதாநாயகன் ஆகக் காட்டிப் பல கட்டுக் கதைகள் புனையும் வரை.
நம் நாட்டில் சில புகழ் பெற்ற, ராமன், கிருஷ்ணன், புத்தர், மகாவீரர், சங்கரர் போன்ற எல்லோருக்கும் தெரிந்த, புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ள நிகழ்ச்சிகளின், பாத்திரங் களின், அவர்களைச் சுற்றி நடந்துள்ள நூற்றுக்கணக்கான,  கோடிக்கணக்கான வருடங்களுக்கு முந்திய கால கட்டத்தை நிர்ணயிப்பதற்கு தொல். துறை வானவியல் துறைகள், பெரும் இதிகாசத் தலைவர்களின் வாழ்வு பற்றி அறிய பல புதிய எல்லைகளைக் கடந்து வந்துள்ளன.
புராணங்களின்படி  கடவுள் கிருஷ்ணன் நள்ளிரவில் பிறந்தவர். அந்த இரவு, சந்திரனின் எட்டாம் இடத்தில் உள்ள அஷ்டமித்திதி சந்திரன் ரிஷப (எருது) அருகில் உள்ளது. பிறந்த நட்சத்திரம் ரோகிணி; மாதம், சரவண.
இந்த விவரங்கள், கிருஷ்ணனின் வாழ் நாட்களில் இருந்த வான்வெளி நிலைகளைப் பற்றி, மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளைக் கொண்டு நாம் கிருஷ்ணனின் பிறந்த நாளை அறிகிறோம். அந்த முயற்சியின் விளைவாக, ஆங்கிலக் காலண்டர் படி கிறிஸ்துவின் பிறப்புக்கு முன் 3112 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 27ஆம் தேதி என்று கணிக்கப்படுகிறது.
இந்திய வழக்கப்படி கிருஷ்ணனின் பிறப்பு ஸ்ரீஜெயந்தி என்றும் அழைக் கப்படுகிறது. இந்திய வானவியலில் ஜெயந்தி என்ற சொல்லிற்கு சுவை யான ஒரு காரணம் இருக்கிறது. சில விண்மீன்களுக்கு ஏற்படும் சந்திர இடைவெளிகளுக்கு இந்திய வானவிய லாளர்கள் சிறப்புப் பெயர்களைக் கொடுத்து உள்ளனர். மிதுன கோள் கட்டமைப்பில் புனர்வசு நட்சத்திரத்தின் சந்திர நிலை ஏற்படும்போது ஜெயா என்று அழைக்கப்படுகிறது.
மிதுன கட்டமைப்பில் புஷ்ய நட்சத்திரத்தில் சந்திர நிலை ஏற்படும் போது, அதற்கு நசினி என்று பெயர். விருச்சிக கட்டமைப்பில் சரவண நட்சத்திரத்தில் சந்திரன் ஏற்படுவதற்கு விஜயர் என்று பெயர். அதேபோல ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் நிலை ஏற்படும்போது அதற்கு ஜெயந்தி என்று பெயர்.
(‘Indian Express’ 27.8.2013)
சந்திரன் ரோகிணி நடசத்திரத்தில் இருந்தபோது நிகழ்ந்த கிருஷ்ணன் பிறப்பு ஜெயந்தி என்று அழைக்கப் படுகிறது. கிருஷ்ணனிடம் தொடர்பு இருந்த காரணத்தால், ஜெயந்தி மிகவும் பிரபலமடைந்தது.
பல நூற்றாண்டுகாலமாக, ஆண்டு தோறும், இந்தியர்கள் கிருஷ்ணனின் பிறந்த தினத்தை சரவண மாதத்தில், ரோகிணி நட்சத்திரத்தில், கிருஷ்ண பட்ச அஷ்டமியில், (தேய்பிறைச் சந்தி ரனின் 8ஆம் இடம்), புராணங்களின் அடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இருந்தாலும் பொது அறிவிற்கு, பிறந்த ஆண்டு என்னவென்று தெரிய வில்லை.
தொல்லியல் வானவியல் தவிர, பல வழிகளிலும் கிடைக்கப் பெறுகிற புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கிருஷ்ணன் கிறிஸ்து பிறப் பதற்கு முன், 3112 ஆண்டுகளுக்கு முன் பிறந்துள்ளான். ஆகவே 2013ஆவது ஆண்டு, கிருஷ்ணனின் பிறப்பிலிருந்து 5125 ஆண்டுகளாகிறது.
கடவுள் கிருஷ்ணனின் 5125ஆவது பிறந்த நாளை, இந்தியாவின் மிகவும் நேசிக்கப்பட்ட கடவுள், உண்மை யிலேயே ஒரு வரலாற்று நாயகன் என்றும் 5000 ஆண்டுகளுக்கு முன் பேயே நமது கோளுக்கு வந்துள்ளார் என்று அறிந்து கொண்டாடுவோமாக.
எக்ஸ்பிரஸில் இப்படி எழுதியவர்கள் D.K. ஹரி, D.K. ஹேமா ஹரி, பாரத் ஞானம் நிறுவனர்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் இந்தக் கட்டு ரையை எழுதியவர் கூறும் வானியல் விஞ்ஞானம் எந்தத் தரத்தைச் சார்ந்தது என்பதைச் சம்பந்தப்பட்ட வானியல் அறிவியலாளர்கள் தான் சொல்ல வேண்டும்.
சூரியன் என்ற நட்சத் திரத்தை கோள் என்னும் பட்டியலில் அடைத்து வைத்துள்ள இந்தப் புராண அறிஞர்கள் எந்த எல்லைக்கும் சென்று எந்த அளவுக்கும் புளுகக் கூடியவர்கள்தாம்.
இந்த அற்புதங்களை எல்லாம் பயன்படுத்தி ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் ஏட்டை அச்சிட்டுக் காட்டச் சொல் லுங்கள் பார்க்கலாம். (அறிவைக் கெடுப்பவர் களுக்குத் தூக்குத் தண் டனை கொடுக்க வேண் டும் என்று தந்தை பெரி யார் கூறியது எவ்வளவுத் துல்லியமானது என்பதை அறிந்து கொள்க!)
இந்தக் கடவுளுக்கு உள்ள தனித் தன்மைகள் இருக்கின்றனவே - அவை மிக மிக அசாதாரண மானவை!
சின்ன வயதில் வெண் ணெயைத் திருடித் தின்ற வனாம்;  வாலிப வயதில் பெண்ணைத் திருடிய வனாம் (கடவுள் என்றால் இப்படி யல்லவா இருக்க வேண்டும்!)
திருட்டைக் கடவுள்மூலம் தேசிய மயமாக்கியவர்கள் இந்த இந்துத்துவ வாதிகள் தான் - _ எக்ஸ்பிரஸ் பத் திரிகை வகையறாக்கள்தாம்.
இந்தக் கிருஷ்ணன் அவதாரத்தில் திருக்கல்யாணக் குணமே கோபிகைகளோடு கொஞ்சுவது தான்! ஒரு பெண் இரு பெண் அல்ல. அறுபதனா யிரம் கோபிகைகளோடு கொஞ்சக் கூடிய காமக் கே()டியாம்.
ஒரு படம் இதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் மாட்டப்பட்டு இருக்கும். இப்பொழுது அந்தப் படத்தை அதிகம் காண முடியவில்லை (தந்தை பெரியார் பிரச்சாரத்தின் காரணமாக வெட்கப்பட்டுக் கழற்றி எறிந்திருக்கலாம்).
பெண்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருப்பார்கள்; கடவுள் கிருஷ் ணன் இருக்கிறானே - அவன் என்ன செய்வான் தெரியுமா?
கரையில் துணிகளைக் கழற்றி வைத்து விட்டுப் பெண்கள் குளிக்கப் போனார்கள் அல்லவா! அந்தத் துணிகளைத் திருடிக் கொண்டு போய் மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு குளிக்கும் பெண்களை ரசித்துக் கொண்டிருப்பான் அந்தக் கிருஷ்ணன் என்னும் கடவுள்.
பெண்கள் கெஞ்சிக் கூத்தாடி துணிகளைக் கேட்டபோது, கரைக்கு வந்து இரு கைகளையும் தூக்கிக் கும் பிட்டுக் கேட்க வேண்டும் என்றவன் தான் இந்துக்களின் முக்கிய கடவுள்.
இந்தக் காட்சியைப் படமாக்கி வீட் டுக்கு வீடு மாட்டி வைத்திருந்தார்களே.
ஆபாசத்தைப் பக்தி என்று அள்ளிப் பருகிய இந்தக் கேவலத்தை என்ன சொல்ல!
இந்தக் கிருஷ்ணன் என்ற கடவுள் கற்பிக்கப்பட்டதே கவுதம புத்தருக்குப் பிறகுதான்.
யாகக் கலாச்சாரத்தை எதிர்த் தவர் கவுதம புத்தர்; ஒழுக் கத்தைப் போதித்தவர் அந்த உத்தமபுத்திரன். மன்னர் குலத்தில் தோன்றிய அந்த மதி வாணரின் பிரச்சாரத்தால் பார்ப்பன ஆதிக்கம் குடை சாய்ந்து விழுந்தது. வருணா சிரமம் விழுந்து  விட்டது! உயிர்ப் பலி யாகங்கள் மக் களால் வெறுத்தொதுக்கப்பட் டன. கவுதம புத்தரின் கருணை வெள்ளத்தில் மக்கள் நீந்தி மகிழ்ந்தனர். ஆரியக் கலாச் சாரம் ஆயிரம் அடிக்கும் கீழே புதைக்கப்பட்டது.
இந்த ஒழுக்கச் சமூக அமைப்பைச் சீர்குலைக்க காமத்தை முன்னிறுத்திக் கற்பிக் கப்பட்டவன் இந்தக் கிருஷ்ணன் என்னும் கற்பனைப் பாத்திரம்.
வண்டி வண்டியாக கதை களைக் கிளப்பி விட்டார்கள். இன்றைக்கும் சினிமா கலாச் சாரம் கிளம்பி இளைஞர்களைத் தம் வலைக்குள் இழுத்து மூடிக் கொள்ளவில்லையா? இந்த யுக்திதான் அன்று கிருஷ்ண அவதாரமாக ஆக்கப்பட்டது.
இந்தக் கிருஷ்ணன் தான் கீதையை  அருளியவனாம்! கொலையைத் தருமமாக உப தேசித்தவன். தன் சுற்றத்தாரைக் கொலை செய்வதற்கு அர்ச் சுனன் தயங்கியபோது கொல்லு; கொலை செய்யத் தயங்காதே! நீ அழிப்பது உடலைத் தான் _ ஆத்மா வையல்ல என்று கொலையை ஒரு கருத்தாக்கமாக உபதேசித்த உபத் திரக்காரன் தான் இந்தக் கிருஷ்ணன்.
இந்தக் கீதா உபதேசம்தான் இந்தியாவில் ஆன்மா என்று அடே யப்பா எப்படியெல்லாம் பிரச்சாரப் புழுதியைக் கிளப்பி விட்டார்கள்.
நம்மூர் மார்க்ஸிஸ்டு தலைவர் ஈ.கே. நாயனார்கூட (கேரள முதல் அமைச்சர்) கீதையைக் கொண்டு போய் போப்புக்குக் கொடுக்கிற அளவுக்குப் புத்தியைத் தடுமாற வைத்து விட்டார்களே. பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (கீதை அத்தியாயம் 18 சுலோகம் 441) என்று சொல்லும் கீதையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் கீதை வழி நடப்போம் என்று ஒரு பெண் முதலமைச்சரையே சொல்ல வைத்து விட்டார்களே!

புத்தர் கொள்கையை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை
புத்தர்பிரான் அறமொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறர் மனைவியை விரும்பாதே என்பது; இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணாவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக்கட்டிப் பரப்பப்பட்டது. காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே கிருஷ்ண லீலா கதையின் நோக்கம்.
புத்தர் கொள்கைகளின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது.
_ (என்சைக்ளோபீடியா- பிரிட்டானிகா)

-விடுதலை ஞா.ம.,31.8.13

1 கருத்து:

  1. ////கிருஷ்ணன் என்னும் காமக் கிறுக்கன்//////

    இதற்க்கு ஆதாரம் தர முடியுமா !

    நீங்கள் கொடுத்த பதிவிற்கு எந்த வித ஆதாரமும் நீங்கள் அதில் கொடுக்கப்படவில்லை !

    இவைகள் சில சரியானவை, சில தவறானவை ....

    எனவே, சரியான ஆதாரங்களை தாருங்கள் !

    சும்மா வாயாலேயே வடை தான் சுடுறீங்க ?

    பதிலளிநீக்கு