ஞாயிறு, 1 நவம்பர், 2015

உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கில் ஆதிசங்கரரின் சமாதியும் போச்சே!



டேராடூன், ஜூன் 23- உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், ஆதிசங்கரரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக, அங்கிருந்த பக்தர்கள் தெரிவித்துள் ளனர்.
கேரள மாநிலம் காலடியில் பிறந்தவர், ஆதிகுரு சங்கராச்சார்யா என, அழைக்கப்படும், ஆதிசங்கரர்.  பல சமய நூல்களுக்கு விளக்க வுரை எழுதியவர். இந்திய துணைக் கண்டம் முழுவதும் பயணித்து, அத்வைத பீடங்களை நிறுவியவர். இவரின் சமாதி, உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோவிலின் பின்புறம் இருந்தது. இது, எட் டாம் நூற்றாண்டில் கட் டப்பட்டதாக கூறப்படு கிறது. சமீபத்தில், உத்தர கண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இந்த சமாதியும், அடித் துச் செல்லப்பட்டு விட் டதாக, அங்கிருந்தவர் கள் தெரிவித்துள்ளனர். கேதார்நாத் கோவிலில், அர்ச்சகர் ஒருவர் கூறிய தாவது:கடந்த ஞாயிறு இரவில், பலத்த மழை பெய்தது. இதுவரை, இப்படிப்பட்ட மழையை, நான் பார்த் தது இல்லை. நேரம் செல்ல செல்ல, மழை வலுத்தது. கோவிலின் அருகே செல்லும் மந்தா கினி ஆற்றில், வெள்ளம் கரை புரண்டோடியது.
கரையை கடந்து, கோவில் இருந்த பகுதிக்குள்ளும், வெள்ள நீர் புகுந்தது. மிகுந்த வேகத்துடன் வந்த வெள்ளப் பெருக்குடன், சகதியும் சேர்ந்து வந்த தால், கோவிலின் பெரும் பாலான பகுதி, சகதி யால் மூடப்பட்டது. உயிரை பாதுகாத்து கொள்வதற்காக, அங் கும், இங்கும் ஓடினோம். அங்கே, பாதுகாப்பான இடம் என்று, எதுவுமே இல்லை. கோவிலின் ஒரு பகுதியில் வெள்ள நீர் இல்லாததை பார்த்து, அங்கு ஓடினோம்.
வெள்ளச் சீற்றத்தில், எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, ஆதிசங் கரரின் சமாதியும் அடித் துச் செல்லப்பட்டது. ஆதிசங்கரர் சமாதியின் பெரும்பாலான பகுதி களை காணவில்லை. மேலும், அங்கிருந்த ஆதி சங்கரரின் இரண்டு சிலைகள், ஸ்படிக லிங்கம், அனுமன் சிலை ஆகியவையும், வெள் ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டன. அந்த பகுதி முழுவதும், சகதிகளுக்குள், உடல் கள் புதைந்து கிடந்தன. அங்கிருந்த ஆசிரமமும், இருந்த இடம் தெரி யாமல், வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டு விட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.
-விடுதலை,23.6.13

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக