செவ்வாய், 10 ஜனவரி, 2017

அல்லா கிறித்தவர்கள் பயன்படுத்தலாமா?




கோலாலம்பூர், ஜூன் 24- "அல்லா" என்ற வார்த் தையை முஸ்லிம் கட வுளைக் குறிக்க மட்டுமே என்று  மலேசிய உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. மலேசியாவில் சிறுபான் மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா' என்ற வார்த்தை யைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந் நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக அந்நாட் டின் கத்தோலிக்கர்கள் தொடர்ந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4பேரில் 3பேர்  ஏற்காமல் நிராகரித்து தள்ளுபடி செய்தனர். மலேசியாவில் 2007_லிருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம், கத் தோலிக்கத் திருச்சபையின் செய்திப் பத்திரிகையான, 'ஹெரால்ட்' இதழால் 2009ல் முதலில் நீதிமன்றத் துக்குக் கொண்டு செல்லப் பட்டது. முதல் கிழமை நீதிமன்றத்தில் கத் தோலிக்கர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. ஆனால், அத்தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிராக ரித்தது. பின்னர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கத்தோலிக்கர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஹெரால்ட் பத்திரிகையின் மலாய் மொழிப் பதிப்பில், முதலில் அல்லா என்ற சொல் கடவுளைக் குறிக் கப் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து எழுந்த சர்ச் சையை அடுத்து, அரசால் இந்தச் சொல் கிறித்த வர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், கடவுள் என்ற பொருளில் வழங்கப்படும், அல்லா என்ற சொல்லை, தங்களது கடவுளைக் குறிக்கப் பல நூற்றாண்டு களாகவே தாங்கள் பயன் படுத்தி வருவதாகக் கிறித்த வர்கள் வாதிட்டனர். இந்த வார்த்தையை மலாய் மொழியில் கடவுளர் களைக் குறிக்க அனைத்து மதத்தினரும் பயன்படுத் துகின்றனர். ஆனால், இந்த வார்த் தையைக் கிறித்தவர்கள் பயன்படுத்துவது முஸ்லீம் களைக் குழப்பிவிடும் என்றும், சில முஸ்லீம்கள் மதம் மாறவும் அது வழி செய்யும் என்றும் அரசு கூறியது. இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற் றமளிப்பதாக, ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியர் அருள்தந்தை லாரான்ச் ஆண்ட்ரூ கூறினார். இது சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பற்றி எதுவும் கூறவில்லை என்றும் அவர் தெரி வித்தார்.

நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்த முஸ்லீம் ஆர்வலர்கள் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு வழக்குகள் முடி வடைவதைக் குறிப்பதாகக் கூறிய திருச்சபைக்காக வாதாடிய வழக்குரைஞர் எஸ்.செல்வராஜா, முஸ்லீம் அல்லாதவர்கள் அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு ஒட்டுமொத்தத் தடையை இது விதிப்பதாகக் கூறி னார்.  இந்தத் தீர்ப்பை மறு ஆய்வ செய்ய திருச்சபை கோரக்கூடும் என்று சில மலேசிய இதழ்களில் வெளி வந்திருக்கும் செய் திகள் கூறுகின்றன.
-விடுதலை,24.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக