ஞாயிறு, 8 ஜனவரி, 2017

இறைவனைக் கொலைகாரனாகவும் திருடனாகவும் குறிப்பிடும் மந்திரங்கள்

-மறைமலை இலக்குவனார்

வழிபாடு செய்வதற்குப் புரியாத வடமொழியின் துணை எதற்கு? தாய்மொழியில் வழிபாடு செய்தால் இறைவனுக்குப் புரியாதா என்று இறையன்பர்கள் சிந்திக்கவேண்டும். கடவுள் நம்பிக்கை தமிழ் மரபைப் பொறுத்தவரை வேள்விச் சடங்குகள் அல்ல. தமிழ் மொழியில் வணங்கிக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவதேயாகும். எனவே சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லவேண்டும் என்றார் மாணிக்கவாசகர். ஆனால் நடப்பதென்ன?

கோயில்களில் தம் தாய்மொழியில் வழிபாடு செய்யும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளதே! புரியாத மொழியில் வழிபாடு நடப்பதால் எவ்வளவு பெரும்பிழைகள் நேருகின்றன?
சிவன் கோவில்களில் திருமுழுக்காட்டு (அபிசேகம்) நடக்கும் போதெல்லாம் ரீருத்திரம் என்பதே ஓதப்படுகிறது. யசுர்வேதத்தின் பகுதியாக அமைந்துள்ள இந்த ரீருத்திரம் இறைவனை எவ்வாறு அழைக்கிறது தெரியுமா?

நமோ ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ 3.1:7

வாளேந்தி வருபவர்களாகவும், பிறர் பொருளைக் கவரவென இரவில் சஞ்சரிப்பவர்களாகவும், அதற்கெனக் கொன்று அலைபவர்களின் தலைவனே! போற்றி! போற்றி! [3.1:7]
நம: உஷ்ணீ ஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ 3.1:8
தலையிலொரு துண்டுகட்டி, மலைவாசிபோல் முகம் மறைத்து

வயல்களிலும் வீடுகளிலும் திருடுபவர் தலைவனே! போற்றி! போற்றி! [3.1:8]  

(நமகம்:மூன்றாவது அனுவாகம்)

இறைவனைக் கொலைகாரனாகவும் திருடனாகவும் குறிப்பிடும் மந்திரங்கள் திருமுழுக்காட்டின் போதெல்லாம் நிகழ்த்தப்படுவது அடியார்களுக்குத் தெரியுமா?

இந்த வடமொழியை விலக்கித் தமிழில் அமைந்த தேவாரம்,திருவாசகத்தில் பாடினால் பொருள்புரியுமல்லவா?அந்த உரிமைக்கு ஏன் போராடக்கூடாது?

நம் கோயில்களில் நம் மொழியில் வழிபட உரிமை இல்லையா?என்றாவது அடியார்கள் சிந்தித்தார்களா?

-விடுதலை,6.8.16(ஒரு பகுதி கட்டுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக