புதன், 25 மே, 2016

பெண்ணுக்குத் தாடி மீசை முளைக்காதது ஏன்?

நம்ப முடியுமா?
பெண்ணுக்குத் தாடி மீசை
முளைக்காதது ஏன்?
மாண்டவ்விய முனிவரும் அவர் மனைவி டிண்டிகையும், காசி யாத்திரை போகவேண்டித் தனது பக்குவமடைந்த பெண்ணை வேறு யாரிடத்திலும் விட்டு விட்டுப் போக பயந்து கொண்டு எமதர்மராசன் நல்ல உத்தமனென்றும் உலகத் திலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் நீதி பரிபாலனம் செய்து வரும் தர்மராஜ னென்றும் கருதி அவனிடத்தில் அப் பெண்ணை அடைக்கலமாக வைத்து விட்டுப் போனார்கள்.
அப்படி நம்பி வைத்து விட்டுப் போன பெண் மீது சகல ஜீவராசிகளின் பாப புண்ணியங் களையெல்லாம் நீதி வழுவாது, விசாரித்துத் துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்யும் அந்தக் காலனே காதல் கொண்டு இரவானவுடன் அப்பெண் மணியிடத்தில் சுகபோக இன்பத்தை அனு பவிப்பதும் விடிய ஒரு நாழிகைக்கெல்லாம் அம்மடவன் னத்தை வாயில் போட்டு விழுங்கி விடுவதுமாகவிருந்தான் ஒரு நாள் குளிக்கச் சென்றவன் தடாகத்தின் கரையில் அவளை உமிழ்ந்து மடத்தில் உட்கரவைத்துவிட்டு குளிக்கப் போய் விட்டான்
தற்செயலாய் அங்கு வந்த அக்கினி பகவான் அவளைக் கண்டு மோகித்து அவளைக் கூடும்படியாகிவிட்டது. எம தர்மன் வரும் நிலையில் அக்கினிபகவானை அவள் விழுங்கி விட்டாள்; எமதர்மராஜனும் அவள் தனித்திருப்பதாகக் கருதி அவளை எடுத்து விழுங்கி விட்டான்.
இப்பொழுது எமன் வயிற்றுக்குள் ஒரு பெண் அவள் வயிற்றுக்குள் அக்னிபகவான் அக்கினி பக வான் பெண்ணின் வயிற்றில் மாட்டிக் கொண்டதால் யாகம் செய்பவர்களும் தேவர்களும் அக்கினி இல்லாமல் தவித்துப் போனார்கள். ஆகையால் தேவர்களெல்லாம் ஒன்று கூடி வாயு பக வானிடத்தில் அக்கினி பகவானைக் கண்டுபிடிக்குமாறு கட்ட ளையிட வாயுபகவான் அட்டத்திக்குப்பாலர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்தான் தேவர்களும் நவக்கிரகாதிபதிகளும் விருந்துக்கு வந்திருந்தனர்.
எமனுக்குப் பக்கத்தில் மட்டும் இரண்டு இலைகள் தனியே போடப்பட்டிருந்தன. எமன் வாயுபகவானை நோக்கி ஏன் இரண்டு இலை பிரபுவே உங்கள் வயிற்றிலிருக்கும் கன்னிகை பசியால் வருந்துவாளாகையால் அவளையும் உம்முடன் வைத்துக் கொண்டு சாப்பிடும் என்று கூறினான். உடனே எமதர்மராஜனும் கன்னிகையைக் கக்கி  விட்டான்.
சரி, இன்னொரு இலைக்கு ஆள் எங்கே என்று கேட்கவும். வாயுதேவன் கன்னிகையை நோக்கி கன்னிகையே அக்கினி பகவான் பசி தாங்காதவராயிற்றே ! அவரையும் உன் பக்கத்தில் வைத்துக்கொண்டு எல்லோரும் சாப்பிடலாமே என்றான். அப் பெண்மணியும் கக்கிவிட்டாள்.
அக்கினிபகவான் பசிக் கொடுமையால் அகோர சுவாலை யுடன் வெளி வந்தபடியால் கோபாக்கினியால் அவள் முகத்திலிருந்த மீசை, தாடியெல்லாம் பொசுங்கிப் போய்விட்டனவாம்! அதிலிருந்துதான். பெண்களுக்கு மீசை, தாடி முளைக்க வில்லையாம். எப்படி?
-விடுதலை,6.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக