வெள்ளி, 13 மே, 2016

ஆதி சங்கராச்சாரி அவதார ரகசியம்

ஆதி சங்கராச்சாரி ஏன் இவ்வுலகில் அவதரித்தார்! அவர் அவதாரித்தன் உள் ளோக்கம் என்ன? அந்த ரகசியத்தை, பரம சிவனே காதோடு காதாக தனது ஓய்ப் (மனைவி) பார்வதிதேவியிடம் கீழ்க்கண்ட வாறு கிசுகிசுக்கின்றார்! நாமும் ஒட்டுக் கேட்போம்.
கலியுகத்திலுண்டாகும் பக்தர்களுடைய சரித்திரத்தைச் சுருக்கமாகச் சொல்லுகின் றேன். பார்வதியே! கேட்பாயாக! முயற்சியுடன் மறைத்து வைத்துக் கொள்ளத்தக்கது; ஒருவர்க்குஞ் சொல்லத் தக்கது அன்று அம் பிகையே!
பாவ கர்மத்தில் இரமிப்பவர்களும், கருமங்கள் அனைத்திலும் பிரியமற்றவர்களும், வருணாசிரமக் கருமங்களில் பிறழ்ந்தவர்களும், தருமத்தில் மாறி ஒழுகுபவர்களுமான கலியில் மூழ்கிய அந்த சனங்களைப் பார்த்து ஆக்குரோசத்தினாற் கலியுகத்தில், எனது அம்சத்தாலுண்டாகுபவரும் தபோதனருமாகிய விப்பிரரை (பார்ப்பனரை)க் கேரள தேசத்தில் உண்டாக்கவேன். மகேசுவரியே! அவருடைய சரிதத்தையே சொல்வேன், கேட்பாயாக!
இக்கலியுகத்தில் இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின்... சப்தார்த்த ஞான நிபுணர்கள், தர்க்கத்தில் கூரிய புத்தியுடைய சைனர்கள், அறிவுடைய புத்தர்கள் மீமாம்சையில் இரமிப்பவர்கள்; வேதபோதக வாக்கியங்களுக்குமாறு பாடாகப் பிரீதி உண்டாக்குபவர்கள்; பிரத்தியட்ச விவாதத்தில் குசலர்கள், மிசிரர்கள்;
பெரிய சாத்திரங்களால் அத்வைதத்தைக் கெடுப்பவர்கள்; கருமமே மேலானது, பலதாயகன் சிவன் அல்லன் என்னும் யுக்தி கருதிய வாக்கியங்கொண்டு போதிப்பவர்களாகிய இவர்களால், குரு ஆசாரங்கள் கெடுக்கப்பட்டு, அவ்வாறே ஜனங்களுக்கும் கர்மமும் பாரமாகி விடும்.
அப்போது அவர்களைக் கரையேற்றுதற் பொருட்டு ஈஸ்வர அம்சத்தை உண்டாக்குவேன். மகாதேவியே! கேரள தேசத்தில் சசலம் என்னும் கிராமத்தில் எனது அம்சமாகிய அந்தணமாதின் வயிற்றில் சங்கரர் என்னும் திருநாமமுடைய அந்தண சிரேஷ்டர் பிறப்பார்
(சங்கரதிக்கு விஜயகாவிய வசனம் நூல் பக்.2)
எப்படியிருக்குக் கதை?
-விடுதலை ஞா.ம.7.2.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக