உலகத்தில் ஆரியர் கற்புக்கு உதாரணமாய் எடுத்து காட்டுவது அருந்ததியாகும். இந்தம்மாள் ஆரிய குருவான வசிஷ்டன் மனைவி, வசிஷ்டன் ஆரிய மன்னர்களுக்கு (அதாவது விஷ்னு அரசராக அவதாரமெடுத்த மன்னர்களுக்கு) குரு இப்படிப்பட்ட குருவின் மனைவி மகா அருந்ததி பதிவிரதையாம்.
இந்தம்மாள் தன் நாயகனாகிய வசிஷ்டனையே சந்தேகித்து விட்டாள். அதன் காரணமாகவே கணவனால் கருநிற நோய் உண்டாகும்படி சபிக்கப்பட்டு நட்சத்திர மண்டலத்தில் ஒரு நட்சத்திரமாயிருக்கும்படி ஆகிவிட்டாள்.
பதிவிரதைக்கு லட்சணம் தன் உத்தம புருஷனை சந்தேகிப் பது தான் போலும்! பதிவிரதைக்கு லட்சணம் யாராவது சபித்தால் அந்த சாபத்துக்கு ஆளாவது தான் போலும்! . அய்யோ கற்பே ஆரியரிடம் சிக்கிக்கொண்டு என்ன பாடுபடுகிறாய் பாவம்!!
இப்படிப்பட்ட பதிவிரதையை சந்தேகித்து சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று யோக்கியர்களும் சென்று சிறீகளின் மனோபாவம் எப்படிப்பட்டது என்று கேட்டார்களாம். வாசகர் களே! எந்த ஸ்திரீகளின் மனோபாவத்தை என்றா கேட்கிறீர்கள்?
ஆரிய ஸ்திரீகள் மனோபாவத்தைத்தான். ஏனென்றால் மற்ற ஸ்திரீகள் தேவலோகத்தில் இருக்க நியாயமில்லையல்லவா? ஆதலால் ஆரிய ஸ்திரீகளின் மனோபாவம் என்ன? அவர் களுடைய கற்பு என்பது எப்படிப்பட்டது என்று கேட்டார்களாம்.
அதற்கு அருந்ததி மஹா பதிவிரதை-உலகுக்கே பதிவிரதைத் தன்மையைக் காட்ட உருவானவள் ஆகிய இந்த வசிஷ்டர் மனைவி அருந்ததி என்ன சொன்னாள் தெரியுமா உங்களுக்கு உண்மையைச் சொன்னாள் எப்படிப்பட்ட உண்மை என்றா கேட்கிறீர்கள்? பச்சை உண்மை அதாவது உண்மையான உண்மையைச் சொன்னாள்,
என்ன என்று? மறைவான இடமும் ஆண்களும் இல்லாவிட்டால் ஸ்திரீகள் பதிவிரதைகள் தான் என்று ஒரு தேங்காயை ஒரே அடியில் இரண்டு மூடி உடைத்ததுபோல பட்டென்று பதில் சொன்னாள். .
ஆகவே இதிலிருந்து ஆரியர்கள் கற்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது பிரிவு கவுன்சில் தீர்ப்பல்லவா? இதற்குமேல் அப்பீல் உண்டா? இந்தம்மாள் இப்படிச் சொன்னது மாத்திரமல்லாமல் இதற்கு ஒரு பரீட்சையும் செய்து காட்டினாளாம். என்ன பரீட்சை என்றா கேட்கிறீர்கள்?
அதாவது ஸ்திரீகள் மறைவிடமும் ஆண்களும் இருந்தால் போதும் கற்பை இழந்து விடுவார்கள் என்று சொன்ன சொல் உண்மையாய் சத்தியமாய் இருந்தால் இந்தக்குடம் நீர் நிறைய வேண்டும் என்று ஒரு வெறுங்குடத்தை வைத்ததும் அது நீர் நிரம்பி வழிந்தோடிற்றாம். என்ன இந்த உத்தமாமி பத்தினியின் பெருமை? இது சிவமகாபுராணத்தில் உள்ள உண்மை.
இதற்கு மற்றொரு மேலொப்பம் அதாவது இண்டார் சுமெண்ட்டு என்னவென்றால் திரவுபதையம்மாள் அதாவது அய்ந்து மகாபதிவிரதைகளில் ஒருத்தியாகிய அய்ந்து புருஷர்களுக்கு நாயகியாகியான ரைட்ஆன்ரபிள் திரவுபதை யம்மாள் பழம் பொருந்திய சருக்கத்தில் என்ன சொன்னாள் என்றால் ஆடவர் இலாமையின் அல்லால் நம்புவதற்கு உள்ளதே என்றவள் வசிஷ்டன் நல்லறமனைவியே அனையாள்.
அதாவது உலகத்தில் ஆண்கள் இல்லாவிட்டால் பெண்கள் பதிவிரதைகள்தான், ஆண்கள் இருந்தால் பெண்கள் பதிவிர தைகள் அல்ல என்று டாண்னு அடித்துதுவிட்டாள்;
அருந்ததியம்மாளுக்காவது மறைவிடம் வேண்டியதாயிருந்தது. நம்ம ரைட்டானரபிள் அதாவது மஹா பதிவிரதை திரவுபதியம்மாளுக்கு மறைவிடம் கூட தேவை இல்லாமல் போய் விட்டது. ஏனென்றால் அய்ந்து பேருடன் பழகுபவனுக்கு சகா, மறைவிடம் எப்படி கிடைக்கும்? ஆண்களைக் கண்ணில் கண்டாலே போதும் மறைவிடம் தேடிக் கொண்டு அலைய வேண்டியதில்லை என்று ஆகிவிட்டது.
ஆகவே ஆரியர்கள் கற்புக்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் என்று கேட்கின்றேன். ஒரு சமயம் எவிடன்ஸ் ஆகட்டுப்படி அதாவது சாட்சி சட்டப்படி இது அனுமதிக்கப்படாது என்று சொன்னாலும் சொல்லுவார்கள் நமது ஆரியர்கள்.
ஏனென்றால் ஆரியர் என்றாலே சட்ட வல்லுனர்கள் அல்லவா? அவர்களுக்கு ஏதாவது ஒரு காரிதம் விரோதமாய் விட்டால் உடனே சட்டம் பேச ஆரம்பிப்பார்கள். அந்தச் சட்டப்படி புராணங்களில் உள்ளதை ஒரு அத்தார்ட்டியாய் எடுக்கக்கூடாது. ஏனென்றால் அவைகளுக்கு அந்தரார்த்தம் உண்டு மற்றும் அது சந்தர்ப்பம் வேறு என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆதலால் அதற்கு வேறு ஒரு சட்டத்தையும் கவர்ன்மெண்டு ஜி.ஓவையுமே காட்டலாம் என்று நினைக்கிறேன்.
அதாவது மனுதர்ம சாஸ்திரம் மனுதர்ம சாஸ்திரம்தானே இந்துக்களுக்கு சட்டம், மனுதர்ம சாஸ்திரம் என்பது வேதத்தை பிழிந்து எடுத்த சத்து அல்லவா? ஆதலால் அதை எடுத்துக் கொள்ளுவோம். மனுப்பிரஜாபதி அவர்கள் ஸ்திரீகளைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்றால் மாதர்கள் கற்பு அற்றவர்கள் நிலை யற்றவர்கள், விஸ்வா சமற்றவர்கள் ஆதலால் அவர்கள் கணவர் களால் காக்கப்பட வேண்டும். காக்கப்படிலும் விரோதி என்பார்கள்.
மாதர்களுக்கு இந்த சுபாவம் சிருஷ்டிக்கும்போதே பிரம்மாவாலே கற்பிக்கப்பட்டு விட்டதால் புருஷர்கள் அவர் களை ஜாக்கிரதையாய் காவல் காக்க வேண்டும். (மனு அத்தி 9 சுலோ 15)
மாதர்களுக்கு மனசு கதி கிடையாது பொய்யைப்போல் அபாரசுத்தமானவர்கள் (அத்தி 9 சு.17)
மாதர்கள் விபசாரதோஷமுள்ளவர்களானதினால் பிள்ளை கள் அவர்களுக்கு பிராயச்சித்தம் செய்துவிட வேண்டும். (அ.9 சு.19.20.21)
மாதர்களுக்கு மன சுத்தம் கிடையாது அவர்கள் அபரி சித்தர்கள் (அ.19, சு.18)
மாதர்கள் ஆண்கள் விஷயத்தில் அழகு வயது எதையும் கவனிக்காமலே ஆணாயிருந்தால் போதும் என்று புணருவார்கள். (அ.9, சு.14)
அண்ணன் தம்பி இருவருக்கும் சந்ததிநசித்துப் போகிறதாய் இருந்தால் பெரிய«£ர்கள் அனுமதி பெற்று மற்றொருவனைப் புணரலாம். (அ.9. சு.58)
பிள்ளை இல்லாமல் குடும்பம் நசித்துப் போவதாய் இருந்தால் 7 தலைமுறைக்குட்பட்ட பங்காளிகளோடு புணர்ந்து பிள்ளை பெறலாம் (அ.9. சு.5)
விதவைகளிடத்தில் பெரியோர்கள் அனுமதிபெற்று புணரலாம் அந்தப் படிபுணரப்போகிறவன் தன் தேகமெல்லாம் நெய்யைப் பூசிக்கொண்டு புணரவேண்டும் மற்றொருவன் பிள்ளையை உண்டு பண்ணலாம். ஆனால் அந்தபிள்ளை புருஷனைத்தான் சேரும்.
முன்னதாகவே பெண்ணின் கணவனிடம் ஏற்பாடு செய்து கொண்டு புணர்ந்து பிள்ளையுண்டாக்கினால் அந்தப்பிள்ளை உண்டாகினவனைச் சேரும் (அ.9. சு,52) என்று இந்தப்படியெல்லாம் மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறது. இதை அனுசரித்தே சர்வ புராணங்களும் முறையிடுகின்றன. பெண் கடவுள் களிடத்திலும் இந்த குணமே இருந்து வந்திருக்கின்றது.ஆகவே ஆரியர் கற்புக்கு இனி என்ன அத்தாட்சி வேண்டும் என்று கேட்கிறீர்கள்? (குடிஅரசு - 1936)
-விடுதலை,8.1.16
இது முட்டாள்களின் வாதம் !
பதிலளிநீக்குபுராணகாலத்து கதைகளை தற்கால மனிதர்களுடன் ஒப்பிடுவதே தவறு. இவைகளின் தத்துவங்களை தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும் !
இதில் எந்த தவறுமில்லை. எல்லா கதைகளுக்கும் விளக்கங்கள் உள்ளன.