திங்கள், 30 மே, 2016

சிவலிங்க ரஹசியமும் தமிழ் மக்களின் அறியாமையும்


(24.2.1929 - குடிஅரசிலிருந்து)
அறியாமையும், மூடநம்பிக்கையும் ஆகிய இவை இரண்டும் செய்விக்காத கெட்டசெய்கை கிடையாது. உதாரணமாக சாம்பலையும் மண்ணையும் முகத்திலும் உடம்பிலும் பூசிவிட்டு கழுத்திலும் கைகளிலும் ஏதேதோ கொட்டை மாலைகளை மாட்டி வெளியில் அனுப்பி வேடிக்கை பார்க்கிறது.
இன்னும் பார்ப்பனர்கள் காமபித்து அதிகமாய்ப் போய் ஆண்குறியும் பெண்குறியும் பிரஜாவிருத்தி, சரீரசுகம் இல் வாழ்க்கை இவைகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பதால் இவைதான் கடவுளர் பூஜிக்கப்பட வேண்டுமென்று சுமார் 2000 வருஷங்களுக்குமுன் ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி னார்களாம்.
அப்பொழுது அறிவாளிகளான நம்மவர்கள் இந்தத் தீச்செயலை எல்லாவித உபாயங்களாலும் தடுக்கத் தொடங் கினார்கள். நம்மவர்களுக்கு பயந்து சிலர் இந்த கடவுள் வணக் கத்தை ரகசியமாகவும், சிலர் பிரத்தியட்சக் கடவுளை விட்டு மண் ணாலும், கல்லாலும் பெண்குறி ஆண்குறி இரண்டும் சேர்ந்தி ருக்கும் விதமாகச் செய்வது அதை வணங்கியும் மற்றுஞ்சிலர் முழுமனித வடிவம் நிர்வாணமாகச் செய்தது அதை வணங்கி வந்தார்களாம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்தக்கடவுள்கள் உயர்ந்த விலையுள்ள புடவை உடுத்துகிறதும் விபசார உற்சவம் செய் கிறதுமான சாமிகளாக மாறிவிட்டன. ஆஹா இந்த சாமி களுக்குத்தான் நம்மவர்கள் வருஷாவருஷம் கோடிக்கணக் கான ரூபாய் செலவு செய்து நாசமாக்குகிறார்கள்.
பெரிய மதில் தின்ன பிராகாரம் கட்டி தங்கள் அறியாமையின் ஞாபகச்சின்னத்தை நிலைநாட்டுகிறார்கள். பால் பழம் சர்க்கரை கொண்டு தினம் 5 வேளை பூஜை செய்து ஆண் பெண் குறிகளுக்கு தடவி வழித்துக் கொடுக்கிற பஞ்சாமிர்தத்தை கொஞ்சம் போதும் (மிகவும் கொஞ்சமாக, ஏனென்றால் பார்ப்பன பூசாரி கணக்காகத்தான் கொடுப்பான்) தின்று கடைத்தேறி விட்டதாக நினைக்கிறார்கள்.
தமிழர்களே! சுயபுத்திக்கு மேன்மைகொடுத்து பட்சபாத மில்லாமல் தினமும் 2 நாழி நேரமாவது சாம்பல் பூசுதல், யானைத் தலை கடவுள், மூன்று தலைச்சாமி, ஒத்தைக்கால் தெய்வம், முதலியவற்றை அராய்ந்து பார்த்தால் இந்த ஆபாசத்தின் உண்மை விளங்காமல் போகாது.
இனிமேலாவது ஒவ்வொரு ஊரிலும் கோவில் என்பவற்றில் உள்ள சாமி என்பவற்றை பெய்ர்த்து தூரவைத்து விட்டு அதனுடைய வருமானத்தைக் கொண்டு ஏழைப்பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடமும் அறிவு வளர்ச்சிக்காக புத்தகாரியமும் ஏற்படுத்தி நாட்டை சயமரியாதை உள்ளதாகச் செய்யுங்கள். இன்னும் இந்த ஆண்குறி பெண்குறி தெய்வங்களை கும்பிட்டுக் கொண்டும் சாம்பலை பூசியும் சாணியைத்தின்று கொண்டுமே இருந்தால் பின்னால் இன்னும் எதைத்தான் தின்ன நேரிடுமோ தெரியாது. இவ்வளவு காலம் அறியாமையில் கிடந்து நஷ்டமும் கஷ்டமும் பட்டது போதும்,போதும். கடைசியில் நீங்கள் பூசிக்கும் லிங்கம் என்ன என்பதை மேனாட்டார் தெரிந்து கொண்டு உங்களை பரிகாசம் செய்கிறார்கள் என்பதை நினைப்பூட்டுகிறேன். பிறர் சொல்லுவானேன். நமக்கே நம்முடைய இந்த வெட்கக்கேடான ஆசாரத்தில் அவமானத்தினால் தலை குனிந்து போகிறதில்லை. ஏன்! இது அறியாமை! மூடநம்பிக்கை!
-விடுதலை,12.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக