புதன், 25 மே, 2016

சந்திரன்-தேய்வது ஏன்?

இரவில் முழு நிலவின் தோற்றம். It is patterned with a mix of light-tone regions and darker, irregular blotches, and scattered with varying sizes of impact craters, circles surrounded by out-thrown rays of bright ejecta.

இதுதான் இந்துமதம்: சந்திரன்-தேய்வது ஏன்?
சந்திரனின் குரு வியாழன் பகவான் என்ற தேவகுரு குரு ஊரில் இல்லாத சமயம் குருவின் பத்தினியாகியதாரை என்பவளுடன் உடலுறவு கொண்டான் இப்படி குரு இல்லாத சமயத்தில் எல்லாம் காரியம் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் குருவே நேரில் பார்த்துவிட்டான்.
ஆத்திரங்கொண்டு,  உனது கலை நாளுக்கொன்றாய் குறைந்து  போகக்கடவது என்று சந்திர னுக்குச் சாபமிட்டு விட்டான் குரு. அதிலிருந்துதான்! தேய்பிறை ஏற்பட்டதாம். மீண்டும் சிவபெருமானை நோக்கி சந்திரன் தவம் இருந்து. அடுத்த பதினைந்து நாள் தனது கலை வளர வரம் பெற்று விட்டானாம். அதுதான் வளர் பிறையாம்.
எப்படி?
காகத்திற்குக் கண் பொட்டையானது ஏன்?
இராமனது மனைவியான சீதை மேலாடையின்றி ஸ்தனத் தைத் (மார்பு) திறந்து போட்டுக்கொண்டு பாலிப் பெண்களைப் போல் காட்டில் திரிந்து கொண்டிருந்தாள். ஒரு காகமானது அவளுடைய பருத்துத் திரண்டுருண்டு மிருதுவாகவிருந்த ஸ்தனத்தை மாங்கனி என்று கருதிக் கொத்திவிட்டது. இராமன் இந்தக் கண்றாவியைப் பார்க்கச் சகிக்காதவனாய் உடனே தன் கையிலிருந்த தர்ப்பைப் புல்லால் அதன் கண்னைக் குத்தி விட்டானாம் அதிலிருந்து தான் காகத்திற்கு ஒரு கண் பொட் டையாகி விட்டதாம். எப்படி?
27.11.1943, குடி அரசிலிருந்து...
புரோகிதர்: ஓய், சுப்பரமணிய முதலியாரே! நாளைக்கு
8 ஆம் நாள் உங்கப்பாவுக்கு திதி வருகிறது. திதியை அதிகாலையிலேயே முடித்து விட்டால் நன்றாய் இருக்கும். ஏன் என்றால், நான் அன்று காலை 10 மணிக்கு நாயக்கர் வீட்டுக்கும் போக வேண்டும். அங்கு கர்ணபூஷண முகூர்த்தம். அல்லாமலும் அதிகாலையில் திதி செய்வது மிகவும் விசேஷமானது முதலியார்.
சரி சுவாமி, அப்படியே ஆகட்டும். தாங்கள் மாத்திரம் அதிகாலையில் வந்து விடுங்கள். நாங்கள் ஸ்நானம் செய்து விட்டு சாமக்கிரிகைகளோடு தயாராய் இருக்கிறோம். (முதலியார் தன் மனைவியை அழைக்கிறார்) அடீ!
அண்ணியார்: (பெரிய வீட்டுப் பெண்களை அண்ணியார் என்று தான் கூப்பிடுவது) ஏனுங்கோ
முதலியார்: சாமி சொன்னதைக் கேட்டாயா?
அண்ணியார்: ஆமா, நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.
முதலியார்: இன்னைக்கு எட்டாம் நாள் ஞாபகமிருக்கட்டும். காலமே நேரமே ஸ்நானம் செய்து விட்டு சாமிக்குக் கொடுக்கும் சாமான்கள் எல்லாம் தாராளமாய் ரெடியாய் வைத்து இருக்க வேண்டும்.
தம்பி: (பக்கத்தில் இதைக்கேட்டுக் கொண்டிருந்த முதலியார் மகன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறவர்) என்னப்பா என்னமோ சொன்னீங்களே, என்னத்திற்கு தாராளமாய், ரெடியாய் இருக்க வேண்டும்?
முதலியார்: உங்க தாத்தாவுக்கு, எட்டாம் நாள் திதி சாமி காலமே எங்கேயோ போகணுமாமா. அதற்காகக் காலையிலேயே எல்லாம் தயாராய் இருக்க வேண்டும் என்று சொன்னேன். காலம் பஞ்சகாலம் சாமிக்குத் தாராளமாய்க் கொடுப்பமே அவர் ஒரு 2, 3 மாதத்துக்கு ஆவது சாப்பிடட்டும்.
தம்பி: அதற்கு இந்த ஆசாமி (அய்யர்) என்னத்துக்கு வந்தாரு? எதற்காக கொடுக்கிறது? யாருக்குப் பஞ்சம்?
முதலியார்: அடே அவர் சாமிடா. அப்படி எல்லாம் சொல்லாதே. மரியாதையாய்ப் பேசு.
தம்பி: என்னப்பா கோவிலிலே இருக்கிறதும் சாமி, இந்தத் தடிராயனும் சாமியா? அப்படின்னாக்க கோயிலிலே இருக்கிற சாமிக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது. ஒரு நாயை முதலியாரே, முதலியாரே என்று கூப்பிட்டால் நமக்குக் கோபம் வராதாப்பா? அது போல் இந்தப் பிச்சை எடுக்கிற மனுஷனை சாமிண்ணு கூப்பிட்டால் கோயிலில் இருக்கிற சாமி கோபித்துக் கொள்ளாதா?
முதலியார்: என்னடா, அதிகப்பிரசங்கிப் பயலே இப்படி ஆய்விட்டாயே. இதெல்லாம் எங்கடா படிச்சே? இந்த சுயமரியாதைகாரப் பயல்களோடே சேர்ந்து கெட்டுப் போய் விட்டாப்லே இருக்கிறதே. மட்டு மரியாதை, மனுஷாள் கினுஷாள் ஒண்ணும் இல்லாமேப் போச்சே இனிமேல் இப்படியெல்லாம் பேசினால் பார்த்துக்கோ அப்புறம் என்ன நடக்கும் என்று. 
-விடுதலை,6.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக