திங்கள், 30 மே, 2016

ஜோதிபாபுலே பார்வையில் பிர்மா



ஜாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்த சித்திர கதைகள்
மாட்டிறைச்சி தடை செய்யப்படு கிறது. மாதவிலக்கு விலக்கப்படுகிறது. அன்றாடம் வெளியாகின்ற செய்திகள் குறித்து எண்ணிப்பார்த்தால், 1873ஆம் ஆண்டில் இதேபோன்றுதான் செய் திகள் வெளிவந்தன. அந்த ஆண்டில் தான் மகாராட்டிர மாநிலத்தில் மாபெரும் சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் கோவிந்த்ராவ் புலே வேதங்களையும், பார்ப்பனீயத்தையும் கண்டித்து அடிமைத்தனம் (குலாம்கிரி) குறித்து எழுதினார்.

தரிசு நிலத்தில் தோட்டக்காரர் எனும் சித்திரக்கதை நாவலாக ஜோதி புலேவின் விடுதலைப் போராட்டங் களை விளக்குகிறது.
நூற்றாண்டுகளுக்குப்பின்னர் எழுத்தாளர் சிறீவித்யா நடராஜன் மற்றும் ஓவியர் அபராஜிதா நினன் இணைந்து சித்திர நாவல் உருவாக்கி கொடுத்துள்ளார்கள். தரிசு நிலத்தில் தோட்டக்காரர்: ஜோதி புலேவின் விடுதலைப் போராட்டம்Õ நூல் உள்ளார்ந்த கற்பனைகளுடன்கூடிய பணியாக அமைந்துள்ளது.
நினன் கூறும்போது, “புலே சமூகப் படப்பிடிப்பாக அப்பட்டமாக எழுதினார்.  அவர் எழுதியவற்றிலி ருந்து சித்திரக்கதை (கிராபிக் நாவல்) மூலமாக விதைத்துள்ளோம். இந்நூலின் மூலமாக தாழ்த்தப்பட்டவர்களின் நிலைகுறித்து முழுவதுமாக இளைய தலைமுறையினர் எளிதாக புரிந்து கொள்ள முடியும்’’ என்றார்.
ஜாதியை எதிர்க்கின்ற வகையில் ஜாதிப்பிரச்சினைகள் குறித்து நவயனா பதிப்பகத்தார் முதல்முறையாக தனித் துவத்துடன் வெளியிட்டுள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கத்துக்கு மாறாக நூல் வெளியீட்டு விழாவில் மாட்டுக்கறி விருந்து (ஜமா மஸ்ஜித்தில் அளிக்கப்படுகின்ற பஃப் கபாப்) அளிக்கப்பட்டது.

அதேபோல், பிரம்மனுக்கு மாத விலக்கு ஏற்படுவதாகக் கூறி பிரம் மனுக்கு Ôபிரம்மா சானிட்டரி நாப்கின்Õ களை அறிமுகம் செய்தார்கள். (பிரம்மன் படைப்புக்கடவுள் என்றால், அவனுக்கும் மாதவிலக்கு உண்டா? என்று புலே கேள்வி எழுப்பினார்) இதுபோன்று பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வந்த போதும், அதன் தாக்கம் என்பது தொடர்ந்து நீடிக்காமல்தான் உள்ளது. ஜாதி பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்கிறது என்பதை நவீன இந்தியாவில் திடுக்கிடும் முறையில் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. ஜாதிய அமைப்பு முறைகள் தொடர்ந்து கொண்டு இருப்பதுடன், ஜாதி குறித்து விவாதிக்கப்படாதவரை, வாழ்விலிருந்து சாவுவரையிலும் ஜாதியே எல்லாவற் றுக்கும் காரணமாகவே அமைந்துவிடு கின்றது என்பதில் அண்மையில் 17.1.2016 அன்று ரோகித் வெமுலாவின் தற்கொலை நிரூபித்துள்ளது.
நவயானா பதிப்பகத்தின் சார்பில் எஸ்.ஆனந்த் கூறும்போது, “புலேவின் எழுத்துகளை படிக்கும்போது, எப் போதுமில்லாத நிலையில் இதுபோன்ற நேரங்களில் அதிக அளவில் விழிப்பு ஏற்பட்டுவருகிறதுÕÕ என்றார்.
அப்பதிப்பதிகத்தின் சார்பில் மேலும் ஒரு நூல் வெளிவந்துள்ளது. எழுத் தாளர் கோண்ட் மற்றும் ஓவியக் கலை ஞர்கள் துர்காபாய் மற்றும்  சுபாஷ் வியாம் இணைந்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்திரக்காட்சிகளாக ÔபீமாயணாÕ என்கிற நூலாக வெளிக் கொணர்ந்துள்ளனர்.

பீமாயணா நூல்குறித்து பதிப்ப கத்தைச் சேர்ந்த ஆனந்த் கூறும்போது, Òசில ஆண்டுகளாக டில்லி பல்கலைக் கழகத்தில் பொது ஆங்கிலப் பாடத்தில் ÔபீமாயணாÕ நூல் வைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவனாக இருக்கின்ற என்னைப் பொறுத்தவரையில் தாழ்த் தப்பட்டவர்கள் அல்லாதோரிடையே இந்தக்கருத்துகளைக் கொண்டு செல்வது சவாலாக உள்ளது. அவர்கள் புலே, அம்பேத்கர் சிந்தனைகளை அறியாமல் இருந்தால், இதுபோன்ற ஜாதியால் ஏற்பட்டுவருகின்ற  பிரச் சினைகளில் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது’’ என்றார்.
சித்திரக் கதாசிரியர் சார்நாத் பானர்ஜியின் Ôவிசாகபுரியில் அனை வரும் அடங்கிவிட்டார்கள்Õ என்கிற நூலில், புதிய ஜாதிய வகுப்பைக் காண லாம். அந்நூலில் டில்லியில் தண்ணீருக் கான சண்டைகள் நடைபெறுவதைக் காணலாம்.
சித்திரக்கதாசிரியர் சார்னாத் பானர்ஜி கூறும்போது,
“நீங்கள் நல்லவராக இருந்தாலும், சிறந்த மருத்துவராக இருந்தாலும், உங்களின் ஜாதிப்பெயர் உங்களைக் காட்டிக்கொடுத்துவிடும். அதிலிருந்து நீங்கள் தப்பிவிட முடியாது. உங்களு டைய பெயரில் தாழ்த்தப்பட்டவர் என்று தெரியவரும்போது,  மக்கள் உங்களின் தகுதிநிலைகுறித்து சந்தேகப்படுவார்கள். இடஒதுக்கீட்டு முறையால் அந்த நிலையை நீங்கள் அடைந்தீர்கள் என்று அதிசயப் படுவார்கள். ஜாதிகளை ஒருங்கிணைப் பது குறித்து பேசப்பட்டுவருகிறது. இந்தியர்கள் முட்டாள்கள் அல்லர்.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நன்கு அறிந்தவர்கள். ஆனாலும், ஜாதிபேதங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.    என்னையே எடுத்துக் கொண்டால், நான் உயர்ஜாதியைச் சேர்ந்தவன். அதனால், என்னுடைய பணிகளில் ஜாதிய வேறுபடுகளுடன் பிரச்சினை வரும்போது, என்னுடைய மனிதநேயத்தை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அதேநேரத்தில், நான் ஒரு தாழ்த்தப்பட்டவனாக இருந்தால், நான் போராடுவதாக கூறுவார்கள்’’.
சித்திரக்கதைகள் போன்ற காட்சிப்படுத்தும் ஊடகங்களில் ஜாதிய வேறுபாடுகளை காட்டக் கூடாது. பார்ப்பனர்கள் அழகுடன் இருப்பதாக எப்போதும் காட்டப்படுகிறது. ராட்சசர்கள் அல்லது வில்லன்கள் என்று காட்டும்போது எப்போதும் கருப்பாகவே காட்டப்படுகிறார்கள். இந்த கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்க முடியாது’’ என்கிறார் சார்னாத் பானர்ஜி.
ஆனால், நினன் கூறும்போது, Òஎன் னுடைய சித்திரங்களில் எல்லோரையும் ஒன்றுபோலவே காட்டுகிறோம். பானர் ஜியின் பார்வை ஒரு பொருட்டல்ல. என்னுடைய கதாபாத்திரங்கள் தோற்றத் தில் எப்படி இருக்கின்றன என்பதை நான் கருத்தில் கொள்வதில்லை. ஆனால், கீழ்ஜாதி தொழிலாளிதான் என்னுடைய கதாநாயகன், அழகானவன்’’ என்றார்.
பன்னாட்டளவிலான இந்திய சித்திரக்கதை அமைப்பின் நிறுவனர் சரத் சர்மா கடந்த 20 ஆண்டுகளாக மக்களிடையே பணியாற்றிவருகிறார். அவர் கூறும்போது, “சித்திரக்கதைகளின்  துணிவுக்கான ஆணிவேர் இந்தியாவில் இருந்துள்ளது. சித்திரக்கதைக்கான பணிகளில் ரிக்ஷா இழுப்பவர் முதல் பேராசிரியர் வரை கதைகளுக்கேற்ப சித்திரங்கள் பாலியல் பேதங்கள், ஜாதிப்பிரச்சினைகள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளன. மக்களிடையே பாகுபாடுகளை ஒழிக்க ஒரே வழி  பாதிப்புக்குள்ளாகும் மக்களின் பிரச்சினைகளை கவனிப்பதில்தான் உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் பகுதியில் சிறுவன் ஒருவன் பள்ளியில் பூஜை செய்வதற்கு அவன் அனுமதிக்கப்படவில்லை என்பதை விளக்கி உள்ளான்.
அவன் கதையை ஒவ்வொரு சம்பவத்தையும் சித்திரங் களாக காட்சிப்படுத்துகிறான். அவனு டைய சித்திரக்கதையிலிருந்து படங் களை நாங்கள் ஒளிப்படமாக எடுத்து, கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்வண்ணம் மக்களிடையே வழங்கி வருகிறோம்/
இந்த பிரச்சினைகள் கிராமங்களில் மட்டுமல்ல. தாழ்த்தப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டின்படி, மாநகர்களில் அரசு பணி வாய்ப்பு கிடைத்து செல்லும்போது, சிறப்பாக பணிகளை செய்தபோதிலும், ஜாதிரீதியிலான ஒதுக்குதல் தொடர்கின்றது. பியூனாக இருக்கின்ற ஒருவர் கோப்புகளை மரியாதையுடன் கொடுக்காமல், தாழ்த்தப்பட்டவர்களைத் தொடக் கூடாது என்பதற்காக மேசையின்மீது தூக்கி வீச முடிகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு சித்திரக்கதை மிகவும் சரியான வழியாக உள்ளது’’ என்றார் சர்மா.
அவர் மேலும் கூறுகையில், “அண்மையில் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜாதி பாகுபாடுகள் ஆராயப்பட்டன. அந்நிகழ்வில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ள மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஆகியோரிடையே வறிய நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட ஒரு குழந்தையின் கல்லூரிவரையிலான பயணத்தை சர்மாவின் சித்திரக்கதைகள்மூலமாக விவரிக்கப்பட்டது. சித்திரக்கதைகளின் வாயிலாக புரிந்து கொள்வது மிக எளிமையாக உள்ளது’’ என்றார்.
_டைம்ஸ் ஆப் இந்தியா, 7.2.2016

-விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக