வியாழன், 25 ஏப்ரல், 2019

இந்திரனின் இழி நடத்தை

தேவலோக அரசன் இந்திரனுக்கு தேவேந்திரன் என்றும் பெயர் ஒன்று உண்டு.
இவன் கல்யாணமே ஆகாதவன் ஆனாலும் :கட்டிவறை சுகத்தைக்கரை கண்டவன்.
காதல் கிழத்தியாக இந்திரனுக்கு நிரந்தரமாக இருப்பவள் இந்திராணி!
இவள் ஒரு சிரஞ்சீவிச் சிங்காரி!
எத்தனையோ பேர் இந்திர உலகின் ஆளுகைப் பொறுப்புக்கு வந்தனர் :போயினர்.
இருப்பினும் இந்திராணி மட்டும் நொந்தாளில்லை:நோவு நொடி என்று வெந்தாளில்லை.

இங்கே குறிப்பிடப்படும் இந்திரன், எத்தனையாவது பட்டக்காரன் என்று கேட்காதீர்கள்!
வகையும் தொகையும் வழவழப்புராணங்களில் தேடக்கூடாது.

குந்திபெற்றுக்குவித்த அரைடஜன் ஆண் பிள்ளைகளில் அர்ச்சுனனுக்கு அப்பன் சாட்சாத் இந்திரன்தான்.

இதெல்லாம் சாமான்யமான இந்திரத்தனம். ஒரு சாமார்த்தியமான இந்திரத்தனத்தில் நுழைவோம்.

காடொன்றில் பர்ணசாலை அமைத்து, இல்லறம் நடத்தி வந்தான் ஒரு அப்பாவி முனிவன்.
இந்த முனித்தம்பதிகளின் பெயர் கவுதமன் ---அகலிகை, இந்த கவுதமன் இந்திரனின் குரு, அகலிகையின் அள்ளிப்பருகும் ஆர்வத்தால், தோழன் சந்திரனையும் துனணக்கழைத்துக் கொண்டு துள்ளிக்குதித்தோடினான் இந்திரன், அது இருட்டு வேளை.
தனது திருட்டு வேளைக்கு இடையூறாக, அகலியை அனணத்தவாறு உள்ளே கவுதமன் கட்டிப்பிடித்துக் கண்ணயர்ந்து கிடந்ததை இந்திரன் கண்டான்.
கோழியாகி மாறி, கூரைமேல் ஏறி, கொக்கரக்கோ என்று கூவினான் இந்திரன்.
அப்பாவி முனிவனுக்குப் பொழுது புலப் போவதாக நினைப்பு, கசகசப்பை கழிவு வர, நீராடும்எண்ணத்துடன் நீர்நிலை ஒன்றிற்குப் புறப்பட்டுப் போய்விட்டான்.
கோழியின் கூவலால் ஆவலை அடக்கும் அச்சாரம் கிட்டிய களிப்பில், கவுதமனாய் உருவெடுத்து, ஒரத்தில் ஒதுங்கி நின்ற சந்திரனிடம் இந்திரன் வந்தான்.
நடந்த நிகழ்ச்சிகளை வாய்திறவாமல் நின்ற சந்திரனைப் பூனையாக மாற்றி, "களிப்புற்று, சலிப்புற்று வரும்வரை காவலாய் இரு. வாசலில் கிட" என்று சொல்லி அகலிகையின் அருகில் போனான் இந்திரன்.
காம்பெடுத்த உதிரி ரோஜாவாய்ப் படுக்கையில் பரவலாய்க்கிடந்தாள் அகலிகை. ஊறிக்கிடந்த உணர்வுகளை, உணர்ச்சி ஆறிக்கிடந்த அகலிகையிடம் பாய்ச்ச, வாரி அனணத்தான் அவளை, சினமோ, சிணுக்கமோ இல்லாமல் இந்திரனோடு இனணந்தாள் அவள்.
அள்ளியும், கிள்ளியும் படுக்கையில் இவர்கள் துள்ளித்துவண்ட வேளையில் "ஒரிஜினல் "கவுதமன் ஓடிவந்து கொண்டிருந்தான்.
நேரம் ஆகவில்லை :கோழியின் கூவலுக்கும் நியாயம் ஏதுமில்லை என்பதை உணர்ந்து ஞானதிருஷ்டியை ஏவிப்பார்த்தான் கவுதமன்.

உரிப்பானையில் சொறிப் பூனை வாய்வைத்த கதையாய் அகலிகலயின் பத்தினித்தனம் இந்திரனால் இழிவுப்படுவதைக் கண்டு, ஓடோடிவந்தான் தன் இருப்பிடத்துக்கு. வாசலில் குறுக்கும் நெடுக்குமாய் "மியாவ் "போட்டு, சந்திரன் உலாவிக்கொண்டிருந்தான். கோபம் தாளாத கவுதமன் போட்டான் ஒரு போடு   தனது யோகத் தண்டத்தால் அந்தப் பூனையின் மீது.
அந்த அடியின் வடுக்களே நிலவின் களங்கமானது :நிரந்தரமாய் நிலைத்துப் போனது.
போலி கவுதமனான இந்திரன், தனது குருநாதன் கோபத்துடன் வந்ததைப்பார்த்தும், அகலிகையை உதறினான்.
இருவரையும் பார்த்து சுண்டிச்சுருங்கினாள் முனிபத்தினி 
"குருத்துரோகம் செய்த கொடியவனே, என்மனைவியின் குறியிலே குறியாக இருந்த உன் உடம்பெங்கும் பெண் குறிகளே குடிக்கொள்ளட்டும் என்று சாபங்கொடுத்தான் முனி.
பின் என்ன சொல்ல!? இந்திரனின் உடல், அதன்பின் ஆன கோலத்தை வர்ணிக்க பட்டினத்தடிகளிடம் தான் வார்த்தைகளைக் கடன் வாங்க வேண்டும்.
"காமப் பாழி:கருவினை கழனி "
(ஆதாரம் :அபிதான சிந்தாமணி --பக்கம் 155)

பக்த கோடிகளே! ஓ! பக்த கோடிகளே!
1.கல்யாணம் ஆகாமலே கட்டிலறைக் களிப்புகளில் கரை கண்டவன் கடவுளாக இருக்கத் தகுதியானவனா?
பதவிக்குப் பலர் வருவதும், வருபவர்களின் படுக்கையறை உதவிக்கு  இந்திராணி போவதும் அருவருப்பாக இல்லையா?
அப்படியானல் இந்திராணி என்பவள் எத்தனை வயது ஆனாலும், ஈளைகட்டாது, இருமல் வராமல், தடியூன்றாமல், தள்ளாடாமல் என்றும் "பதினாறாக "இருக்க, காயகல்பம் சாப்பிட்டாளா? அது எங்கே இருக்கிறது?
2.குந்திதேவிக்கு,குயுக்தியுடன் குழந்தை தந்த கூத்து நம்பத்தகுந்ததா? அந்த அல்லிமணாளன் அர்ச்சுனனின் பிறப்பு இப்படியா "பைபிளை "க் காப்பி அடிக்க வேண்டும்?
3.மாதா,பிதா,குரு என வரிசைப்படுத்திக் களிக்கும்பெரியவர்களே! குரு பத்தினியின் கருப்பாதையை கலங்கடித்த கடவுளைக் கும்பிடலாமா?
இது போன்ற ஆபாசக்கடவுளை நம்பிடலாமா?
4.இந்திரனுக்கும் சந்திரனுக்கும் சாபங்கொடுத்தான் சபித்த முனி, போலிங் கோழியின் கேலிக்குரிய கூவலை இனங்கண்டு கொள்ள முடியவில்லையா?
சந்திரனுக்கு ஏற்பட்ட தழும்புகள்தான் இன்று அதன்மீது தோன்றும் தேமல் கோலங்கள் என்று --நிலவுப்பயணங்கள் போய்வந்துவிட்ட பின்புமா நம்புகிறீர்கள்?
சேவல்தான் கூவி எழுப்பும், கவுதமனின் காலத்திலும் --இந்திரன் வாழ்ந்த நேரத்திலும் கோழிதான் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்ததோ?
- ஆறாம் அறிவு  குழுவில் ராஜமோகன்
25.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக