இந்த பதிவில் புரூரவன் என்பவன் எவ்வாறு பிறந்தான் என்பதைப்பற்றி அர்த்தமுள்ள ஆரிய இந்துமதம் கூறுகிறது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
இந்தக் கதை தேவி பாகவத புராணத்தில் முதல் ஸ்கந்தத்தில் 12வது அத்தியாயத்தில் "புரூரவன் பிறப்பு" எனும் இடத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான புராண கதைகளில் கூறப்பட்டுள்ள பாத்திரங்களைத்தான் கடவுள் என்றுநம்பி மக்கள் இன்னமும் முட்டாள்களாக இருந்துகொண்டுள்ளார்கள். இந்த புராண கதாபாத்திரங்களின் பெயர்களில்தான் தெருவிற்கு தெரு கோவில்களும் கட்டப்பட்டு சுரண்டலும் மூடநம்பிக்கைகளும் பரப்பப்பட்டுக்கொண்டுள்ளது. அவர்களுக்காகவே அவர்கள் புராணம் எப்படிப்பட்டது என்பது தெரியப்படுத்தப்படுகின்றது.
வாருங்கள் ஆரிய புராணம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
சுத்யும்னன் எனும் மன்னன் பெண்ணுருவமடைந்து நமது புதன் கிரகத்துடன் புணர்ந்து புரூரவன் எனும் மகனைப் பெற்றெடுத்த அறிவார்ந்த கதை.
சுத்யும்னன் எனும் அரசன் ஒருநாள் குதிரைமீதேறி மந்திரிகளை பின்தொடர்ந்துவரும்படி கட்டளையிட்டு வேட்டையாட அடர்ந்த வனம் சென்றான். அவன் அந்த வனத்தை அடைந்த மாத்திரத்தில் பெண்ணுருவம் அடைந்துவிட்டான். அவன் மட்டுமல்லாது அவன் ஏறிவந்த குதிரையும் பெண்குதிரையாகிற்று. தானும் தன்குதிரையும் பெண்வடிவமானதைக்கண்டு ஆச்சரியப்பட்டு எவ்வளவு யோசித்தும் காரணம் புலப்படாததால் தான் எவ்வாறு இந்த பெண்ணுருவில் தனது ராட்சியம் சென்று நாடாள்வது என்று அங்கேயே வாழத்தொடங்கிவிட்டான்.
நிற்க. இப்போது அவன் ஏன் பெண்ணுருவானான் என்ற காரணத்தை பார்ப்போம்.
ஒரு காலத்தில் சநகாதி முனிவர்கள் சிவபெருமானைக்காணும் விருப்பமுடையவர்களாய் ஆகாய மார்க்கமாக அந்த உத்தியான வனத்தை நோக்கி வரும்போது அவ்விடத்தில் சிவன் பார்வதியுடன் உடலுறவுசெய்யும் நேரமாக இருந்தது. அதனை அறியாது இவர்கள் சென்றனராகையால் சிவனோடு உடலுறவில் ஈடுபட்டிருந்த அம்பிகை அவர்களைக்கண்டு நாணமுற்று சிவனுடைய மடியினின்றும் எழுந்து ஆடையின்றியிருந்த தமது அங்கத்தை ஆடையினால் மறைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு மறைவான ஓரிடத்தில் தலைவணங்கியவராய் மிகவும் வெட்கத்தோடிருந்தார். இதுகண்ட சநகாதியர்களும் வனத்தின் மறுபுறம் சென்றுவிட்டனர்.
பின்னர் சிவன் உமாதேவியைப்பார்த்து ஓ பிரியே! நீீ என்ன காரணத்தால் உடலுறவில் நாட்டமில்லாது இருக்கிறாய்? உன்னிஷ்டப்படி உடலுறவு கொள்வதற்கு இப்போது இடையூறு என்ன உண்டாகிற்று? அதனைக்கூறுவாயாயின் அவ் இடையூறைப்போக்கி உனக்கு சுகம் உண்டாக்கும்படி செய்கிறேன் என்றார்.
அதற்கு அம்பிகை, ஓ என் பிராண நாயகரே! சநகாதியர் நாம் இருவரும் உடலுறவு செய்யும் சமயத்தில் அதைக்கவனிக்காது இந்த வழியாக வந்தனர். அதனால் நாணமுற்று இருக்கிறேனன்றி வேறுகாரணமில்லை என்றார்.
அதற்கு சிவன் பார்வதிதேவியைப் பார்த்து ஓ தேவி! இன்று முதல் இந்த வனத்தில் யார் உட்பிரவேசித்தாலும் அவர்கள் பெண்ணுருவத்தை அடையக்கடவர் என்று சபித்தார். இந்த காரணத்தால்தான் சுத்யும்னன் இந்த வனம் வந்தவுடன் அவனும் குதிரையும் பெண்ணுரு அடைந்தனர்.
சரி இனி சுத்யும்ன மன்னன் எவ்வாறு கர்ப்பமானான் என்பதைப் பார்ப்போம்.
சுத்யும்னன் பெண்ணுருவோடு அவ்வனத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது சந்திரன் (நமது துணைக்கோள்) புத்திரனான புதன் ஊரைச்சுற்றிக்கொண்டு அந்த வனத்தின் வழியாக போகும் தருணத்தில் அதி சுந்தரியாக பெண்ணுருவில் இருந்த இந்த மன்னனைப்பார்த்து மோகித்தான். இம்மன்னனும் அவனைப்பார்த்து மோகித்து ஓ சுந்தரா! உன்னை நான் புருஷனாககொண்டு சுகிக்கவெண்ணி இருக்கிறேன் என்று கூறியவளவில் அவனும் மோகித்தவனாய் புணர்ந்து சென்றான். பின்னர் இம்மன்னன் கர்ப்பமாகி புரூரவன் என்பவனை பெற்றதாக அர்த்தமுள்ள ஆரிய இந்துமதம் கூறுகிறது.
இந்த கதையை ஏன் கூறுகிறேன் என்றால் இவ்வாறான வேத புராண இதிகாசங்கள்தான் சில பாத்திரங்களை கடவுள்கள் என்று கற்பித்துள்ளன. இவற்றை புறந்தள்ளினால் இந்த கடவுள்கள் பெயர்கள்கூட யாருக்கும் தெரியவந்திருக்காது. சமூகமும் முட்டாள்தனமாக இவற்றின்பின்னால் சென்றிருக்கவும் வாய்ப்பில்லை. ஆக அரைகுறையாக இவற்றை தெரிந்துகொள்ளாது முற்றுமுழுதாக தெரிந்துகொள்ளுங்கள் இவை கற்பனை கதாபாத்திரங்கள் என்பது புரியும். இவற்றின்பின்னால் விழுந்துகும்பிடுவது முட்டாள்தனம் என்பதும் புரியும்.
வாசிப்பவர்களின் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.
நமது புதன் கிரகம் எவ்வாறு சந்திரனிற்கு பிறந்தது என்பதைப்பற்றி ஆரிய அர்த்தமுள்ள இந்துமதம் கூறியதை இதற்கு முந்தைய பதிவில் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் இங்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=10218399962213765&id=1334506017
https://m.facebook.com/story.php?story_fbid=10218399962213765&id=1334506017
- வேணுகோபால சங்கர், முகநூல் பக்கம்
20.4.19
20.4.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக