திங்கள், 29 ஏப்ரல், 2019

கடவுளின் காமலீலை - இந்திரன்

கடவுளின் காமலீலை - இந்திரன்



1. கெளதமர் மனைவியான அகலிகையின் மேல் ஆசை கொண்டான் இந்திரன். எப்படியும் அவளை அடையவேண்டும் என ஒரு திட்டம் தீட்டினான். கெளதமர் தினமும் கங்கா ஸ்நாநத்திற்கு செல்வார் என்பதை அறிந்து கோழி கூவிவது போல் கூவினான். அதைக் கேட்டு எழுந்த கெளதமர் வீட்டை விட்டு கிளம்பினார். இந்த வேளையில் இந்திரன் கெளதமரைப் போல் உருவம் கொண்டு அவளுடன் புணர்ச்சியில் ஈடுபட்டான். அகலிகையும் இவன் தன் கணவன் அல்ல என்பதை அறிந்து கொண்டாலும் தன் அழகில் கர்வம் கொண்டவளாய் புணர சம்மதிக்கிறாள்.

கெளதமர் வருவதற்குள் கிளம்பிவிடலாம் என்று நினைத்த இந்திரன் மாட்டிக் கொண்டான். இருவரையும் பார்த்த கெளதமர் இந்திரனுக்கு ஆண்மையை இழக்குமாறும் பெண்களுக்குண்டான அநெக குறிகள் உடம்பு முழுவதும் வரவும், அகலிகைக்கும் காற்றை மட்டும் உணவாகக் கொண்டு, புழுதியோடு புழுதியாக கேட்பாரற்று கிடக்க வேண்டும் எனவும் ராமன் வந்து உனக்கு சாபவிமோசனம் தருவான் எனவும் சாபமிட்டார்.

தன் உடல் முழுவதும் பெண் குறிகளாகப் பெற்ற இந்திரன் நாணமடைந்து தாமரைத் தண்டில் ஒளிந்து கொண்டான். பின்னர் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மற்றவருக்கு கண்களாகவும் இந்திரனுக்கு பெண்குறிகளாகவும் தரப்பெற்று தன்னுலகடைந்தவன். (இராமாயணம்)

2. தேவசன்மன் மனைவியாகிய உரிசையை அடைய இந்திரன் ஆசைப்பட்டான். ஒரு நாள் முனிவர் வெளியே செல்லும்போது விபுலன் என்ற சீடனிடம் மனைவியை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

முனிவர் இல்லையென்று அறிந்த இந்திரன் அவளை அடைய வந்தான். ஆசை வார்த்தைகள் பேசி தன் வசம் இழுக்கப் பார்த்தான். இதைக்கண்ட விபுலன் இந்திரனைக் கண்டித்தான். பின் இந்திரன் தன் தவறுக்கு மன்னிப்பு வேண்டி வெளியேறினான்.

3. ஒருமுறை சலந்திரன் ஒரு பெண்ணிடம் ஆசை கொண்டான். அதே பெண்ணிடத்தில் இந்திரனும் ஆசை கொண்டு இருவரும் கடலில் குதித்து தேடினார்கள்.

4. அரம்பையர்கள் என்பது 60 ஆயிரம் பெண்டள் உள்ள தேவலோகம். அங்கே இந்திரன் அரம்பையர்களுடன் கூடி இருக்கையில் நாரதர் வந்தார். அவரை வணங்கி இங்கிருக்கும் பெண்களில் உங்களுக்கு பணிவிடை செய்ய யாரை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். நாரதர் வபு என்ற பெண்ணை தெர்ந்தெடுக்க அவளை அவருடன் அனுப்பி வைத்தான்.

5. இந்திரன் நளாயினி மேல் ஆசை கொண்டு அவளை கைலாசத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே சிவனைக் கண்டு தன் வச்சிராயுத்தால் ஓங்கி தாக்க முற்பட்டான். அப்போது சிவன் திரும்பிப் பார்க்க அதனால் இந்திரன் கையும், வலது தோளும் வாதமுற்று துக்கமடைந்தவன்.

6. இந்திராணி ஒருமுறை கொலுவில் சகல போகத்துடன் இருக்கும் இந்திரனைக் கண்டு என்னால் தான் உனக்கு இந்த போகம் வந்தது எனக் கூறினாள். அதைக்கேட்ட இந்திரன் கோபமுற்று நீ பூமியில் பெண்ணாக பிறப்பாய் என சாபமிட்டான். அதற்கு இந்திராணி நீயும் இந்த பூமியில் ஆணாக பிறப்பாய் என சாபமிட்டாள்.

பின் இருவரும் புண்ணியகீர்த்தி என்பவற்கு புத்திரன், புத்திரியாக பிறந்தனர்.

7. பாரிசாதன் மனைவி வபுஷ்டமை அடைய இந்திரன் ஆசை கொண்டான். பலவகையிலும் அடைய முற்பட்டு தோல்வி கண்டான். ஒருமுறை பாரிசாதன் அசுவமேத யாகம் செய்ய முற்பட்டான். அசுவமேத யாகம் என்பது யாக குதிரையை யாகம் நடத்துவரின் மனைவியுடன் புணரவைப்பது.

இதைக் கேள்விப்பட்ட இந்திரன் குதிரையின் உடலுக்குள் புகுந்து கொண்டான். யாக முறைப்படி குதிரை வபுஷ்டமையுடன் புணர இந்திரன் திருப்தி கொண்டான். இதனால் அசுவமேத யாகம் செயலிழந்து போனது. (சிவமகா புராணம்)

ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 154-159.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக