கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)
அக்கினி பகவான்:
அட்டத்திக்குப் பாலர்கள் 8 பேர். இதில் ஒருவரின் மனைவி தான் சுவாகாதேவி. பாலகர் என்பவர்கள் குட்டிக் கடவுள்.
அக்கினியின் தந்தை விச்வாநரன், சிவனை எண்ணித் தவம் கிடந்து அக்கினியைப் பெற்றார்.
சிவபெருமாள் தரிசனம் தந்த போது, உன்னைப் போலவே எனக்கொரு பிள்ளை வேண்டுமென கேட்டு அதன் பின் பிறந்தவர் தான் அக்னி பகவான்.
ஒருமுறை இந்த அக்னி ஏழு ரிஷிகளின் யாக வேள்வியில் பயன்படுத்தப்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்து வந்த அக்னிக்கு, அங்கிருந்த ரிஷி பத்தினிகளின் அழகு ஈர்த்தது.
இந்த ரகசியம் அக்னியை மணந்த சுவாகாதேவிக்குத் தெரிந்து அருந்ததி என்ற ஒரு ரிஷிக்காரியின் வேஷம் மட்டும் போடாமல் - மற்ற அரை டஜன் ரிஷிபத்தினிகளின் உருவெடுத்து அக்னியின் காமத்தைச் சரி செய்தார்.
ஏதோ சில காரணங்களுக்காக ஒளிந்து வாழ வேண்டிய இக்கட்டில் இருந்த இந்த அக்கினி பகவான், அவுரவ மகரிஷி என்பவரது மனைவியைத் தேடி அவரின் தொடைக்குள் நெடுநாள் சிறை இருந்தாராம்.
அதேபோல சுதரிசனை என்கிற பெண்ணிடம் மோகம் கொண்டு, அதனால் கரு உண்டாகி, அந்தக் கருவை அக்கினியின் உண்மையான மனைவி சுவாகாதேவி 12 தேவ வருஷங்கள் தனது கருவறையில் சுமந்து அலைந்தாராம்.
(ஆதாரம்: அபிதான சிந்தாமணி,
பக்கம் 9,10 மற்றும் காசிகாண்டம் நூல்)
- வி.சி.வில்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக