வியாழன், 14 மே, 2020

பிள்ளையார்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

பிள்ளையார்:

பரமசிவன் மனைவி பார்வதி. ஒருமுறை குளிக்கப் போகும் போது, தன் உடம்பில் இருந்து திரட்டிய  அழுக்கை சேர்த்து, உருவமாக்கிக்  காவலுக்கு வைத்தார். 

அழுக்கில் உயிர் பெற்ற அந்த உருவத்தைப் பார்த்து, "யார் வந்தாலும் உள்ளே விடாதே" என்று கட்டளையிட்டுக் குளிக்கப் போய்விட்டார். 

அச்சமயம் அங்கே பரமசிவன் வந்தார். அழுக்கு உருவமோ, அவரை  உள்ளே விட மறுக்கவே கோபம் கொண்ட பரமசிவன், தடுத்தவரின் தலையை வெட்டித் தள்ளிவிட்டு உள்ளே போய்விட்டார்.

குளித்துக் கொண்டிருந்த பார்வதி தன்னிடம் வந்த பரமசிவனைப் பார்த்து, "எப்படி இங்கே வந்தீர்கள்? காவலுக்கு இருந்தவர் எங்கே?" என்று கேட்டார்.

காவல் காத்தவரை வெட்டி சாகடித்து விட்டதாகப் பரமசிவன் சொன்னார்.
அழுக்கால் ஆக்கப்பட்ட தனது மகன் சாகடிக்கப்பட்டதை அறிந்து, அழுது புரண்டார் பார்வதி. 

பரமசிவன் பார்வதிக்கு ஆறுதல் கூறி வெளியே வருகையில், யானை ஒன்று எதிரே வந்தது. அதன் தலையை வெட்டி, அழுக்குருண்டைப் பிள்ளையின் முண்டத்தில் ஒட்டி, உயிர் தந்தார் சிவபெருமான்.

(ஆதாரம்: கந்தபுராணம் மற்றும் சிவபுராணம்)   

மற்றொரு கதை:

நந்தவனத்தில் உலவி வந்த சிவன், பார்வதி தம்பதிகள் அடர்ந்த காடு ஒன்றில் நுழைகின்றனர். 

அங்கே இரண்டு யானைகள் கலவி (உடலுறவு) செய்து வந்தன. அதைப் பார்த்த சிவன், பார்வதி அதுபோலவே   கட்டிப் புரண்டனர். 

அப்போது பிறந்த குழந்தையின் முகம் யானை வடிவமாகவும், உடல் மனித வடிவமாகவும் இருந்தது. 

(ஆதாரம்: வலிவலம் கோவில் சிவனைப் பற்றி திருஞானசம்பந்தர் "பிடியதன் உருவுமை" என்று தொடங்கிப் பாடிய தேவாரப் பாடல்)

- வி.சி.வில்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக